#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 20 April 2019

தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி; மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு!

தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி; மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு!

*தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*

*அமெரிக்காவை சேர்ந்த சாட் எல்வர்டோஸ்கி மற்றும் சுப்ரானே தெப்பெட் இருவரும் பிட் காயினில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளனர். கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் பொருட்டு தாய்லாந்தில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர். கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.*

*ஆனால், உரிய அனுமதியை பெறாமல் தாய்லாந்து நாட்டின் இறையான்மையை மீறி கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*

Friday, 19 April 2019

பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்களில் 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.64% மாணவிகள் மற்றும் 88.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் கல்வி மாவட்டம் 95.37% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 95.23% தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் 95.15% தேர்ச்சி பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘தேர்வு எழுதிய ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் வாழ்த்துக்கள். இதுவே முழுமையான வெற்றி. இவ்வெற்றி தொடரட்டும். உங்களுக்குப் பிடித்ததையும் எந்தத் துறையில் நீங்கள் திறமையானவர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதிலும் கவனம் செலுத்துங்கள். நாளை  நமதே என்கின்ற நல்வாழ்த்துக்களுடன் உங்கள் நான்’ எனக் கூறி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்

சாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரை பெரிய தேரோட்டம் நடைபெற்றது.


via

+2 பொதுத் தேர்வு முடிகள் இன்று வெளியீடு!

+2 பொதுத் தேர்வு முடிகள் இன்று வெளியீடு!

2019 மார்ச் +2 பொதுத் தேர்வை 8,87,992 பேர் எழுதினர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வெழுதிய மாணவர்களின் முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது

தங்களது முடிவுகளை www.tnresults.nic.in http:/www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in http:/www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, http:/www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்

இதுதவிர, தாங்கள் பயின்ற பள்ளிகளில் பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்..

Monday, 15 April 2019

பிராவோவுக்கு தொப்பி அணிய கற்றுக்கொடுக்கும் ஸீவா தோனி


via

தமிழகம், புதுச்சேரியில் நாளை மாலை பிரசாரம் ஓய்வு

தமிழகம், புதுச்சேரியில் நாளை மாலை பிரசாரம் ஓய்வு

சென்னை, : தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதி, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி, ஒரு சட்டசபை தொகுதிக்கும், வரும், 18ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 781 ஆண்கள், 63 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட, 845 வேட்பாளர்களும், சட்டசபை தொகுதிகளில், 242 ஆண்கள், 27 பெண்கள் என, மொத்தம், 269 வேட்பாளர்கள், களத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும், 5.99 கோடி வாக்காளர்கள், தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.

கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், ஒரு மாதமாக, தொகுதி முழுவதும், பிரசாரம் செய்து வருகின்றனர். , தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு நிறைவடைவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை (ஏப். 16) மாலை, 6:00 மணியுடன், பிரசாரம் நிறைவடைகிறது.

தலைவர்களின் இன்றைய பிரச்சாரம்

தலைவர்களின் இன்றைய பிரச்சாரம்

*🗣முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி: சேலம்*

*🗣துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்: தேனி*

*🗣மு க ஸ்டாலின்: மத்திய சென்னை*

*🗣டாக்டர் ராமதாஸ் தர்மபுரி*

*🗣வைகோ: திருவேங்கடம் சங்கரன்கோவில் புளியங்குடி கடையநல்லூர் தென்காசி*

*🗣ஜி கே வாசன்: நாகப்பட்டினம் தஞ்சாவூர்*

*🗣கே பாலகிருஷ்ணன்: மதுரை*

*🗣இரா. முத்தரசன் நாகப்பட்டினம்*

*🗣டிடிவி தினகரன் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் தென் சென்னை*

*🗣கமலஹாசன்: திருப்பூர்*

*🗣சீமான்: சென்னை*

*🗣கி வீரமணி: ஸ்ரீபெரும்புதூர்*

*🗣என் ஆர்.தனபால்: தென் சென்னை*

Saturday, 13 April 2019

நடிகர் ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்

நடிகர் ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்

நடிகரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஜே.கே.ரித்திஷ் இன்று மாரடைப்பால் காலமானார். ராமநாதபுரத்தில் உள்ள இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இன்று மரணம் அடைந்தார். இவருக்கு வயது 46. இவர் நடிகர், அரசியல்வாதி மட்டுமில்லாது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளிவந்த 'எல்.கே.ஜி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 12 April 2019

