Saturday, 30 December 2017

ஆதார் பதிவில் விதிமீறியதால் 50 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம்

ஆதார் பதிவில் விதிமீறியதால் 50 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம் - அதிர்ச்சி தரும் தகவல் இதோ

ஆதார் பதிவில் விதிமுறைகளை மீறியதால் 50,000 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை மின்னணுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநில அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் இன்று காலை புது டெல்லியில் ராஜ்யசபாவில் தெரிவித்தார் . மேலும் அவர் டிசம்பர் 1 2017 வரை 71.24 கோடி மொபைல் எண்கள்,14.63 கோடி நிரந்தர வங்கி கணக்கு எண்கள் மற்றும் 82 கோடி வங்கி கணக்குகள் ஆதார் உடன் இணைந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .

புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள் !!!

புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள் !!!
-------------------------------------------------------------------------
1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள்

2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள்

3. ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்

4. இந்துக்களாக இருப்பின்,மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது, குடும்பத்துடன் ஏதோ ஒரு புராதன கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள்.

5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோமீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.

6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாய் இருக்க முயலுங்கள்.
         
7. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் நன்றாகத்தான் படிக்கும், நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள்.ஆக, இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்.

8. ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ, அக்கம் பக்கத்து குழந்தையோ, பத்து நிமிடமாவது முடிந்தால்  நாள் ஒன்றுக்கு அதனுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்

9. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள்.யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள். முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.  

10. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் சொல்லிப்ப்பாருங்கள். ஏற்று கொள்ளவில்லையென்றால் அவரையும் அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்

11. சின்ன விஷயங்களுக்கும் கூட நன்றி சொல்லப்பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள். அது உங்களை உயர்த்தும்.

12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இல்லை.
எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல் கவலையின்றி இறக்கவேண்டும்.

13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள், அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில் சம்பாதியுங்கள்.

14. வாரத்திற்கொருமுறை அரைமணியாவது தாய் தந்தையிடரிடம் தனிமையில் அன்போடு உரையாடுங்கள். அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு கேளுங்கள்.. அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில்  சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.

15  நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக இருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம். அது ஓலா எப்படி புக் செய்வது, யூபர் டாக்சியை எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக்கொள்ளுங்கள். எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும். மற்றவர்கள் கேலி பேசினால் உதாசீனப்படுத்தி முயலுங்கள்.

16.  உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும் விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ் பேசுவதாக,கதை எழுதுவதாக , சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள்,  வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள், குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது,வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல்,

18 இனிப்புகளை தவிர்க்க முயலுங்கள். மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.      
     
18  எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து வாழுங்கள்..

நீங்க இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும், அதனால் இவற்றில் சிறிதாவது முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று "ஆசைப்படுவேன்" .

இவற்றை முயற்சி செய்தால் 2018  மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் தான் இருக்கும்..

இனிய ஆங்கில புத்தாண்டு(2018) வாழ்த்துக்கள்  நண்பர்களே!!!

-படித்ததில் பிடித்தது.

நஷ்டத்தில் இயங்கும் ஆர் - காமை வாங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ

நஷ்டத்தில் இயங்கும் ஆர் - காமை வாங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ

அனில் அம்பானிக்குச் சொந்தமான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் (ஆர்-காம்) இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், அவரது சகோதரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, அந்த நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளது.
இதன் மூலம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸிடம் உள்ள அலைக்கற்றை ஒதுக்கீடு, செல்லிடப்பேசி கோபுரங்கள், கண்ணாடி இழை (ஆப்டிகல் ஃபைபர்) இணைப்புகள் ஆகியவை ரிலையன்ஸ் ஜியோவின் சொத்துகளாகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எவ்வளவு தொகைக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸை வாங்குகிறது என்ற விவரம் வெளியிடப்படவில்லை என்றாலும், இதுதொடர்பான ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.24,000 கோடியிலிருந்து, ரூ.25,000 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Wednesday, 27 December 2017

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 போட்டித்தேர்வு பார்வையற்றோருக்கு இலவச பயிற்சி வகுப்புகள் டிச-28 ஆரம்பம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 போட்டித்தேர்வு

