Friday, 14 September 2018

நலதிட்ட உதவி வழங்குதல்

நலதிட்ட உதவி வழங்குதல்
கரம்பக்குடி ரோட்டரி சங்கம், கரம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருமண நாள் விழா, தலைவர்கள் வி.சதாசிவம், எம்.கே.ஆரோக்கிய சாமி, தலைமையில் நடைபெற்றது.முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் எ.அந்தோணிசாமி வரவேற்றார். செயலாளர் கே.சுப்பையன், எ.என்.எஸ்.சுப்பையா முன்னாள் துணை ஆளுனர் ஜெ.ஜேம்ஸ், அப்துல்கரீம், பி.ஜோதிமணி, வாழ்த்துரை வழங்கினார்கள். ரோட்டரி மாவட்டம் 3000த்தின் மக்கள் தொடர்பு இணைச் செயலாளர் மாருதி கண.மோகன்ராஜ் கௌரவ விருந்தினராக  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் நியமனம் அ.லெ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய உறுப்பினர் வி.என்.வீரப்பனை ரோட்டரி பின் அணிவித்து சங்கத்தில் .இணைத்தார் கரம்பக்குடி டி.இ.எல்.சி. துவக்கப்பள்ளிக்கு இரண்டு மின் விசிறி வழங்கித்தந்து அதை வழங்கிய வரும் திருமண நாள் கொண்டாடும் கே.சுரேஷ், பிரதிதா தம்பதியினருக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்துரை வழங்கினார். விழாவினை முன்னாள் தலைவர் ஞானசேகரன் தொகுத்து வழங்கினார் முன்னாள் தலைவர் கிருஷ்ணன், சண்முகம், சிட்டி ரோட்டரி சங்கப் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வருங்கால துணை ஆளுனர் கே.சுரேஷ் ஏற்புறை வழங்கினார். நிறைவாக ஜாகீர் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.




No comments:

Post a comment