புதிய மாணவர் சேர்க்கைக்கான துண்டு பிரச்சார விழிப்புணர்வு முகாம்

அரசு உயர் நிலைப்பள்ளி மிரட்டுநிலை!!
2019-20 ஆம் கல்வியாண்டு மாணவர்சேர்க்கை முகாம்!! 2019 -2020 ஆம் கல்வியாண்டிற்கான ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கைக்கான துண்டு பிரச்சார விழிப்புணர்வு முகாம் மிரட்டுநிலை உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள உப்புப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  கடையக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொன்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மிரட்டு நிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , ஓனாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,சீகம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மற்றும் வன்னியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கு.திராவிடச் செல்வம் தலைமையில் மிரட்டுநிலை பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்டது அதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கடையக்குடியில் நடைபெற்ற புதிய மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் கண.மோகன்ராஜ்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விழிப்புணர்வு  துண்டுப் பிரச்சாரத்தை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார் கடையக்குடி  தலைமையாசிரியை பேச்சியம்மாள் மிரட்டுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கணபதி, பிரபா ,சீனிவாசன், இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்          

Thursday, 11 April 2019

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறதா நிஜாமாபாத் தேர்தல்?

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறதா நிஜாமாபாத் தேர்தல்?
 
தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் தொகுதியில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த முதற்கட்ட தேர்தலில் 91 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக நாட்டிலேயே அதிக வேட்பாளர்களை கொண்ட நிஜாமாபாத் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நிஜாமாபாத் தொகுதியில் இன்று நடைபெறும் இந்த வாக்குப்பதிவு கின்னஸ் உலக சாதனையில் புத்தக்கத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
நிஜாமாபாத் தொகுதியில் இம்முறை 185 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். ஆகவே இந்தத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு 12 வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தியுள்ளனர். இதில்தான் ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்களை மட்டுமே ஒதுக்க இயலும். இத்தொகுதியில் 1,788 வாக்குச் சாவடிகள் உள்ளதால் தேர்தல் ஆணையம் எம்-3 ரக புதிய வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஒரு கட்டுபாடு கருவியுடன் ஒன்று முதல் நான்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை பொருத்த முடியும். ஆனால் இந்தத் தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச்சாவடியிலும் 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு கட்டுபாடு கருவியுடன் பொருத்தியுள்ளனர். மேலும் இந்தத் தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வேட்பாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் சின்னங்களை ஒரு பெரிய அறிவிப்பு பலகையாக எழுதி, மக்களுக்கு விளங்கும்படி வைத்துள்ளனர்.

உலகின் மிக குள்ள பெண்ணான ஜோதி ஆம்கே நாக்பூரில் இன்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

உலகின் மிக குள்ள பெண்ணான ஜோதி ஆம்கே நாக்பூரில் இன்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19ந்தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில், உலகின் மிக குள்ள பெண்ணான ஜோதி ஆம்கே (வயது 25) நாக்பூரில் இன்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.  மொத்தம் 62.8 செ.மீ. உயரம் கொண்ட அவர், கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 16ந்தேதி தனது 18வது பிறந்த நாளை முன்னிட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.
இதன்பின் கடந்த 2012ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6ல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபின் பிரபலம் அடைந்தார்.  வாக்கு சாவடிக்கு சென்ற உடனேயே அங்கிருந்த மக்கள் அடையாளம் கண்டு கொண்டு அவரை அன்புடன் வரவேற்றனர்.  வாக்கு சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
முதலில் வாக்களியுங்கள்.  அதன்பின் மற்ற விசயங்களை செய்து முடியுங்கள் என கூறினார்.  அவர் வாக்களித்த பின், தனது  விரலில் மையிடப்பட்ட புகைப்படத்தினை முகநூலில் பகிர்ந்து கொண்டார்.

