நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
நடிகர் திலகம்
சிவாஜி சமூக நலப்பேரவை சார்பாக சிவாஜி
கணேசன் 90-வது பிறந்தநாள் விழா புதுக்கோட்டை
பிருந்தாவனத்தில் சிவாஜி சமூக நலப் பேரவை மாவட்டத் தலைவர் அ.சுப்பையா தலைமையில் நடைபெற்றது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்
சங்கத்தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி உதவிப் பேராசிரியர் மருத்துவர்
கே.ஆறுமுகம் சிறப்பு விருந்தினரர்களாக கலந்து கொண்டு சிவாஜி கணேசன் அவர்களின் திரு
உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு
இனிப்பு வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பி.அசோகன்
வரவேற்றார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எ.ஜே.இப்ராஹீம் பாபு, ஆசிரியர் ஆர்.எஸ் காசிநாதன், ஆர்ட்டிஸ்ட் ஆறுமுகம், வெங்கடேசன், திவ்யரவி, முருகேசன், யாசீம் முகம்மது, பழக்கடை ரவி திருவள்ளுவர் பேரவை கண்ணதாசன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ராதாகிருஷ்ணன், பழனியப்பன் முன்னால் ஆட்டோ சங்கத் தலைவர் ஜெ.குமார் கலந்து கொண்டனர்.
நிறைவாக கவிஞர் புதுகைப் புதல்வன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
COMMENTS