Friday, 31 July 2020

மாவட்ட ஆட்சியரகத்தில் நீங்கள் பல பிரிவுகளை கொண்ட அறைகளை கண்டிருப்பீர்கள். அந்த பிரிவுகள் எந்ததெந்தெ துறை சார்ந்தது. அதற்கான விளக்கங்கள்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நீங்கள் பல பிரிவுகளை கொண்ட அறைகளை கண்டிருப்பீர்கள். அந்த பிரிவுகள் எந்ததெந்தெ துறை சார்ந்தது. அதற்கான விளக்கங்கள்.

1. பிரிவு எ – பணியாளர் தொகுதி, அலுவலக நடைமுறைகள், பொதுத்தேர்தல் மற்றும் முக்கிய அதிகாரிகளின் தங்கல் மற்றும் பயண ஏற்பாடுகள்


2.பிரிவு பி – நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான வழக்குகள் கையாளுதல்


3. பிரிவு சி – சட்டம் ஒழுங்கு, நீதியியல் – வழக்குகள்

4. பிரிவு டி – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்


5. பிரிவு ஈ – நிலம் – பட்டா மாறுதல் – அரசு தேர்வுகள்


6. பிரிவு ஜி – நில அலவை


7. பிரிவு எச் – பதிவறை பாதுகாப்பு, அரசு அலுவலக இருப்பிட வசதி, மாவட்ட அரசிதழ்


8. பிரிவு ஜே – குடிமை பொருட்கள் பொது வினியோகம்


9.பிரிவு கே – நிலம் – நில ஆக்கிரமிப்பு – நில விடுவிப்பு – இரயில்வே நிலங்கள்


10.பிரிவு எல் – சுத்த நகல், தபால், அனுப்புதல்


11. பிரிவு எம் – வரவு செலவு, தனிக்கை,சம்பளம்


12. பிரிவு பி – இயற்கை இடர்பாடுகள், மலை பகுதிகள்


13. பிரிவு ஆர் – மறுவாழ்வு, அகதிகள் நலம், இலங்கை தமிழர்கள் நலம்


14. பிரிவு ஜிசி – பொது மக்கள் குறைதீர் பிரவு


15. ஆயத்தீர்வை – மாநில ஆயத்தீர்வை – டாஸ்மாக் மேலாண்வை


16. பிரிவு – பிசி – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,


17. AD(P) : கிராம பஞ்சாயத்துகள்


18. AD(audit) : தனிக்கை மற்றும் உயர்மட்ட குழு


19. PA(SS) : சிறு சேமிப்பு


20. PA(NM) : பள்ளி சத்துணவு திட்டம்


21. PO(DRDA) : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்


22. A.D(TP) : பேரூராட்சிகள் நிர்வாகம்

General Knowledge :-

1. மூத்த குடிமக்களுக்காக பஞ்சவதி யோஜனாவைத் தொடங்கிய மாநில அரசு எது ?

Answer: இமாச்சல பிரதேசம்

2. தேசிய உரங்கள் நிறுவனம் எந்த நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது ?

Answer: ஐ.டி.ஐ, நங்கல்

3. COVID- 19 பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் இந்தியாவின் இடம் என்ன ?

Answer: 56-வது இடம்

General Knowledge :-

1. "இரும்புக்குதிரை" என்ற நூலை எழுதியவர் யார் ?

Answer: பாலகுமாரன்

2. "கூலிட்ஜ்" குழாயைக் கண்டுபிடித்தவர் யார் ?

Answer: டங்ஸ்டன்

3. மிகச் சிறப்பாக இசையமைப்பவர்களில் ஒருவர் யார் ?

Answer: பீதோவன்

General Knowledge :-

1. ஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் ?

Answer: பிஸ்மார்க்

2. "இந்தியா வின்ஸ் ஃப்ரீடம்" என்ற நூலின் ஆசிரியர் யார் ?

Answer: அபுல் கலாம் ஆசாத்

3. மெக்சிக்கோ நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன ?

Answer: பிசோ

General Knowledge :-

1. ரஷ்யாவின் நாணயம் என்ன ?

Answer: ரபிள் (Ruble)

2. குழந்தைத் தொழிலாளர்களுக்கான  கல்வி திட்டத்தை சமீபத்தில் எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது ?

Answer: உத்தரபிரதேசம்

3. பழங்குடியினர் விடுதிகளுக்கு I.S.O. சான்றிதழ் பெற்ற முதல் மாநிலம் எது ?

Answer: ஒடிசா

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது: விஜயபாஸ்கர்

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது: விஜயபாஸ்கர்

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதனால் ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் தலைமையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில் நோயின் தன்மைக்கு ஏற்ப ஆங்கில முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

மேலும், இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு ‛ஆரோக்கியம்' திட்டத்தினை ஏப்.,23ல் முதல்வர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆயி குப்பம் ஊராட்சியில் எடைகொண்டான் பட்டு  கிராமத்தில் 100 நாள் வேலை  வழங்கக்கோரியும் 100 நாள் வேலை செய்ததற்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி 

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் ஜெயராமன் தலைமையில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்துகொண்டு

 குறிஞ்சிப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று பின்பு மனு கொடுத்தனர் இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் தண்டபாணி மாவட்ட குழு உறுப்பினர் அஞ்சலை ஒன்றிய செயலாளர் வாசு மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் சிவகாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நான்கு சனிக்கிழமை வங்கி விடுமுறை

வரும் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நான்கு சனிக்கிழமை   வங்கி  விடுமுறை

01.08.2020 - பக்ரீத் பண்டிகை

08.08.2020 - இரண்டாவது சனிக்கிழமை

15.08.2020 - சுதந்திரதினம்

22.08.2020 - நான்காவது சனிக்கிழமை.

ஆகஸ்ட் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்

General Knowledge :-

1. யக்ஷகனா எந்த மாநிலத்தின் நடன வடிவம் ?

Answer: கர்நாடகா

2. இந்திரபிரஸ்தா மின் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?

Answer: டெல்லி

3. சந்தோலி தேசிய பூங்கா இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?

Answer: மகாராஷ்டிரா

பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி ஊராட்சியில் பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு மூடைகள் வழங்கப்பட்டது

பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி ஊராட்சியில் பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு மூடைகள் வழங்கப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம்  மேலைச்சிவபுரி ஊராட்சியில் பொன்னமரவாதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் ஊராட்சியை தூய்மை படுத்தவும், நோய் பரவலை தடுக்கும் வகையிலும் ஐந்து மூடை பிளீச்சிங் பவுடர் மற்றும் 20  சுண்ணாம்பு மூடைகள் வழங்கப்பட்டது.  விழாவிற்கு ராயல் லயன்ஸ் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சங்கச்செயலாளர் ரத்தினம்,  பொருளாளர் ரமேஷ், துணைச் செயலாளர் மணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மேலைச்சிவபுரி ஊராட்சி முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும் ஊராட்சி முழுவதும் தெளிக்க பிளீச்சிங் பவுடர் 5 மூடை மற்றும்  20 சுண்ணாம்பு மூடைகள் சங்கத்தின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லமுத்து, சங்க இயக்குநர் கண்ணன், சங்க உறுப்பினர் அர்ஜுனன், ஊராட்சி செயலர் நிறைமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருமலை நாகராஜன்
பொன்னமராவதி

தங்கம் விலை புதிய உச்சம் வெள்ளி விலை குறைவு.

தங்கம் விலை புதிய உச்சம் 
வெள்ளி விலை குறைவு. 

தங்கம் 
இன்று: 5125 (அதிகபட்ச விலை) 
நேற்று: 5093 

வெள்ளி 
இன்று: 70.10 
நேற்று: 70.20 

விநாயகர் அன் கோ
பொன்னமராவதி

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது... 96.04 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது... 96.04 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பிளஸ் 1  தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினர் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களில் 94.38 விழுக்காட்டினர் தேர்ச்சி

RESULT LINK:


 ஆகிய இணையதள பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம்.

ப்ளஸ்-2 முடித்த மாணவர்களின் கவனத்திற்கு

ப்ளஸ்-2 முடித்த மாணவர்களின் கவனத்திற்கு:

▪️2020-இல் புதிதாக  வந்த கல்வி படிப்புகள் என்னென்ன?

▪️வரும் காலத்தில் உச்சத்தை தொட போகும் படிப்புகள் என்ன?

▪️Engineering துறையில் இன்னும் வேலைவாய்ப்புகள் இருக்கிறதா? 

▪️Arts & Science துறையில் ஒரு டிகிரி முடித்தால் என்ன வேலைவாய்ப்புகள் இருக்கும்? 

▪️Banking & Finance துறையில் வேலைவாய்ப்பு பெற என்ன படிக்கவேண்டும்?
▪️மருத்துவ படிப்பு குறித்து இருக்கும் சந்தேகங்கள்,

போன்ற உங்களின் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க 6 துறைகள் சார்ந்த வல்லுநர்கள் "அடுத்த இலக்கு" ONLINE CAREER GUIDANCE PROGRAM-மூலம் ஆலோசனை கூறுகிறார்கள்.

உங்கள் வீட்டில் இருந்தே LMES - Youtube LIVE இல் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

www.lmes.in இல் பதிவு செய்யுங்கள்.

நாள்: 02 AUG 2020, ஞாயிறு
நேரம்: காலை 10 மணி
இடம்: LMES Youtube Channel

இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து மாணவ/மாணவியர்கள் பெற்றோர்களும் தகுந்த கல்வி படிப்பையும் கல்லூரியையும் தேர்ந்தெடுக்க LMES-இன் வாழ்த்துக்கள்.

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

96.04% பேர் தேர்ச்சி.

மாணவர்களை விட, மாணவியர் 3.11% அதிகம் தேர்ச்சி.

சீனாவில் இருந்து தபாலில் வரும் விதைகள் உயிரி ஆயுதமாக இருக்கலாம் என எச்சரிக்கை

சீனாவில் இருந்து தபாலில் வரும் விதைகள் உயிரி ஆயுதமாக இருக்கலாம் என எச்சரிக்கை

வாஷிங்டன்; அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனை சேர்ந்த பலருக்கு, தபால் மூலம், மர்ம விதைகள் அடங்கிய, 'பார்சல்' அனுப்பப்பட்டு வருகிறது. அந்த தபால், சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.'அதை யாரும், நிலத்தில் பயிரிட வேண்டாம்; அது விவசாயத்தை அழிக்கும் உயிரி ஆயுதமாக இருக்கலாம்' என, கனடா எச்சரித்துள்ளது.

கொரோனா வைரசை பரப்பியது தொடர்பாக, அமெரிக்கா -- சீனா இடையே, கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. துாதரகங்களை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில், இரு நாடுகளுமே ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், தபாலில் வரும் மர்ம விதைகள் அடங்கிய பார்சல்கள், தற்போது அமெரிக்காவை அலறச் செய்துள்ளது.
அமெரிக்காவின் அலபாமா, கொலராடோ, ப்ளோரிடா, லோவா, கன்சாஸ், ஜார்ஜியா, டெக்சாஸ் உள்ளிட்ட, 28 மாகாணங்களை சேர்ந்த பலருக்கு, கடந்த சில நாட்களாக மர்ம பார்சல் ஒன்று வருகிறது.அதற்குள் சிறிய, 'ப்ளாஸ்டிக்' பையில் அடைக்கப்பட்ட விதைகள் இருக்கின்றன. 'அந்த பார்சல், தெரிந்தவர்களிடம் இருந்தோ, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தோ வரவில்லை' என, அதை பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் அந்த பார்சலில், சீன எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

சில பார்சல்களில், 'உள்ளே தங்க ஆபரணம் இருக்கிறது' என, வௌிப்பக்கம் குறிப்பிடப்படுகிறது; உள்ளே பிரித்துப் பார்த்தால், விதை இருக்கிறது.இது குறித்து, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.அமெரிக்காவைத் தொடர்ந்து, கனடா மற்றும் பிரிட்டனிலும், இது போன்ற மர்ம விதைகள் கொண்ட பார்சல், பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கனடாவில், பண்ணை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பலருக்கு, இந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. 'பார்சலில், விவசாயத்தை அழிக்கும் உயிரி ஆயுதமாக இருக்கலாம். அதை, நிலத்தில் பயிரிட வேண்டாம்' என, கனடா உணவு கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வருடம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இதுவரை 47% கூடுதலாக நன்றாக பெய்துள்ளது.

இந்த வருடம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இதுவரை 47% கூடுதலாக நன்றாக பெய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரை 111% கூடுதலாக மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

01.06.2020 முதல் 30.07.2020 வரையில்...

பெய்ய வேண்டியது - 110.6 மிமீ

பெய்துள்ளது - 232.9 மிமீ

கூடுதல் - 111%

Thursday, 30 July 2020

பொன்னமராவதி அருகே இடையன்பாறை பகுதியில் ஹாலோ பிளாக் கல் ஏற்றி வந்த லாரி நிலை தடுமாறி விபத்து

பொன்னமராவதி அருகே இடையன்பாறை பகுதியில் ஹாலோ பிளாக் கல் ஏற்றி வந்த லாரி நிலை தடுமாறி விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் வையாபுரி அருகே உள்ள இடையன்பாறை பகுதியில் கிரசரிலிருந்து லாரியில் ஹாலோ பிளாக் கல் ஏற்றி வந்த லாரி நிலைதடுமாறி இடையன்பாறை என்ற இடத்தில்  விபத்துக்குள்ளானது. விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.  மீதமுள்ள நான்கு நபர்கள் வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையிலும், புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாலை மிதமான மழை பெய்தது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாலை மிதமான மழை பெய்தது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த 4 நாட்களாக நல்ல வெயில் வாட்டி வந்தது மாலை நேரங்களில் மழை வருவது போல் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது ஆனால் மழையானது வராமல் ஏமாற்றி சென்றது இதனை எடுத்து பொதுமக்களும் விவசாயிகளும் நல்ல மழை பெய்யும் விவசாயம் செய்யத் துவங்கும் என்ற நம்பிக்கையிலிருந்து ஏமாற்றமடைந்தனர் இதற்கெல்லாம் முத்தலிப் பாய் இன்று மாலை 4 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து நல்ல மழை பெய்தது இந்த மழையானது சுமார் அரை மணி நேரம் பெய்தது இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த மழையினால் தற்பொழுது பொன்னமராவதி பகுதியை சுற்றி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறினார்கள்.

திருமலை நாகராஜன்
பொன்னமராவதி

தமிழகத்தில் இன்று 5864 பேருக்கு கொரோனா.. 97 பேர் பலி

தமிழகத்தில் இன்று 5864 பேருக்கு கொரோனா.. 97 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97 பேர் பலி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 97 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5295 பேர் டிஸ்சார்ஜ் சென்னையில் இன்று 1175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,39,978ஆக உயர்வு தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,78,178ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,838ஆக அதிகரிப்பு சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,767ஆக உயர்வு

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது இன்று ஒரே நாளில் 61,202 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 25,01,919 சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 4689 பேருக்கு கொரோனா வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 53 பேருக்கு கொரோனா உறுதி

சென்னையில் இன்று ஒரே நாளில் 18 பேர் கொரோனாவுக்கு பலி திருநெல்வேலி-8, தஞ்சாவூரில்-6 பேர் கொரோனாவுக்கு பலி

செங்கல்பட்டு: 354 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது திருவள்ளூர்: 325 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கோயம்புத்தூர்: 303 பேருக்கு இன்று கொரோனா உறுதி திருநெல்வேலி: 277 பேருக்கு கொரோனா உறுதி

இராணிப்பேட்டை: 272 பேருக்கு இன்று கொரோனா உறுதி தேனி மாவட்டம்: 261 பேருக்கு இன்று கொரோனா உறுதி

கன்னியாகுமரி: 248 பேருக்கு இன்று கொரோனா உறுதி விருதுநகரில் 244 பேருக்கு இன்று கொரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் இன்று 220 பேருக்கு கொரோனா உறுதி தூத்துக்குடி: 220 பேருக்கு இன்று கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டம்: 175 பேருக்கு இன்று கொரோனா உறுதி கடலூர் மாவட்டம்: 141 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திண்டுக்கல் மாவட்டம்: 138 பேருக்கு கொரோனா உறுதி புதுக்கோட்டை: 128 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருச்சியில் இன்று 118 பேருக்கு கொரோனா உறுதியானது


14 டிஎஸ்பி இடமாற்றம்

14 டிஎஸ்பி இடமாற்றம்


காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்யும்

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்யும்

வரும் நாட்களில் மகாராஷ்டிரா முதல் கேரளா வரையான மேற்கு கடற்கரை மற்றும் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை படி படியாக தீவிரமடையும். 2 ஆம் தேதி முதல் சற்று தீவிரமடைந்து பரவலாக மழையும் 4 ஆம் தேதி முதல் பரவலாக கனமழை முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு தெரிகிறது.

வரும் நாட்களில் கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் மழை வாய்ப்பு உள்ளது. 2 ஆம் தேதி முதல் மேலும் தீவிரமடைந்து பரவலாக மழையும். 4ஆம் தேதி முதல் பரவலாக கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உருவாகும். நீலகிரி முதல் குமரி வரையுள்ள மேற்குதொடர்ச்சி மலை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

காவேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வாய்ப்பு உள்ளதால் அணைகளுக்கு கணிசமாக நீர்வரத்து அதிகரிக்கும். ஹேரங்கி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க செய்யும். கபினி அணையின் நீரிருப்பு 80 சதவீதமாக உள்ளதால் 2, 3 நாட்கள் கனமழை முதல் மிக கனமழை பெய்தால் அணை நிரம்பி திறந்து விடப்பட்டும் நீர் நேராக தமிழகம் மேட்டூர் அணைக்கு வரும்.

எதிர்ப்பார்ப்பதை போல் மழை அமைந்தால் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் ஹேரங்கி அணையும், 10 ஆம் தேதிக்குள் கபினி அணையும், ஆகஸ்ட் இறுதிக்குள் கே.ஆர்.எஸ் மற்றும் ஹேமாவதி அணைகளும் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

General Knowledge :-

1. சிப்கோ (Chipko) இயக்கத்தை தொடங்கியவர் யார் ?

Answer: சுந்தர்லால் பகுகுணா

2. இந்தியாவில் 20-அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் ?

Answer: இந்திரா காந்தி

3. பார்வை நரம்பு உள்ள இடம் எது ?

Answer: விழித்திரை

General Knowledge :-

1. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது ?

Answer: நரி

2. முதன்முறையாக "இந்திய திருவிழா" நடைபெற்ற நகரம் எது ?

Answer: லண்டன்

3. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ?

Answer: ஜப்பான்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி வனிதா ஓவியக்கலையில் சாதனை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி வனிதா ஓவியக்கலையில் சாதனை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி வனிதா ஊரடங்கு காலத்தில் 300க்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். மேலும் மை பாட்டில், பல்ப்களில் வரைந்த வினிதா சுவர் ஓவியங்களையும் வரைய தொடங்கியுள்ளார். இவர் இதுபோன்ற பல சாதனைகளை பெற வாழ்த்துக்கள்

செய்தி வழங்குபவர்
விநாயகர் அன் கோ

பொன்னமராவதியில் கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள் மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் வழங்கனர்

பொன்னமராவதியில் கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள் மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் வழங்கனர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு தமிழ்க்கடவுள் முருகனை இழிவு படுத்தியவர்களை கண்டிக்கும் விதமாக பொன்னமராவதியில் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள் ஆகியவை வழங்கியும் இந்து முன்னனியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்விற்கு பாஜக தெற்கு ஒன்றிய தலைவர் சேதுமலையாண்டி மற்றும் இந்துமுன்னனி பொறுப்பாளர் ராஜா  ஆகியோர் தலைமைவகித்தனர். பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  பொன்னமராவதி பேருந்து நிலையம் அண்ணாசாலை பகுதியில் தமிழ்க்கடவுள் முருகனை இழிவுபடுத்தி வலைதளங்களில் பதிவிட்ட கறுப்பர் கூட்டம் போன்ற இந்து விரோத தீயசக்திகளை முறியடிக்க இந்துக்கள் ஒன்றுபடவேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பாஜக சார்பில் கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள், முகக்கவசம் ஆகியவை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. மேலும் இதில் இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன்,  பாஜக நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு சரவணன், பொருளாளர் ராஜ்குமார் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி நவமணி சண்முகம், ராம்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

தங்கம் விலை புதிய உச்சம் வெள்ளி விலை குறைவு.

தங்கம் விலை புதிய உச்சம் 
வெள்ளி விலை குறைவு. 

தங்கம் 
இன்று: 5103 (அதிகபட்ச விலை) 
நேற்று: 5075 

வெள்ளி 
இன்று: 71.20 
நேற்று: 71.80 

விநாயகர் அன் கோ,
பொன்னமராவதி.

இன்றைய பெட்ரோல் டீசல் விலை, நிலவரம்

இன்றைய பெட்ரோல் டீசல் விலை, நிலவரம் (தோராயமாக)

எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில்,

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளாகவும்,

 டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.78.86 காசுகளாகவும் உள்ளது. 

இந்த விலை இன்று (30.07.2020) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் அவர்களின் இந்தப்பாடல் இன்றும் பட்டி, தொட்டி, டிவிக்களில் பாடிக்கொண்டிருக்கிறது.

யார் கவிஞர்???

எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்

அந்த பாடல் ஆறுமனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு
என்ற இந்த  பாடல்

1.தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச்சுடும் (293)

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி....

2 .இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.(629)

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...

3. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால் தான்கண் டனைத்து இவ்வுலகு.(387)

உண்மையைச்சொல்லி நன்மையைச் செய்தால் உயிர்கள் உன்னை வணங்கும்.

4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது. (124)

நிலைத் திரியும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.

5. அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும் இழுக்காறு இயன்றது அறம். (35)

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்.

6அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. (80)

7. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை சேய்நன்றி கொன்ற மகற்கு.(110)

8. கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு. (571)

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனிதவடிவில் தெய்வம்..

இறைவன் அளித்த ஈடிணையில்லாக்கவிஞன் .

பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர் கப்கள் பேரூராட்சித் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது

பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர் கப்கள் பேரூராட்சித் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர் கப்புகள் ஆகியவை பயன்படுத்திய கடைவீதிகளில் பேரூராட்சி துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நாட்டுக்கல் பகுதிகளில் ரெய்டு நடத்தி பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 1000 வணிக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு வணிக உரிமையாளரிடம் இனிமேல் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்கமாட்டேன் என்று உறுதிமொழி எழுத்துமூலமாக பெறப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சிகளின்  திருச்சிராப்பள்ளி மண்டலம் பொறுப்பு உதவி இயக்குநர் பார்வையிட்டு செயல் அலுவலருக்கு அடிக்கடி ரெய்டு நடத்தி பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா பேரூராட்சியாக மாற்ற அறிவுரைகள் கூறினார்

பொன்னமராவதி அருகே31 வது நாளாக கொரோனா தடுப்பு பணிகளில் இளைஞர்கள்..

பொன்னமராவதி அருகே
31 வது நாளாக கொரோனா தடுப்பு பணிகளில் இளைஞர்கள்..

31வது நாளாக கொரோனா நிவாரனப்பணிகளில் தேவர் அம்மாபட்டி இளைஞர்கள்....

தேவர் அம்மாபட்டி இளைஞர்கள் சார்பாக 31வது நாளாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று தேவர் அம்மாபட்டி ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் மூலிகை கசாயம் வழங்கப்பட்டது.திருமலை நாகராஜன்
பொன்னமராவதி

General knowledge :-

. தமிழகத்தில் உள்ள மிக உயரமான அருவி எது ?

Answer: தலையாறு அருவி

2. டெண்ட்ராலஜி (Dendrology) என்பது எது தொடர்பான படிப்பு ?

Answer: மரங்கள்

3. நீரில் கரையாத வாயு எது ?

Answer: நைட்ரஜன்

Adutha ilakku - A career guidance program for 12th standard students.

To register visit: www.lmes.in

Adutha ilakku - A career guidance program for 12th standard students.

Online Live streaming on LMES Facebook page & Youtube Channel..! 

August 2nd | Sunday | 10:00 a.m onwards


Wednesday, 29 July 2020

நாடுமுழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்!

நாடு முழுவதும் இரவு நேர முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும்,

  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு தொடரும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

நாடுமுழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்!

ஆகஸ்ட் 5ம் தேதி முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூட்டங்கள் செயல்பட அனுமதி

பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை இயங்காது; திரையரங்கம், மதுக்கூடங்கள் செயல்பட தடை நீடிக்கும் -
 உள்துறை அமைச்சகம்

சுதந்திர தின விழா, தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற அனுமதி - உள்துறை அமைச்சகம்


மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், மெட்ரோ ரயில்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை தொடரும் - உள்துறை அமைச்சகம்

மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி; இ-பாஸ் தேவையில்லை  - உள்துறை அமைச்சகம்

65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும்  - உள்துறை அமைச்சகம்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை முழுமையாக கடைபிடிக்கப்படும்; கட்டுப்பாட்டு பகுதிகள் எவை என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யும் - உள்துறை அமைச்சகம்


சமூக இடைவெளியை கடைபிடித்து, கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - உள்துறை அமைச்சகம்
நாகர்கோவில் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் பதுங்கிய பாம்பு

நாகர்கோவில் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் பதுங்கிய பாம்பு

நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துகோணம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு பில்லர் போடுவதற்கு குழி தோண்டி வேலை நடந்து வருகிறது. வழக்கமாக வேலை செய்ய காலையில்  சென்றபோது பில்லருக்காக தோண்டி குழியில் பாம்பு இருப்பதை பார்த்து உள்ளார். உடனே நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள்  விரைந்து சென்று  குழியில் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன்  பிடித்தனர். பிடிபட்ட நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.பொன்னமராவதி ஒன்றியம் மேலைச்சிவபுரி ஊராட்சியில் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் இன்று " கபசுரகுடிநீர் " வழங்கப்பட்டது

பொன்னமராவதி ஒன்றியம் மேலைச்சிவபுரி ஊராட்சியில் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.மீனாள் அயோத்திராஜா அவர்கள் முன்னிலையில் மேலைச்சிவபுரி முத்து மாரியம்மன் யாகசாலை கல்யாண கொட்டகை பந்தல் அமைப்பாளர் திரு.அ.முத்து அவர்கள் தலைமையில் இன்று " கபசுரகுடிநீர் " வழங்கப்பட்டது . உடன் தலைவரின் நண்பர் குழு .

 

திருமலை நாகராஜன்
பொன்னமராவதி

பொன்னமராவதி உள்ள வாகன சோதனை சாவடியில் கிருமிநாசினி தெளிக்கும்..நம் உயிர் காக்கும் தூய்மைப் பணியாளர்கள்...

பொன்னமராவதி உள்ள வாகன சோதனை சாவடியில் கிருமிநாசினி தெளிக்கும்..நம் உயிர் காக்கும் தூய்மைப் பணியாளர்கள்...!!

திருமலை நாகராஜன்
பொன்னமராவதி

பொன்னமராவதி அருகே உள்ள காயாம்புஞ்சை VDKM நகர் பகுதிகளின் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

பொன்னமராவதி அருகே உள்ள காயாம்புஞ்சை VDKM  நகர் பகுதிகளின் கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்களின் இல்லங்கள் தனிமை படுத்துதல் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் பொன்னமராவதி சுகாதார ஆய்வாளர் திரு தியாகராஜன் அவர்களும் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உதவியோடு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது..!!
திருமலை நாகராஜன்
பொன்னமராவதி

11-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணாக்கர்கள், தனித்தேர்வர்களுக்கு 31.7.2020 அன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

11-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணாக்கர்கள், தனித்தேர்வர்களுக்கு 31.7.2020 அன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

மாணாக்கர்கள், தனித்தேர்வர்கள் அவரவர் பயின்ற பள்ளிகளில் வழங்கியுள்ள கைப்பேசி எண்ணிற்கு SMS மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களின் சேவையினை பாராட்டி ஊராட்சி மன்றம் கவுரவிப்பு...

பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களின் சேவையினை பாராட்டி ஊராட்சி மன்றம் கவுரவிப்பு...  

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம்  ஒலியமங்கலம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களாக ஏழு தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊராட்சியின் தூய்மைப் பணியை மேற்கொள்வதில் தங்களது சிறப்பான சேவையை வெளிப்படுத்தி வரும் இவர்கள் ஒலியமங்கலம் ஊராட்சியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களது உயிரையும் துச்சமென மதித்து ஒவ்வொருநாளும் கிருமி நாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், கழிவுகளை அகற்றுதல், உள்ளிட்ட தூய்மைப் பணிகளை சிறந்த முறையில் செய்து வருகின்றனர். அவர்களின் சிறந்த சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் ₹1000 வீதம் 25 கிலோ அரிசிப்பை  (மொத்த மதிப்பு-₹7000) இன்று 29.07.2020 ஊராட்சி மன்ற நிர்வாகிகள்தங்களது சொந்த செலவில் வழங்கினர். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. சி.சோலையம்மாள் அவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு.ப.சுரேஷ் அவர்கள்,  ஊராட்சி மன்ற செயலர் திரு.கணேஷ் அவர்கள் மற்றும் அனைத்துவார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..

திருமலை நாகராஜன்
பொன்னமராவதி

General Knowledge :-

1. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?

Answer: ஜப்பான்

2. இந்தியாவில் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?

Answer: அன்னை தெரசா

3. நதிகள் இல்லாத நாடு எது ?

Answer: சவூதி அரேபியா

புதுகை மாவட்ட தங்கம் & வெள்ளி மாலை நிலவரம்

புதுகை மாவட்ட தங்கம் & வெள்ளி மாலை நிலவரம்

தேதி : 29-07-2020 

தங்கம் - 5075
வெள்ளி - 71.80


விநாயகர் அன் கோ
பொன்னமராவதி

பிரான்ஸிடம் இருந்து வாங்கிய 5 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...

பிரான்ஸிடம் இருந்து வாங்கிய 5 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன...

* ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரையிறங்கின.

* ரபேல் விமானங்களை விமான படைத் தளபதி திரு ராகேஷ் பதோரியா அவர்கள் முறைப்படி வரவேற்றார்.

* தண்ணீரை பீய்ச்சி அடித்து ராஜ மரியாதையுடன் ரஃபேல் விமானங்களுக்கு வரவேற்பு.

* பிரான்ஸில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியா வந்தடைந்தன.

* 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய விமான படைக்கு இறக்குமதியான போர் விமானங்கள்.

* 1997 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய்-30 போர் விமானங்கள் இந்திய படையில் சேர்க்கப்பட்டன.

* 23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ராணுவ வரலாற்றில் மற்றொரு மைல்கல் நிகழ்வு.

* தங்க அம்புகள் என்ற படை பிரிவில் புதிய ரஃபேல் விமானங்கள் இயங்க உள்ளன.

* கேப்டன் திரு ஹர்கிரத் சிங் அவர்கள் தலைமையிலான இந்திய விமானிகள் ரஃபேல் விமானங்களை இயக்கி தாயகம் எடுத்து வந்தனர்.

* ரஃபேல் ஒப்பந்தத்தை இறுதி செய்த ராகேஷ் பதோரியா பெயரின் முதல் எழுத்துக்களை கொண்டு ஆர்.பி 001 என பெயர் சூட்டல்.

ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் இறங்கியது ரஃபேல் போர் விமானம்!!

ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் இறங்கியது ரஃபேல் போர் விமானம்!!

ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள்...


ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள்...

> பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தயாரிப்புதான் ரஃபேல் போர் விமானம்.

> எதிரிகளின் ரேடார் கண்களுக்கு தெரியாத அளவுக்கு விசேஷ வடிவமைப்பு கொண்டது.

> இதன் அசாத்திய வேகமும், இதனை கண்டறிவதும், தாக்குவதும் மிகவும் சவாலாக இருக்கும்.

> ரஃபேல் போர் விமானங்கள் ஏர் சுப்பீரியாரிட்டி என்ற வகையை சேர்ந்தது. அதாவது, வானிலிருந்து தரை தாக்குதல்கள், வான் இலக்குகளை தாக்கும் என்பதுடன், எதிரி நாட்டு வான் பகுதியையும் கட்டுப்பாட்டில் எடுக்கும் திறன் வாய்ந்தது.

> எதிரி நாடுகளுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும். தற்போது நம்மிடம் இருக்கும் ஏர் சுப்பீரியாரிட்டி ரகத்தை சேர்ந்த சுகோய் எஸ்யூ- 30எம்கேஐ விமானத்தை விட இலகு எடை கொண்டதுடன், அதிசக்திவாய்ந்த விமானம்.

> ஏர் சுப்பீரியாரிட்டி போர் விமானங்களில் இருக்கும் சாதாரண ஏவுகணைகள் 37.04 கிமீ தூரத்துக்கும் அப்பால் உள்ள வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இந்த விமானங்களில் இருக்கும் நவீன ரேடார் கருவிகள் மூலமாக, எதிரியின் வான்பகுதியை எளிதாக கண்காணித்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

> ரஃபேல் விமானத்தை வாங்குவது ஒரு பக்கம் பலம் என்பதுடன், அதனுடன் சேர்த்து வாங்கப்படும் இரண்டு ஏவுகணைகள் அண்டை நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆம், ரஃபேல் விமானத்தை இயக்கும் போர் விமானிகளுக்கு இஸ்ரேல் நாட்டின் அதிநவீனமான திரையுடன் கூடிய ஹெல்மெட்டும் சேர்த்து வழங்கப்படும்.

> அதேபோன்று, ரஃபேல் விமானத்தில் பொருத்துவதற்கான மீட்டியோர் என்ற ரகத்தை சேர்ந்த அதிநவீன ஏவுகணைகளும் வாங்கப்படுகிறது. ஐரோப்பாவை சேர்ந்த எம்பிடிஏ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மீட்டியோர் ஏவுகணைகள் கண்ணுக்கு புலப்படாத 100 கிமீ தூரத்துக்கும் அப்பால் உள்ள வான் இலக்குகளை துல்லியமாக அடிக்கும்.

> விமானத்திலிருந்து 560 கிமீ தூரத்தில் இருக்கும் தரை இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய என்ற அதிநவீன ஏவுகணைகளும் சேர்த்து வாங்கப்படுகிறது. எதிரி நாட்டு வான் பகுதியில் நுழையாமலேயே, அங்குள்ள இலக்குகளை துல்லியமாக அடிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

> ரஃபேல் விமானத்தின் மிக முக்கிய திறன்களில் ஒன்று. அணுகுண்டுகளையும் எடுத்துச் சென்று எதிரிகளின் இலக்குகளை துவம்சம் செய்யும் ஆற்றல் பெற்றது. இதனால், எதிரி நாடுகள் தயக்கத்துடனே இந்த விமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

> பைலட்டுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக விமானத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி உள்ளது. எந்த ஒரு சூழலிலும் பைலட்டின் கவனம் சிதறாமலும், உடல் பாதிப்பு இல்லாமலும் எதிரிகளின் எல்லைக்குள் புகுந்து விளையாடலாம்.

> ரபேல் போர் விமானம் 15.30 மீட்டர் நீளம், 10.90 மீட்டர் அகலம், 5.30 மீட்டர் உயரம் கொண்டது. எதிரியின் ரேடார் கண்களிலிருந்து எளிதாக தப்பும் வகையிலான வடிவமைப்பு அம்சங்களை கொண்டது.

> ரபேல் போர் விமானத்தில் ஸ்நெக்மா எம்-88-2 டர்போஃபேன் என்ற இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து காலநிலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். மேலும், ஒற்றை எஞ்சின் போர் விமானங்களை விட இது பாதுகாப்பு அதிகம் கொண்டது.

இந்த விமானத்தில் முப்பரிமான நிகழ்நேர வரைபடத்தை பெறும் வசதி இருப்பதால், இலக்குகளை சரியாக குறிவைத்து தாக்குதல் நடத்த முடியும். அனைத்து தட்பவெப்ப நிலையிலும் துல்லியமான வரைபடத்தை பெற முடியும்.

> சுகோய் எஸ்யூ 30எம்கேஐ விமானத்தைவிட இது எடை மிகவும் குறைந்தது. எனவே, ஒருமுறை முழு எரிபொருள் நிரப்பினால் 3,700 கிமீ தூரம் வரை பயணிக்கும். அதாவது, எதிரிகளின் பகுதிகளுக்குள் அதிக தூரம் பயணித்து திரும்பும் ஆற்றல் கொண்டது.

> மணிக்கு 2,130 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டது. இயல்பாக மணிக்கு 1,912 கிமீ வேகம் வரை செலுத்த முடியும். எனவே, இதனை ஏவுகணைகளை வீசி தாக்குவது என்பதும் சவாலானதாகவே இருக்கும்.

> மூன்று மாடல்களில் தயாரிக்கப்படுகிறது. ரபேல் சி என்ற சிங்கிள் சீட்டர் மாடலும், ரபேல் பி என்ற 2 சீட்டர் மாடலும் விமானப்படையின் தரை தளங்களிலிருந்து பயன்படுத்தும் வசதியுடனும், ரபேல் எம் என்ற மற்றொரு சிங்கிள் சீட்டர் மாடல் விமானம் தாங்கி கப்பல்களுக்கு ஏற்றதாக தயாரிக்கப்படுகிறது. அதாவது, குறைவான தூரத்தில் நிறுத்துவதற்கு ஏதுவான கொக்கி அமைப்பை கொண்டிருக்கும்.

> இந்திய விமானப் படையில் ரஷ்யாவின் சுகோய் 30 ரக விமானங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆனால், அவற்றைவிட இந்த நான்காம் தலைமுறை ரபேல் விமானம் கூடுதல் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒரு ரபேல் விமானம் இரண்டு சுகோய் 30 விமானங்களுக்கு சமமானதாக இருக்கும் என்று விமானப் படை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

> அண்டை நாடுகளால் இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சமாளிக்க குறைந்தது ரபேலுக்கு இணையான 44 போர் விமானங்கள் தேவைப்படுகிறதாம். இந்த நிலையில், இந்தியா வாங்கும் 36 ரபேல் போர் விமானங்கள் மூலம் நம் நாட்டின் வான் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்கின்றனர்.

> தற்போது பயன்பாட்டில் இருக்கும் மிக்-21 மற்றும் மிக்- 27 ஆகிய போர் விமானங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து, விமானப்படையின் பலத்தை அதிகரிப்பதற்கு, ரஃபேல் போன்ற அதிநவீன பல் செயல்திறன் கொண்ட போர் விமானங்களை அவசரமாக சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

> குறிப்பாக, எல்லைகளில் அண்டை நாடுகளின் வாலாட்டும் போக்கை கட்டுப்படுத்த ரஃபேல் போர் விமானங்கள் துணை நிற்கும் என்று நம்பலாம்.

> 36 ரஃபேல் போர் விமானங்களை வைத்து இரண்டு விமானப் படை பிரிவுகள் உருவாக்க முடியும். வடக்கு மற்றும் வடகிழக்கு மாநில எல்லையோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த ரஃபேல் போர் விமான படைப்பிரிவுகள் செயல்படும்.மாண்புமிகு அம்மாவின் அரசு நீர் நீலைகளைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.

தமிழக அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகள், தூர் வாரும் பணிகளால், "ஆர்ப்பரித்து வரும் கடல் போல நீர் நிலைகள்" காட்சியளிப்பதை காணும் போது உள்ளம் மகிழ்கிறது.

மாண்புமிகு அம்மாவின் அரசு நீர் நீலைகளைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.

- முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ட்வீட்

அரசுடமையாக்கப்பட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நான்கு கிலோ 372 கிராம் தங்கம் உள்ளது.

அரசுடமையாக்கப்பட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நான்கு கிலோ 372 கிராம் தங்கம் உள்ளது.

போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமை ஆக்கியதற்கான அரசாணையில் தகவல்.

601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்பட மொத்தம்  32,721 பொருட்கள் உள்ளன - தமிழக அரசு.

ஜெயலலிதா வீட்டில் 38 ஏசி, 11 டிவி,10 பிரிட்ஜ் ஆகியவை உள்ளன - தமிழக அரசு.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆக. 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு-மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆக. 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு-மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.

ஆகஸ்ட் 31 வரை வாரத்தில் 2 நாட்கள் ஊரடங்கு அமல் - மம்தா பானர்ஜி.

ஆக. 1 பக்ரீத் தினத்தில் ஊரடங்கு இல்லை என அறிவிப்பு.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 மீறி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


அரசு மருத்துவமனையில்தான் பிரசவம் நடக்க வேண்டும் என்ற மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய அதிமுக எம்.எல்.ஏ

அரசு மருத்துவமனையில்தான் பிரசவம் நடக்க வேண்டும் என்ற மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய அதிமுக எம்.எல்.ஏ

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.நாகராஜன் & சிவசங்கரி தம்பதிகளுக்கு 16 ஆண்டுகளுக்கு பின் உருவான குழந்தைக்கு ஆரம்பம் முதல் அரசு சுகாதார மையத்தில் பரிசோதனைகளை தொடர்ந்த சிவசங்கரிக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில்  பிரசவம் நடைபெற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.


31ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு

31ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு

நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

12ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிப்பு

- தமிழக பள்ளிக்கல்வித்துறை

ஏர்வாடி தர்கா அருகே கோல் அளவு சொல்லும் 16-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஏர்வாடி தர்கா அருகே கோல் அளவு சொல்லும் 16-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே உள்ள ஏரான்துறை என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கி.பி.16ஆம் நாற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் அரபி எழுத்துகள் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறை கஞ்சிப்பள்ளி பகுதியில் உள்ள தோப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக முத்தரையர் நகர் செல்லம் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளருமான வே.ராஜகுரு அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறையிலுள்ள தோப்பில் 6½ அடி உயரம் 1½ அடி அகலம் உள்ள ஒரு கடற்கரைப் பாறையால் ஆன ஒரு தூண் உள்ளது. இதன் இரு பக்கமும் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு பக்கத்தில் தமிழ் கல்வெட்டும் மறுபக்கத்தில் பெரிய அளவிலான சில அரபி எழுத்துகளும் குடுவை போன்ற ஒரு குறியீடும் உள்ளன. அரபி எழுத்துகள் உள்ள தூணின் பின்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

20 வரிகள் கொண்ட தமிழ்க் கல்வெட்டில், பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால், இக்கல்வெட்டு பற்றிய முழுமையான தகவல்களை அறியமுடியவில்லை. எனினும் இதில் உள்ள நாயகத்து போன்ற சில சொற்கள் மூலம், இக்கல்வெட்டு ஏர்வாடியில் உள்ள செய்யது இபுராகிம் பாதுஷா நாயகம் தர்காவுக்கு நிலதானம் வழங்கப்பட்டதாக இருக்கும் என ஊகிக்கலாம். தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் அளவுகள் இதில் சொல்லப்பட்டுள்ளது.

கீழ் மேல் கோல் முப்பத்தாறரை, தென் கீழை கல்லுக்கு மேற்குக்கு மேல் கோல் பதின்மூன்று, தென் வடல் கோல் அஞ்சு ஆகிய அளவுகள் கல்வெட்டில் உள்ளன. மற்ற அளவுகள் அழிந்துள்ளன. இதில் முப்பத்தாறரை, பதிமூன்று, அஞ்சு ஆகிய கோல் அளவுகள் சொல்லப்பட்டுள்ளன. துல்லியமான அரைக்கோல் அளவும் இதில் கூறப்பட்டுள்ளது. எண்களை எழுத்தால் எழுதியுள்ளனர். எண் குறியீடுகள் பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக 1 கோல் என்பது 16 சாண் அளவுகள் ஆகும். பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் சுந்தரபாண்டியன் கோல், வீரபாண்டியன் கோல் போன்ற கோல் அளவுகள் வழக்கில் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டில் நிலஅளவுகள் சொல்லும்போது இரு நபர்களின் பெயரில் உள்ள இரு கொத்துத் தெங்குகள் குறிப்பிடப்படுகின்றன. தெங்கு என்பது தென்னை மரத்தையும் கொத்துத் தெங்கு என்பது தென்னந்தோப்பையும் குறிக்கிறது. தற்போதும் கேரளா மற்றும் இலங்கையில் தென்னையை தெங்கு என்றுதான் அழைக்கிறார்கள் என்பது கவனத்துக்குரியது. மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியான இங்கு பல நூற்றாண்டுகளாக தென்னந்தோப்புகள் இருந்து வருவதை இதன்மூலம் அறிய முடிகிறது.

கல்வெட்டில் நில அளவுகளின் எல்லை குறிப்பிடும்போது கீழைக் கல் என ஒரு சொல் வருகிறது. இது கடற்கரை வழியாக கீழக்கரை செல்லும் பாதையின் வழி காட்டும் கல்லாக இருக்கலாம். இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதை கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான டீ கப் வடிவிலான ஒரு பொந்தன்புளி மரம் உள்ளது. இதை பப்பாரப்புளி என்கிறார்கள். இம்மரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா ஆகிய இடங்களை பூர்வீகமாகக் கொண்ட இம்மரங்கள், அரேபிய வணிகர்களால் ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளது. இம்மரத்தை இப்பகுதி மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மலைப்பாம்பு பிடியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழப்பு...!

திருப்பத்தூர்: மலைப்பாம்பு பிடியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழப்பு...!

திருப்பத்தூர் அருகே மலைப்பாம்பு பிடியில் சிக்கிய புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே பிள்ளையார்பட்டி பைரவர் கோவில் அருகே, ஏராளமான புள்ளிமான்கள், மலைப்பாம்புகள் போன்ற வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், புள்ளி மான்குட்டி ஒன்றை மாலைப்பாம்பு பிடித்து விழுங்க முயற்சித்துள்ளது. இதைப்பார்த்த அவ்வழியே சென்றவர்கள் உடனே திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் மானை மலைப்பாம்பிடம் இருந்து மீட்டனர். பின்னர் மானுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மான் உயிரிழந்தது.

இதனை அடுத்து வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டுச் சென்றனர்.

லாக்டவுனை நீடிக்கலாமா? வேண்டாமா - மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை.

லாக்டவுனை நீடிக்கலாமா? வேண்டாமா - மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை.

மாவட்டவாரியாக கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் பற்றி முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை.

வியாழக்கிழமை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் பழனிச்சாமி.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

திருச்சி, நாகை, தஞ்சை, கரூர் மாவட்டங்களில் கனமழை.

நாமக்கல், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை.

பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடியவுள்ள நிலையில், டெல்லி 7, லோக் கல்யாண் மார்க் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

ரஃபேலை இயக்கிய முதல் இந்திய விமானி ஹிலால் அகமது: யார் இவர்?

ரஃபேலை இயக்கிய முதல் இந்திய விமானி ஹிலால் அகமது: யார் இவர்?

பிரான்ஸ் நாட்டிலுள்ள டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பிலான 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த 36 விமானங்களும் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

முதற்கட்டமாக 2020 மே இறுதியில் 5 ரஃபேல் போர் விமானங்கள் வரும் என முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இரண்டு மாதங்கள் தாமதமாக இந்தியாவுக்கு வருகின்றன. இந்த விமானங்கள் இன்று ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்திற்கு வந்தடையும். மீதமுள்ள விமானங்கள் ஆகஸ்ட் மாதம் வர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த 24 விமானிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரான்ஸ் விமானப் படையில் உள்ள ரஃபேல் விமானம் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். ரஃபேல் இந்தியாவுக்கு வரும் நேரத்தில் காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் ஏர்காமோடர் ஹிலால் அகமது ரதார். அதிநவீன ரஃபேல் விமானத்தை ஓட்டிய முதல் இந்திய விமானி இவராவார். பள்ளிப்படிப்புக்கு பிறகு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்ற இவர், 1988ம் ஆண்டு இந்திய விமானப்படையில் ஃபிளைட் லெப்டினெண்டாக சேர்ந்தார். 2019ல் ஏர் கமோடராக பதவி வகித்தார்.

ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்துடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர் எனக் கூறப்படுகிறது. இந்திய சூழலுக்கு ஏற்ப விமானத்தில் மாற்றங்களை செய்யவும், ஆயுதங்கள் பொருத்தப்படுவதற்கான தொழில்நுட்பத்திலும் இவர் டசால்ட் நிறுவனத்திற்கு உதவியாக இருந்தார் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவிற்கு விமானங்கள் வழியனுப்பி வைக்கப்பட்ட அன்று இந்தியதூதருடன் ஹிலால் அகமது ரதாரும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

2020-21ஆம் கல்வியாண்டில், மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, நெல்லை ஆகிய ஐந்து மண்டலங்களிலும் உள்ள கல்லூரிகளின் பெயர், அனுமதிக்கப்பட்ட இடங்கள், பொறியியல் மாணவர் சேர்க்கை குறியீட்டு எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன்  2019-20ஆம் கல்வி ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்த  விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

https://www.annauniv.edu/cai/Options.php என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பித்தும் இப்பட்டியலில் இடம் பெறாமல்  உள்ள சில கல்லூரிகள்  வரும் 15ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களை அளித்தால் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மிஞ்சிய வண்டலூர் புதிய பேருந்து நிலையம்.. அசர வைக்கும் புதிய வரைபடம் வெளியானது.!

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மிஞ்சிய வண்டலூர் புதிய பேருந்து நிலையம்.. அசர வைக்கும் புதிய வரைபடம் வெளியானது.!

வண்டலூர் அருகே ரூ.309 கோடியில் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தின் முழு வரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் புது புறநகர் பேருந்து நிலையம் அமைக்க கடந்த 2013-ல் ஆண்டு தமிழக அரசு திட்டமிட்டது.

இந்த பேருந்து நிலையம் சுமார் 88.52 ஏக்கரில் நிலப்பரப்பில் ரூ. 309 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் 7.4 ஏக்கரில் 13 பிளாட்பார்ம்களுடன் மாநகர பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது

82 மாநகர பேருந்துகள் ஒரே நேரத்தில் வந்து செல்லும் வகையில் 13 பிளாட்பாரங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும் 1100 கார்களும் 2798 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும் அமைகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 2,700 அரசு விரைவு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தினமும் 75 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளது.

பயணிகள் தங்களின் உடமைகளை எளிதாக எடுத்துச் செல்வதற்காக நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட உள்ளன.

மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை, முதலுதவி மையம், மருந்தகம், டிரைவர்கள்-கண்டக்டர்களுக்கான ஓய்வு அறை, பயணிகள் காத்திருப்பு அறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட உள்ளன. ஆட்டோ, கால் டாக்சி வாகனங்கள் நிறுத்தவும் தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வண்டலூரில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தின் வரைப்படம் வெளியாகியுள்ளது

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன்!

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜபாளையம் தொகுதி, திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் குணமடைந்து வீடு திரும்பினார்.

விருதுநகர் மாவட்டம்,  ராஜபாளையம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கப்பாண்டியன். இவர் திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம்  தன் தொகுதியில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தார்.

இந்நிலையில், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் சில அறிகுறிகள் காணப்பட்டது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், எம்.எல்.ஏ. மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் தங்கப்பாண்டியன் மீண்டும் தனது ரத்த மாதிரியைப் பரிசோதனைக்கு அனுப்பினார். அதில்  தங்கப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த தங்கப்பாண்டியன்  மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து தங்கப்பாண்டியனிடம் கேட்டபோது, ‘’ஜூலை 14-ஆம் தேதி, எனது ரத்த மாதிரியைப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தேன். ஏழு நாட்களுக்குப் பிறகே ரிசல்ட் வந்தது. ஜூலை 22-ம் தேதி கொரோனா ‘பாசிடிவ்’ என ரிசல்ட் வந்தது. இதையடுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்து, தற்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன். தலைவர் ஸ்டாலின் தினமும் எனது உடல்நலனை கேட்டறிந்தபடியே இருந்தார்.’’ என்றார் அவர்

General Knowledge :-

1. கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ?

Answer: 1593-ஆம் ஆண்டு

2. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி எது ?

Answer: பிரம்மபுத்திரா

3. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது ?

Answer:  பிரேசில்

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது என அரசிதழில் வெளியீடு

   ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது என அரசிதழில் வெளியீடு

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளது

அரசுடைமையாக்கும் வகையில் ஏற்கனவே சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டது


இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னை:


 பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.86-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பொறியியல் இறுதியாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்

பொறியியல் இறுதியாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்

பொறியியல் இறுதியாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டம் செய்துள்ளது. ஆன்லைன் தேர்வு நடத்துவதற்கான மென்பொருளை தயாரிப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

செல்போனில் விளையாடும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்; இணையதள சூதாட்டத்தில் ஒருவர்கூட ஜெயிக்க முடியாது: முன்னாள் காவல் துறை அதிகாரி கலியமூர்த்தி தகவல்

செல்போனில் விளையாடும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்; இணையதள சூதாட்டத்தில் ஒருவர்கூட ஜெயிக்க முடியாது: முன்னாள் காவல் துறை அதிகாரி கலியமூர்த்தி தகவல்

இணையதள சூதாட்டத்தில் ஒருவர் கூட ஜெயிக்க முடியாது என்று ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் (20), காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 

டாட்டூ போடும் தொழிலை பகுதி நேரமாகவும் செய்து வந்துள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ளதனியார் டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். நேற்று முன் தினம் தான் பணி செய்த கடைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இணையதளம் மூலம் சூதாடி பணம் சம்பாதிக்க நினைத்த நிதிஷ்குமார், பகுதிநேர வேலை பார்த்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

தங்கம் விலை புதிய உச்சம் வெள்ளி விலை குறைவு.

தங்கம் விலை புதிய உச்சம் 
வெள்ளி விலை குறைவு. 

தங்கம் 
இன்று: 5064 (அதிகபட்ச விலை) 
நேற்று: 5037 

வெள்ளி 
இன்று: 71.30 
நேற்று: 72.90 
விநாயகர் அன் கோ
பொன்னமராவதி

அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!!

அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!!


புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சங்கத் தலைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியருமான டாக்டர் க. ஆறுமுகம் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான  ( Head light ,Light source with Fibro optic cable for ENT OPERATION) தலை ஒளி அமைப்புடன் கூடிய கண்ணாடி நார் இழை    தொடர்புடன் கூடிய  காது மூக்கு தொண்டை  அறுவை சிகிச்சை உபகரணம் வழங்க அதை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் அழ.மீனாட்சிசுந்தரம் பெற்றுக்கொண்டார் நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் ப.செல்லத்துரை கலந்து கொண்டனர். 

கடல் கடந்து இலவச கலை!

அன்பான இனிய காலை வணக்கம் இன்று(29-7-2020) தினமணி மகளிர்மணி பகுதியில்  பொ.ஜெயச்சந்திரன் எடுத்த ஒரு சிறிய பேட்டி வந்துள்ளது படிப்பதற்கு வசதியாக பதிந்துள்ளேன் நன்றி-   
        
                        கடல் கடந்து இலவச கலை! 

நடனக்கலையின் எல்லா அம்சங்களையும் உங்வாங்கிக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி மாசிலன் இவர்இலங்கை தென்மராட்சியில் நாதஸ்வர இசைப்பாரியம் மிக்க பரம்பரையின் 5-வது தலைமுறையான கஸ்தூரி மாசிலன் ஈழத்தின் மூத்த பெருங்கலைஞரான பிரபல நாதஸ்வர இசைக்கலைஞர் கலாநிதி பஞ்சாபிகேஷனின் பேத்தி(மகளின் மகள்) என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்தோடு ஈழத்தில் முதல் முதல் ஜோடி நாதஸ்வரம் வாசித்து புரட்சியை ஏற்படுத்தி ஒரு மரபை தோற்றுவித்தவரும், பல்லவி சுரம் வாசிப்பதில் இவருக்கு நிகர் இவரே என பலராலும் பாராட்டு பெற்றவருமான பிரபல நாதஸ்வர இசைமேதை சண்முகம்பிள்ளையின் பேத்தியும் (மகனின் மகள்) இலங்கையில் பிறந்து தற்போது பின்லாந்து நாட்டில் வசிக்கிறார். அந்நாட்டில் பரதகலா என்ற நடனக்குழுவின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளராக இருக்கிறார். இவருடைய முக்கிய சிறப்பு என்னவென்றால் எழுத்தாளர், இசைக்கருவி வித்வான், நடனக்கலைஞர் போன்ற பன்முகத்தன்மையும், பலத்தரப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கலைப்பயிற்சிகளையும் வழங்கி வருகிறார் இவரிடம் பேசியதிலிருந்து- 

இலங்கையில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி ஒரு பகுதியாகும். அத் தென்மராட்சி பிரதேசத்தில் அமைந்த நகரம் சாவக்கச்சேரி அது தான் எனது சொந்த ஊர். சங்கத் தானை சோலைகள் அதிகம் கொண்ட எனது ஊரில் எப்பவும் ஒரு குளிர்ச்சியை உணரலாம். சாவக்கச்சேரியில் அறிஞர்கள், கவிஞர்கள், கலைத்துறையினர், கைவினையாளர்கள் என எல்லாவிதமான மக்களையும் காணலாம். இங்கு தான் வரலாற்று சிறப்பு பெற்ற வாரிவனநாதபுரம் என்னும் சிவன் கோயில் உள்ளது. அத்தோடு நுணாவில் ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம், பெருங்குளம் வீரசக்தி விநாயகர் கோயில், மீசாலை சோலை அம்மன் கோயில் எனப்பல சிறப்பு பெற்ற தலங்கள் விளங்குகின்றன. 

சாவக்கச்சேரியில் புகழ்பெற்ற பாடசாலையில் ஒன்றான இந்துக்கல்லூரியில் எனது பாடசாலைக் கல்வியை மேற்கொண்டேன். வட இலங்கை சங்கீத சபையால் நடாத்தப்படும் பரதநாட்டியத்தில் ஆசிரியர் தராதர சித்திபெற்றமையால் பரத கலா வித்தகர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண தேசியக்கல்வியியல் கல்லூரியின் 3ஆண்டு ஆசிரியப் பயிற்சியின் பின்னர் டிப்ளமோ இன் டான்ஸ் என்ற பட்டத்தையும், அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேற்படிப்பை படித்து பி.ஏ(ர்ழளெ) பட்டதாரியாகவும் ஆனேன். அத்தோடு நர்த்தனம், பரதநிருத்தம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய நூல்களை வெளியிட்டேன். 

கொழும்பு விவேகானந்தா தேசிய பாடசாலையில் 2004-2008 5வருட காலமும் கொழும்பு இந்துக்கல்லூரியில் 1வருட காலமும் ஆசிரிய பணியை மேற்கொண்டேன். இரு கல்லூரியிலும் பணிபுரியும் காலத்தில் இந்து கலாச்சார அமைச்சினால் கொழும்பு கதிரேச மண்டபத்தில் நடைபெற்ற நவராத்திரி கலைவிழாவில் நவசக்தி, பொம்மலாட்டம் மற்றும் கிராமிய கலைக்கதம்பம் போன்ற நிகழ்ச்சியை வழங்கியதற்காக பாராட்டுப்பட்டு பணமுடிச்சு கிடைக்கப்பெற்றேன். 

இந்துக்கல்லூரியில் நாட்டிய ஆசிரியராக இருந்த காலத்தில் சக்தி மற்றும் ரூபவாகினி  தொலைக்காட்சியில் பல நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கியதற்காக பாராட்டுப் பெற்றேன். நாட்டிய நிகழ்வுகளுக்காக 2006ல் இந்துமாமன்றத்தினராலும், 2007ல் கொழும்பு தமிழ்ச்சங்கத்தினராலும் சிறப்பு விருதுகளைப் பெற்றேன். 

கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஆழ்கடலில் ஒரு முத்து என்ற பாராட்டுப் பெற்றேன். 2010ம்ஆண்டுக்குப் பிறகு பின்லாந்து நாட்டில் பினிஷ்மொழியில் கற்பிக்கும் ஒரு ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்தேன். இதன் தொடர்ச்சியாக இந்நாட்டில் பரதகலாமன்றம் என்ற நடனப்பள்ளியை நிறுவி பினிஷ்மொழியில் பரத நாட்டியத்தை கற்பிக்கிறேன். 

இப்பள்ளியில் பின்லாந்து, ரஷ்யா, இந்தியா, இலங்கை மாணவர்கள் பயிற்சியை மேற்கொள்கின்றனர். இதையும் தாண்டி என்னுடைய வாழ்க்கையில் இலவசமாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அதற்கு தகுந்தாற்போல பரதம், பாடல் போன்றவைகளை கற்றுக்கொடுக்க வேண்டும் எண்ணம் தானாகவே தோன்றியது அதனால் யாராவது தனிப்பட்ட முறையில் என்னுடைய குழந்தைகளுக்கு கலையை கற்றுக் கொடுங்கள் என்று சொன்னால் போதும் எந்த நேரமும் பார்க்காமல் அதற்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பேன். 

இதையும் தாண்டி கொழும்பில் அமைந்துள்ள பொன்னம்பலவாணேசுவரர் கோயிலில் இலவசமாக நடன வகுப்புகளை எடுத்தேன். அதோடு அறநெறி பாடசாலைகளிலும் இலவச வகுப்புகள் எடுத்துள்ளேன். அது மட்டுமின்றி என்னுடைய நடன நூல்களை கேட்கும் மாணவர்களுக்கு இலவசமாக கொடுப்பேன். இலங்கையிலோ அல்லது பின்லாந்திலோ எந்த மாணவர்களிடம் மாதத்தோறும் பணம் கேட்டுப் பெறுவதில்லை அவர்களாக எதாவது கொடுத்தால் அதையும் வாங்கி கோயில் பணிகள் போன்றவற்றுக்கு கொடுத்துக் கொண்டே வருகிறேன். பின்லாந்து நாட்டில் இடம்பெற்ற பல கலாச்சார நிகழ்வில் பின்லாந்து நாட்டு பினிஷ்மக்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டேன். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 5-8-2017ம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது பன்னாட்டு மாநாட்டில் எனது நாட்டிய நிகழ்வு சிறப்பு நிகழ்வாக இடம் பெற்று பலரது பாராட்டைப் பெற்றது. மிக முக்கியமாக எங்கள் நடனங்களில் சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை அழகாகப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறோம். 

பார்வையாளர்களின் ரசனையும், சிந்தனைகளையும் மேம்படுத்துவதைக் கலைஞர்களின் கடமையாக நினைக்கிறேன். மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. அந்தத்தக் கால கட்டங்களுக்கு ஏற்ப, பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் மாற்றங்களையும் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்.  வருங்காலத்தில் தாயகத்தில் மட்டுமின்றி புலம்பெயர் தேசத்திலும் எமது கலை வளரவேண்டும் என்பதே என்து விருப்பம். அது மட்டுமின்றி எனது படைப்புகள் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது கனவு என்றார்.        

குறிப்பு-செய்திதாளில் சில தகவல்கள் எடிட் செய்து வந்துள்ளது ஆனால் நான் முழுவதுமாக பதிந்துள்ளேன்.                                                   பொ.ஜெயச்சந்திரன்

பொன்னமராவதி அருகே இளைஞர்கள் ஒன்றிணைந்து தேவர் அம்மாபட்டி பொதுமக்கள் அனைவருக்கும் முகவசங்கள் வழங்கினார்கள்...

பொன்னமராவதி அருகே இளைஞர்கள் ஒன்றிணைந்து தேவர் அம்மாபட்டி பொதுமக்கள் அனைவருக்கும் முகவசங்கள் வழங்கினார்கள்...

தேவர் அம்மாபட்டி இளைஞர்கள் சார்பாக 
பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டாவது 
கட்டமாக முக கவசம் வீடுதோறும் வழங்கப்பட்டது.

தேவர் அம்மாபட்டியை சார்ந்த சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடு வாழ் இளைஞர்கள் மற்றும் 
தேவர் அம்மாபட்டி இளைஞர்கள் சார்பாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தேவர் அம்மாபட்டி பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டாவது கட்டமாக முககவசம் வீடுதோறும் வழங்கப்பட்டது. மேலும் முக கவசம் அனைவரும் கட்டாயம் அனிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது...!!!


 
 
 
 
 
 
 

திருமலை நாகராஜன்
பொன்னமராவதி