தமிழகம் முழுவதும் இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவு பெறவுள்ள நிலையில் பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது.
இந்தாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை அதிகபட்ச வெப்பநிலையாக 42°C வரை பதிவாகி மக்களை கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இன்று அக்னி நட்சத்திரம் முடிவு பெறவுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பதிவாகி, அக்னி நட்சத்திரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி மழையுடன் விடை பெற்றது புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஆனந்தம் அடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
COMMENTS