பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் இரண்டாம் நாளாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.
முகாமினை பொன்னமராவதி மருத்துவர் சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் ராயல் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் ரமேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் மணிமுத்து வர்த்தகர் சங்கத் தலைவர் பழனியப்பன், மாணிக்கவேல், கீர்த்தனா மணிகண்டன், ரமேஷ், கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருமலை நாகராஜன்
பொன்னமராவதி
COMMENTS