#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 15 September 2018

செப்டம்பர் - 15, பொறியாளர்கள் தினம்

செப்டம்பர் - 15, பொறியாளர்கள் தினம்

 நாளைய இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்!

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் வெவ்வேறு நாட்களில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில், Sir பட்டம் பெற்ற பாரத ரத்னா விருது வென்ற இந்தியாவின் தலைசிறந்த பொறியாளரான, Sir MV என்று பரவலாக அறியப்பட்ட ’மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15’ஐ ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

’மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ 1860ம் ஆண்டு மைசூரில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் தன் 12ம் வயதிலேயே தந்தையை இழந்தவர்.

தனது பள்ளி படிப்பை சிக்கபல்லாபுராவிலும், இளங்கலை பட்டத்தை செண்டரல் காலேஜ், பெங்களூரிலும் முடித்தார்.

பின் கட்டிட பொறியியல் (civil engineering) படிப்பை புகழ்பெற்ற பூனே பொறியியல் கல்லூரியில் பயின்றார்.

ஆரம்பத்தில் மும்பை பொதுப்பணித்துறையில் வேலை பார்த்த இவர் பின்னாளில் இந்திய நீர்ப்பாசன கமிஷனில் பணியை தொடர அழைக்கப்பட்டார்.

இந்திய நீர்ப்பாசன துறையில் வேலை பார்த்த காலத்தில் மிகவும் சிக்கலான நீர்ப்பாசன அமைப்பை தக்காணப் பீடபூமி பகுதியில் செயல்படுத்தினார்.

இவரின் புகழுக்கு உச்சமாக கருதப்படுவது தெலுங்கானா ஹைதராபாத் நகரில் வெள்ளப் பாதுகாப்பு அமைப்பு தலைமை வடிவமைப்பாளராக இருந்தது மற்றும் மைசூர் கிருஷ்ண ராஜா சாகர அணை கட்டுமான பொறுப்பு தலைமை பொறியாளராக இருந்தது.

இந்த அணை கட்டப்பட்டது போது இதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கம் கொண்டதாக கருதப்பட்டது.

அவருடைய பங்களிப்பு வெறும் பொறியியல் உள்கட்டமைப்பு திட்டங்களில் (அணைகள் மற்றும் பாலங்கள் போன்ற) மட்டுமில்லாமல் இரும்பு மற்றும் எஃகு, சோப்புகள், பட்டு, சர்க்கரை, வங்கி மற்றும் வானியல் உட்பட பல துறைகளும் சிறந்து விளங்க கருவியாக திகழ்ந்தார்.

ஒரு குறுகிய காலம் அவர், ஹைதராபாத் நிஜாமாக இருந்த இவர் 7 ஆண்டுகள் மைசூரின் திவானாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது நலனில் விஸ்வேஸ்வரய்யா அவரின் எண்ணற்ற பங்களிப்புகளுக்காக பிரிட்டிஷ் அரசின் மூலம் இந்தியப் பேரரசின் நைட் கமாண்டர் (KCIE) என்ற ‘சர்’ பட்டம் வென்றார்.

வடிவமைப்பு மற்றும் நிறைவேற்றத்துக்கான அறிவு மட்டும் இவரின் சிறப்பம்சம் அல்ல தொழில் நெறி, அர்ப்பணிப்பு, தனித்துவம், பேரார்வம் போன்ற பண்புகளுக்கு மறுவடிவம் கொடுத்தவர். Sir. Dr. ’மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’.

இவரின் பிறந்த நாளான இன்று அவரது நினைவாக, இந்திய நாடு முழுவதும் பொறியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக “பொறியாளர்கள் தினம்” கொண்டாடுகிறது.

நாளைய இந்தியாவை உருவாக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் இனிய பொறியாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment