08-08-2020 சனிக்கிழமை ராசி பலன் & இன்றைய ஹோரை
மேஷம்
இன்று உங்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும்.விரைய செலவு ஏற்படும். உடல் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் கவனம். வீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். இன்றைக்கு மறக்காம சத்தான உணவுகளை சாப்பிடுங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க பாதிப்புகள் சரியாகும்.
ரிஷபம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். பணத்தை சிக்கனமாக செலவு பண்ணுங்க இல்லாட்டி கடன் வாங்க வேண்டியிருக்கும்.இன்றைய தினம் உங்களுக்கு வியாபாரத்தில் லாபம் வரும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம் பயன்படுத்திக்கங்க.
மிதுனம்
வியாபாரத்தில் லாபம் வரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்றைய தினம் உங்களுடைய வேலையை உற்சாகமாக செய்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பண வருமானம் வரும். வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுடைய குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும்.
சிம்மம்
கவனமாக இருங்க வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுங்க. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம். வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வீட்டை விட்டு வண்டி வாகனங்களில் வெளியே எங்கும் போக வேண்டாம் அப்புறம் பிரச்சினையாகிவிடும்.
கன்னி
சந்திரன் இன்றைக்கு உங்களுக்கு வெற்றிகளை தேடி தருவார். காரணம் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் குறையும். நண்பர்களினால் உதவி கிடைக்கும்.
துலாம்
உங்களுக்கு மனதில் அமைதி பிறக்கும். வருமானம் வரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். கடன் வாங்க வேண்டாம் கவனமாக இருங்க. வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
உங்களுடைய பிள்ளைகளால் வீட்டில் பிரச்சினை ஏற்படலாம். உங்களுக்கு பணம் வரவு வரும். பழைய கடன்கள் வசூலாகும். வங்கி கடன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கண்டதையும் சாப்பிடாதீங்க.
தனுசு
குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய முயற்சிகளையும் முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணவரவு இன்று சுமாராக இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணிக்கிறார். இன்று உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் நாள். உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும் அதேபோல செலவுகளும் இருக்கும். வீட்டில் வீண் பேச்சுக்கள் வேண்டாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
கும்பம்
சந்திரன் இன்று உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணிக்கிறார். இன்றைய தினம் உங்க ராசிக்கு 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். இன்று மந்தமாக இருப்பீர்கள் வேலை செய்யும் இடத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்குவீர்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள்.
மீனம்
சந்திரன் உங்க ராசிக்குள் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். எப்போதோ கொடுத்த கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் பெருமை சேரும் உற்சாகம் கிடைக்கும்.உங்க குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7. சனி.. அசுபம் ❌
7-8. குரு. சுபம் ✔
8-9. செவ்வா. அசுபம் ❌
9-10. .சூரியன். அசுபம் ❌
10-11. சுக்கிரன். சுபம் ✔
11-12. புதன். சுபம் ✔
பிற்பகல்
12-1. சந்திரன். சுபம் ✔
1-2. சனி.. அசுபம் ❌
2-3. குரு. சுபம் ✔
மாலை
3-4. செவ்வா. அசுபம் ❌
4-5. சூரியன் .அசுபம் ❌
5-6. சுக்கிரன். சுபம் ✔
6-7. புதன். சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
ஓரை என்றால் என்ன?*
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
COMMENTS