--> மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக பதவியேற்பு | Whatsapp Useful Messages

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக பதவியேற்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் 13வது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (09) முற்பகல் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த களனி ரஜமகா விகாரையில் இடம்பெற்றது. 

நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 முதல் 2015 வரை இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்தார். 

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐம்பது வருட அரசியல் வரலாற்றைக் கொண்டவர். 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், 1995ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமைச்சரவை அமைச்சராக குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளை நிறைவேற்றினார். 

2004 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதன் முறையாக பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அவர், 2018 ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இரண்டாவது முறையாகவும், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார். 

பத்து வருட காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சுமார் முப்பது வருட காலமாக நாட்டை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து நாட்டை துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச்சென்றார். 

குருணாகல் மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 527,364 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார். இது பொதுத் தேர்தலொன்றில் அபேட்சகர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்புவாக்குகள் என வரலாற்றில் பதிவானது. 

இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து பிரதமர் பதவிக்கு நான்காவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்ட முதலாமவராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரலாற்றில் இடம்பிடித்தார்.

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக பதவியேற்பு
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக பதவியேற்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் 13வது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (09) முற்பகல் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த களனி ரஜமகா விகாரையில் இடம்பெற்றது. நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 முதல் 2015 வரை இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்தார். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐம்பது வருட அரசியல் வரலாற்றைக் கொண்டவர். 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், 1995ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமைச்சரவை அமைச்சராக குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளை நிறைவேற்றினார். 2004 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதன் முறையாக பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அவர், 2018 ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இரண்டாவது முறையாகவும், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார். பத்து வருட காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சுமார் முப்பது வருட காலமாக நாட்டை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து நாட்டை துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச்சென்றார். குருணாகல் மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 527,364 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார். இது பொதுத் தேர்தலொன்றில் அபேட்சகர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்புவாக்குகள் என வரலாற்றில் பதிவானது. இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து பிரதமர் பதவிக்கு நான்காவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்ட முதலாமவராக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரலாற்றில் இடம்பிடித்தார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-VHctQSVDiF02MPBTdg1BkciFlHze6danEQte_6g_25wXM1Jwdh_XdXQ2erX44Ymp8ihfV58Blw8VJjlwzwvfa8zQdP6qiSqU5x7QXd0sHLPzeUFoEdZJSF5Cui7EciecIQc6zIgHDj0/s1600/1596981077637019-0.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-VHctQSVDiF02MPBTdg1BkciFlHze6danEQte_6g_25wXM1Jwdh_XdXQ2erX44Ymp8ihfV58Blw8VJjlwzwvfa8zQdP6qiSqU5x7QXd0sHLPzeUFoEdZJSF5Cui7EciecIQc6zIgHDj0/s72-c/1596981077637019-0.png
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2020/08/blog-post_55.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2020/08/blog-post_55.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content