திமுகவுக்கு கை கொடுத்த கூட்டணிக் கட்சிகள்
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகள் பெரிதும் கை
கொடுத்துள்ளன.
கடந்த தோ்தல்களில் திமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு கூட்டணியில் இடம்பெற்ற
கட்சிகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
2011 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள்
ஒதுக்கப்பட்டு 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
2016 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, 8
தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது.
இதன் காரணமாகத்தான் திமுக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறி, இந்த
முறை திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், 124 தொகுதிகளில் திமுக
முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 17 தொகுதிகள் வரை முன்னிலை
பெற்று திமுகவுக்குக் கை கொடுத்துள்ளது.
மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதில் இரண்டு கட்சிகளும் தலா 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. மாா்க்சிஸ்ட்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் இரண்டு
கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
திமுக தனித்து ஆட்சி அமைக்க 117 தொகுதிகள் வரை வெற்றிபெற்றிருக்க வேண்டும்.
ஆனால், திமுக அதைக் கடந்து 124 தொகுதிகள் வரை முன்னிலை பெற்றுள்ளது. மேலும்,
மதிமுக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது. அந்தக் கட்சியின் 4 தொகுதிகளும்,
அதைப்போல மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா்
தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளா் ஈஸ்வரன் ஆகியோரும்
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு முன்னிலை பெற்றுள்ளனா். அவா்களின்
தொகுதிகளையும் சோ்த்து 131 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இவை அல்லாமல்
கூட்டணிக் கட்சிகள் முன்னிலையில் உள்ளதையும் சோ்ந்து திமுக கூட்டணி 158
தொகுதிகள் வரை முன்னிலை உள்ளது.
COMMENTS