Saturday, 31 December 2016

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

🌹🍀🌸.        🌹🍀🌸.        🌹🌸🍀

😂👉இன்னும் ஒரே நாள் தான்  இருக்கிறது இந்த வருடம் முடிய ..👉👉

🙌என்னை வெறுத்தவர்களுக்கு நன்றி நான் உங்களால் அதிக மனபலம் அடைந்தேன் ..😀💬💥

🌴🙌என்னை விரும்பியவர்களுக்கு நன்றி நான் உங்களால் மகிழ்ச்சி அடைந்தேன் ..👍👍

💬💟எனக்காக வருத்தப்பட்டவர்களுக்கு நன்றி என் மேல் உள்ள அக்கறையை அறிந்தேன் ..💗💚

🍌🍓என்னோடு இணைந்தவர்களுக்கு நன்றி என் பயணம் உங்களோடு தொடரும்..🌻🌻

🌴🌸என்னை விட்டு பிரிந்தவர்களுக்கு நன்றி நான் உங்கள் சுயரூபத்தை தெரிந்து கொண்டதற்க்கு ..🌹🍀

🌹என்னோடு எனக்காக இணையவிருக்கும் புது நட்புகளுக்கும் நன்றி பயணம் சிறக்கும்...🌱🌻

🎂🎂💐அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 💐💐🍓🍓

🎉🍀Have a🌻🌷🌹
🌹Nice Day❤🌴

Friday, 30 December 2016

விருச்சிகம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

விருச்சிகம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

இலவசங்களை மறுப்பவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த 2017-ம் ஆண்டு பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும். பணவரவு கணிசமாக உயரும். இளைய சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் சிலர் வீட்டு மனை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். போட்டி, பந்தங்களில் வெற்றி பெறுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல உத்யோகம் அமையும். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவ முன் வருவார்கள்.

26.05.2017 முதல் 12.7.2017 வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைவதாலும் மற்றும் 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் சிறுசிறு வாகன விபத்துகள், மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை வந்துச் செல்லும். உடன்பிறந்தவர்களால் பிரச்னைகள் வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையப்பமிட வேண்டாம். பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டிக் கூடிக் கொண்டேப் போகிறதே என்று அச்சப்படுவீர்கள்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்யம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வேற்றுமொழிப் பேசுவர்கள், வேற்று மதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புது வழிகளில் முயற்சி செய்வீர்கள். திடீர் யோகம், பணவரவு உண்டு.
      நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன் வந்து உதவுவார். நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். தூரத்து சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரங்கள், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.

14.12.2017 வரை ராசிக்குள் சனி அமர்ந்து ஜன்மச் சனியாக தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஜென்ரல் செக்கப் செய்து கொள்வது நல்லது. வறுத்த, பொரித்த மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். நாக்கைக் கொஞ்சம் கட்டுங்கள். கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதங்கள் வரத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்த வேண்டாம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். உடல் எடை கூடும். பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். சில சமயங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள். நேரம் கிடைக்கும் போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் சிலர் உங்களை குறை கூறுவார்கள்.

வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் நோய்களெல்லாம் வெகுவாக குறையும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகளெல்லாம் விலகும். ஆனால் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். நிதானம் அவசியம். மூக்கு, காது, கை, கால் வலி வந்துப் போகும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.

வியாபாரத்தில் ஜென்மச் சனி தொடர்வதால் புது தொழில் தொடங்கும் முயற்சிகள், பெரிய முதலீடுகள் வேண்டாம். போட்டிகளை சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களுக்காக எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், அதிக சலுகைகள் தந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லையே என ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரி பொருள் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் ஜீலை 26-ந் தேதி வரை ராகு 10-ல் அமர்வதால் சின்ன சின்ன அலைகழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்கள் மீது சிலர் வழக்குத் தொடுக்க வாய்ப்பிருக்கிறது.

கன்னிப்பெண்களே! போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். காதலை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். கல்யாணம் தாமதமாகி முடியும். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம்.

மாணவ-மாணவிகளே! ஏழரைச் சனி நடைப்பெற்றுக் கொண்டிருப்பதால் மந்தம், மறதி வந்து நீங்கும். உங்களுடன் சுற்றித் திரிந்த நண்பர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறக்கூடும். எனவே விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.

கலைத்துறையினரே! மனம் தளராதீர்கள். சின்ன வாய்ப்பு வந்தாலும் பயன்படுத்த தவறாதீர்கள். மூத்த கலைஞர்களால் உதவிகள் உண்டு.

இந்த 2017-ம் ஆண்டு சுற்றியிருப்பவர்களின் சுய நலப்போக்கை உணர வைப்பதுடன், மன அமைதியையும் தருவதாக அமையும்.

ரிஷபம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ரிஷபம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

கடின உழைப்பாளிகளே! சந்திரன் உங்களது ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்கும் போது இந்த 2017-ம் ஆண்டு பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் முடிவடையும்.  அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.     

