--> இந்தியா நோக்கி புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் ; இன்று அம்பாலா வந்தடையும் ! | Whatsapp Useful Messages

இந்தியா நோக்கி புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் ; இன்று அம்பாலா வந்தடையும் !

இந்தியா நோக்கி புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் ; இன்று அம்பாலா வந்தடையும் !

இந்தியாவின் விமானப்படை பலத்தை அதிகரிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் பேட்ஜ் 5 ரஃபேல் ரக போர் விமானங்கள் பிரான்ஸின் இஸ்ட்ரெஸ் தளத்திலிருந்து, நேற்று முன் இந்தியாவுக்கு புறப்பட்டது. இந்த விமானங்களை இந்திய விமானப்படை விமானிகளே இந்தியா நோக்கி ஓட்டி வந்து கொண்டிருக்கின்றனர்.  கிட்டத்தட்ட 7, 364 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து இன்று அம்பாலா விமாப்படைத் தளத்தில் தரையிறங்குகின்றன. 

முதல் பேட்ஜ் ரஃபேல் விமானங்கள் அம்பாலாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும். முன்னதாக, ரஃபேல் போர் விமானங்களை ஓட்ட பிரான்ஸில் இந்திய விமானப்படையின் 12 விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இவர்கள்தான் ரஃபேல் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, இந்திய விமானப்படை விமானிகளை பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷரப் சந்தித்து பேசினார். இந்திய விமானப்படை வீரர்களின் பாதுகாப்பான பயணத்துக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்திய விமானப்படை வீரர்களுடன் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் உரையாற்றும் புகைப்படத்தை பிரான்ஸ் விமானப்படை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது . தற்போது, இந்தியா வரும் ரஃபேல் விமானங்கள் லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்தியா ரூ. 58, 000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், 30 போர் விமானங்கள் , 6 பயிற்சி விமானங்கள் ஆகும். பயிற்சி விமானங்கள் இரட்டை இருக்கைகள் கொண்டவை. இரண்டாவது பேட்ஜ் ரஃபேல் விமானங்கள் மேற்கு வங்கத்திலுள்ள ஹாசிமாரா விமானப்படை தளத்தில் இணைக்ப்படும். இதற்காக, இந்த விமானப்படை மையத்தில் ரூ. 400 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரும் 2021- ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் 36 விமானங்கள் இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைக்க வேண்டும். ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக திட்டமிட்ட காலத்துக்குள் ரஃபேல் போர் விமானங்களை ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரஃபேல் போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்.

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: இந்தியா நோக்கி புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் ; இன்று அம்பாலா வந்தடையும் !
இந்தியா நோக்கி புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் ; இன்று அம்பாலா வந்தடையும் !
இந்தியா நோக்கி புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் ; இன்று அம்பாலா வந்தடையும் ! இந்தியாவின் விமானப்படை பலத்தை அதிகரிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் பேட்ஜ் 5 ரஃபேல் ரக போர் விமானங்கள் பிரான்ஸின் இஸ்ட்ரெஸ் தளத்திலிருந்து, நேற்று முன் இந்தியாவுக்கு புறப்பட்டது. இந்த விமானங்களை இந்திய விமானப்படை விமானிகளே இந்தியா நோக்கி ஓட்டி வந்து கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 7, 364 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து இன்று அம்பாலா விமாப்படைத் தளத்தில் தரையிறங்குகின்றன. முதல் பேட்ஜ் ரஃபேல் விமானங்கள் அம்பாலாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும். முன்னதாக, ரஃபேல் போர் விமானங்களை ஓட்ட பிரான்ஸில் இந்திய விமானப்படையின் 12 விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இவர்கள்தான் ரஃபேல் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டு வருகின்றனர். முன்னதாக, இந்திய விமானப்படை விமானிகளை பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷரப் சந்தித்து பேசினார். இந்திய விமானப்படை வீரர்களின் பாதுகாப்பான பயணத்துக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்திய விமானப்படை வீரர்களுடன் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் உரையாற்றும் புகைப்படத்தை பிரான்ஸ் விமானப்படை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது . தற்போது, இந்தியா வரும் ரஃபேல் விமானங்கள் லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்தியா ரூ. 58, 000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், 30 போர் விமானங்கள் , 6 பயிற்சி விமானங்கள் ஆகும். பயிற்சி விமானங்கள் இரட்டை இருக்கைகள் கொண்டவை. இரண்டாவது பேட்ஜ் ரஃபேல் விமானங்கள் மேற்கு வங்கத்திலுள்ள ஹாசிமாரா விமானப்படை தளத்தில் இணைக்ப்படும். இதற்காக, இந்த விமானப்படை மையத்தில் ரூ. 400 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் 2021- ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் 36 விமானங்கள் இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைக்க வேண்டும். ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக திட்டமிட்ட காலத்துக்குள் ரஃபேல் போர் விமானங்களை ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்.
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2020/07/blog-post_506.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2020/07/blog-post_506.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content