NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 6 August 2018

தமிழகத்தில் நாளை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

தமிழகத்தில் நாளை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கப்படுமா என்று தெரியவில்லை.

மத்திய அரசு, மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உள்ளது. பெருமளவில் பாதிப்புகள் ஏற்படும் இந்தச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோரி, நாடு முழுவதும் மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளனர்.

அதன்படி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள், கால் டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, தொ.மு.ச, பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஈடுபடுகின்றன.

அரசுப் பேருந்து இயக்கப்படுமா என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment