Saturday, 15 June 2019

வாழ்வாதார பயிற்சி விழிப்புணர்வு முகாம்!!

வாழ்வாதார பயிற்சி விழிப்புணர்வு முகாம்!! புதுக்கோட்டை மிஷன் மென்டல்  ஹெல்த் ,ரோட்டரி அறக்கட்டளை வாழ்வாதார பயிற்சி மையம் இணைந்து அரசு  இராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமையாசிரியர் ப.திருச்செல்வம்  தலைமையில் விழ்வாதார பயிற்சி  முகாம் நடைபெற்றது வருகை தந்த அனைவரையும் ஆசிரியர் தங்கமணி வரவேற்றார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்வாதார பயிற்சி பற்றிய விழிப்புணர்வு கையேடு வழங்கி சிறப்புரையாற்றினார் மாவட் அனுசரணையாளர் செ.மைக்கேல் ராஜ் வாழ்வாதரம் பற்றிய விளக்க  உரையாற்றினார் நிகழ்ச்சியில் சி.கோமதி, ஆசிரியர்கள், மாணவர்கள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்                                                                                                                                         

Friday, 14 June 2019

புனைப்பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி காதலர்களாய் சந்தித்த கணைவன்-மனைவி: பிரிந்த குடும்ப வாழ்க்கை

*புனைப்பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி காதலர்களாய் சந்தித்த கணைவன்-மனைவி: பிரிந்த குடும்ப வாழ்க்கை

_உபியின் மேற்குப்பகுதி அம்ரோஹாவில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவருக்கும்,  பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இரண்டு ஆண்டு முன்பு திருமணம் நடைபெற்றது._

_கணவன், மனைவி இருவருமே புனைபெயரில் புது புது முகநூல் கணக்கு தொடங்கி, போலி புகைப்படங்கள் பதிந்து அவ்வப்போது புதிய நண்பர்களுடன் உரையாடி வந்துள்ளனர்._

_இருவருக்குள் தொடர்ந்த தீவிர நட்புரையாடல்,  கண்மூடித்தனமான காதலாக மாறியது. உருவானது. முகநூலிலேயே ஒருவருக்காக மற்றொருவர் உயிரை கொடுக்கவும் உறுதிமொழி ஏற்றனர்._

_தம் காதலின் அடுத்த கட்டமாக நேரில் சந்திக்க முடிவு செய்து, கடந்த ஞாயிறன்று அம்ரோஹாவின் ஒரு உணவு விடுதிக்கு வந்துள்ளனர்._

_வந்த இடத்தில் பரஸ்பரம் சந்தித்த இருவருக்கும் பேரதிர்ச்சி. உணவு விடுதியிலேயே கணவன்-மனைவிக்குள் சண்டை முற்றி இருவரும் பிரிந்து சென்றனர்._

_பின் இரு கிராம பஞ்சாயத்தாரும் கூடி பேசியும் இருவருக்குள்ளும் சமாதானம் ஏறபடாததால், கணவன்-மனைவி தனித்தனியே பிரிந்து வாழ தொடங்கியுள்ளனர்._

தமிழில் தகவல் பரிமாறுவதை தவிர்க்கவும்”- தெற்கு ரயில்வேயின் புதிய சர்ச்சை..!

தமிழில் தகவல் பரிமாறுவதை தவிர்க்கவும்”- தெற்கு ரயில்வேயின் புதிய சர்ச்சை..!
 
தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழ்) இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக இந்தி மற்றும் ஆங்கிலத்திலே தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர், எதிரே வந்து மோதும் சூழல் உருவானது. ஆனால் உரிய நேரத்தில் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகள் உள்பட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மொழிப் பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மொழிப் பிரச்னையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள தெற்கு ரயில்வே ஆணை பிறப்பித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த ஆணை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tuesday, 4 June 2019

சர்வதேச சைக்கிள் தினம்!

சர்வதேச சைக்கிள் தினம்!
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியின் சார்பாக  சர்வதேச சைக்கிள் தினம் பள்ளி தலைமையாசிரியர் சோ.விஜய மாணிக்கம் தலைமையில் கொண்டாட பட்டது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கூறும்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மூன்றாம் தேதி சர்வதேச சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது எனக்குத் தெரிந்து வரையில் முதன் முதலில் இருசக்கர வாகனம் என்பது சைக்கிள் மட்டுமே சைக்கிள் ஓட்ட தெரிந்தால் இருசக்கர மோட்டார் வாகனங்களை சுலபமாக இயக்க முடியும் ஒரு காலத்தில் எல்லோராலும் சுலபாக பயன்படுத்தக்கூடிய பொருளாதார வசதிக்கேற்ற  எளிதாக நிறுத்தும் வசதியான வாகனம் என்று பார்த்தால்  சைக்கிள் மட்டுமே மேலும் சைக்கிள் உடற்பயிற்சிக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், பொருளாதார சிக்கனத்தை கடைபிடிக்கவும், பெரிதும் உபயோகமானதாகவும், எரிபொருள் சிக்கனத்திற்காக சைக்கிளை உபயோகப் படுத்துவது  சிறந்தது என்றார் தினமும் காலை வேளையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்தால் உடல் ஆரோக்கியத்தோடு வாழலாம் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் லெஸ்ஸெக் சிப்லிஸ்கி என்பவர் சர்வதேச சைக்கிள் தினமாக கொண்டாடப் பாடுபட்டவர் அதுவே சைக்கிளைப் பற்றிய விழிப்புணர்வுக்கு குறிப்பிடத்தக்கது என்றார் பள்ளி மாணவர்கள் அனைவரும் இணைந்து அவர்கள் உபயோகப்படுத்தும் சைக்கிள்களை சுத்தம் செய்து பூஜை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது நிகழ்ச்சியில் வி .ஆர் .எம். தங்கராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்