--> விஸ்வாசம் திரைவிமர்சனம் | Whatsapp Useful Messages

விஸ்வாசம் திரைவிமர்சனம்

*விஸ்வாசம் திரைவிமர்சனம்*…

அஜித் – சிவா கூட்டணியில் மற்றொரு கிராமத்துக் கதை.. கிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்நயன்தாராவை  காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் – நயன்தாரா இருவரும் ,பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகள் அனிகாவை கூட்டிக் கொண்டு மும்பை சென்றுவிடுகிறார்.

10 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கோவில் திருவிழாவுக்கு ஊர்மக்கள் அனைவரும் கூடுவது வழக்கம். அந்த வகையில் தனித்து வாழும் தனது மருமகன் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படும் மாமா தம்பி ராமையா, நயன்தாரா, அனிகாவை திரும்ப அழைத்து வரும்படி கூறுகிறார்.

இதையடுத்து இருவரையும் அழைத்துவர மும்பை செல்கிறார் அஜித். அங்கு தனது மகள் அனிகாவுக்கு, ஜெகபதி பாபுவால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்கிறார்.

அங்கு தான் அப்பா என்பதை சொல்லாமல், அனிகாவுக்கு வரும் ஆபத்துக்களை அஜித் எப்படி தடுக்கிறார்? தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார்? ஜெகபதி பாபு யார்? அவர் ஏன் அனிகாவை கொல்ல நினைக்கிறார்? அஜித் – நயன்தாரா மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அஜித் இந்த படத்தில் இருவேறு கெட்அப்புகளில் வந்து கலக்கியிருக்கிறார். மாஸ், கிளாஸ், மதுரை பேச்சு, மிரட்டல் வசனங்கள், காமெடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். நயன்தாராவுடன் காதல், திருமணம், மகள் மீதான பாசம் என அன்பை பொழிந்திருக்கிறார். அஜித் தனது மாஸ் தோற்றத்துடன் பெரும்பாலான இடங்களில் வேட்டி, சட்டையுடனேயே வந்து செல்கிறார். சண்டைக்காட்சி குறிப்பாக மழையில் நடக்கும் சண்டை, பாத்ரூம் சண்டை என சண்டைக்காட்சிகளுக்கு அனல் பறக்கிறது. அஜித் தோன்றும் முதல் காட்சி, பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா, நான் வில்லன்டா என அஜித் பேசும் பஞ்ச் வசனங்களில் மாஸ் அஜித்தை பார்க்க முடிகிறது.

நயன்தாரா அஜித்துடன் காதல், சண்டை, குழந்தை மீதான பாசம் என குடும்ப பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தம்பி ராமையா அவரது ஸ்டைலில் கலகலக்க வைக்கிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்தின் மகளாக அனிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபுவும் குறிப்பிட்ட இடங்களில் காமெடியால் சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா, ரமேஷ் திலக், ரவி அவானா, பாரத் ரெட்டி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

வீரம் படத்திற்கு பிறகு குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. தனது வழக்கமான மசாலா இல்லாமல், கிராமம், மக்கள், குடும்பம், மனைவி, மகள் என படத்தின் கதை நகர்கிறது. படத்தில் அஜித்துக்கு மாஸான பேச்சு, சண்டைக்காட்சிகள் இருந்தாலும், அஜித்தை இன்னும் மாஸாக காட்டியிருக்கலாமோ என்று யோசிக்க வைத்துவிட்டார். அஜித் ரசிகர்களை இன்னமும் மகிழ்ச்சிபடுத்தியிருக்கலாம் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. மற்றபடி குடும்பத்துடன் இணைந்து பார்க்க வேண்டிய படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

டி.இமான் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்புகின்றன. பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவில் கிராமம், நகரம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6212,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2340,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: விஸ்வாசம் திரைவிமர்சனம்
விஸ்வாசம் திரைவிமர்சனம்
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2019/01/blog-post_10.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2019/01/blog-post_10.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content