NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 5 September 2018

ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்விழா


ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்விழா

மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளியில் (தலைமையாசிரியர்) அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் (பொ) கு.திராவிடச்செல்வம் தலைமையில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

ரோட்டரி சங்க செயலாளர் க.ந.செல்வரத்தினம் முன்னிலை வகித்தார். வருகைபுரிந்த அனைவரையும் ஆசிரியர் ப.கணபதி வரவேற்றார். சுhலை விபத்து தடு;ப்பு மற்றும் மீட்பு சங்கத் தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து ஆசிரியர்களையும் கௌரவித்து பேசும் பொழுது அனைத்து ஆசிரியர்களும் கல்விக் கடவுள் என்றும், மாணவர்களை முன்னேற்றுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிற பெற்றோர்கள் ஆவார்கள் என்று பாராட்டி பள்ளியில் ஒவ்வொரு ஆசிரியரும் மரக்கன்றுகளை தங்கள் நினைவாக நட்டு பராமரிப்பது குறித்தும், அடுத்த வருடம் சிறப்பாக இருக்கும் மரக்கன்றுகளுக்கு உரிய ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றார். நிகழ்வில் ப.கணபதி, பொ.பிரபா, மு.ஜெயஸ்ரீ, லெ.சுகன்யா, இரா.உமா, இரா.நீராஜா, செ.ரேவதி, த.அழகுரத்தினம், மா.சங்கீதா, இராம.செல்லப்பன், ச.ஸ்ரீனிவாசன், ச.இளையராஜா, வெ.ரேவதி ஆகிய ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு அதை தாங்களே பராமரித்து வருவதாக உறுதி அளித்தனர். அனைத்து ஆசிரியர்களுக்கும் ரத்த அழுத்தம் சோதனை செய்யப்பட்டது. பள்ளியின் ஓவிய ஆசிரியர் ச.ஸ்ரீனிவாசன் பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
நிறைவாக ஆசிரியை பொ.பிரபா நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.







No comments:

Post a Comment