பாரம்பரிய உணவு திருவிழா 2019
ஆலங்குடி ஸ்ரீ பாரதி மெட்ரிக் பள்ளி சார்பாக பள்ளி வளாகத்தில் சி. எம். கருப்பையா தலைமையில் பாரம்பரிய உணவுத் திருவிழா 2019 நடைபெற்றது முன்னதாக வருகை தந்த அனைவரையும் பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் எஸ். விஜயா வரவேற்றார் ரோட்டரி மாவட்டம் 3000 தின் துணைஆளுநர் வழக்கறிஞர் எஸ். இராஜா உணவுத் திருவிழாவினை துவக்கி வைத்தார் மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண. மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாரம்பரிய உணவுத் திருவிழாவினை கண்டு ரசித்து ருசித்து மாணவர்களை பாராட்டினார் திருவிழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர் நிறைவாக பள்ளிமுதல்வர் எஸ். அழகுராஜா நன்றி கூறினார்
COMMENTS