உங்களுடைய சப்தமாதிபதி செவ்வாயும், ராசிநாதன் சுக்ரனும் 10-ம் வீட்டில் நிற்கும் போது இந்தாண்டுப் பிறப்பதால் வருடத்தின் தொடக்கமே கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்ப்புகளெல்லாம் குறையும். புது வேலை, பொறுப்புகளெல்லாம் தேடி வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். சமையலறையை சிலர் நவீனமாக்குவீர்கள். மாதத் தவணை முறையில் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். ஆனால் வருடப் பிறப்பு முதல் 16.01.2017 வரை செவ்வாயும், 27.01.2017 வரை ராசிநாதன் சுக்ரனும் கேதுவின் பிடியில் சிக்கியிருப்பதால் தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, அசதி, சோர்வு, கை, கால் வலி வந்துப் போகும்.

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்களின் சப்தமாதிபதியான செவ்வாயை சனி நேருக்கு நேர் பார்க்கயிருப்பதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு தலைச்சுற்றல், மூட்டு வலி, முன்கோபம், வேலைச்சுமை வந்துப் போகும். அவருடன் வீண் விவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.
 

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்துச் செல்லும். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள்.

ஜுலை 27-ந் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ம் வீட்டில் கேது தொடர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்துச் செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். ஆனால் ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்களெல்லாம் வலிய வந்துப் பேசுவார்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். வேற்றுமதம், மொழி, இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.
   


01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். உறவினர்கள் தேடி வருவார்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டில் மறைந்து சகட குருவாக வருவதால் சின்ன சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகளை நினைத்து அவ்வபோது தூக்கம் குறையும். உங்களை நீங்களே குறைந்து மதிப்பீடாதீர்கள். வங்கி கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என மேலாளரை கலந்தாலோசித்து காசோலை தருவது நல்லது. சின்ன சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். பழைய கடனை நினைத்து அவ்வபோது கலங்குவீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் பணம், நகைகளையெல்லாம் பாதுகாப்பாக வங்கி லாக்கரில் வைத்து செல்வது நல்லது. வீட்டில் களவுப்போக வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் ஈகோவால் பிரிவுகள் வரக்கூடும். எனவே அனுசரித்து போகப் பாருங்கள். உடல் ஆரோக்யத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். எண்ணெய் பதார்த்தங்கள், துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. நோய் தொற்று வர வாய்ப்பிருக்கிறது.

இந்தாண்டு முழுக்க சனி 7-ல் நின்று கண்டகச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும் வருவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு மனைவியுடன் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கவன மறதியால் விலை உயர்ந்த நகை, பணம், செல்போனை இழக்க நேரிடும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், நகச்சுத்தி, முடி உதிர்தல், அலர்ஜி வந்து நீங்கும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட்டு நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். எதிர்மறை எண்ணங்களுடன் பழகுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். சின்ன சின்ன நட்டங்கள் இருக்கும். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்டு மாதங்கள் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். உணவு, மருந்து, கட்டுமானப் பொருட்கள், நெல் மண்டி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வெடிக்கும். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். வேலையாட்களும் உங்களுடைய கஷ்ட, நஷ்டங்களைப் புரிந்துக் கொள்ளாமல் பொறுப்பற்று நடந்துக் கொள்வார்கள். வியாபார ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். மார்ச், ஆகஸ்டு, செப்டாம்பர் மாதங்களில் கடையை உங்கள் ரசனைக் கேற்ப அழகுப்படுத்தி, விரிவுப்படுத்துவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார். ஜனவரி, ஆகஸ்டு, நவம்பர் மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடி வேலை வாங்க வேண்டி வரும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! செப்டம்பர் மாதம் வரை போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வேலையும் அமையும். சிலருக்கு திருமணமும் முடியும். இந்தாண்டு முழுக்க சனியின் போக்கு சாதகமாக இல்லாததால் காதலில் ஏமாற்றமும், உயர்கல்வியில் தேக்கமும், மந்தமும் ஏற்படும். பெற்றோருடன் மோதிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள்.

மாணவ-மாணவிகளே! உயர்கல்வியில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். மந்தம், மறதி வந்து நீங்கும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய கல்வி பிரிவில் போராடி இடம் பிடிப்பீர்கள்.

கலைத்துறையினரே! மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பெரிய நிறுவனத்திற்கென காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தப் பாருங்கள்.

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நிம்மதியற்றப் போக்கை தந்தாலும், இடம், பொருள், ஏவலறிந்து செயல்பட வேண்டுமென்பதை உணர்த்துவதாகவும் அமையும்.

