Tuesday, 22 January 2019

இளையோருக்கான தலைமைப்பண்பு பயிற்சி முகாம்


இளையோருக்கான தலைமைப்பண்பு பயிற்சி முகாம்
ஆலங்குடி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து பள்ளி வளாகத்தில் தாளாளர் சி.எம்.கருப்பையா தலைமையில் இளையோருக்கான தலைமைப்பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் பி.கணபதி கல்லாலங்குடி சுபபாரதி பள்ளி தாளாளர் எஸ்.விஜயா முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் துணை ஆளுநரும் வழக்கறிஞருமான எஸ்.பி.ராஜா வரவேற்றார். மண்டல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.என்.சீனிவாசன், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள். மதுரை மன்னர் நாயக்கர் கல்லூரி இயக்குநர் இரா.இராஜாகோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'உலகை நீ வெல்வாய்" என்ற தலைப்பில் இளையோருக்கான தலைமைப்பண்பு பயிற்சி முகாமினை தொடங்கிவைத்து பேசும் போது ஒரு சிறந்த தலைவராகத்திகழ வேண்டுமானால் மூன்று குணங்கள் மிகமிக முக்கியமானவை காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடமை, துணிவுடமை, எந்த தலைவனுக்கும், வாழ்க்கையில் வெற்றிபெற நினைக்கும் அனைவருக்கும் இருக்க வேண்டிய முக்கியமான பண்பு ஒருவரின் காலம் தாழ்த்தும் பண்பினால் எத்தனையோ விஷயங்கள் தள்ளிப் போவதுண்டு தோல்வியில் முடிவதுண்டு, ஒரு விஷயம் செய்யவேண்டி இருக்கிறதென்றால் அதை உடனுக்குடன் செய்ய வேண்டும் என்று கூறினார்.
உலகை நீ வெல்வாய் என்ற தலைப்பில் கீழே தரப்பட்டுள்ள மேலும் பத்துக் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் பதிலளிக்கவும். என் வாழ்வில் நான் என்றும் கடைப்பிடிக்க விரும்பும் கொள்கைகள். என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட மிக மகிழ்ச்சியான நிகழ்ச்சி, என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட மிக சோகமான, கசப்பான நிகழ்ச்சி, மேற்கூறிய இரு கேள்விகளுக்கும் எழுதிய பதில்களின்படி கிடைத்த படிப்பினை என்ன? என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நான் ஏற்றிருக்கும் எழுச்சி வாசகம், மற்றவர்கள் என்னைப்பற்றி எப்படி நினைக்க வேண்டும் என விரும்புகிறேன்? நான் நன்றாகச் செய்ய விரும்பும், ஆனால் செய்ய முடியாத சில விஷயங்கள், என் வாழ்நாளில் நான் சாதிக்க விரும்புவன, என் முன்னேற்றம் சம்பந்தமாக உடனடியாக நான் செய்ய வேண்டிய சில விஷயங்கள், என் வாழ்வின் இன்றியமையாத முன்னுரிமைகள் இக்கேள்விகளுக்கு பதிலளிப்பதில் சிரமங்கள் தோன்றலாம் பதிலளித்து முடித்தவுடன் பதில்களில் சொன்ன நல்லவற்றைத் தொடர்ந்து செய்வதும். குறைகளைச் சரி செய்து மீளுவதும் மேலும் சிரமமாகத் தோன்றலாம். பயப்பட வேண்டாம். இது ஓர் ஆரம்ப நிலைச் சிரமம்தான். மன உறுதியோடு செயல்பட்டால் சுய முன்னேற்றம் விரைவில் கையகப்படும். சுயமதிப்பீடு என்ற 15 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் எண்ணமும், செயலும் இன்னும் குழந்தைத்தனமாக இருக்கிறதா? நண்பர்களை, அதாவது தொடர்ந்து நட்பு பாராட்டும் நண்பர்களைப் பெற்றுள்ளாயா? மனதில் அவ்வப்போது பொங்கி எழுந்து மனதிலேயே அமுங்கிக் கிடக்கின்ற ஆசாபாசங்கள், கோபதாபங்களை அவ்வப்போது யாரிடமேனும் கொட்டித் தீர்த்து நிவாரணம் தேடுகிறாயா? சுயமாகத் திறமையாகச் செய்யமுடியும் என்று சொல்லுமளவிற்கு ஏதேனும் நுட்பங்கள் கற்றுள்ளாயா? பொருள்களை வீட்டிலும், வெளியிலும் ஒழுங்கான முறையில் வைத்திருக்கிறாயா? கூச்ச சுபாவம் இல்லாமல் வீட்டில், பள்ளியில், வெளியில் ஏதேனும் விஷயத்தைப் பற்றிக் கேட்க முடியுமா, சொல்லமுடியுமா? வாழ்நாள் முழுக்க தொடர்ந்து கடைப்பிடிக்கக் கூடிய பொழுது போக்கு ஏதேனும் ஒன்றையாவது தேர்ந்தெடுத்துவிட்டாயா? குடும்பத்தாரோடு அன்புடனும், மரியாதையுடனும் பழகுகிறாயா? சமுதாய உணர்வு உடன்பாட்டு உணர்வாக (Pழளவைiஎந கநநடiபெ) இருக்கிறதா? உடல் நலம் நன்கு பேணுகிறாயா? கற்பதில் சிறந்த முறை வெறும் மனப்பாடம் செய்வதல்ல, ஆனால் பாடங்களைப் புரிந்து மனதில் பதிய வைத்தல் என்பதைக் கடைப்பிடிக்க முடிகிறதா? தோல்வி மற்றும் பயம் பெரிதும் மனதைப் பாதிக்கிறதா? சுய முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறாயா? பிடிவாத குணம் உள்ளதா? பிடித்த நல்ல செயலைச் செய்து முடிப்பதில் உறுதிப்பாடு உள்ளதா? என்ற கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்த 6 மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் மதுரை ராஜாராம், புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.பி.பழனியப்பன், முன்னாள் தலைவர் எ.ஜெரால்டு ஞானப்பிரகாசம், கே.சுப்பிரமணியன், எ.அய்யப்பன், டி.வியாகுல ராபர்ட், ஆசிரியர்கள் மாணவர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர் நிறைவாக பொருளாளர் மரிய சூசை நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. 
.

No comments:

Post a comment