Monday, 25 May 2015

உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும்,

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

ராமு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

நாம் சொல்லும் சொல் | நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...!

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது | நேர்மையை விதையுங்கள் | பதவியும் புகழும் தேடிவரும்.

Saturday, 23 May 2015

ஒரு சிறைக்கைதி

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய
மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!
அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல்
வழக்கில் சிறை சென்ற பிறகு நானும்
குழந்தைகளும்
வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின்
பின்னால் உள்ள கற்பாறை மண்டிய
நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம்
அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச்
செல்லலாம் என்று எண்ணுகிறேன்..
ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான்
தெரியவில்லை.
கைதி பதில் எழுதினான். அன்பே..
குடும்பச் செலவுக்காக
வேறு ஏதாவது வழி செய்து கொள்.
பின்னாலிருக்கும் நிலத்தில்
கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய
தங்கக் கட்டிகளைப்
புதைத்து வைத்துள்ளேன்.. நீ
ஏதாவது செய்யப் போக,
பிறகு எனக்கு வைத்த இடம்
மறந்து விடும்..
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்த
ு கடிதம். அன்புள்ள கணவருக்கு..
யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன்
இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப்
புறத்தைத்
தோண்டி பாறைகளையெல்லாம்
அகற்றினர்.. இப்போது நிலம்
சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள்
எதுவும் இல்லையே..? கைதி திரும்பவும்
மனைவிக்கு எழுதினான். அன்பே..
அவர்கள் காவல் துறையினர்.. நான்
உனக்கு எழுதிய கடிதத்தைப்
படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில்
தோண்டியிருப்பார்கள்.. ஆனால்
உண்மையில் தங்கம் எதுவும் நான்
புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ
காய்கறித் தோட்டம் பயிரிடு..!!
Moral ;புத்திசாலி எங்கிருந்தாலும் தன்
காரியத்தை சாதிப்பான்.

Wednesday, 20 May 2015

பெருமையுடன் மீண்டும் ஒருமுறை (கர்வமுடன்)����...

‪#‎என்னதான்‬ இருக்கிறது இந்த ‪#‎கோவையில்‬...?.

கோவையை பற்றிய தகவல்கள்....!!!!

தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை;

மதுரையைக் கடக்கிறது வைகை;

நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி;

தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது;

திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது;

#என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.

வற்றாத ஒரு நதியுமில்லை;

வானளாவிய ஒரு கோவிலுமில்லை;

இதிகாசத்திலே இடமுமில்லை;

எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை;

இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....

அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.

தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார்.

இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை;

ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?

விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன;

ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.

சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம்.

மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம்.

கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம்.

வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது.

எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.

பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை.

உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...

அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான்.

எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.

இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது கோவை.

அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, கூடுகிறார்கள் ஐயாயிரம் பேர்;

குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது "சிறுதுளி';

மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது "ஓசை';

ரயில் சேவைக்காக போராடுகிறது "ராக்'.

மரியாதைக்குரிய கொங்குத் தமிழ்,

அத்துப்படியான ஆங்கிலம்,

இதமான காலநிலை,

சுவையான சிறுவாணி,

அதிரடியில்லாத அரசியல்...

இவற்றையெல்லாம் தாண்டி,

அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.

புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி நடை போடுகிறது.....

அந்த பெருமையுடன் எல்லா கோவை நட்புகளும் இறுமாப்பாய் சொல்லுங்க ...

என்ர ஊரு கோயமுத்தூருங்கோ.....!!!!!