முதல் கருந்துளை புகைப்படம் வெளியீடு !


via

முதல் கருந்துளை புகைப்படம் வெளியீடு !


via

Wednesday, 10 April 2019

நீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்.

நீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்.

_அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் "எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்" படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு மே-5 ஆம் தேதி நடைபெறுகிறது._

_இதற்கான ஹால்டிக்கெட்டை www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்._

மேட்டூர் அணையில் கதவணைப்பு பராமரிப்பு பணிகள் தீவிரம்

மேட்டூர் அணையில் கதவணைப்பு பராமரிப்பு பணிகள் தீவிரம்

எதிர்வரும் தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு மேட்டூர் அணையில் கதவணைகள் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் .

தண்ணீர் திறக்க மேட்டூர் அணையின் வலது கரையில் 5 கண் மதகுகளும் 8 கண் மதகுகளும், மற்றும் அணையின் இடது கரையில் 16 கண் மதகுகளும் உள்ளன.

அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழே குறையும் போது 5 கண் மதகுகள் வழியாகவும்,50 அடிக்கு மேலே உள்ள போது 8 கண் மதகுகள் வழியாகவும்,100 அடிக்கு மேலே போகும் போது 16 கண் மதகு வழியாகவும் தண்ணீர் திறந்துவிடப்படும் .

இந்நிலையில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக பிப்ரவரி முதல் மே வரை கதவணைகள் வருடாந்திர பராமரிப்பு செய்யப்படும்.

அதன்படி 20 -க்கும் மேற்பட்ட பொதுப்பணித் துறை பணியாளர்கள் கடந்த பிப்ரவரி முதல் மதகுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணிகள் அடுத்த மாத இறுதியில் நிறைவு பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக- ஆந்திர எல்லையில் 57 கோடி ரூபாய் தங்கக் கட்டிகள் பறிமுதல்

தமிழக- ஆந்திர எல்லையில் 57 கோடி ரூபாய் தங்கக் கட்டிகள் பறிமுதல்

தமிழக-ஆந்திர எல்லையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 57 கோடி ரூபாய் மதிப்பிலான 175 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக-ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில், ஆந்திராவில் இருந்து சென்னையை என்று நோக்கி சென்ற மினிவேனை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 175 தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட தங்கக் கட்டிகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி பார்வையிட்டார்.

ஆந்திர மாநிலம் தடா ஸ்ரீ சிட்டி பகுதியில் உள்ள சித்தாத் என்ற தனியார் தங்கம் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 175 தங்க கட்டிகளில் 74 கிலோ சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள நகை கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட இருந்தது தெரிய வந்தது.

மீதமுள்ள 100 கிலோ தங்க கட்டிகளை விமானம் மூலம் மும்பைக்கு எடுத்து செல்லவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆவணங்களின்படி 175 தங்க கட்டிகள் இருப்பதும், அவற்றின் மார்க்கெட் மதிப்பு 57 கோடி எனவும் உதவி தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

தங்க கட்டிகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு, வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக் குட்டி உடல் கண்டுபிடிப்பு

42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக் குட்டி உடல் கண்டுபிடிப்பு

ரஷ்யாவில் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக்குட்டி ஒன்றின் முழு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சைபீரியாவின் பனி மலைப் பகுதியில் ரஷ்யா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பனியில் உறைந்த நிலையில் குதிரைக் குட்டி ஒன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த உடலை ஆய்வு செய்த போது, அந்தக் குதிரைக் குட்டி 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடந்த ஆய்வில் குதிரைக் குட்டியின் உடலுறுப்புகள் உறைந்து போனாலும் நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும், விரைவில் பல்வேறு ஆச்சரியத் தகவல்கள் வெளியாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

