Wednesday, 9 October 2019

ஜியோவில் அவுட் கோவிங் காலுக்கு கட்டணம்… அதிர்ச்சி அளித்த ரிலையன்ஸ் நிறுவனம்!

ஜியோவில் அவுட் கோவிங் காலுக்கு கட்டணம்… அதிர்ச்சி அளித்த ரிலையன்ஸ் நிறுவனம்!

ஜியோவில் இருந்து மற்ற போன்களுக்கு பேசினால் நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. ட்ராயின் உத்தரவுப்படி, (IUC) இண்டர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. ஏற்கனவே, ரிலையன்ஸ் நிறுவனம் இந்த கட்டணத்தை மற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு செலுத்தி வந்தது. 

இந்நிலையில், இனி ஜியோவில் இருந்து ஏர்டெல், வோடபோனுக்கு பேசினால் நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் அதிர்ச்சி அளித்துள்ளது.