உள் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்...
*உள் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.*
*வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் 25-ஆம் தேதி வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுளது.*
COMMENTS