--> ரோட்டரி மாவட்டம் 3000 2017-18 ஜெம்ஸ் அணியினர் சந்திப்பு | Whatsapp Useful Messages

ரோட்டரி மாவட்டம் 3000 2017-18 ஜெம்ஸ் அணியினர் சந்திப்பு

ரோட்டரி மாவட்டம் 3000 2017-18 ஜெம்ஸ் அணியினர் சந்திப்பு
அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர் ஆகிய எட்டு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய ரோட்டரி மாவட்டம் 3000த்தின் 2017-18 மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு 2017-18 ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர்  ப. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 15-12-2018 சனிக்கிழமை மாலை திருச்சி மொரேய்ஸ் சிட்டி ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், 2017-18 மாவட்டச் செயலாளருமான இராஜா ஏற்று நடத்தினார்.
இந்நிகழ்வில் தலைமையேற்றுப் பேசிய கோபாலகிருஷ்ணன் அவர்கள்சென்ற ஆண்டு மாவட்டம் செய்த சாதனைகளை விளக்கினார். 2017-18 ஆண்டு முழுக்க ஒத்துழைத்த மாவட்டப் பொறுப்பாளர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். 2017-18ம் ஆண்டில் ரோட்டரி மாவட்டம் 3000 செய்த சேவைகள் பின்வருமாறு:
 ரோட்டரி மாவட்டம் முழுக்க உள்ள சங்கங்கள் மூலமாக 9 கோடி ரூபாய்க்கு மேலாக சேவைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 நவரத்னா திட்டம் மூலம் 9 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று பின்வரும் சேவைத் திட்டங்கள் சங்கங்கள் மூலமாக நிறைவேற்றப்பட்டன.
1. ஜீலை 1 - இரத்ததான முகாம்.
2. ஆகஸ்ட் 12, 2017 – 5000 மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல், போதைப்பொருள் ஆபத்து பற்றி இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வுப் பேரணி.
3. அக்டோபர் 14 - வாழ்க்கைத் துணையைப் போற்றும் நிகழ்ச்சி.
4. நவம்பர் 11 - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தேவையான கல்விச் சாதனங்கள் வழங்குதல்.
5. டிசம்பர் 9 - ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி வழங்குதல்.
6. பிப்ரவரி 10 - மருத்துவ முகாம்கள் நடத்துதல்.
7. மார்ச் 10 - பள்ளிக் குழந்தைகளின் பாடம் சாராத தனித்திறன் கண்டறிதல்.
8. ஏப்ரல் 7 - பசியால் வாடுவோர்க்கு உணவு வழங்குதல்.
9. மே 12 - சூரிய மின்ஒளி சாதனங்கள் சமூகப் பயன்பாட்டிற்கு வழங்குதல்.
 ஜெம்ஸ் பள்ளித் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறைகள், கை சுத்தம் செய்யும் வசதிகள், ஆழ்கிணறுகள், மேஜைகள், இருக்கைகள், மின்னியல் கல்விச் சாதனங்கள், அறிவியல் ஆய்வகங்கள், கணினி உபகரணங்கள் மொத்தம் 3.4 கோடி ரூபாயில் வழங்கப்பட்டுள்ளன.
 எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 5000 ஆசிரியர்களுக்கு கற்பித்தல் மேம்பாட்டுப் பயிற்சியும், 3000 பள்ளிக் குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கல்விப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளன.
 இளைஞர் தலைமைத் திறன் வளர்க்கும் நோக்கத்துடன் ஒருநாள் தலைமைப் பண்புப் பயிற்சி 60 சங்கங்கள் மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
 பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான இலவச செவிலியர் தகுதிக்கான ஓராண்டுப் பயிற்சி, அழகுக்கலைப் பயிற்சி, நிழற்படக் கலைப் பயிற்சி, வாகனம் ஓட்டும் பயிற்சி, ஆபரணக் கைவினைப் பயிற்சி 19 ஊர்களில் ஆண்டு முழுக்க ஒவ்வொரு நாளும் இரண்டு சுழற்சி முறையில் இலவச தையல் பயிற்சி மையங்கள் மூலம் பெண்கள் வாழ்வாதாரத்திற்கு மேலும் வழிவகுக்கும் சான்றிதழ் பயிற்சி ரூ. 60 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
 மேலும் ரோட்டரி அறக்கட்டளையின் நிதி உதவியோடு 11 கோடிக்கும் மேலாக நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 ரோட்டரி அறக்கட்டளைக்கு 12 லட்சத்து, 72 ஆயிரத்து 5 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
 ரோட்டரி மாவட்டம் 3000 வரலாற்றில் இதுவே அதிகமான நன்கொடையாகும். 2017-18ம் ஆண்டு இந்திய ரோட்டரி மாவட்டங்கள் வழங்கிய நன்கொடைகளுள் ரோட்டரி மாவட்டம் 3000 இரண்டாம் இடம் பெற்றுள்ளது. உலக அளவில் 14வது இடம் பெற்றுள்ளது.
 தொழில் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் செலவிடும் நிதியினைப் பெற்று அதற்குச் சமமான ரோட்டரி அறக்கட்டளை நிதியினையும் பெற்று 7.75 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் பல நலத்திட்டங்கள் நிறைவேற்றியுள்ளது.
 ஆறு இடங்களில் குறைந்த கட்டண இரத்தம் சுத்தம் செய்யும் மையங்கள் முழு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.
 ஒரு கோடி ரூபாய் செலவில் நடமாடும் புற்றுநோய் கண்டறியும் மருத்துவச் செயலகம் துவங்கப்படவுள்ளது.
 40 இலட்சம் ரூபாய் செலவில் நடமாடும் இரத்தம் சேகரிக்கும் வங்கி.
 40 இலட்சம் ரூபாய் செலவில் இரத்த வங்கி அமைக்கப்படவுள்ளது.
 40 இலட்சம் ரூபாய் செலவில் நுண்கடன் திட்டம் துவங்கப்படவுள்ளது.
 60 இலட்சம் ரூபாய் செலவில் மூன்று நடமாடும் மருத்துவ மனைகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
 45 இலட்சம் ரூபாய் செலவில் நான்கு கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டு ரோட்டரி கோபாலகிருஷ்ணன் அவர்களை ரோட்டரி முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் பாராட்டி பேசினார்கள். நிறைவாக 2017-18 ரோட்டரி ஆண்டின் மாவட்டச் செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6212,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2340,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: ரோட்டரி மாவட்டம் 3000 2017-18 ஜெம்ஸ் அணியினர் சந்திப்பு
ரோட்டரி மாவட்டம் 3000 2017-18 ஜெம்ஸ் அணியினர் சந்திப்பு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-ajfIRdOzSu9UcS28gAPRgk3mkIQ-uzQkk56IOfFnWJJewowa5HGqYgniZ1GLFAZwmhPhGLR2Kk20CDFJrcOz385-jF_f0K7VzYSJD1QTJiM6nBfyJRDBIp9g7-w806XeLgXjKt7cpdE/s320/IMG-20181221-WA0009.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-ajfIRdOzSu9UcS28gAPRgk3mkIQ-uzQkk56IOfFnWJJewowa5HGqYgniZ1GLFAZwmhPhGLR2Kk20CDFJrcOz385-jF_f0K7VzYSJD1QTJiM6nBfyJRDBIp9g7-w806XeLgXjKt7cpdE/s72-c/IMG-20181221-WA0009.jpg
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2018/12/3000-2017-18.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2018/12/3000-2017-18.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content