Monday, 20 May 2019

வரலாற்றில் இன்று 20/05/2019-திங்கள்

வரலாற்றில்  இன்று
20/05/2019-திங்கள்
========================
20/05/1506- அமெரிக்காவைக்  கண்டுபிடித்த
கடல் பயண வீரர் கொலம்பஸ் ஸ்பெயினில் காலமானார் .

20/05/1570- உலகின் முதலாவது நில வரைபடத்தை (அட்லஸ் )ஆபிரகாம் ஒர்டெலியஸ் வரைந்தார் .

20/05/1842- அமெரிக்காவில் முதல் சர்வதேசக்  குதிரை போட்டி ஒன்று நடந்தது. இதில் புதுமை என்னவென்றால் குதிரைகள் அனைத்தும் பின்னோக்கி ஓட வேண்டும் .

20/05/1869- யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.

20/05/1873 -
லேவி ஸ்ட்ராவுஸ் , ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்பு தட்டு ஆணியுடன்  நீல நிற ஜீன்ஸுக்கான  காப்புரிமம் பெற்றனர் .

20/05/1875- அனைத்துலக முறை அலகுகள் (நீளம், மீட்டர், எடை போன்ற)
முறையை
ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் 17
நாடுகள் கையெழுத்திட்டன.

20/05/1891-தாமஸ் ஆல்வா எடிசன் சினிமாவின் முன்மாதிரிக்  கருவியான
கினிடாஸ்கோப்பை  அறிமுகப் படுத்தினார் .

20/05/1902- அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது.

20/05/1903- லாரி போன்ற வர்த்தக நோக்குடன் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் போட்டி பந்தயம்
நியூயார்க்கில்  நடைபெற்றது.

20/05/1910-  இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட்டின் இறுதி ஊர்வல
செய்தி திரைப் படம் வண்ணத்தில் எடுக்கப்பட்டது .

20/05/1917- ஜெர்மனி நீர்மூழ்கிக்  கப்பல், பிரிட்டிஷ் விமானப்படை தாக்குதலினால் மூழ்கியது. விமானத்  தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக்  கப்பல் இது.

20/05/1918- பிரிட்டனில் வேளாண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் திட்டம் முதல் முதல் நடைமுறைக்கு வந்தது .

20/05/1919- பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது .

20/05/1939- அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே தினசரி விமானப்  போக்குவரத்தை
பான் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் துவக்கியது.

20/05/1940- ஜெமினி, பிரான்சில் அமெயின்ஸ்
எனும் இடத்தை  காலையிலும் ,
அப்பே வில்லி எனும் இடத்தை மாலையிலும் கைப்பற்றியது.

20/05/1941-கிரீட் நகரை ஜெர்மனியின்  பாரசூட் படையினர் கைப்பற்றினர்.

20/05/1942-அமெரிக்கக் கடற்படையில் முதன் முதல் நீக்ரோ இனத்தவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

20/05/1965- முழுக்க முழுக்க இந்தியர்களே அமைந்த முதல் குழு கோஹ்லி என்பவர் தலைமையில் எவரெஸ்டை முதல் முதலாக வெற்றிகரமாய் அடைந்தது .

எகிப்தின் கெய்ரோ நகரில் பாகிஸ்தான் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.

20/05/1971- பாகிஸ்தான் படைகள் சுக் நகர் என்ற இடத்தில் வங்காள  இந்துக்களைப்  படுகொலை செய்தனர்.

20/05/1983- எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்ஐவி வைரஸ் கண்டு பிடித்த செய்தி முதல் தடவையாக வெளியிடப்பட்டன.

20/05/1985- வாய்ஸ்
ஆப் அமெரிக்கா ,
கியூபாவுக்கான வானொலி சேவையை ஆரம்பித்தது.

20/05/1989-
சீனாவில் மாணவர்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து ராணுவச் சட்டம் அமலுக்கு வந்தது .

20/05/1994- பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் முற்றிலும் வெளியேறியது.

20/05/1997-  கொடைக்கானல் மலையில், பஸ் உருண்டு விழுந்ததில் 20 பேர் பலியானார்கள் .
52 பேர் படுகாயம் அடைந்தனர்.

20/05/2002- இந்தோனேசியாவி
டம் இருந்து கிழக்கு  திமோர் விடுதலை பெற்றது .

No comments:

Post a comment