Sunday, 21 October 2018

தேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்..

#கின்னஸ் #சாதனை  #வாழ்த்துக்கள்...
தேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்..

பொன்னமராவதி அக்-20

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுவளவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிர் மெ. அழகன்-அஞ்சலை, தூத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அ. பழனிச்சாமி -நாச்சம்மை ஆகியோரின்  பேத்தியும் பொறியாளர்அழ. இளங்கோ -பரமேஸ்வரி ஆகியோரின் மகள் EL. இனியா (5)சென்னை -பரித்துப்பட்டு வேலம்மாள் வித்தியாலயா பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார். இவர் படிக்கும் பொழுதே படிப்பிலும், விளையாட்டிலும் அதிக ஈடுபாடு இவரின் திறமையை அறிந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு . இப்ராஹிம் அவர்களும் பள்ளியின் முதல்வர் திருமதி. செல்வநாயகி அவர்களும் இம் மாணவியின் திறமையை கண்டு அவற்றை வெளிக்கொணரும் வகையில் உடற்பயிற்சியிலும், விளையாட்டிலும், யோகா பயிற்சியிலும்  ஈடுபடுத்தினர். தாயார் பரமேஸ்வரியின் கடின உழைப்பும் - கனிவும், அரவணைப்புடன் சேர வே இனியா ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியில்  தேசிய அளவில் பல சாதனை புரிந்துள்ளார் இந்நிலையில் இந்திய அளவில் 20.10.2018 அன்று முதல் முறையாக "அனுமன் ஆசனாநிலையில் தொடர்ச்சியாக 17.46 நிமிடம் அமர்ந்து இந்திய அளவில் முதல் முறையாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இச் சாதனை இந்திய புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளது. இம் மாணவி காலை , மாலை இரு வேளையிலும் உடற்பயிற்கும், ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சிக்கும், யோகா பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளித்து இந்த சிறுவயதிலே பயிற்சி மேற்கொள்வார். விளையாட்டில் மட்டும் மல்லாது படிப்பிலும் படு கெட்டிக்கார மாணவியாக திகழ்கிறார்.   இந்திய பாரதப்பிரதமர் அவர்கள் உலக நாடுகளுக்குச்சென்று யோகாவின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கும் இவ்வேளையில் இம்மாணவியின்  சாதனை இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை இவரின் வெற்றி தொடரவும் உலக அளவில் சாதனை நிகழ்த்தவும் அவர்தம் ஊரான பொன்னமராவதி மக்களும் நண்பர்களும் அனைத்து பொதுச் சேவை அமைப்புகளும், சங்கங்களும் வாழ்த்துகளை கூறி பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a comment