https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 19 March 2019

கிருஷ்ணகிரி அருகே போலி சாமியார் வீட்டில் கைத்துப்பாக்கி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே போலி சாமியார் வீட்டில் கைத்துப்பாக்கி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே போலி சாமியார் வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி அருகே சின்னமுத்தூர் கம்பளிக்கான் தெருவைச் சேர்ந்தவர் டான் (50). பெங்களூரைச் சேர்ந்த இவர் கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகிறார். தையல் தொழிலில் ஈடுபடுவதோடு, ஜோதிடராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு தனது வீட்டில் டான் யாகபூஜை நடத்தினர். அப்போது ஏற்பட்ட தீயை அணைக்க, அதே பகுதியில் வசிக்கும் காவேரி (50), சவுந்தர்(23), முனியப்பன் (28) ஆகியோர்வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், காவேரி, சவுந்தர், முனியப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சை பலனில்லாமல் முனியப்பன் உயிரிழந்தார்.

மக்கள் போராட்டம்

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் டானை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை மீண்டும் அப்பகுதி மக்கள், டான் வீட்டை உடைத்து அங்கிருந்த சிலைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வெளியே வீசினர்.

அதில் கைத்துப்பாக்கி இருந்ததைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டின் தரையை கடப்பாரையால் தோண்டினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவேரிப்பட்டணம் போலீஸார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். உரியபுகார் அளித்தால் போலி சாமியாரைகைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும், அங்கிருந்த சிலைகள் மற்றும் கைத்துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment