https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 1 January 2019

பிளாஸ்டிக் தடை ஜன 1 முதல் அமலுக்கு வருவதால் பஸ்டாண்டில் குடிநீரை சுத்தகரிக்கும் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை
பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமலுக்கு வருவதால் புதுக்கோட்டை புதிய பஸ்டாண்டில் குடிநீரை சுத்தகரிக்கும் நிலையத்தை நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டு இயங்க தொடங்கியுள்ளது.
ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலாகிறது. தொடர்ந்து புதுக்கோட்டையில் உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் கேரிபைகள் உபயோகப்படுத்துவதில்லை என்ற முடிவினை தொடர்ந்து 10 ஆயிரம் துணி பைகள் தயாரிப்பதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு அதற்கான தாயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. 
மேலும், பிளாஸ்டிக் தடை உறுதியானதை தொடர்ந்து அனைத்து உணவங்களின் உரிமையாளர்கள் வர்த்தகர்கள் கடந்த 20ம் தேதி முதல் துணி பைகளை பயன்படுத்த தொடங்கினர். மேலும் வாடிக்கையாளர்களிடம் பிளாஸ்டிக் தடை தொடர்பாக விளக்கி வருகின்றனர். இந்நிலையில் பிளாடிக் கழிவுகளில் முக்கியமானதாக டாஸ்மாக் பார்களில் பயன்பாட்டிற்கு பின்னர் வெளியே குப்பைகளில் வீசியெறிப்படும் பிளாஸ்டிக் டம்பளர், குடிநீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றுக்கும் தடை உள்ளதால் தற்போது டாஸ்மாக் பார்களில் குடிநீர் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மினரல் வாட்டர் கேன்கள் மற்றும் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்பளர் பதிலாக கண்ணாடி, பேப்பர் கப்கள் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதேவேளையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடமான புதுக்கோட்டை புதிய பஸ்டாண்டில் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் தொடர்பாக கலெக்டர் கணேஷ் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். 
தொடர்ந்து, புதிய பஸ்ஸ்டாண்டில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நகர பேரூந்துகள் பகுதிகளில் பஸ்கள் நிறுத்துமிடம் பகுதிகளில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் நேற்று முதல் இயங்க தொடங்கியுள்ளன. இதன் மூலம் பயணிகள் பாக்கெட் குடிநீரை தேடி அலைய வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளன. அதேவேளையில் குடிநீர் பாக்கெட் கழீவுகள் பஸ்டாண்டில் சிதறி கிடந்ததும் குறைய தொடங்கியுள்ளன.

No comments:

Post a Comment