பார்வையற்றோருக்கு இலவச பயிற்சி வகுப்புகள் டிச-28 ஆரம்பம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு மையம் இணைந்து ஏற்பாடு

2018, பிப்ரவரி-11 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக அரசுத் தேர்வாணைய குரூப்-4  போட்டித்தேர்வுகளில் பங்கேற்க உள்ள பார்வையற்றோருக்கு மதிய உணவுடன்கூடிய  இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

டிச-28 ஆம் தேதி முதல் வார நாட்களில் இந்த இலவச வகுப்புகள் நடைபெறும்.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் , பார்வையற்றோருக்கான தேசிய இணையம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் ஆகியவை இணைந்து இந்த வகுப்புகளை சென்னை மேற்கு சைதாப்பேட்டை, புதிய எண்.69, விஜிபி சாலை,  என்ற முகவரியில் நடத்த உள்ளனர்.  

டிச-28 வியாழன் காலை 9-30 மணிக்கு துவக்க நிகழ்ச்சி உள்ளது.  விருப்பமுள்ள பார்வையற்றவர்கள் 044-23715491 மற்றும் 9941411017 என்ற எண்களுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்வது அவசியம்.
                                 •••••,

Sunday, 24 December 2017

sss


ஆர். கே.நகர் 18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் விவரம் இதோ

18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் விவரம் இதோ

18வது சுற்று 👆வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் படி👇, 
🔰டி.டி.வி தினகரன்(சுயேட்சை) : 86,472 
🔰 மதுசூதனன் (அதிமுக): 47,115 
🔰 மருதுகேணஷ் (திமுக): 24,075 
🔰 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி): 3,645 
🔰 கரு.நாகராஜன் (பாஜக): 1,185 
🔰 நோட்டா: 2,096

ஆர். கே.நகர் 18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் விவரம் இதோ

18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் விவரம் இதோ

18வது சுற்று 👆வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் படி👇, 
🔰டி.டி.வி தினகரன்(சுயேட்சை) : 86,472 
🔰 மதுசூதனன் (அதிமுக): 47,115 
🔰 மருதுகேணஷ் (திமுக): 24,075 
🔰 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி): 3,645 
🔰 கரு.நாகராஜன் (பாஜக): 1,185 
🔰 நோட்டா: 2,096

ஆர்.கே.நகர் 15வது சுற்று 👆வாக்கு எண்ணிக்கை முடிவுகள்

*15வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் விவரம் இதோ👍*

15வது சுற்று 👆வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் படி👇, 
🔰டி.டி.வி தினகரன்(சுயேட்சை) : 72,158 
🔰 மதுசூதனன் (அதிமுக): 39,029 
🔰 மருதுகேணஷ் (திமுக): 20,493 
🔰 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி): 3,316 
🔰 கரு.நாகராஜன் (பாஜக): 1,128 
🔰 நோட்டா: 1,924

Friday, 22 December 2017

புதுகையில் மின் நிறுத்தம் 23.12.2017 சனி கிழமை

மின் நிறுத்தம் 23.12.2017 சனி கிழமை

புதுக்கோட்டை 110/22 கேவி / நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சாந்தநாதபுரம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சார்லஸ் நகர், கீழராஜவீதி, நிஜாம் காலணி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், கலீப் நகர், மருப்பணிரோடு, திருக்கோகர்ணம், திலகர்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ் நகர் ஆகிய இடங்களில் (23.12.2017 ம் தேதி) சனி கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் புதுக்கோட்டை நகர் த.அசோக் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Thursday, 21 December 2017

முன்னேற நிறைய வழிகள்

முன்னேற நிறைய வழிகள்

ஒரு கிராமத்தில் புத்திசாலியான ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எந்த ஒரு பிரச்சனையையும் எளிதில் தீர்த்துவிடும் தன்மை உடையவர். ஆகவே அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவரிடம் சென்று, தங்கள் பிரச்சனையை சொல்லி சரிசெய்து கொள்வர்.

அத்தகைய கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை அருகில் உள்ள சந்தைக்கு சென்று வாங்குவது வழக்கம். சந்தை என்றாலே சற்று தூரமாக, சிறு சிறு தெருக்களை தாண்டி தான் செல்ல வேண்டியிருக்கும். மேலும் வாரத்திற்கு ஒரு நாள் "சந்தை நாள்" என்ற ஒன்று இருக்கும். இந்த நாளில் அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

அவ்வாறு ஒரு சந்தை நாளன்று மக்கள் அந்த சந்தைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அந்த நாள் மிகவும் கூட்டமாக இருந்தது. அந்த கூட்டம் சிறு தெருக்கள் வரை நின்றிருந்தது. அதிலும் மக்கள் அந்த சந்தைக்கு செல்லும் போது எப்போதும் ஒரே தெருவில் தான் செல்வார்கள். அந்த நாளன்று அந்த தெருவின் முனையில் ஒரு முரட்டுக்குதிரை இருந்தது. மக்கள் சந்தைக்கு செல்ல வேண்டுமென்றால், அந்த குதிரையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.

அந்த குதிரையின் பக்கத்தில் சென்றால், குதிரை தலையை உதறிக்கொண்டு அவர்களை நோக்கி பாய்ந்து வரும்.யாரும் அவ்வழியே செல்லவிடாமல் தடுத்து அச்சுறுத்தியது. அக் குதிரையின் முரட்டுத்தனத்தை பார்த்து,  அந்த இடத்தில் நின்ற மக்கள் எவ்வாறு அந்த குதிரையை அந்த இடத்தில் இருந்து அகற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அந்த ஜென் துறவியும் அந்த சந்தைக்குச் செல்வதற்கு வந்து கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்த மக்கள், அந்த துறவியிடம் தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அந்த துறவி "அப்படியா?" என்று சொன்ன படியே, வந்த வழியாக திரும்பி சென்று, மற்றொரு தெருவின் வழியாக சந்தைக்கு சென்றடைந்தார்."

ஆம் நண்பர்களே!
நாமும் நம் வாழ்வில் உயர்ந்த  இடத்தை நோக்கிய இலட்சிய பயணத்தின் வழியில் இது போன்ற மனித முரட்டுக் குதிரைகள் மேலும் நம்மை பயணிக்க விடாமல் தடுத்தும், மிரட்டியும் நம்மை அச்சுறுத்தும் நாம் அதனோடு நின்று போராடி நமது காலத்தை விரயமாக்காமல் அவர்களை பொருட்படுத்தாமல் சற்றே விலகி வேறு பாதையில் நடந்து நம் இலக்கையும், இலட்சியத்தையும் விரைந்து அடையலாம் என்பதையே இந்த ஜென் குரு சொல்லாமல் செய்து காட்டியிருக்கிறார்.

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே ரயில் இயக்கத்தில் மாற்றம்!

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே ரயில் இயக்கத்தில் மாற்றம்!

*மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைமேடைகளின் நீளத்தை 23 ரயில்பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பது தொடர்பான பணிகள் நடைப்பெற்று வருகிறது*

*இதனால் 01.02.2018 முதல் 03.03.2018 வரையிலான 31 நாட்களுக்கு அங்கிருந்து இயக்கப்படும் ரயில்களின் இயக்கத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன*

*1.ரயில் எண் 12671/12672 சென்னை சென்ட்ரல் மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி விரைவு ரயில் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே ரத்து செய்யப்பட்டு, கோயம்புத்தூரில் நிறுத்தப்படுவதுடன் அங்கிருந்தே புறப்படும்*

*2.ரயில் எண் 56145/56146, 56147/56148, 56149/56150, 56151/56144-கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் மேட்டுப்பாளையம் காரமடை இடையே ரத்து செய்யப்பட்டு, காரமடையில் நிறுத்தப்படுவதுடன் அங்கிருந்தே புறப்படும்

Tuesday, 19 December 2017

TNPSC மாதிரி வினா விடை ஒலிவடிவில் நமது நற்றிணையில்

நமது நற்றிணையில் TNPSC மாதிரி வினா விடை ஒலிவடிவில் இலவசமாக கிடைக்கிறது.

அனைவருக்கும் பகிருங்கள். தேவையுள்ள வர்களுக்கு பயன்படும்.

http://www.natrinai.org/ஒலிப்பேழை/

Saturday, 16 December 2017

அதிரடி ரெய்டு, அபராதம்... யாருக்கும் அஞ்சாத சரயு, யாழினி..! அதிரும் புதுக்கோட்டை

அதிரடி ரெய்டு, அபராதம்... யாருக்கும் அஞ்சாத சரயு, யாழினி..! அதிரும் புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரை போட்டிப்போட்டுக்கொண்டு இரண்டு பெண்கள் புதுப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் உதவி ஆட்சியரான சரயு. மற்றவர், நகராட்சி சுகாதார அலுவலரான யாழினி. இவர்கள் இருவரும் தங்கள் கவனத்துக்கு வரும் மக்கள் விரோத, சட்டவிரோத ரகசியத் தகவல்கள் எதையும் அலட்சியப்படுத்துவதில்லை. அது குறித்து தீர விசாரித்து, தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு, அதிரடி ஆய்வுக்கு வியூகம் அமைக்கிறார்கள். அந்தவகையில், உதவி ஆட்சியர் சரயு  இதுவரை மூன்று அதிரடி ரெய்டுகளை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களின் கடைகளுக்கு சீல் வைத்திருக்கிறார். சரயு நடத்திய ரெய்டுகளில் சிக்கியவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியின் பின்புலம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிடி கடையில் ஆபாச வீடியோக்கள் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சரயு ரெய்டு நடத்தியக் கடையின் உரிமையாளர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்தான். கடையின் பெயரே 'அம்மா' என்றுதான் இருந்தது. மூன்று வாரங்களுக்கு முன்பு, அரிமளம் பகுதியில் நடத்தப்பட்டு வந்த மதுபான பாரில், தினமும் அதிகாலையிலேயே  கூவிக்கூவி  மதுபானம் விற்கிறார்கள் என்று வந்த தகவலைத் தொடர்ந்து, அதிகாலையே ஆய்வுக்கும் புறப்பட்டுவிட்டார் சரயு. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானப் பெட்டிகளைப் பறிமுதல் செய்து, பாருக்கு சீல் வைத்துவிட்டு வந்தார் சரயு.

இவர் இப்படி என்றால், புதுக்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலரான யாழினியும் தன் பங்குக்கு அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள மெடிக்கல் ஒன்றில், கடையின் உரிமையாளரே நோயாளிகளுக்கு ஊசி போடுகிறார்  என்று இவருக்கு வந்த தகவலையடுத்து அதிரடியாக அங்கு ஆய்வு செய்து,நோயாளிகளுக்குப் பயன்படுத்திவிட்டு, அப்புறப்படுத்தாமலிருந்த  நூற்றுக்கணக்கான சிரிஞ்சுகளைக் கைப்பற்றி, கடைக்கு சீல் வைத்துவிட்டு வந்தார். சுகாதாரமின்மை, சிறுநீர் நாற்றம் இவைகளுக்கு புகழ் பெற்றது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம். இதற்கு முன் எத்தனையோ சுகாதார அலுவலர்கள் முயற்சி செய்தும் பேருந்து நிலையத்தின் அவலத்தை மாற்றமுடியவில்லை. ஆனால், யாழினி அந்த முயற்சியில் ஓரளவு வெற்றிப் பெற்றிருக்கிறார். இரவும் பகலும் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு பேருந்து நிலையத்தைச் சுத்தம் செய்கிறார். கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் என்று எழுதப்பட்ட எச்சரிக்கைப் பலகையைப் பேருந்து நிலையத்தைச் சுற்றியும் பொருத்தி இருக்கிறார். இதனால் இப்போது நாற்றம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது.

தனித்தனியாக இருவரும் நடத்தும் அதிரடி நடவடிக்கைகளைத் தாண்டி, பொதுநலன் சார்ந்த விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் சரயுவும் யாழினியும் இணைந்து செயல்படுகிறார்கள். குறிப்பாக, டெங்கு ஒழிப்பு, பிளாஸ்டிக் உபயோகம் தவிர்ப்பு, தூய்மை நகரம் போன்ற திட்டங்களில் மக்களை இருவரும் நேரடியாக சந்தித்து அறிவுரைகள் கூறுகின்றார்கள். அதை மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். மீறினால், அபராதம் விதிக்கவும் இந்த இரண்டு பெண்களும் தயங்குவதில்லை. இவர்களது முயற்சிகளுக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கொண்ட கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து, மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டையை ஓரளவேனும் 'புதியக்கோட்டை'யாக மாற்றும் முயற்சியில் இந்த இரண்டு பெண்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதே உண்மை.

