கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா
வந்தவாசி இந்திய மருத்துவ சங்கம் ரோட்டரி மாவட்டம் 3132 ரோட்டரி மாவட்டம் நகரம் 3231 லயன்ஸ் கிளப்ஸ் மாவட்டம் 324யு4 லயன்ஸ கில் டவுன் 324யு4 மற்றும் ஜ.என்.டி.யு.சி பெல் இணைந்து; முத்துப்பேட்டை ஒன்றியம் இடையூர் கிராம பொது மக்களுக்கு பெட்சீட் ,சோலார் விளக்கு, நைட்டி, சோப்பு,உணவுப்பொருட்கள்,அரிசி, மளிகைபொருட்கள், கொசுவர்த்தி,மெழுகுவர்த்தி,தீப்பெட்டி, நோட்டுபுத்தகம், தார்ப்பாலின் குழந்தைகளுக்கு புதிய துணிகள் உள்ளிட்;டபொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வந்தவாசி மருத்துவர் பிரபு, மற்றும் குமார் அல்லா பாஸ்கான்,தேவதாஸ், மோகன்ஆனந்த் கோபிநாத் ராஜா சீனிவாசன,; தேவசேனா, குமார், குழுவினர்கள் தலைமையில் நிவாரணப்பொருட்கள் கொண்டுவந்தனர். நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவை சாலை விபத்து; தடுப்பு மற்றும் மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டு மாவட்ட துணை காவல் கண்கானிப்பாளர் தலைமையில் நிவாரணப்பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. திருச்சி பெல் நிறுவன ஊழியர்கள் ஜானகி ராமன் டேவியஸ் முத்துக்குமார் கலந்துகொண்டனர் சுமார் 200 பேருக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.
COMMENTS