2ஜி சேவையை நிறுத்த வேண்டும் என்ற முகேஷ் அம்பானியின் கருத்துக்கு வோடோபோன் எம்.டி எதிர்ப்பு
இந்தியாவில் 2ஜி சேவையை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்ற முகேஷ் அம்பானியின் கருத்துக்கு வோடோபோன் ஐடியாவின் நி்ர்வாக இயக்குனர் ரவீந்தர் தக்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ரிலையன் தலைவர் முகேஷ் அம்பானி விடுத்திருந்த செய்தியில் உலகின் பல நாடுகள் 5ஜி சேவைக்கு மாறியுள்ள நிலையில் நம் நாட்டில் மட்டும் இன்னும் 30 கோடி பேர் 2ஜி சேவையை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார். 2ஜி சேவையை நாட்டிலிருந்து முற்றிலும் நீக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்
இது குறித்து வோடோ ஐடியா நிர்வாக இயக்குனர் ரவீந்தர் தக்கர், 'இந்தியாவில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு 2ஜி சேவை சிறப்பாக பயன்பட்டு வருகிறது. ஒரு பகுதி வாடிக்கையாளர்களுக்கு இது சிறப்பாகவும், மலிவான சேவையாகவும் உள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்கள் 2ஜி சேவையை விரும்புகிறார்கள். சர்வதேச அளவிலும் 15 சதவீத வாடிக்கையாளர்கள் செலவு குறைவு போன்ற காரணங்களால் இன்றளவும் 2ஜி சேவையை விரும்புகிறார்கள்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
COMMENTS