மேஷம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மேஷம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
நேர்மையாளர்களே! உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் பகவான் லாப வீட்டில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.                         எதிர்பாராத பணவரவு உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்று புது வேலையில் சேர்வீர்கள். வழக்கால் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விசா இந்தாண்டு வந்து சேரும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். பேசாமல் இருந்த நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

ஆனால் 16.01.2017 வரை ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து நிற்பதாலும், 17.1.2017 முதல் 26.2.2017 வரை ராசிக்கு பன்னிரெண்டில் மறைவதாலும் முன்கோபம், இரத்த சோகை, சகோதரங்களுடன் மனக்கசப்புகள், சிறுசிறு நெருப்புக் காயங்களெல்லாம் வந்துப் போகும்.11.4.2017 முதல் 26.5.2017வரை உள்ள காலக்கட்டத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாயை சனி பார்ப்பதால் சிறுசிறு விபத்துகள், பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஏமாற்றங்கள் வந்து போகும். வீடு, மனை வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரி பார்க்கத் தவறாதீர்கள்.

உங்களின் சுகாதிபதி சந்திரன் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்கும் போது இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வீடு, வாகனம் உங்கள் ரசனைக் கேற்ப அமையும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து நின்று போராடி சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையில் இப்போது தலையிட வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள்.

ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-லும் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைபளு இருந்துக் கொண்டேயிருக்கும். வீண் பழிகளும் வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி, இரத்த அழுத்தம் வந்துப் போகும். கடன் பிரச்னையால் சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சமும் அடிமனதில் இருந்துக் கொண்டேயிருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்துச் செல்லும்.

வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் தொந்தரவுகள் வந்துப் போகும். சிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு வீடு, வேறு ஊர் அல்லது அண்டை மாநிலம் மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், லாகிரி வஸ்துகளை தவிர்ப்பது நல்லது. சின்ன சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் பாக்யாதிபதியும்-விரையாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்ந்திருப்பதால் பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். குடும்பத்தில் வீண் சச்சரவுகள் வரக்கூடும். சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பிள்ளைகளாலும் அலைச்சலும், செலவுகளும் வந்து நீங்கும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்கயிருப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்பத்தில், பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். ஆரோக்யம் சீராகும். அடகிலிருந்த நகை, சொத்தையெல்லாம் மீட்க வழி, வகை பிறக்கும். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். வீடு கட்டும் வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படத் தொடங்குவீர்கள்.

14.12.2017 வரை சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்துடன் வெளி ஊருக்கு செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை சரி பார்த்து செல்லுங்கள். நகை, பணம், முக்கிய பத்திரங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. களவுப் போக வாய்ப்பிருக்கிறது.

திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்ல வேண்டாம். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். பெரிய நோய்க்கான அறிகுறிகளெல்லாம் இருப்பதைப் போல் தோன்றும். ஆனால் மருத்துவப் பரிசோதனை செய்யும் போது பெரிய பாதிப்புகள் இருக்காது என்றாலும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 9-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு தெளிவுப் பிறக்கும். மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துப் பேசும் பக்குவம் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும்.

வியாபாரத்தில் இந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். என்றாலும் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள் எனவே பல நாட்கள் நீங்களே தொழிலாளியாகவும், முதலாளியாகவும் இறங்கி வேலைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதிய வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது விசாரித்து சேர்ப்பது நல்லது.

அவர்களுக்கு அதிகத் தொகை முன்பணமாக தர வேண்டாம். வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். பங்குதாரர்களில் சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜீலை மாதங்களில் கடையை மாற்றுவது, விரிவுப்படுத்துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி பிளாஸ்டிக், புரோக்கரேஜ், மின்சார சாதன வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் உங்களின் உத்யோகஸ்தானாதிபதி சனி 8-ல் நீடிப்பதுடன், ஜீலை 27ஆம் தேதி முதல் கேது உத்யோகஸ்தானத்தில் அமர்வதாலும் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அலுவலகத்தில் சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் நிகழக்கூடும். உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகளையும் போராடி பெற வேண்டி வரும். அதிகாரிகளால் மதிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் இடையூறுகளை சமாளிக்க வேண்டி வரும். ஆனாலும் செப்டம்பர் மாதம் முதல் வேலைச்சுமை குறையும். மறுக்கப்பட்ட உரிமைகளும் கிடைக்கும். இடமாற்றமும் கிட்டும்.

கன்னிப் பெண்களே! செப்டம்பர் மாதம் முதல் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரனும் அமையும். என்றாலும் தோலில் தடிப்பு, தேமல், தூக்கமின்மை வந்துச் செல்லும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். ஒருமுறை படித்தால் மட்டும் போதாது அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்த்து நினைவில் நிறுத்துவது நல்லது. விளையாட்டுப் போட்டிகள், பொது அறிவு போட்டிகளில் பரிசு, பாராட்டுக் கிடைக்கும்.

கலைத்துறையினரே! விமர்சனங்களும், கிசுகிசுத் தொந்தரவுகளும் வந்தாலும் அஞ்ச வேண்டாம். உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள்.

இந்த 2017-ம் ஆண்டு முட்கள் நிறைந்த பாதைகளில் உங்களை பயணிக்க வைத்தாலும் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் ஒரளவு முன்னேற்றுவதாக அமையும்.


மீனம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மீனம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

எங்கும், எதிலும் புதுமையை புகுத்துபவர்களே! உங்களுக்கு லாப ராசியில் சந்திரன் நிற்கும் போது இந்த 2017-ம் ஆண்டு பிறப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பார்கள்.                            பணப்புழக்கம் அதிகரிக்கும். டி.வி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப உங்ளை மாற்றி கொள்வீர்கள். நீண்ட கால லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்றிருந்தீர்கள் அல்லவா, அது இப்பொழுது நிறைவேறும். சிலர் உங்கள் ரசனைக் கேற்ப நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். சொந்த ஊர் பொது காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.

உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் சூரியன் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புது பதவிகளும், சிறப்பு பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசு காரியங்கள் உடனே முடியும்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால் உங்களுடைய பலம், பலவீனத்தை உணருவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். சில நாட்களில் தூக்கம் குறையும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். ஆனால் ராகு 6-ம் வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் மாற்றம் உண்டாகும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். ஆனால் ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து வருந்துவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அழகு, அறிவுக் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். வீண் அலைக்கழிப்புகளும் அதிகமாகும். திடீர் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாக கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

14.12.2017 முதல் சனிபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பீர்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். உங்களைக் குற்றம், குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்கள் அதிகரிக்கும். சொந்த- ஆனால் வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 10-ல் அமர்வதால் வீரியத்தை விட காரியம் தான் பெரிது என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். எதிர்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆனால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது உங்களை ஏமாற்ற முயற்சி செய்வார்கள். வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்தீர்களே! கடையை வேறு இடத்திற்கு இனி மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களும் வர வாய்ப்பிருக்கிறது. இரும்பு, உணவு, ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களை ஆழம் பார்ப்பார்கள்.

உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். ஆனால் மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதலடைவீர்கள். எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடின உழைப்பாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பாலும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்காதீர்கள். பள்ளி கல்லூரி கால தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். திருமண விஷயத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். சிலர் அயல்நாடு செல்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை பேச்சை தவிர்க்கப்பாருங்கள் கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்காமல் முதல் வரிசையில் வந்தமருங்கள்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் அதிகரிக்கும். மூத்த கலைஞர்களை விட அறிமுக கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும்.

இந்த 2017-ம் ஆண்டு அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதுடன், சின்ன சின்ன எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.

மிதுனம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மிதுனம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

வாரி வழங்கும் வள்ளல்களே! உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் 2017-ம் ஆண்டு பிறப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும்.  உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். நீண்ட நெடுங்காலமாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.

ஆனால் எட்டாவது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

வருடப்பிறப்பு முதல் 8-ம் தேதி வரை உங்களுடைய ராசிநாதனான புதன் சனியுடன் சேர்ந்து ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால் அலர்ஜி, யூரினரி இன்பெக்ஷன், நரம்புச் சுளுக்கு, சளித் தொந்தரவு வந்து போகும்.

11.4.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாயை சனி பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள், பழைய கடனை நினைத்த கவலைகள், வீண் டென்ஷன், சகோதர வகையில் மனவருத்தம் வந்து நீங்கும்.

25.7.2017 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, பித்தப் பையில் கல், சிறுநீரக கோளாறு வந்துப் போகும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். பிதுர் ராஜ்ஜிய சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். அநாவசியச் செலவுகளை கட்டுபடுத்தப் பாருங்கள். ஆனால் மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். வேற்றுமதம், மாற்றுமொழிப் பேசுபவர்களால் உங்களது வாழ்க்கை தரம் ஒரு படி உயரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். சிறுக, சிறுக சேமித்து வைத்த பணத்தில் வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.

ஜுலை 26-ந் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் வீண் விரையம், அலைச்சல், பொருள் இழப்புகள் வந்து போகும். சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். பண விஷயத்திலும், கல்யாண விஷயத்திலும் குறுக்கே நிற்க வேண்டாம். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. பல் மற்றும் காது வலி வந்துப் போகும். காலில் அடிப்படக்கூடும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் சப்தம-ஜுவனாதிபதியான குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அதிகமாகும். இனம்புரியாத கவலைகள் வந்துப் போகும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். அவருக்கு கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதிக்காதீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும்.

ஆனால் 02.09.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளால் மதிப்பு, மரியாதைக் கூடும். மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடி வரும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள்.

பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தங்க ஆபரணங்கள், இரத்தினங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். அடிக்கடி தொந்தரவு தந்த வாகனம் இனி சீராக ஓடும். சொந்த-பந்தங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

15.12.2017 வரை சனி பகவான் 6-ம் வீட்டிலேயே நீடிப்பதால் எதிர்ப்புகள் குறையும். தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிவீர்கள். அதிக வட்டி கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலமாக சுமூக தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள்.

ஆனால் 16.12.2017 முதல் சனி 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப் பேசி முடிவுகளெடுப்பது நல்லது. மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், முதுகு மற்றும் மூட்டு வலி வந்துப் போகும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களுக்கு பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றமடைந்தார்களே! வட்டிக்கு வாங்கி கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டீர்களே! இனி உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். கன்ஸ்டக்ஷன், பதிப்பகம், கம்பியூட்டர் உதிரி பாகங்கள், ஜீவல்லரி வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது பிரச்சனை செய்தார்களே! இனி பணிந்து வருவார்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரரும் மீண்டும் வந்திணைவார்.

உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் உங்களின் உத்யோகஸ்தானாதிபதி குருபகவான் சாதகமாவதால் பணிகளை முடிப்பதிலிருந்த தேக்க நிலை மாறும். வேலைச்சுமையும் குறையும். உங்களை கசக்கிப் பிழிந்து, உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். வருட தொடக்கத்திலேயே பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

கன்னிப் பெண்களே! அடிக்கடி முகம் சோர்ந்து காணப்பட்டீர்களே, ஏதோ இனந்தெரியாத கவலை உங்களை வாட்டியதே, இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். காதல் கைக்கூடும். தோழிகளுக்கெல்லாம் திருமணமாகி விட்டதே! நமக்கு இன்னும் ஆகவில்லையே என வேதனைப்பட்டீர்களே! இனி கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். தாயாருடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்ததே! அந்த நிலை மாறும். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளை பெறுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் எடுத்து பெற்றோரின் தலை நிமிரும்படியாக செய்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.
         

கலைத்துறையினர்களே! மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் ஆதாயமுண்டு. விருதுகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.

இந்த 2017-ம் ஆண்டு உங்களுக்கு ஒருபக்கம் பரபரப்பான வாழ்க்கையைத் தந்தாலும், பிற்பகுதியில் சாதனையாளராகவும் மாற்றும்.

மகரம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மகரம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
அறிவியல் பூர்வமாக எதையும் யோசிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எல்லாவற்றையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வீட்டில் கூடுதல் தளம் அமைப்பது, அறை கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். ஆனால் உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அடிக்கடி கோபப்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அலர்ஜி, சோர்வு, டென்ஷன், வீண் செலவுகள் வந்துப் போகும்.

வருடம் பிறக்கும் போதும் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் மறைமுக எதிர்ப்புகள், வீண் அலைச்சல், பழைய கடனை நினைத்த கவலைகள், எதிர்பாராத பயணங்கள் வந்துப் போகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை கால தாமதமின்றி செலுத்தப்பாருங்கள்.

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயைப் பார்க்கயிருப்பதால் எதிலும் ஒருவித குழப்பம், தடுமாற்றம், படபடப்பு, நெஞ்சு வலி, இரத்த சோகை, இளைய சகோதர வகையில் அலைச்சல், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துச் செல்லும்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் என்ன வாழ்க்கை இது? செக்கு மாட்டு வாழ்க்கை மாதிரி என்றெல்லாம் சின்னதாக ஒரு வெறுப்பு, சலிப்பு வந்துப் போகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளும், போராட்டங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். அடிமனதில் ஒருவித பயமும் வந்துப் போகும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போவது நல்லது. வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் முழு கவனம் செலுத்தப்பாருங்கள். சிலர் உங்களை தூண்டி விடுவார்கள். கொந்தளித்து வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள். பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கால் வலி வந்துச் செல்லும். அவசர முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவு வரக்கூடும். மனைவிக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். உங்களுடைய திறமைக் குறைந்து விட்டதாக நீங்களே சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம். மற்றவர்களால் நாம் ஒதுக்கப்படுகிறோமோ, நாம் மதிக்கப்படவில்லையோ என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கேள்விக் கேட்டு குழம்புவீர்கள். களவுப் போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேரிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு செல்வது நல்லது.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நீடிப்பதால் தன்னம்பிக்கை அதிகமாகும். அனுபவப்பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ம் வீட்டில் அமர்வதால் அவ்வப்போது ஏமாற்றங்களை உணருவீர்கள். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். உங்களுடைய பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள்.

14.12.2017 வரை சனி 11-ம் வீட்டான லாப வீட்டில் தொடர்வதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தடைப்பட்ட காரியங்களெல்லாம் முடிவடையும். வருமானம் உயரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். வெளிநாடு செல்ல விகா கிடைக்கும். புது வேலை அமையும்.

திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களில் உள்ள அர்த்தத்துடன் பேசுபவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால் வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான விரையச் சனி தொடங்குவதால் தூக்கமில்லாமல் போகும். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். ஆனால் தொழில் ஸ்தானமான 10-ம் இடத்தில் குரு செப்டம்பர் மாதம் முதல் அமர்வதால் பெரியளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடிரென்று பணியை விட்டு விலகுவார்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் வழக்கம் போல் முணுமுணுப்பார்கள். பகைத்துக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். ஜனவரி, அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் குரு உத்யோகஸ்தானமான 10-ல் அமர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். விரும்பத்தாக இடமாற்றமும் இருக்கும். உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள். சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளுடன் பணிந்துப் போங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள சற்று தாமதமாகி கிடைக்கும். சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களுடைய எதிர்பார்ப்புகளில் ஒரு சில நிறைவேறும். புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும். என்றாலும் தோலில் தடிப்பு, தேமல், தூக்கமின்மை வந்துச் செல்லும். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருசிலர் உங்களுடைய காதலைப் புரிந்துக் கொள்வார்கள்.

மாணவ-மாணவிகளே! தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். எல்லாம் தெரிந்தது தானே என்று இருந்துவிடாதீர்கள். விடைகளை எழுதி பாருங்கள். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டு பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களை கேட்டறிவீர்கள். யதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும்.

ஆகமொத்தம் இந்த 2017-ம் ஆண்டு சின்ன சின்ன இடையூறுகளையும், இன்னல்களையும் தந்தாலும் தன் சுய உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.


துலாம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

துலாம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

துணிச்சல் மிக்கவர்களே! உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் லாபாதிபதியான சூரியன் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை வரும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள்.  தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்த 2017-ம் ஆண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பணம் வரத் தொடங்கும்.

உங்களிடம் பழகும் சொந்த-பந்தங்களின் பலம், பலவீனத்தை அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வழக்கு சாதகமாகும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். அம்மான், அத்தை வகையில் மதிப்புக் கூடும். வர்த்தகர்கள் சங்கம், இயக்கம் இவற்றில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். சிலர் வேற்று மாநிலம், அயல் நாடு சென்று வருவீர்கள். வேலைக்கு விண்ணபித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும்.

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் அமர்வதுடன் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் வீண் விரைய செலவுகள், முன் கோபம், இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைப்பாடு, மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து போகும். சொத்து விற்பதாக இருந்தால் ஒரே தவணையாக பணத்தை கேட்டு வாங்குங்கள். சகோதரங்கள் உங்களை தவறாக புரிந்துக் கொள்வார்கள்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். அவர்களை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால் வசதி, வாய்ப்புகள் ஒரளவு பெருகும். ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் ஆதரவுக் கிட்டும். சமூக சேவையில் ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள்.

ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் இடத்திலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். அவ்வப்போது நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக் கொள்வது நல்லது. வழக்கு விவகாரங்களில் அடிக்கடி வழக்கறிஞரை மாற்ற வேண்டாம். புறநகர் பகுதியில் இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது உங்களுடைய இடத்தை கண்காணித்து வருவது நல்லது. சிலர் உங்களுடைய இடத்தை ஆக்கிரமிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ் போட் இவற்றையெல்லாம் புதுப்பிக்க தவறாதீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் உடனுக்குடன் செலுத்துவது நல்லது. இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்களை உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே உங்களுடைய அடிப்படை நடத்தைக் கோலங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள். இதுவரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ, அசிங்கப்பட்டுவிடுவோமோ என்ற ஒரு கவலைகளும் தலைத்தூக்கும்.

அந்தஸ்து புகழுக்காக கைக்காசை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் எடை அதிகமாகும். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். சின்ன சின்ன உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. தாயாருக்கு கழுத்து எலும்புத் தோய்வு, மூட்டு வலி, கை, கால் வலி, அசதி வந்துப் போகும். அவருடன் மனத்தாங்கலும் வரக்கூடும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் சேவகாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்து நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே எடுத்து நடத்துவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஒரு தேடலும், நிம்மதியற்றப் போக்கும் அதிகரிக்கும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரிடமாவது சண்டைபோட வேண்டுமென நினைப்பீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாகும். பெரிய நோய் இருப்பதாக நினைத்து பயம் வரும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். அல்சர், மஞ்சள் காமாலை, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். உணவில் காய்கறிகள், பச்சை கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். சில நேரங்களில் தலைச்சுற்றல் வரும். ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும்.

உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது. எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி பிரச்னையாகவே இருக்கிறதே, யாரும் என்னை மதிப்பதைப் போல் தெரியவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள்.

14.12.2017 வரை சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியின் இறுதி கட்டமான பாதச் சனி நடைப்பெற்றுக் கொண்டிருப்பதால் இருப்பதால் பல் வலி, காது வலி வந்து நீங்கும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளை படிப்பின் பொருட்டு கசக்கிப் பிழிய வேண்டாம். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. பணப்பற்றாக்குறை ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.

வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் 3-ம் வீட்டில் சனி அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே குழப்பங்களை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தைரியம் கூடும். உங்களை ஏளமாகப் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரிகளே! ஏற்ற-இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். லாபம் சுமாராக இருக்கும். சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வரும். சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பாருங்கள். முதலீடுகளையும் மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போங்கள். ஜனவரி, ஆகஸ்டு, டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்யோகஸ்தர்களே! நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டேப் போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். உங்களின் திறமையை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற சந்தேகம் தினந்தோறும் எழும். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது சின்ன சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார். சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். முறைபடி தேர்வெழுதி வெற்றி பெற்றும் பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வை பெற போராட வேண்டி இருக்கும்.