Sunday, 17 May 2015

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில்
உள்ள சில அற்புதமான ரகசியங்கள்
ஆச்சர்யங்கள் பின்வருமாறு.
பல கோடி டாலர்கள்
செலவு செய்து எட்டு ஆண்டுகளாக
ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர்
கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின்
காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக
நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of
World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல்
எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல்
இதனை கண்டறிந்த நமது தமிழன்
எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..?
அதை உணர்ந்து அணுத்துகள்
அசைந்துகொண்டே இருக்கும் என்ற
உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக
உணர்த்தும்படி சிலை அமைத்து
பூமியின் மையப்புள்ளியில்
மறைமுகமாக அமர்த்திய அவன்
சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000
வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து
திருமந்திரத்தில் குறிப்பிட்ட
திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..?
புரிகிறதா..? தமிழன் யார் என
தெரிகிறதா..? திருமூலரின்
திருமந்திரம் மிகப்பெரிய
உலகிற்கே வழிகாட்டும் அறிவியல்
நூலாகும் இதை உணர்ந்துகொள்ள
தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும்
ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க
தமிழ்..வெல்க... தமிழனின்
நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம்
என்று பலரும் பல
விசயங்களை கூறிவரும் வேளையில்,
அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,
பொறியியல், புவியியல், கணிதவியல்,
மருத்துவவியல் குறித்த
ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும்
ஒரு தெளிவான
சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது
, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த
பிரம்மாண்டமான
கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில
அற்புதங்களை அதனிலடங்கும். அந்த
வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில்
உள்ள சில அற்புதமான ரகசியங்கள்
இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும்
இடமானது உலகின் பூமத்திய
ரேகையின் சரியான மையைப்
பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center
Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில்
ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர்
ஆலயம், காற்றை குறிக்கும்
காலஹஸ்தி ஆலயம்,
நிலத்தை குறிக்கும்
காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும்
சரியாக ஒரே நேர்கோட்டில்
அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East
தீர்க்க ரேகையில் (LONGITUDE )
அமைந்துள்ளது, இன்று Google map
உதவியுடன் நாம் வானத்தின் மேல்
இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால்
மட்டுமே விளங்கும் இந்த துல்லியம்
அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு
பொறியியல்,புவியியல் மற்றும்
வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
3) மனித உடலை அடிப்படையாக
கொண்டு அமைக்கப்பட்டிருக்கும்
சிதம்பரம் கோயிலில் 9
நுழைவு வாயில்களும், மனித உடலில்
இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற்
கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு
வேயப்பட்டுள்ளது, இது மனிதன்
ஒரு நாளைக்கு சராசரியாக 21600
தடவைகள் சுவாசிக்கிறான்
என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க
ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த
72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில்
இருக்கும் ஒட்டுமொத்த
நாடிகளை குறிக்கின்றது.இதில்
கண்ணுக்குத் தெரியாத உடலின் பல
பாகங்களுக்கு சக்தியை கொண்டு
சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன்
வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம்,
அதுவே சதாசிவம், அதுவே அவரின்
நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக
அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில்
இதயத்தை குறிப்பதாகும்.இந்த
இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற
வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர
படி" என்று அழைக்கப்படுகின்றது,
அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற
ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற
கோயில்களில் இருப்பதை போன்று நேரான
வழியாக இல்லாமல் பக்கவாட்டில்
வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4
தூண்கள் உள்ளன,இது 4
வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள்
உள்ளன, இவை 28 ஆகமங்களையும்,
சிவனை வழிபடும் 28 வழிகளையும்
குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 +
64 மேற்
பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது
64 கலைகளை குறிக்கின்றது, இதன்
குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS
BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த
நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9
கலசங்கள், 9 வகையான
சக்தியை குறிக்கின்றது.அர்த்த
மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6
சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின்
பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18
தூண்கள், 18 புராணங்களையும்
குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர்
ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம்
என்ற கோலம் "cosmic dance" என்று பல
வெளிநாட்டு அறிஞர்களால்
அழைக்கபடுகின்றது.

Tuesday, 12 May 2015

Advertisement
பதிவு செய்த நாள்
11மே
2015
15:56
பெங்களூரு: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்காக 919 பக்க தீர்ப்பை, நீதிபதி குமாரசாமி வௌியிட்டுள்ளார். இதில் முக்கிய அம்சமாக, வருமானத்திற்கு மேல் 10 சதவீதம் வரை சொத்துக்கள் சேர்க்கப்பட்டிருந்தால் விடுவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது தான். இது குறித்து குமாரசாமி தனது தீர்ப்பில், 'குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65,654 பணத்துக்கு, கணக்கு காட்டப்பட்டுள்ளது. கணக்கில் வராத தொகை ரூ.2,82,36,812 ஆகும். இந்த வகையில், மொத்த வருவாயில், ஜெயலலிதா கணக்கு காட்டாத சொத்துக்களின் மதிப்பு 8.12 சதவீதம் மட்டுமே. கிருஷ்ணானந்த் அக்னிஹோரி மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகளுக்கு இடையேயான வழக்கில், ஒருவருக்கு, 10 சதவீதம் வரை வருமானத்துக்கு மேல் சொத்து இருந்தால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர அரசின் சுற்றறிக்கையிலும் கூட 20 சதவீதம் கூடுதல் சொத்துக்கள் இருப்பதில் தவறில்லை என்று கூறப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்கப்பட்டுள்ள ஜெயலலிதா விடுதலை செய்யப்படுகிறார். அவர் விடுதலையவதால் மற்ற மூவரும் விடுவிக்கப்படுகின்றனர்
��������������

