Sunday, 13 January 2019

நகராட்சி பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் தீயனைப்புத்துறை பணியாளர்களுக்கு பரிசு

நகராட்சி பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் தீயனைப்புத்துறை பணியாளர்களுக்கு பரிசு
அறந்தாங்கி திஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கஜா புயலின் போது மிகச்சிறப்பாக சேவை மனப்பாண்மையோடு பணியாற்றிய அறந்தாங்கி நகராட்சி பணியாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறை பணியாளர்களைப் பாராட்டி பரிசு வழங்கும் விழா சங்கத்தலைவர் சொ.கவி கார்த்திக் தலமையில் மலர் திருமண மஹாலில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் (பொ) என்.மீரா அலி மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனிவாசன் துணை ஆளுனர் த.டீர்ஷேக், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ், உறுப்பினர் வளர்ச்சி மாவட்டத் தலைவர் கே.கான் அப்துல் கபார்காள் பட்டயத்தலைவர் டாக்டர் எஸ்.தெட்சினாமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்கள் மாவட்ட செயலாளர்கள் ரெங்கநாதன் சாந்தாராம் முன்னாள் மண்டல ஒருங்கிணைப்பாளர் எ.ஆறுமுகம் மகிழ்ச்சி கிராம திட்டத் தலைவர் ஜெய்பார்த்தீபன் ரோட்டரி டயாலிஸஸ் சென்டர் திட்டத் தலைவர் சே.வில்சன் ஆனந்த் தலைவர் தேர்வு எஸ்.விஜய் முன்னிலை வகித்தனர் மாவட்ட ஆளுனர் தேர்வு அ.லெ.சொக்கலிங்கம் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக வருகை தந்த அனைவரையும் செயலாளர் ஆர்.தினேஷ்  வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுனர் ஆர்.வி.என்.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நகராட்சி பணியாளர்கள், மின்சார ஊழியர்கள். தீயனைப்பு துறை பணியாளர்களுக்கு, வேஷ்டி, சட்டை, சேலை வழங்கித்தந்தார். நிகழ்ச்சியினை முன்னாள் தலைவர். கே.கான் அப்துல் கபார்கான் தொகுத்து வழங்கினார் நிறைவாக பொருளாளர் எ.கலந்தர்மைதீன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் சுமார்.300 பேருக்கு வேஷ்டி, சட்டை, சேலை, துண்டு வழங்கப்பட்டது.

No comments:

Post a comment