தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை. தொழிற் பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு
2020 ஆம் ஆண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி
பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள்
ஆகியவற்றில் அரசு ஒதுக்கிட்டு இடங்களில் சேர்ந்திடவும் இந்நிலையத்திற்கு மொத்தம் இடம் 444/-ல் முதல்கட்ட கலந்தாய்வில் 252 இடங்கள் பூர்த்தியாகியுள்ளது. காலியாக உள்ள இடங்களுக்கான
இரண்டாம் கட்ட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை
www.skilltraining .gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய
வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசுதொழிற் பயிற்சி நிலையம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள்மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல்
மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு
ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் (Prospectus) தரப்பட்டுள்ளன. மேலும்
(12.10.2020 முதல் 14.10.2020 வரை)
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுதல் 15.10.2020
பிற்பகல் முதல் தர வரிசைப்பட்டியல் வெளியிடுதல் (16.10.2000
17.10.2020)
தொழிற்பிரிவுகள் தேர்வு செய்தல்
(19.10.2020,
20.10.2020)
ஆகிய இரு தினங்களில் முன்னுரிமை விருப்பங்களுக்கேற்ப
தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு ஒதுக்கீடு செய்தல் மற்றும்ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு கட்டணம் செலுத்துதல்.
மேற்கண்ட இணைய தளத்தில் விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேட்டினை மாணவர்கள்
பார்வையிடலாம்.மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்துபுரிந்துகொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பகட்டணம் ரூ.50/- ஐ கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க் வாயிலாக செலுத்தலாம். மேலும்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி,பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.500/வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மைய கைபேசிஎண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அரசு தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை
-04322-221584,
9486311243,
அரசு தொழிற் பயிற்சி நிலையம், விராலிமலை 9865447581,
உதவி இயக்குநர்,
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்,
புதுக்கோட்டை, 9443184841, மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம், புதுக்கோட்டை
04322-222287 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
COMMENTS