#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 17 February 2019

சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தையொட்டி திருச்சி அண்ணா பல்கலைக்கழக ரோட்டரக்ட் சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தையொட்டி திருச்சி அண்ணா பல்கலைக்கழக ரோட்டரக்ட் சங்கம் சார்பில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தி.நல்லூர் சுங்கவரி சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது மேலும் இரவில் விபத்துகளை குறைக்க கண்கூசும் ஒளிச்செரிவை குறைக்க முகப்பு விளக்கில் கருப்பு வில்லைகள் ஒட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியை ரோட்டரக்ட் சங்க உறுப்பினர் கோ. கெளதம் தலைமையேற்று நடத்தினார். மேலும்,இந்நிகழ்ச்சியில் ரோட்டரக்ட் மாவட்ட பிரதிநிதி ரெ.லோகேஷ்குமார் மற்றும்,ரோட்டரி மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு.மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.மேலும் நிகழ்ச்சியின் செயலாளர் ப.அமுல்ராஜ், சங்கத்தின் தலைவர் ஜெ. ஜெரிஷ் ஓபேத் , சங்க ஆலோசகர் முனைவர் பி.மணி, புகைப்பட கலைஞர் கார்த்திக் மற்றும் ரோட்டரக்ட் சங்க உறுபினர்கள் பலர் கலந்துக்கொண்டனர் . மேலும் இந்நிகழ்ச்சியை சிறப்பிக்க காலம் கருதாமல் மக்களின் நலன் கருதியும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் கீரனூர் டி.எஸ்.பி. ட.பிரான்சிஸ் அவர்களும் , புதுக்கோட்டை வாகன தணிக்கை அதிகாரி செந்தாமரை அவர்களும், மாத்தூர் ஆய்வாளர் ஜெயராமன் அவர்களும்,உதவி ஆய்வாளர்கள் ராமசந்திரன் மற்றும் செவ்வந்தி அவர்களும் மற்றும் காவல் துறையினர் பலரும் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மறைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராணுவவீரர்களுக்கு வீரவணக்கம்

இராணுவவீரர்களுக்கு வீரவணக்கம்: புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரை ஈந்த இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் நீ.சிவசக்திவேல், சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு நல சங்கத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜ், ஆசிரியர்கள் மீனாட்சிசுந்தரம், சுபா, ராமதிலகம், பூபதி, பேச்சியம்மாள், நிர்மலா, பவுலின்ஜெயராணி, லதா மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மெழுவர்த்தி ஏந்தி இன்னுயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.Wednesday, 13 February 2019

ஒரத்தநாடு பகுதிகளில் பிப்.16-இல் மின்தடை....

ஒரத்தநாடு பகுதிகளில் பிப்.16-இல் மின்தடை....

ஒரத்தநாடு துணை மின்நிலையத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால்,  இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஒரத்தநாடு, கண்ணதங்குடி,  ஆழியவாய்க்கால்,  பஞ்சநதிக்கோட்டை, சேதுராயன்குடிக்காடு மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 16) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ஒரத்தநாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் பிப்ரவரி 14 மின் தடை....

புதுக்கோட்டையில் பிப்ரவரி 14 மின் தடை....

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப். 14) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான  ராஜகோபாலபுரம், கம்பன்நகர், பெரியார் நகர், கூடல் நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணா விளக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
பொன்னமராவதி:  செவலூர், கோவனூர், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், தேனூர், கண்டியாநத்தம், அம்மன்குறிச்சி, தூத்தூர், தொட்டியம்பட்டி, மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

புதுக்கோட்டையில் புத்தக பேரணி

வருகின்ற 15. 2.2018 முதல் புதுக்கோட்டையில் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு புத்தக பேரணி கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைக்க புத்தக பேரணியானது அரசு பொது அலுவலக வளாகத்தில் துவங்கி கீழ ராஜவீதி ராஜவீதி வழியாக நகர்மன்றம் வந்து நிறைவடைந்தது பேரணியில் புத்தகத் திருவிழா குழுவினர், மருத்துவர்கள், மாணவர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் அவர்கள் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட ராஜகோபாலபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு முறையான சத்துணவு வழங்கப்படுகின்றனவா என்று உணவை பரிசோதித்தபோது

அன்றும் இன்றும்


via

13.02.19 இன்றைய ராசிபலன்


via