NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 16 September 2018

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி பகுதிகளில், வரி சீராய்வு தொடர்பாக, அளவீடு செய்து பணிகள் மேற்கொள்ள வரும் பேரூராட்சி பணியாளர்களுக்கு...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி
பேரூராட்சி பகுதிகளில்,
வரி சீராய்வு தொடர்பாக,
அளவீடு செய்து பணிகள் மேற்கொள்ள வரும் பேரூராட்சி பணியாளர்களுக்கு...

ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என,
செயல் அலுவலர் ( பொ)
மு.செ.கணேசன் அவர்கள், தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு  நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் சொத்துவரி சீராய்வு அரசாணைகளின்படியும் பேரூராட்சிகளின் இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் கீரனூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள
வரி வதிப்பு செய்யப்பட்டு
ஏற்கனவே வரிசெலுத்தி வருவோர்களுக்கு குடியிருப்பு கட்டிடங்களுக்கு  50% மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100% என உயர்வு செய்து அரசாணையில்  உத்திரவிடப்பட்டுள்ளது
அதனடிப்படையில்
பேரூராட்சி பகுதிகளை A,B,C என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல மதிப்புகளை முறையே ரூ.1.20, 0.80 பைசா,0.50 பைசா உயர்வு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய மண்டல விபரங்களை அலுவலக தகவல் பலகையில் ஒட்டி விளம்பரபடுத்தப்பட்டுள்ளது
எனவே பேரூராட்சி பகுதிகளில் உள்ள,
குடியிருப்புகள்,
வணிக கட்டிகங்கள்,
அரசு அலுவலகங்கள்,
அலுவலர்கள் குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகள்,
மற்றும்,வழிபாட்டுத் தலங்கள்,அனைத்தும்,
அளவீடு செய்து,
சொத்து வரிகளை, அரசு வழிகாட்டுதல்களின்படி உயர்வு செய்யப்பட உள்ளது.
மேற்படி பணிகளை செயல்படுத்த பேரூராட்சி,
பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது...
எனவே,
பேரூராட்சி பகுதிகளில்,உள்ள,
பொதுமக்கள்,
பிரதிநிதிகள்,
வியாபாரிகள்,

மற்றும், கட்டிட உரிமையாளர்கள்,
அளவீடு செய்ய,
ஒத்துழைப்பு,
வழங்குவதோடு, கட்டிட உரிமதாரர்கள் சுயமதிப்பீடு படிவங்களை பெற்று விடுதல் இன்றி பூர்த்தி செய்து 30.09.2018 க்குள் வழங்க வேண்டுமெனவும், கட்டிட உரிமதாரர்கள் வழங்காத பட்சத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அளவை செய்து அதனடிப்படையில் முடிவு செய்யப்படும்
என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment