டெல்லி மற்றும் மும்பையில் இருந்து லண்டனுக்கு இடைநில்லா நேரடி விமானப்போக்குவரத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், குறைந்த கட்டணத்தில் மும்பை மற்றும் டெல்லியிலிருந்து வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து வாரம் இருமுறையும், மும்பையில் இருந்து வாரம் ஒருமுறையும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக ஏர்பஸ் ஏ 330-900 நியோ விமானத்தைப் பயன்படுத்தப் போவதாகவும், குறைந்த கட்டணத்தில் இயக்கவிருப்பதாகவும் ஸ்பைஸ்ஜெட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS