https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 31 October 2018

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியில் உள்ள முக்குலத்தோர் பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111 வது ஜெயந்தி விழா பேரவையின் தலைவர் சன்முகத்தேவர் தலைமையில் கொண்டாடப்பட்டது. பேரவை யோஸ்தேவர் அனைவரையும் வரவேற்றார். பேரவை நிர்வாகிகள் அழகுத்தேவர், செந்தில்குமார், ராஜசேகரன், திருப்பதி, வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் குழிபிறை கூட்டுறவு சங்கத்தலைவர் பாண்டியன், பொன்னமராவதி ஒன்றிய  போஸ் மக்கள் பணி இயக்க தலைவர் ஜெயராமன், தேவர் பேரவை மாநில செயலாளர் தீர்த்ததேவர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மலர் தூவி பின்பு வாழ்த்துரை வழங்குகினர். விழா முடிவில் பேரவை பொருளாளர் முருகேசத்தேவர் நன்றி கூறினார். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

📗📨📺📹📸📞☎

படங்கள் மற்றும் செய்திகள்
#KEERAVANI #PHOTOGRAPHY
#புதுக்கோட்டை  #மாவட்டம்
#பொன்னமராவதி   #செய்தியாளர் #கீரவாணி அழ.#இளையராஜா. எம்.ஏ...எம்.பில்.

HIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குதல்

HIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குதல்

புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் எச்.ஐ.வி உள்ளோர் நலச்சங்கம் இணைந்து ஏழைக்குழந்தைகளுக்கு இலவச தீபாவளி புத்தாடை வழங்கும் விழா மகாராணி சங்கத் தலைவர் கவிதா ராஜசேகரன் தலைமையில் கம்பன் நகர் இந்தோ அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தாரகை ரெடிமேட்ஸ் உரிமையாளர் கே.எஸ்.முகம்மது இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாடைகளை வழங்கினார். மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.முன்னதாக வருகைபுரிந்து அனைவரையும் செயலாளர் வித்யா சிவா வரவேற்றார். பெண்கள் எச்.ஐ.வி உள்ளோர் நலச் சங்க நிர்வாகி பத்மினி விழாவினை ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் பானுமதி கண்ணன், கருணைச் செல்வி, இந்தோ அறக்கட்டளை மாவட்ட வளஅலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக சங்கப் பொருளாளர் ராணி கனகராஜன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில் சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள புத்தாடைகளை சுமார் 125 எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளான பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. 

புதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா

நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், சிவகாமி இரத்ததான கழகம் மற்றும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் இணைந்து நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா புதிய பேருந்து நிலையத்தில் பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. நுரையீரல் சிறப்பு மருத்தவர் பி.தனசேகரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். சித்த மருத்துவர் சரவணன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்தவர் ஆர்.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழாவினை துவக்கி வைத்து கூறும் போது நிலவேம்பு குடிநீரை மகப்பேறு தாய்மார்கள் 15 முதல் 30 மில்லி அளவும், பால் கொடுக்கும் தாய்மார்கள் 30 மில்லி முதல் 60 மில்லி அளவும், 12 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள் 2.5 மில்லி முதல் 5 மில்லி அளவும், 1-3 வயது உள்ள குழந்தைகள் 5 மில்லி அளவும், 3-5 வயது உள்ள குழந்தைகள் 5 மில்லி முதல் 7.5 மில்லி அளவும், 5 வயது முதல் 15 வயது வரை 7.5 மில்லி முதல் 15 மில்லி அளவும் இளம் வயதினர் 15 முதல் 30 மில்லி அளவும் மற்றவர்கள் 30 மில்லி முதல் 60 மில்லி வரை நிலவேம்பு குடிநீரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் அருந்தலாம். மேலும்; சர்க்கரை நோயை இது கட்டுப்படுத்தும் என்று கூறினார். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.க.மோகன்ராஜ் வரவேற்றார். வி.என்.எஸ்.செந்தில், ஆர்.முத்துச்சாமி, ஜி.முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகாமி இரத்ததான கழகத் தலைவர் மெஸ்.மூர்த்தி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். நிறைவாக செயலாளர் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில் பொதுமக்கள் சுமார் 800 பேர் பயன்பெற்றனர்.



புதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குதலை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

புதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குதலை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.மத்திய தரைவழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு.பொன் ராத திருஷ் ணன் உடன் நகரச் செயலர் திரு. பாஸ்கர் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் தலைவர் SAS சேட் என்ற அப்துல் ரஹ்மான்.நகராட்சி ஆணையர் (பொ| ஜீவா.சுப்பிரமணியன்

Tuesday, 30 October 2018

அரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்” துவக்க விழா

அரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்” துவக்க விழா
         புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் ரோட்டரி அறக்கட்டளை மாவட்டம் 3000, மாவட்டம்5300, மாவட்டம் 5330 உதவியோடு ரோட்டரி  மாவட்ட 3000 தின் உடனடி முன்னாள் ஆளுனர் ப.கோபாலகிரு~;ணன் அவர்களின் கனவுத்திட்டமான இலவச புதுமுக வகுப்பினை புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரம் செலவில்; இலவச புதுமுக வகுப்பு அமைக்கப்பட்டு அதன் துவக்க விழா நடைபெற்றது.
       விழாவிற்கு கிங்டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எ.தர்மராஜ் பிரபு தலைமையேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் என்.சிவசக்திவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஜி.கோபால் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். ரோட்டரி மாவட்டம் 2020-21 ஆம் ஆண்டின் ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம் இலவச ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை துவக்கி வைத்தார். கிங்டவுன் ரோட்டரி சங்க உடனடி முன்னாள் தலைவர் முனைவர் எ.வி.எம்.எஸ்.கார்த்திக், முன்னாள் செயலாளர் வி.சத்தியமூர்த்தி ஆகியோர் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்” திட்டம் குறித்துச் சிறப்புரையாற்றினார். சங்கப் பொருளாளர் டி.அசோகன்  ரோட்டரி சங்கத்தின் வரலாறு மற்றும் அதன் சேவைகள் குறித்துச் சிறப்புரையாற்றினார். ஜெம்ஸ்ஸ்கூல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சே.வில்சன் ஆனந்த் ஜெம்ஸ் திட்டம் குறித்து விளக்கினார். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனிவாசன், ரோட்டரி துணை ஆளுநர்கள் வி.ஆர்.வெங்கடாசலம் ஆர்.ஆரோக்கியசாமி  ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்
    முன்னதாக வருகை தந்த ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.கான்அப்துல்கபார்கான் அனைவரையும் வரவேற்றார். மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண.மோகன்ராஜ் இணைச்செயலாளர் நிதியம் எஸ்.தங்கமணி, முன்னிலை வகித்தனர்.  பட்டதாரி ஆசிரியர் ஹெச்.மீனாட்சி சுந்தரம் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. பள்ளி ஆசிரியர்கள் அன்புக்கிளி, சுபா, நிர்மலா, பேச்சியம்மாள், பவுலின் ஜெயராணி, ராமதிலகம், விக்கிரமாதிந்ந பூபதி, வினோத் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சிறப்பம்சங்கள்
        புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப் பள்ளியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட எ.பி.எல் வகுப்பறை, கண்காணிப்பு கேமரா வசதி, ஆகியன ஏற்கனவே நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 124 ஆக இருந்தது. இந்தக் கல்வியாண்டில் புதிதாக 80 மாணவர்கள் சேர்ந்துள்ளார் இந்த ஆண்டின் மாணவர் எண்ணிக்கை 204 ஆகும்;. பள்ளியில் புதுக்கோட்டை நகரின் முக்கியமான 150 நன்கொடையாளர்கள் புரவலர்களாக இணைந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.






Saturday, 27 October 2018

புதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்குனர் வெ.சினேகா தலைமையில் தீபாவளி சிறப்புச் சலுகை துவக்கவிழா

ஆரஞ்சு தீபாவளி சிறப்புச் சலுகை திட்டம்

புதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்குனர் வெ.சினேகா தலைமையில் தீபாவளி சிறப்புச் சலுகை துவக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியினை  வட்டாட்சியர் க.பொன்மலர், மருத்துவர்கள் அனிதா தனசேகரன், சாந்தி சுரேஷ்குமார், சுகன்யா ஜெயலெட்சுமி, ச.சங்கத்திமிழ், அஞ்சலிதங்கம்மூர்த்தி, மகாராணி ரோட்டரி சங்கத்தலைவர் கவிதா ராஜசேகரன், மீனு கணேஷ், சாந்திசுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். கவிஞர்.தங்கம் மூர்த்தி, மருத்துவர்கள் கே.எச்.சலீம், எஸ்.சைய்யது முகைதீன், பி.தனசேகரன், தங்க அருண், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ், ஆர்.முத்துச்சாமி, எ.வி.எம்.கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விற்பனை சிறப்பு சலுகை திட்டத்தினை துவக்கிவைத்தனர்.முன்னதாக வருகைதந்த அனைவரையும் மருத்துவர் ரெ.அன்புதனபால் வரவேற்று பேசிய போது இந்த சிறப்பு சலுகைதிட்டம் ஒருமாதம் நீடிக்கும் என்றார். நிறைவாக ஈஸ்வரி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.





விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி அரசு உயர் துவக்கப்பள்ளி, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி என்ற தலைப்பில் செயல்முறை விளக்கப்பயிற்சி

விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி அரசு உயர் துவக்கப்பள்ளி, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி என்ற தலைப்பில் செயல்முறை விளக்கப்பயிற்;சி நடைபெற்றது பள்ளித் தலைமையாசிரியர் நீ.சிவசக்திவேல், மண்டல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.என்.சீனிவாசன், பட்டய செயலாளர் வி.என்.செந்தில், சுகாதர மேற்பாற்வையாளர் என்.வேலுச்சாமி முன்னிலை வகித்து விபத்தில்லாமல் மகிழ்ச்சியாக எப்படி தீபாவளியை  கொண்டாடுவது என்று வாழ்த்துரை வழங்கினார்கள், முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டதாரி ஆசிரியர் ஹ.மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். சாலை விபத்து தடுப்பு மீட்பு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளியை எப்படி கொண்டாடுவது, பட்டாசுகளை வெடித்தபிறகு கை கழுவுவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தார். மேலும் கூறும்போது தொடர்ந்து மூன்று வருடமாக இந்த பள்ளியில் பட்டாசு வெடிப்பதன் செயல்முறை விளக்க பயிற்;சி அளித்து வருகிறோம் இது தொடரும் என்றார். நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் சொ.அன்புக்கிளி, நு.சுபா, ப.ராமதிலகம், சி.பேச்சியம்மாள், கே.நிர்மலா, ஜே.பவுலின் ஜெயராணி, மு.விக்கிரமாதித்தபூபதி, ஆர்.ஆரோக்கியவினோத், செல்விலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக சங்கப் பொருளாளர் ஜி.முருகராஜ் நன்றிகூற விழா இனிதே நிறைவு பெற்றது.

படம்: விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி செயல் முறை பயிற்சி அளித்த போது









Friday, 26 October 2018

பொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி அக்-26

பொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம் சார்பில்
ஒவ்வொரு மாதமும் 26 ஆம் தேதி சேவை மாத விழா நடைபெற்றது. அதன் அடிப்படையில் மாதத்தின் 26 தேதியன்று கொப்பனாப்பட்டியில்  சங்கம் தொடங்கப்பட்டது. மற்ற நாட்களில் சேவை செய்தாலும் கூட இந்த 26 ஆம் தேதியில் பிரத்தியேகமாக சேவை செய்யும் விழாவாக கருதவேண்டும் என்று சைன் லயன்ஸ் சங்கத்தின் சாசனத்தலைவர் லயன் பெ.மாரிமுத்து அவர்கள் அறிவித்தார்கள். அதன்படி  கண்டவராயன்பட்டியில் உள்ள ட்ரூபா முதியோர் இல்லத்திற்கு 1மாதத்திற்குத்  தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை சாசனத்தலைவர் லயன் பெ.மாரிமுத்து மற்றும்  திருமதி.தமிழ்ச்செல்விமாரிமுத்து ஆகியோர் தலைமையில் அதன் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் சங்கத்தின் முதல் நிலைத்தலைவரும், செம்பூதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவருமாகிய லயன் சிங்காரம், பொருளாளர் லயன்.வி.கிரிதரன் லயன்.ஜியாவுதீன், பொறியாளர் லயன்.பவளம்,ஜெ.ஜெ.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  உரிமையாளர் பொறியாளர் ஜெ.ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது..

சர்வதேச போலியோ தின கொண்டாட்டம்

சர்வதேச போலியோ தின கொண்டாட்டம்
சர்வதேச போலியோ தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம், மஹாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் போலியோ நோய் வழியனுப்பும் விழா பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் முதல்வர் எஸ்.ராமர் வறவேற்றார். மக்கள் நன்மதிப்பு இயக்குனர் டாக்டர் கே.எச்.சலீம், மாவட்ட  மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், கவிஞருமான தங்கம்மூர்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கிய ரோட்டரிக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு கேக் வெட்டி கொண்டாட்டத்தை துவங்கிவைத்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி, தொழிற்பயிற்சி நிலைய அலுவலர் ராஜேந்திரன் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பழனியப்பன் ஜி.தனகோபால், செயலாளர் கே.என்.செல்வரத்தினம், என்.வேலுச்சாமி, வி.கார்த்திகேயன், வித்யா சிவா, ராணி ரோஸ்லின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போலியோ விழிப்புணர்வு உறுதிமொழியினை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கவிதா ராஜசேகரன் வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக ஆர்.எம்.துரைமணி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.                     


Thursday, 25 October 2018

புதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடுத்து அஇஅதிமுக வினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடுத்து அஇஅதிமுக வினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்  18 எம்.எல்.கள் வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சத்தியநாராயணா சபநாயகர் அறிவித்த எம்.எல்.எக்கள் தகுதிநீக்கம் செல்லும் என்பது செல்லும் என தீர்ப்பு அளித்ததையொட்டி அ.தி.மு.க வினர்  இதனை கொண்டாடும் பொருட்டு புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பி. கே. வைரமுத்து மற்றும் நகர செயலாளர் பாஸ்கர் தலைமையில் பழைய பேருந்து நிலையத்தில் Mgr சிலைக்கு மாலை அணிவித்தும் புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்..இந்ந நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி குழு தலைவர் VC இராமையா, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர்கள் ஜாபர் அலி, சேட், கர்ணன், டவுன்பேங் மாரிமுத்து, கூகுர் பாலு, ஒன்றிய செயலாளர் குமார், vm கணேசன், சீனிவாசன், பழக்கடை சேகர், கண்ணாஸ் பாண்டியன், ஜீவா செல்வராஜ், கணக்கன்பட்டி ராசு மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..

புதுகோட்டை மாவட்ட செய்தியாளர் மு சரவணகுமார்

சர்வதேச போலியோ தினம்


சர்வதேச போலியோ தினம்
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் ரோட்டரி சங்கம் இணைந்து அரசு அருங்காட்சியத்தில் இருந்து சர்வதேச போலியோ விழிப்புணர்வு பேரணி தலைவர்கள் ஆர்ட்டிஸ்ட் கி.ரவி உ.ஆதவ்குகன் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் பள்ளித்தாளாளர் தங்கம்மூர்;த்தி, பொறியாளர் க.ப~Pர்முகம்மது துணை ஆளுனர் வி.ஆர்.வெங்கடச்சலம் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் செயலாளர் மதிவாணன் வரவேற்றார். பேரணியை மக்கள் நன்மதிப்பு இயக்குனர் டாக்டர் கே.எச்.சலீம் மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண.மோகன்ராஜ், போலியோ திட்ட உறுப்பினர் ஜி.எஸ்.எம் சிவாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கிவைத்தனர். பேரணியில் முதல்வர் குமாரவேல் சு.கதிரேசன், கருப்பையா, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பேரணியில் மாணவர்கள் போலியோ குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். மாணவிகள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக எம்.கணேசன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
 

Wednesday, 24 October 2018

உலக போலியோ தின மனித சங்கிலி

உலக போலியோ தின மனித சங்கிலி


உலக போலியோ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம், அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி இணைந்து பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட போலியோ விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி சங்கத்தலைவர் கவிதா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.வி.என்.சீனிவாசன், துணை ஆளுநர் ஆர்.ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் பெட்லராணி வரவேற்றார். மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனித சங்கிலியினை தொடங்கி வைத்தார். மக்கள் நன்மதிப்பு இயக்குனர் டாக்டர்.கே.எச்.சலீம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு “ரோட்டரியின் சேவையால் போலியோ நோய் காலியானது” என்ற தலைப்பில் மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார். 2020-21 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்டம் 3000-ன் முதல் பெண்மணி பவானி சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் சுமார் ஆயிரம் மாணவிகள் போலியோ விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வு கோஷமிட்டனர். நிகழ்ச்சியில்  வள்ளியம்மை சுப்ரமணியன், பானுமதிகண்ணன், ராணிரோஸ்லின், குப்பாள் நாகப்பன், சுபா கருணாநிதி, கருணைச் செல்வி, கலாவதி, மீனு கணேஷ், சுசீலா, கலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வித்யா சிவா நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

       



Tuesday, 23 October 2018

புதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கோண்டார்.   டயர் பிளாஸ்டிக் உள்ளிட்ட பழைய பொருட்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

ஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்

ஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்

 

1931 – 1953 ஆரம்ப வருடங்கள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் 11 ந் தேதி ஓஷோ பிறந்தார். துணிக்கடை வைத்திருந்த ஒரு ஜைனரின் பதினோரு குழந்தைகளில் ஓஷோதான் மூத்தவர். அவரைப் பற்றிய கதைகள், சிறுவயது முதலே அவர் சுதந்திரமானவராகவும், எதிர்க்கத் தயங்காதவராகவும் எல்லா சமூக, மத, தத்துவரீதியான நம்பிக்கைகளையும் எதிர்த்து கேள்வி கேட்பவராகவும் இருந்ததாக அவரை விவரிக்கின்றன. இளைஞனாக இருந்தபோது அவர் பல தியான முறைகளை சோதனை செய்து பார்த்தார். ஜபல்பூரில் உள்ள டி.என். ஜெயின் கல்லூரியில் தத்துவயியல் பயின்று கொண்டிருக்கையில் தனது இருபத்தி ஒன்றாவது வயதில் 1953 ஆம் வருடம் மார்ச் 21 ந் தேதி ஓஷோ ஞானமடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும். கௌதமபுத்தர், கபீர், இரமணர், மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.

1953 – 1956 கல்வி

1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.

1957 – 1968 பல்கலைகழக பேராசிரியர் மற்றும் பொதுமேடை சொற்பொழிவாளர் 

1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார்.

1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார்.

ஆணித்தரமாகவும் அருமையாகவும் பேசக் கூடிய பேச்சாளரான ஓஷோ இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று ஏராளமானமுறை பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் சொற்பொழிவாற்றி வருகிறார்.  பொதுக் கூட்டத்திலேயே சம்பிராயமான மத தலைவர்களுக்கு சவால் விடுக்கிறார்.

1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களில் உள்ள பரந்த மைதானங்களில் 20,000 முதல் 50,000 பேர் வரை திரளும் கூட்டங்களிடையே அவர் உரையாற்றுகிறார். பத்து நாட்கள் தியான பயிற்சி கொண்ட முகாம்களை வருடத்திற்கு நான்கு முறை நடத்துகிறார்.  1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார். எந்த கட்டுப்பாடும் அற்ற மூச்சு விடுதல் பயிற்சியும், உள் உணர்வுகளை வெளிக் கொட்டுதலும் பின் மௌனமும் அசையாதிருத்தலும் ஆகிய செய்முறைகளைக் கொண்ட தியானம் இது. இந்த தியானம் அப்போதிலிருந்து உலகம் முழுவதிலும் உள்ள டாக்டர்கள், ஆசிரியர்கள், தொழில்முறை பயிற்சியாளர்கள் மனோதத்துவ வல்லுனர்கள் என எல்லோராலும் இன்று வரை உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது.

1969 – 1974 பம்பாய் வருடங்கள்  

1960 ன் பிற்பகுதியில் அவர் இந்தியில் பேசிய பேச்சுக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாயின.

1970 ஜூலையில் பம்பாய்க்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்ட அவர் ஆன்மீக சாதகர்களுக்கு தீட்சை அளித்து சிஷ்யர்களாக்கினார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதையில் இந்த உலகத்தையோ மற்ற எதையுமோ துறக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘துறவறம்’ என்பதைப் பற்றி ஓஷோ கூறுவது வழிவழியாக உள்ள கிழக்கத்திய முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவரைப் பொறுத்தவரை இந்த வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமெனச் சொல்கிறார்.

நாடு முழுவதிலிருந்து பேசுவதற்கு வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்வதை அவர் நிறுத்தி விடுகிறார். ஆனால் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு என்ற இடத்தில் தியான முகாம்களை தொடர்ந்து நடத்துகிறார். தனது சக்திகள் அனைத்தையும் தன்னைச் சுற்றி பெருகி கொண்டே வரும் தனது சன்னியாசிகளுக்காகவே அர்ப்பணிக்கிறார்.

இந்த சமயத்தில் வெளிநாட்டவர்களும் வருகின்றனர். புது சன்னியாசம் பெறுகின்றனர். அவர்களில் பலர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மனித வளர்ச்சியின் உயர் சாத்தியக்கூறு பற்றிய இயக்கத்தை சேர்ந்த முன்னிலை மனோ தத்துவவியலாளர்கள் ஆவர். அவர்கள் தங்களது அடுத்த கட்ட உள் வளர்ச்சி நிலைக்காக அவரை தேடி வருகின்றனர். கிழக்கின் ஞானமும் மேற்கின் அறிவியலும் இணைந்த இந்த கால மனிதனுக்கான புதிய, அசலான, தியானமுறை அனுபங்களை அவர்கள் ஓஷோவிடம் அடைகின்றனர்.

1974 – 1981 பூனா ஆசிரமம்

இந்த ஏழு வருடங்கள் ஓஷோ ஒவ்வொரு நாள் காலையிலும் 90 நிமிடங்கள் ஒரு மாதம் இந்தியிலும் அடுத்த மாதம் ஆங்கிலத்திலும் என ஆன்மீக உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் யோகா, ஜென், தாவோ, தந்திரா, சூபி என எல்லா ஆன்மீக பாதைகளின் உட்பொருளையும் எடுத்துக் காட்டி உரை நிகழ்த்துகிறார். கௌதமபுத்தர்,ஜூஸஸ், லாவோட்ஸீ மற்றும் அனைத்து ஞானமடைந்த ஞானிகளை பற்றியும் எடுத்துரைக்கிறார். இந்த உரைகள் 300புத்தகங்களாக தொகுக்கப்பட்டு 20 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.

இந்த வருடங்களில் மாலையில் அன்பு, பொறாமை, தியானம், கோபம் போன்ற தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். ‘தரிசனம்’ எனப்படும் இந்த கேள்வி – பதில் 64 தொகுப்புகளாக உள்ளது. அவற்றில் 40 மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காலக் கட்டத்தில்தான் கிழக்கத்திய தியான முறைகளையும் மேற்கத்திய மனோதத்துவ முறைகளையும் உள்ளடக்கிய பல்வேறு குழு மற்றும் தனி அகச்சிகிச்சை முறைகள் ஓஷோவை சுற்றி எழுந்த கம்யூனில் உருப்பெற்றது. உலகின் பல்வேறு இடத்திலிருந்தும் மனோ தத்துவ நிபுணர்கள் வந்தனர். 1980 ல் ‘உலகின் மிக சிறந்த அருமையான வளர்ச்சி மற்றும் அக சிகிச்சை மையம்’ என்ற பெருமையை ஓஷோ கம்யூன் பெற்றது. ஒவ்வொரு வருடமும் 1,00,000 மக்கள் வந்து சென்றனர்.

1981 – ஓஷோவிற்கு முதுகுவலி மோசமானது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் தினமும் உரையாற்றி வந்த ஓஷோ 1981 மார்ச்சில் சொற்பொழிவிலிருந்து அமைதிநிலையை தானே மேற்கொள்கிறார். அவசரமாக அறுவை சிகிச்சை செய்யும் நிலை வரலாம் என்பதால்,அவரது டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அமெரிக்கா பயணப்படுகிறார்.  இந்த வருடத்திலேயே அவரது அமெரிக்க சீடர்கள் 64,000 ஏக்கர் நிலம் அமெரிக்காவில் ஓரேகான் என்று அழைக்கப்படும் ஒரு மாநிலத்தில் வாங்கி அவரை அங்கு அழைக்கின்றனர். இப்படியாக அவர் அமெரிக்காவில் தங்கி இருக்க சம்மதித்து நிரந்தர குடியிருப்புக்கு ஒரு விண்ணப்பம் அவர் சார்பில் கொடுக்க அனுமதிக்கிறார்.

1981 – 1985 ரஜ்னீஷ்புரம் 

தரிசு நிலமாக பாழடைந்துள்ள மத்திய ஓரேகானின் பகுதியிலிருந்து விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட, தன்னிறைவு பெற்ற,  முன்மாதிரியான கம்யூன் ஒன்று எழுச்சி பெறுகிறது. அதிக உழைப்பு தேவைப்படுவதாலும், லாபமீட்டும் அளவு பயன்கொடுக்காது என்பதாலும் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பசுமையாக்கப்படுகின்றன. ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு ஆன்மீக்குடியிருப்பாக மலர்கிறது.

கம்யூனிற்க்கும் புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுத்தது. சமூகத்திற்கு எதிரான புது எழுச்சிகளை கண்டு எரிச்சலுறுகின்ற தன்மை அமெரிக்க சமுதாயத்தில், ஜனாதிபதி ரீகனின் இந்த காலகட்டத்தில் எல்லா மட்டத்திலும் பரவி கிடந்தது. அதற்கு ஏற்றார்ப்போல உள்ளுர் மாநில மத்திய அமெரிக்க அரசியல்வாதிகள் ரஜனீஷ்புர மக்களுக்கு எதிராக அனல் கக்கும் பேச்சை வெளிப்படுத்தினர். அமெரிக்க குடியுரிமை சேவை மையம் (INS), அமெரிக்க உளவுத்துறை(FBI),அமெரிக்க கருவூலத்துறை, மது புகையிலை மற்றும் ஆயுத ஏஜென்ஸி(ATF) போன்ற பல பல ஏஜென்ஸிகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடி கோடியாய் செலவு செய்து, தேவையற்ற மற்றும் எந்த பயனும் அளிக்காத கம்யூன் பற்றிய ஆய்வுகளில், கம்யூனை தொந்தரவு செய்வது மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஈடுபட்டன. அதே போன்று மிகவும் பணச் செலவு செய்து கம்யூனுக்கு எதிரான பிரசாரம், ஓரேகான் மாநிலத்தில் நடத்தப்பட்டது.

1984 அக்டோபர் – ஓஷோ மூன்றரை வருட மௌனத்தை முடித்துக் கொண்டு தனது இருப்பிடத்திலேயே ஒரு சிறு குழுவினரிடம் பேச ஆரம்பிக்கிறார்.

1985 ஜீலை – ஜூலையிலிருந்து ஓஷோ தனது காலை சொற்பொழிவை ஆயிரக்கணக்கான சீடர்கள் கூடும் இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள தியான மண்டபத்தில் பேச ஆரம்பிக்கிறார்.

1985 செப் – அக் ஓரேகான் கம்யூன் அழிக்கப்படுகிறது

1985 செப் 14ந் தேதி ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும் மற்றும் கம்யூனின் பொறுப்பில் உள்ள சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறுகின்றனர். அவர்கள் செய்த கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான பல செயல்கள் அம்பலமாயின. நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைக்கிறார். ஆனால் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்த புகாரை கம்யூனை அழித்துவிட கிடைத்த தங்கமான வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.

அக்டோபர் 23 – அமெரிக்காவின் போர்ட்லேண்ட் மாநில தலைமை நீதிபதி ஓஷோ மற்றும் ஏழு பேர் குடியுரிமை சட்டத்தை ஏமாற்ற முயன்றதாக சிறிய குற்றங்களை ரகசியமாக சுமத்துகிறார்.

அக்டோபர் 28 – எந்தவித வாரண்ட்- டும் இல்லாமல் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியும் உள்ளூர் போலீஸும் சேர்ந்து ஓஷோவையும் மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் கைது செய்கின்றனர். மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு ஓஷோவை மட்டும் பனிரெண்டு நாட்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்றனர். ஐந்து மணி நேரத்தில் ஓரேகான் வந்தடைந்து விடக்கூடிய பயணம் வந்துசேர நான்கு நாட்கள் பிடிக்கிறது. வழியில் ஓக்லஹோமா நகர சிறையில் ஓஷோ அவரது சொந்த பெயரில் இல்லாமல் டேவிட் வாஷிங்டன் என்ற பொய் பெயரில் வெளிஉலகத்திற்குத் தெரியாமல் வற்புறுத்தி அடைத்து வைக்கப்பட்டார். அவர் அந்த சிறையில் இருந்தபோதுதான் அவருக்கு ‘தாலியம்’ என்ற கொடுமையான விஷம் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதற்க்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

நவம்பர் – ஓஷோவின் குடியுரிமை வழக்கிற்கு எதிராக பிரச்சாரங்களும் குரல்களும் கிளம்ப ஆரம்பிக்கின்றன. பாதுகாப்பற்ற ஓரேகானில் அவரது உயிரையும் மற்ற சந்நியாசிகளின் நிலையையும் கருத்தில் கொண்டு ஓஷோவின் வக்கீல்கள் அவர் மீது போடப் பட்ட 35 வழக்குகளில் இரண்டை “ஏற்கும் கோரிக்கை” என்ற பிரிவின் கீழ் ஒத்துக் கொள்கின்றனர். இந்த கோரிக்கையின் விதிகளின்படி பிரதிவாதி தனது குற்றமற்ற தன்மையை தொடர்ந்து வலியுறுத்தும் அதே சமயம் அரசு தரப்பில் அவரை குற்றவாளி என்று கருத இடமுண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறார். ஓஷோவும் அவரது வக்கீல்களும் ஓஷோவின் குற்றமற்ற தன்மையை கோர்ட்டில் தொடர்ந்து வலியுறுத்தவே செய்தனர். ஆனால் ஓஷோவுக்கு நான்கு லட்சம் டாலர்கள் அபராதமும் அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது.

ரஜனீஷ்புரத்தை அழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பலரும் கூறியது போலவே சார்லஸ் டர்னர் என்ற போர்ட்லேண்டின் அரசாங்க வக்கீல் பொது மேடையிலேயே அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

1985 – 1986 உலக சுற்றுப் பயணம்

டிசம்பர் 1985 – ஓஷோவின் அந்தரங்க பணியாளர்களுக்கு விசா கொடுக்க மறுத்து இந்திய அரசாங்கம் அவரை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது.

1986 ஜன, பிப்ர – ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். அங்கு அவர் இருந்த இந்த இரண்டு மாதங்களும் தினமும் இருவேளையும் சொற்பொழிவாற்றுகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார்.

பிப்ர, மார்ச் – முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மார்ச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்க்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன.

இதைத் தொடர்ந்த இரண்டு வாரங்களில் அவர் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள 17 நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை.

மார்ச் – ஜூன் – மார்ச் 19ஆம் தேதி அவர் உருகுவே நாட்டிற்குச் செல்கிறார். மே 14ந் தேதி அந்த அரசாங்கம் ஓஷோ உருகுவேயின் நிரந்தர குடிமகனாக அங்கீகரிக்கப்படுவார் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்க்காக பத்திரிக்கையாளர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அந்த கூட்டத்திற்க்கு முந்தியதினம் இரவு வாஷிங்டன் வெள்ளை மாளிகையிலிருந்து டெலிபோன் மூலம் உருகுவே ஜனாதிபதி சன்குன் நெட்டியை அழைத்து ஓஷோவை உருகுவேயில் தங்க அனுமதித்தால் உருகுவே அமெரிக்காவிற்க்கு தர வேண்டிய 6 மில்லியன் டாலர் கடனை உடனடியாக அடைக்க வேண்டியிருக்கும் என்றும் மேற்கொண்டு கடன் எதுவும் தரப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டதாக ஜனாதிபதி சன்குன் நெட்டி பின்னர் ஒத்துக் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஜீன் 18ந் தேதி ஓஷோவை உருகுவேயை விட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

ஜூன் – ஜூலை – இந்த மாதங்களில் அவர் முறையே ஜமைக்காவிலிருந்தும் போர்ச்சுக்கல்லில் இருந்தும் வெளியேற்றப் பட்டார். ஆக மொத்தத்தில் இதுவரை 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார்.

1987 – 1989 ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல்

1987 ஜனவரி – அவர் பூனாவில் உள்ள ஆசிரமத்திற்கு திரும்ப வருகிறார். அது இப்போது‘ரஜனீஷ்தாம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் ஓஷோவின் அன்பர்கள் என அறியப்பட்ட வெளிநாட்டவர் அனைவருக்கும் அனுமதி மறுப்பதை தொடர்ந்து செய்கிறது.

1988 ஜூலை – ஒவ்வொரு நாள் மாலை உரையின் இறுதியிலும் ஒரு தியானத்தை தானே முன்னின்று நடத்தத் துவங்குகிறார். இது இந்த 14 வருடங்களில் இதுவே முதல் முறை. மேலும் மிஸ்டிக் ரோஸ்  (சூட்சம ரோஜா) என்ற புரட்சிகரமான ஒரு புதிய தியான யுக்தியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.

1989 ஜன – பிப்ர – அவர் பகவான் என்ற பெயரை விட்டுவிட்டு ரஜனீஷ் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொள்கிறார். அப்போது அவரது சீடர்கள் அவரை ஓஷோ என அழைக்க விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து அவரும் அதை ஏற்றுக் கொள்கிறார். வில்லியம் ஜேம்ஸின் வார்த்தையான ‘ஓஷியானிக்’ என்ற வார்த்தையிலிருந்து தான் ஓஷோ என்ற தன் பெயர் உருவானதாக விளக்குகிறார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து விடும் அனுபவம், அப்போது அதை அனுபவிப்பவர் எங்கே ? அதற்குத்தான் நாம் ஓஷோ என்று கூறுகிறோம். ‘வானம் மலர் தூவி வாழ்த்தும் ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவர் ‘ என்ற அர்த்தத்தில்‘ஓஷோ’ என்ற வார்த்தை கிழக்கு நாடுகளில் முற்காலத்தில் குறிக்கப் பட்டிருப்பதை பின்னர் ஓஷோ கண்டறிகிறார்.

1989 – மார்ச் – ஜூன்  அவருக்கு கொடுக்கப்பட்ட விஷம் அவரது உடல்நிலையை மிகவும் பாதித்ததால் அதனுடைய பாதிப்புகளிலிருந்து மீள அவர் ஓய்வு எடுக்கிறார்.

1989 ஜூலை – அவரது உடல்நிலை சிறிது சீர்படுகிறது. ஓஷோ குருபூர்ணிமா கொண்டாட்டம் என்று பெயர் மாற்றப்பட்ட விழா நாட்களில் இருவேளையும் மௌன தரிசனம் தருகிறார்.

1989 ஆகஸ்ட் – மாலை வேளை தினமும் கௌதமபுத்தா மண்டபத்தில் தரிசனத்திற்கு வந்தமர்கிறார். அவர் மௌனமாக அமர்ந்திருக்க,இசை இசைக்கப்படுகிறது. “விவரிக்க இயலாத அதை உணர மட்டுமே வேண்டும். இது உள் நிலையை, தியான வெளியைப் பெறும் ஒரு மிகப் பெரிய அனுபவம்” என்று அவர் விளக்குகிறார். அவர் ‘ஓஷோ வெள்ளை உடை சகோதர சந்திப்பு’எனக் கூறப்படும் விசேஷமான குழுவை ஏற்படுத்துகிறார். மாலை தரிசனத்திற்காக வரும் மக்கள் அனைவரும் வெள்ளை உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். “இந்த சந்திப்பில் ஒரு அற்புதமான சக்தி சேகரமாகும்,நாளுக்கு நாள் அவற்றின் திறன் மேலும் மேலும் பெருகும்.” என ஓஷோ கூறுகிறார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார இறுதியில் மூன்றுநாள் தியானமுகாம் ஓஷோவால் வடிவமைக்கப்பட்ட தியான பயிற்சிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. பங்கேற்பவர் அனைவரும் மெரூன் நிற அங்கி அணிந்துவர கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும் ஆசிரமத்தில் வேலை செய்யும் சந்நியாசிகள் அனைவரும் பகல் நேரத்தில் மெரூன் நிற அங்கியே அணியுமாறு ஓஷோ ஆலோசனை கூறுகிறார். அதனால் கம்யூன் பகல் நேரத்தில் மெரூன் நிற ஆடை அணிந்த மக்களாலும், மாலையில் வெள்ளை நிற ஆடை அணிந்த மக்களாலும் நிரம்பியிருக்கும் எனக் கூறுகிறார்.

1989 – செப் – ஓஷோ தனது ரஜனீஷ் என்ற பெயரை முற்றிலுமாக விட்டு விடுகிறார். அதன் மூலம் கடந்த காலத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு விடுகிறார். அவர் ஓஷோ என்றே குறிப்பிடப் படுகிறார் அவரது ஆசிரமம் ‘ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல்’ எனக் குறிப்பிடப் படுகிறது.

1990 ஓஷோ தனது உடலை விட்டு நீங்குகிறார்

1990 ஜனவரி – ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஓஷோவின் உடல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் சீர் கெடுகிறது. ஜனவரி 18ந் தேதி மாலை கௌதம புத்தா மண்டபத்துக்கு வரமுடியாத அளவு அவர் மிகவும் பலவீனமடைகிறார்.

ஜனவரி 19 – அவரது நாடித்துடிப்பு தாறுமாறாகிறது. அவரது டாக்டர்கள் அவரிடம் இருதய சீரமைப்பு கருவி கொண்டுவருவதற்காக கேட்கும்போது ஓஷோ, “இல்லை, என்னைப் போக விடுங்கள், இயற்கை நேரத்தை நிர்ணயித்து விட்டது.” என்கிறார். அவர் மாலை 5 மணிக்கு உடலை விட்டு நீங்குகிறார். மாலை 7 மணிக்கு அவரது உடல் கௌதம புத்தா ஹாலுக்கு இறப்பு கொண்டாட்டத்திற்காக கொண்டு வரப் படுகிறது. பின் எரியூட்டுவதற்காக சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறது. இரண்டு நாட்களுக்குப்பின் அவரது சாம்பல் ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனலுக்கு கொண்டு வரப் பட்டு சாங் டு ஸூ அரங்கத்திலுள்ள அவரது சமாதியில் வைக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்த நாட்களில் ஓஷோவின் மணமாக கம்யூனில் வீசும் அன்பும் தியானமும் கலந்த சூழ்நிலையை அனுபவிக்கவும் கொண்டாடவும் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பறந்து வந்த வண்ணம் உள்ளனர். அவர் தனது உடலை நீக்குமுன், “என்னை கடந்த காலத்தில் பேச வேண்டாம். என்னுடைய சுமையான இந்த உடலில் இருப்பதை விட இந்த உடலை விட்டபின் என்னுடைய இருப்பு பல மடங்கு மகத்தானதாக இருக்கும். எனது மக்களிடம் கூறுங்கள். அவர்கள் என்னை பலமடங்கு அதிகமாக உணரலாம். உடனடியாக என்னை அவர்கள் அறியலாம்.” என்று கூறுகிறார்.

எப்படி இந்த கம்யூன் தொடர்ந்து பெரிதாக வேண்டும் என்பதைப் பற்றியும் பேசுகிறார். இனி நான் உடலில் இல்லாமல் போய் விடுகையில் மேலும் பலர் வருவார்கள், மேலும் பலர் ஆர்வம் காட்டுவார்கள், அவரது கம்யூன் நமது கற்பனைக்கு எட்டாத வகையில் விரிவடையும் எனவும் கூறுகிறார்.  பிறகு கூறுகிறார், “நான் எனது கனவுகளை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.”

1980 ல் உடலை விட்டு நீங்கியபின் என்ன நிகழும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஓஷோ, “நான் என் மக்களிடம் கரைந்து விடுவேன். எப்படி கடலின் எந்த துளியை சுவைத்தாலும் அது ஒரே போல உப்பு சுவை கொண்டிருக்குமோ, அதே போல என் சந்நியாசிகள் எல்லோரிடமும் நீ ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவனின் சுவையை உணரலாம். நான் என் மக்கள் ஆனந்தமாகவும்,பரவசமாகவும் வாழ தயார் செய்திருக்கிறேன்,அதனால் நான் உடலில் இல்லாதது அவர்களிடம் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் அதே போலவே வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் எனது இறப்பு அவர்களிடம் மேலும் ஆழத்தை ஏற்படுத்தும்.” என்கிறார்.

1989 ல் இத்தாலியன் நாட்டு டிவி- யின் அதே போன்று கேள்விக்கு பதிலளித்த ஓஷோ, “நான் இயற்கையிடம் முழுமையாக நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். நான் கூறியதில் ஏதாவது உண்மை இருக்குமானால் அது அழியாமல் நிலைத்திருக்கும். என்னுடைய பணியில் ஆர்வமுள்ள மக்கள் எனது தீபத்தை தொடர்ந்து ஏந்தி செல்வர். ஆனால் எதையும் யார்மீதும் கத்தியின் மூலமாகவோ, ரொட்டியின் மூலமாகவோ, உணவைக் காட்டியோ திணிக்க மாட்டார்கள். நான் எனது மக்களுக்கு தொடர்ந்து ஒரு முன்னுதாரணமாக இருப்பேன், அப்படித்தான் எனது சந்நியாசிகளும் உணர்வார்கள். நான் அவர்கள் அவர்களாகவே வளர வேண்டும் என விரும்புகிறேன். உண்மையான அன்பு, அதன் அடிப்படையில் எந்த சர்ச், கோயில் போன்ற ஸ்தாபனங்களையும் உருவாக்க முடியாது, அதே போன்று விழிப்புணர்வு, அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது, அதே போன்று கொண்டாட்டம், மனமற்று அனுபவித்தல்,குழந்தை போன்ற தூய்மையான கண்களோடு இருத்தல் போன்ற குணங்கள் கொண்டவர்களாய், எல்லா மக்களும் வேறு யாரோ ஒருவரின் படி அல்லாமல் தாங்களோ தங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.