NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 30 September 2018

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரோட்டராக்ட் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரோட்டராக்ட் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
திருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக்கழக ரோட்டராக்ட் சங்கமும் ரோட்ட்ராக்ட் மாவட்டம் மூவாயிரமும் இணைந்து ரோட்டராக்ட் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தினர். எட்டு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய ரோட்டராக்ட் மாவட்டம் மூவாயிரத்தின் இருபத்தி ஏழு கல்லூரிகளைச் சார்ந்த 245 மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். கீரனூர் டி எஸ் பி திரு. எல். பிரான்சிஸ் அவர்களும் ரோட்டரி மாவட்ட செயலர் ராஜா அவர்களும் கொடியசைத்து விழாவினை துவக்கி வைத்தனர். விழாவின் சேர்மன் கேத்தாரீஸ்வரன் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றுப் பேசினார். மாவட்டம் மூவாயிரத்தின் மாவட்டப் பிரதிநிதி ரெ. லோகேஷ் குமார் முன்னிலை வகித்தார். வளாக முதல்வர் முனைவர் த. செந்தில் குமார் அவர்கள் தலைமை தாங்கினார். தடகளம், இறகுப்பந்து, செஸ் மற்றும் கைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.  இரத்ததானம், பசுமை பாதுகாப்பு மற்றும் மகிழ்வான வாழ்வு ஆகியவற்றை வலியுறுத்தி மாரத்தான் நடத்தப்பட்டது. மாணவர் பாலாஜி ஒலிம்பிக் சுடரை ஏந்தி ஓடிவந்தார். அண்ணா பல்கலைக்கழக ரோட்டரி சங்க தலைவர் ஜெரிஷ் ஓபேத், செயலர்கள் விக்னேஷ், நவமதன் மற்றும் சண்முகம் தலைமையில் விழா கொடியேந்தி அணிகளாக அணிவகுத்து வந்தனர். கோட்டை ரோட்டரி சங்கம், யுகா அமைப்பு, சக்தி ரோட்டரி சங்கம், மத்திய ரோட்டரி சங்கம் மற்றும் மிட்டவுன் ரோட்டரி சங்கம் ஆகியன விழாவிற்கான பொருளுதவி செய்திருந்தனர்.  கரூரைச் சார்ந்த செர்வைட் மகளிர் கல்லூரி முதலிடம் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றது. புதுக்கோட்டை ரோட்டராக்ட் சங்கம் இரண்டாமிடம் பெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுனராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. சொக்கலிங்கம் அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ரோட்டரி மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு. மோகன் ராஜ் மற்றும் இளையோர் சேவை செயலர் திருமதி ஆனந்த ஜோதி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ரோட்டராக்ட் மாணவர்கள் சிறப்பாக செய்தனர். சையத் இம்தியாஸ் நன்றியுரை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் மணி பிரகஸ்பதி மற்றும் விளையாட்டுத்துறை இயக்குனர் முனைவர். கோபிநாத் ஆகியோர் போட்டிகளை  ஒருங்கிணைத்தனர்.


No comments:

Post a Comment