Sunday, 3 May 2015

ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள்
இங்கிலாந்து சென்ற
பொழுது.சாதாரணமாக
இங்கிலாந்து தெருவில்
நடந்து போய்
கொண்டு இருந்தார்.அப்போது அவர்
ரோல்ஸ் ராய்ஸ் கார்
ஷோரூமை பார்த்தார்
அங்கே சென்று கார்களின்
விலையை பற்றி விசாரிக்க
நினைத்தார்.
அப்பொழுது ஷோ ரூம் ஊழியர்கள்
இவர் மன்னர் என்பதை அறியாமல்
ஒரு ஏழை இந்திய
குடிமகனை ஷோ ரூம் ஊழியர்கள்
அடித்து விரட்டினர் இதை கண்ட
ராஜா தனது ஓட்டல்
அறைக்கு சென்று விட்டார்.பிறகு சில
மணி நேரம்
கழித்து முழு வியத்தகு தனது அரச
உடையில் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ்
ஷோரூம் அடைந்தார் . ஷோ ரூம்
ஊழியர்கள் அவருக்கு முழு அரச
உபசாரம் செய்தனர்.சிவப்பு கம்பள
வரவேற்ப்பு அளித்தனர்.ராஜா 6
ரோல்ஸ் ராய்ஸ்
கார்களை முழுதொகையும்
செலுத்தி வாங்கினார்.
இந்தியா அடைந்த பிறகு, நகரின்
கழிவுகளை சுத்தம் செய்ய இந்த
கார்களை பயன்படுத்துமாறு
நகராட்சிக்கு உத்தரவிட்டார். . உலகின்
நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்
நகரத்தின் கழிவு போக்குவரத்திற்
காக பயன்படுத்தப்படும் , செய்தி ,
விரைவில் உலகம் முழுவதும்
பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின்
நற்பெயர் நாறிப்போனது.
யாரவது ஐரோப்பா அல்லது அமெரிக்காவில்
நான் ரோல்ஸ் ராய் கார்
வைத்துள்ளேன்
என்று பெருமை பீத்திகொண்டால்.
இது இந்தியாவில் குப்பை அள்ள
பயன்படுகிறது என்று மக்கள் ஏளனம்
செய்யும் நிலைமைக்கு ஆளானது.
இதன் காரணமாக நிறுவனத்தின்
மதிப்பு கெட்டு அதன்
விற்பனை சரிய தொடங்கியது.ரோல்
ஸ் ராய்ஸ் நிறுவன தலைவர் ராஜா
விஜய் சிங்கிற்கு ஒரு அவசர
தந்தி அனுப்பினார் அதில் தாங்கள்
உடனடியாக எங்கள்
கார்களை குப்பை அல்ல
பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்
.அதற்க்கு பதிலாக நாங்கள்
உங்களுக்கு மேலும் 6
கார்களை இலவசமாக தருகிறோம்
என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதற்க்கு ராஜா விஜய் சிங்
எனக்கு உங்கள் கார்கள்  மேல்
வெறுப்பு இல்லை உங்கள் ஊழியர்கள்
என் நாட்டவரை குப்பை போல்
வெளியே வீசினர் அதற்கு பதில்தான்
நான் உங்கள் கார்களை குப்பை அள்ள
உபயோகித்தேன்.முதலில்
மக்களைமதியுங்கள் என்று பதில்
அனுப்பினார்.
வெள்ளை காரனை செவிட்டில்
அறைந்த ராஜ விஜய் சிங்கை உலகம்
அறியட்டும் இதை அனைவரிடமும்
பகிருங்கள். """" be Proud to be an indian

மரங்களை வெட்டுங்கள் - cut the trees

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல்
( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களைநடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே.
ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் 'என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
மண்ணின் வில்லன் அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில்
முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம்.
தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.
( பேராண்மை படத்தில் கூடஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராமமக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றிதெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? ,
இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.

முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.இதன் கொடூரமான குணங்கள்இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துகொள்கிறது,
( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர்முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவிசெல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!
இப்படி காற்றின் ஈரபதத்தையும் ,நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும்போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.உடம்பு முழுதும் விஷம் இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.

முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது ,ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.
இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் ,
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழமுடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும்
கூடுகட்டுவதும் இல்லை.காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.
அறியாமை நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு ....

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தைவளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம் ....

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை
கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் . சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை கூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை
செயல்படுத்தலாம், செய்வார்களா?
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....!
நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!Cut this trees

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
" இதுவே தமிழின் சிறப்பு.."
++++++++++++++++++++++++++++++
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.