NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 11 September 2018

உலக தற்கொலை தடுப்பு தினம் கருத்தரங்கம்

உலக தற்கொலை தடுப்பு தினம் கருத்தரங்கம்
பாலன் நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம,; சாலைவிபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் இணைந்து உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு; முதல்வர் எஸ்.ராமர் தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்  நடைபெற்றது பயிற்சி அலுவலர்கள் கே.சுந்தரகணபதி ஆர்.ராஜேந்திரன்; முன்னிலை வகித்தனர் சாலைவிபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத்தலைவர் மாருதி.கண.மோகன் ராஜ் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு தற்கொலை என்று நினைக்கிறார்கள் பிரச்சனைகளை; எதிர்கொள்ளத் தெரிந்து கொண்டால் தற்கொலை எண்ணம் வராது மன அழுத்தம் தற்கொலைக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்றார் அரசு மருத்துவக்கல்லூரி மன நல மருத்துவர் அஸ்மா நிஜாமுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனநல விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கிப் பேசும்போது உலக அளவில் 80 லட்சம் மக்கள் ஒரு வருடத்திற்கு தற்கொலை செய்து கொள்கிறார்கள் இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் ஆண்களில் 15 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு லட்சம் பெண்களில் 8 சதவீதம் பேர் தற்கொலைக்கு ஆளாகிறார்கள் இதில் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது, துன்புறுத்தி கொள்வது, பெரும்பாலும் இளம் வயதினர் முக்கியமாக பெண்களே ஈடுபடுகின்றனர். இதில் மரபணு சார்ந்த கோளாறுகள், முன்னோர்களிடமிருந்து அடுத்த சந்ததியினருக்கு தற்கொலை சார்ந்த எண்ணங்கள் ஏற்படுதல் போன்ற காரணங்களாலும் குடும்ப சூழ்நிலை, கடன் தொல்லை, தாய் தந்தை இடையில் சண்டை, குடி கார தந்தை, தற்கொலையில் ஈடுபட்டு இறந்து போன தாய், மற்றும் சுற்றுச் சூழலால் முக்கியமாக காதல் தோல்வி, மது போதைக்கு அடிமை ஆகுதல், முகநூல், வலைதளம், இன்ஸ்டா கிராம் இது தவிர மோமோ போன்ற காரணங்களால் தற்கொலை அதி;கமாக வருகிறது.
தனிமை, விரத்தி காரணம் இல்லாமல் கோபம் அதிகமாக வருவது தாழ்வு மனப்பான்மை, தற்கொலை என்னங்கள் பற்றி பேசுவது, இறப்பு பற்றி பேசுவது, மற்றவர்களிடம் பாரமாக இருப்பது போன்று எண்ணுவது, தற்கொலை செய்து கொல்வேன் என்று மற்றவர்களிடம் மிரட்டுவது இவையே தற்கொலைக்கான  என்னங்கள் தோன்றும். இதை தடுக்க வேண்டுமென்றால் மனநல மருத்துவரை அனுகுதல் பிசியோதெரப்பி வழங்குதல் தற்கொலை செய்து கொள்ள தூண்டும் பொருட்கள் (கத்தி, விஷம், ஆசிட், அருவாள்) அவர்கள் பார்வையில் படாதவாறு வைத்துக்கொள்ள வேண்டும் மன நோய் இருப்பதை கண்டறிந்த பிறகு அதற்கான உரிய மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தனிமையில் இல்லாதவாரு தீவிர கண்காணிப்பு அவசியம் தேவை மேலும் உடனடியாக தீர்வு வேண்டுமெனில் அரசின் இலவச தொலைபேசியே பயன் படுத்தி ஆலேசனை பெறலாம்.மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அனுகலாம். என்றாh.; முன்னதாக வருகை தந்த அனைவரையும் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் P.ஜோதிமணி வரவேற்றார் நிறைவாக பயிற்சி அலுவலர் எஸ்.ரமேஷ் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது கருத்தரங்கத்தில் சுமார் 500பேர் கலந்து கொண்டனர் கருத்தரங்கத்தில் மாணவர்களுடைய கேள்விகளுக்கு மருத்துவர் விளக்கமளித்தார்.
படம்: மருத்துவர் அஸ்மா விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கினார் அருகில் மாருதி.கண.மோகன்ராஜ்


No comments:

Post a Comment