Friday, 15 December 2017

குரூப்-4 தேதி நீட்டிப்பு

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு; தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசம்- டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு*

ராஜஸ்தானல் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீடியோ

ராஜஸ்தானல் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீடியோ

*மேலே உள்ள செய்தியுடன் ஒரு வீடியோவும் வலம் வருகின்றது

*அது பொய்யான செய்தி

*யாரும் நம்பவேண்டாம்

*மேலும் அந்த வீடியோ டெல்லியில்  ஆண்டு நடந்தது இரு ரவுடி கும்பல்களுக்கு இடையில் நடந்த மோதலாகும்

*அந்த வீடியோவில் காட்டப்படும் நபர் போலிஸ் இல்லை

*ஆதாரம்
http://m.indiatoday.in/story/video-shootout-bhajanpura-delhi-rival-gang-police-murder/1/1099898.html

*ஆதாரம்
https://m.youtube.com/watch?v=DTbz8OtdoYY

*​எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்​

🔘➖🔘➖🔘➖🔘

Wednesday, 13 December 2017

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 17 லட்சம் பேர்  விண்ணப்பித்துள்ளனர்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 17 லட்சம் பேர் 
விண்ணப்பித்துள்ளனர். 9351 காலி பணியிடங்களுக்கு இன்று மாலை வரை 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் தேர்வுக்கு இன்றிரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பகோளாறால் விண்ணப்பிக்க முடியாமல் போனால் தேர்வாணையம் பொறுப்பில்லை என்றும் டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.

கார், பைக் ஓட்டுகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.

கார், பைக் ஓட்டுகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.

📚📖📚📖📚📖📚📖📚

நேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள். படிமங்கள்! அனைவருக்கும்
பகிருங்கள்!!
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று!

விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று......

முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.......

கடந்து செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா?
நீ தான் எங்கள்
கண்மணி என்று.,.....

விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை......

ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்.....

காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டிய தாலி நினைவிருக்கிறதா..
கண்ணாளா?
காத்திருப்பேன் கடைசிவரை

விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட
உன் நிழல் நான் தந்தையே!
விழித்திருப்பேன்
நீ வரும் வரை...,..

அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்;
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்

உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா!
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம் ;
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று......

அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனும் என வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கை
ஒரு வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்!

தொங்கிச் செல்வதும்
துரத்திச் செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்;
ஆனால், விபத்துகளிலிருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது!

விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்
உறவுகளை எல்லாம்
அரசு மருத்துவமனையில்
பிணவறையில் பிரேத
பரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,....?

அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்!

நீங்கள் ஒரு மகனாக இருந்தால்
ஒரு குடும்பத்தின் வாரிசு போச்சு!
கணவனாக இருந்தால் குடும்பம் போச்சு!

தந்தையாக இருந்தால்  ஒரு குடும்பமே
இருண்டு போச்சு!

கண நேர கவனக் குறைவால் கதை முடிகிறது நண்பா!
கவனமாக செல் !
காத்திருக்கின்றன உறவுகள் உனக்காக!

SPEED THRILLS;
BUT KILLS!

THERE IS  *NO RE-PLAY*
IN LIFE!

NO SPARE PARTS AVAILABLE FOR YOUR BODY!

நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம்,
விபத்து நமக்கு ஏற்படாது எனறு-
-அது நமக்கு நடக்கும் வரைதான்!

*மித வேகம் மிக நன்று*

🚴🏼‍♀🚴🏼🚴🏼‍♀🚴🏼🚴🏼‍♀🚴🏼🚴🏼‍♀🚴🏼🚴🏼‍♀

சமூக அக்கறையுடன்
பதிவிடப்படுகிறது!