கன்னிப்பெண்களே! யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். தோலில் நமைச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். படித்த துறையில் வேலை கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் வேலையில் சேருவது நல்லது.

மாணவ-மாணவிகளே! டி.வி., சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். நெருக்குத் தீணிகளை குறையுங்கள். அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! வருவதாக இருந்த வாய்ப்புகள் கை நழுவிப் போகும். வயதில் குறைந்த கலைஞர்களால் உதவிகள் கிடைக்கும்.

ஆகமொத்தம் இந்த 2017ம் ஆண்டு சகிப்புத்தன்மை தேவை என்பதையும் தன் கையே தனக்குதவி என்பதையும் உணர்த்தும்.

சிம்மம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

சிம்மம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

தன்மானச் சிங்கங்களே! உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் உங்களின் நீண்ட கால ஆசைகளெல்லாம் நிறைவேறும். கடினமான இலக்கையும் எளிதாக எட்டிப் பிடிப்பீர்கள்.                எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் நழுவ விடாமல் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

உங்களுடைய ராசியை சுக்ரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த டி.வி., ஃப்ரிட்ஜ், மைக்ரோ ஓவன் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட கால லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்றிருந்தீர்கள் அல்லவா, அது இப்பொழுது நிறைவேறும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாருக்கு இருந்த நோய் வெகுவாக குறையும். மகளின் திருமணத்தை வெகுவிமர்சையாக நடத்தி முடிப்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். இடைவிடாமல் உழைத்தும் எதுவும் ஒட்டவில்லையே என வருந்தினீர்களே! இந்த ஆண்டில் பணபலம் கூடும். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள்.

ஜுலை 26-ந் தேதி வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், ஹார்மோன் பிரச்னை, அல்சர், இரத்த சோகை வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள். முன்கோபத்தை குறையுங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்பப்பையில் நீர் கட்டி, நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும். யாருமே உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியாக நெருக்கடிகள் இருந்ததே, அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். நோய்களெல்லாம் விலகும். தோற்றப் பொலிவுக் கூடும். சோர்ந்துப் போய் கலையிழந்திருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை மலரும். கோவில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள்.

தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். ஷேர் மூலம் பணம் வரும். பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்களெல்லாம் அடங்குவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். சொந்த ஊர் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வீட்டில் சுப காரியங்களெல்லாம் நடந்தேறும். புது வேலையும் அமையும்.

17.01.2017 முதல் 26.02.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் 8-ல் மறைந்து காணப்படுவதாலும் மற்றும் 11.4.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் சகோதர வகையில் சச்சரவு, இரத்த அழுத்தம், மனஉளைச்சல், வீண் அலைச்சல், காரியத் தடங்கல், வேனல் கட்டி வந்துச் செல்லும். தந்தையாரின் ஆரோக்யம் பாதிக்கும். அவருடன் மோதல்களும் வந்துப் போகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வரக்கூடும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப வளைந்து கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வழக்குகள் சாதகமாக முடியும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

ஆனால் 02.09.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 3-ம் வீட்டிலேயே அமர்வதால் எந்த ஒரு காரியங்களை முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். முன்பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். அவர்களிடம் உங்களுடைய பழங்கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். மூச்சுத் திணறல், வயிற்று உப்புசம், கனவுத் தொல்லை, தூக்கமின்மை, பசியின்மை வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும்.

அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். யாரிடம் எப்படிப் பேசுவது, நடந்து கொள்வது என்ற அனுபவ அறிவு கிடைக்கும். உங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். அதேப் போல எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. பூர்வீக சொத்தை அதிகம் செலவு செய்து சீர் செய்வீர்கள்.

14.12.2017 வரை சனி 4-ல் நின்று அர்த்தாஷ்டமத்துச் சனியாக வருவதால் மூட்டு வலி, முதுகு வலியால் தாயார் சிரமப்படுவார். தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அன்பு, பாசம் மிகுதியால் தாயார் ஏதேனும் உரிமையுடன் பேசினால் அதற்கெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுது வந்துப் போகும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் தொந்தரவுகள் அதிகரிக்கும். சிலர் வீடு, இடம் மாறுவீர்கள்.

பணப்பற்றாக்குறையும் வந்துச் செல்லும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருந்துக் கொண்டேயிருக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உங்களின் அடிப்படை நடத்தை கோலங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கூடாப்பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வீண் பழிகளும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய சொத்து வரி, வருமான வரி, விற்பனை வரிகளையெல்லாம் கால தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். சிறுசிறு அபராதம் செலுத்த வேண்டி வரும்.

15.12.2017 முதல் சனி 5-ம் இடத்தில் நுழைவதால் குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி வரும். வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரிசை நாட வேண்டி வரும். பூர்வீக சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்புக் காட்ட வேண்டாம். அன்பால் அரவணைப்புப் போங்கள்.

வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்குவதற்குள் அவர்களை எதிர்பார்க்காமல் நாமே அந்த வேலையை செய்துவிடாலாம் என்று முடிவெடுப்பீர்கள். தொழில் போட்டி அதிகமாகும். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். உங்கள் ரசனைக் கேற்ப கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். உணவு, போடிங், லாஜிங், லெதர், மளிகை வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். என்றாலும் எவ்வளவு உழைத்தாலும் உங்களைப் பற்றி குறை கூறத்தான் செய்வார்கள். கவலைபடாதீர்கள், கடமையை செய்யுங்கள். பழைய பிரச்சனைகளை தூர்வாரிக் கொண்டிருக்காமல் தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கப்பாருங்கள். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வேலைசுமை அதிகரிக்கும். ஜனவரி, ஆகஸ்டு, அக்டோபர் மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களே! போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தோலில் நமைச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். கல்யாணம் இந்த வருடத்தின் இறுதியில் முடிவடையும்.
 

மாணவ-மாணவிகளே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தேர்வின் போது படித்துக் கொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டாதீர்கள். ஆய்வகப் பரிசோதனையின் போது கண்ணிலோ, கையிலோ ஆசிட் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்விநிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு.

கலைத்துறையினரே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள்.
    
இந்தப் புத்தாண்டு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும் இறுதியில் உங்களின் கனவுகளை நனவாக்குவதாக அமையும்.

கும்பம் -2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

கும்பம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.                      

  நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். உங்களுடைய ராசிக்கு 12-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைவுக்கூர்ந்து ஆதங்கப்படுவீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும்.

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயைப் பார்க்கயிருப்பதால் முன்கோபம், வேலைச்சுமை, மனஉளைச்சல், சகோதர வகையில் டென்ஷன், பணத்தட்டுப்பாடு வந்துச் செல்லும். வீடு, மனை வாங்கும் போது தாய்பத்திரம், பட்டாவையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது.

26.7.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மனஇறுக்கம், நாக்கில் வறட்சி, கை, கால் மரத்துப் போகுதல் வந்துச் செல்லும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு, கணவன்-மனைவிக்குள் மோதல்களெல்லாம் வந்துப் போகும். மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு(Fibroids) பிரச்னைகளெல்லாம் வந்துச் செல்லும். ஊறுகாய், லாகிரி, வஸ்துக்கள் மற்றும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.

ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் முகவாட்டத்துடன் காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும். உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும்.

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் தன-லாபாதிபதியான குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துப் போகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய அணுகுமுறையை மாற்றுங்கள். சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். திடீர் திடீரென்று உணர்ச்சிவசப்படுதல் இவையெல்லாம் இருக்கும். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 9-ம் வீட்டிலேயே அமர்வதால் திடீர் அதிர்ஷ்ட, யோகம் உண்டாகும். நீண்ட காலமாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளின் தனித்திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவருக்கிருந்த நோய் விலகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.

14.12.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துச் செல்லும். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிலர் காரியம் ஆகும் வரை உங்களை பயன்படுத்திக் கொண்டு பிறகு தூக்கி எறிவார்கள்.

ஆனால் வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 11-ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமதத்தவர், மாற்று மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார்.

வியாபாரத்தில் தொட்டதெல்லாம் நட்டத்தில் போய் நின்றதே! தொழிலை விரிவுபடுத்தக் கூட பணமில்லாமல் தடுமாறினீர்களே! இனி கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் பொருட்களை வாங்கி வைப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். வேற்றுமொழி பேசுபவர்-வெளிநாட்டினர் மூலம் புதுத் தொழில் தொடங்குவீர்கள். போடிங், லாஜிங், ஃபைனாஸ், கன்சல்டன்சி வகைகளால் லாபமடைவீர்கள். செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய சாலைக்கு கடையை மாற்றுவீர்கள்.

உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். பாரபட்சமாக நடந்துக் கொண்ட அதிகாரி உங்களைப் பாராட்டும்படி நிலைமை சீராகும். இடமாற்றம் சாதகமாக அமையும். ஆனாலும் 10-ல் சனி தொடர்வதால் மறைமுக பிரச்னைகள் இருக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். செப்டம்பர் மாதம் முதல் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

கன்னிப் பெண்களே! தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறினீர்களே! வீண் வதந்திகளையும், அவமானங்களையும் சந்தித்தீர்களே! இனி பெற்றோரின் அறிவுரையை ஏற்பீர்கள். கல்யாணம் கூடி வரும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! செப்டம்பர் மாதம் முதல் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! ஜெயிக்க வேண்டும் என்னும் வெறியில் ஆர்வமாகப் படிப்பீர்கள். கிரகிக்கும் சக்தி அதிகமாகும். விடைகளை எழுதி பாருங்கள். மறதி, அலட்சியம் இனி உங்களை விட்டு விலகும். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள்.

கலைத்துறையினர்களே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய இருந்த பணம் ரிலீசாகும். வரவேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும்.

இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாற வைத்தாலும் மையப்பகுதியிலிருந்து அதிரடி மாற்றங்களையும், வெற்றிகளையும் தருவதாக அமையும்.