தனது 65 பிறந்தநாளை விழாவை பிடாரம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் கொண்டாடிய சமூக ஆர்வலர்.
பொன்னமராவதி நவ-23
பொன்னமராவதி அருகே ஏனாதி பிடாரம்பட்டி அரசுப்பள்ளியில் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கவாடியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கீரவாணி கல்விக்குழுமத்தின் நிர்வாகி பெயர் வெட்டும் அழகு அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர் சார்பில் எழுதுகோல், வாய்ப்பாடு புத்தகம், இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி தலைமைவகித்து வரவேற்றார். இதில் கீரவாணி கல்விக்குழுமத்தின் சார்பில் பிடாரம்பட்டியை சேர்ந்த பெயர் வெட்டும் அழகு தனது 65 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டு தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றார். அதனடிப்படையில் இந்தாண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு எழுதுகோல், வாய்ப்பாடு புத்தகம், இனிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டது. மாணவர்கள் அதனை உற்சாகத்துடன் பெற்றனர்.
படங்கள்.. கீரவாணி அழகு இளையராஜா பொன்னமராவதி செய்தியாளர்.
COMMENTS