NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 15 September 2018

பொன்னமராவதி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி இல்லணிப்பட்டி கிராமத்தில் நம் கிராமம் நம் கையில் நற்பணிமன்றத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

பொன்னமராவதி செப்-15

பொன்னமராவதி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி இல்லணிப்பட்டி கிராமத்தில் நம் கிராமம் நம் கையில் நற்பணிமன்றத்தின் சார்பில்  மரக்கன்று நடும் விழா  நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி இல்லணிப்பட்டியில்
நடைபெற்ற விழாவில் 200 மரக்கன்று நடப்பட்டன. இவ்விழாவில் நம் கிராமம் நம் கையில் மன்றத்தின் தலைவர் சாத்தையா தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக  வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் மற்றும்
கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். இதில்  நம் கிராமம் நம் கையில் நற்பணி மன்றத்தின் செயலாளர் வீ.உதயகுமார் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆதிராஜா, கணேசன், ஊராட்சி செயலாளர் முருகவேல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மன்ற நிர்வாகிகள் சரவணன், செளந்தரபாண்டியன், வேல்முருகன், பிரபு, ஆனந்த்குமார் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர். விழா முடிவில் நம் கிராமம் நம் கையில் மன்ற பொருளாளர் ரத்தினம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment