ஆக்ஸிஸ் வங்கி நிகர இழப்பு ரூ.1,387 கோடி
# தனியாா் துறையைச் சோந்த ஆக்ஸிஸ் வங்கி கடந்த 2019-20 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.1,387.78 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இவ்வங்கி ரூ.1,505.06 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது.
# வருவாய் ரூ.18,324.31 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.20,219.57 கோடியாக இருந்தது. வாராக் கடன்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.2,711.43 கோடியிலிருந்து பல மடங்கு அதிகரித்து ரூ.7,730.02 கோடியானது. மொத்த வாராக் கடன் விகிதம் 5.26 சதவீதத்திலிருந்து 4.86 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 2.06 சதவீதத்திலிருந்து 1.56 சதவீதமாகவும் குறைந்தது என ஆக்ஸிஸ் வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது
COMMENTS