டெல்லியில் 54வது சிஆர்பிஎப் வீர தினம் கொண்டாட்டம்


via

Tuesday, 2 April 2019

புதிய சங்கம் துவக்க விழா

புதிய சங்கம்
துவக்க விழா
அறந்தை ரோட்டரி சங்கம் துவக்க விழா மற்றும் பட்டயம் வழங்கும் விழா ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக சங்கத் தலைவர் பி. கணபதி தலைமையில் நடைபெற்றது பட்டய தலைவராக ஆர் முரளிதரன் அவர்களுக்கும், செயலாளராக ஆர். தங்கதுரை அவர்களுக்கும், பொருளாளராக ஆர் தாமஸ் அவர்களுக்கும், ரோட்டரி மாவட்ட 3000 ஆர். வி .என். கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து சங்கத்தின் பட்டயத்தை வழங்கினார் முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் துணை ஆளுநரும் சங்கத்தின் ஆலோசகருமான எஸ் .பி. ராஜா வரவேற்றார் ரோட்டரி மாவட்ட ஆளுநர் 2019 20 டாக்டர் எ.ஜமீர் பாட்சா, ரோட்டரி மாவட்ட ஆளுநர் 2020 .21  அ.லெ. சொக்கலிங்கம் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ். சீனிவாசன் துணை ஆளுநர் பீர் சேக்,மாவட்ட மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண. மோகன்ராஜ், நிகழ்வுகள் மாவட்டச் செயலாளர் ஜெ. ராஜேந்திரன், ரோட்டரி அறக்கட்டளை நிர்வாக அலுவலர் ராசி என் .மூர்த்தி ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள்  32 பேருக்கு துணை ஆளுநர் ராஜா ரோட்டரி பின் அணிவித்து சங்கத்தில் இணைத்து  உறுப்பினராக்கினார் மேலும் ஜி செந்தில்குமார், எஸ் பாலசுப்பிரமணியன், ஆகியோர் தலா ஆயிரம் டாலர்கள் ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி கொடுப்பதாக கூறியதால் அவர்களுக்கு  மாவட்ட ஆளுநர் நன்றி கூறி கௌரவம் செய்தார் நிறைவாக வழக்கறிஞர் சூசை நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது

இன்றைய ராசி பலன்கள் 2.4.19 #indrayarasi


via

Monday, 1 April 2019

பெரும் கொடையாளர் விருது

பெரும் கொடையாளர் விருது
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக மனோகரன் சாலையிலுள்ள கோடீஸ்வர அரங்கத்தில் சங்கத் தலைவர்  எஸ் அழகப்பன் தலைமையில் ஆளுநர் அலுவல் பூர்வ வருகை விழா நடைபெற்றது ரோட்டரி மாவட்டத்தின் ஆளுநர் ஆர். வி .என் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சங்கத்தின் சார்பாக ஆயிரம் டாலர் வழங்குவதாக அறிவித்த தலைவர் எஸ் அழகப்பன் அவர்களை பெரும் கொடையாளர் ஆக அறிமுகம் செய்து ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர். வி. என். கண்ணன் பெருமைப்படுத்தி நினைவுப் பரிசு வழங்கினார் மேலும் அழகப்பன் கூறும்போது எங்களது சிட்டி ரோட்டரி சங்கம் அனைத்து கொடையாளர் சங்கமாக ஆக்குவோம் என்று உறுதி கூறினார் நிகழ்ச்சியில் இலவச தையல் பயிற்சி நிலையத்தை சிறப்பாக நடத்தி வரும் பட்ட தலைவர் க.நைனாமுகம்மது அவர்களையும் சமூக சேவை செய்த ஜெயராமன அவர்களையும் பாராட்டி கௌரவம் செய்தார் ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகையில் சிறப்பாக சாசனங்களை செய்த புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்திற்கு எ கிரேடு அங்கீகாரத்தை ரோட்டரி மாவட்ட ஆளுநர் மகிழ்ச்சியோடுஅறிவித்தார் நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீரங்கநாதன், ராஜேந்திரன் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.என் .சீனிவாசன் துணை ஆளுநர் சி. சுந்தரவேல் ,மக்கள் தொடர்பு நன்மதிப்பு இணைச் செயலாளர் மாலதி கானா மோகன்ராஜ், இணைச்செயலாளர் சாந்தாராம், துணை ஆளுநர் தேர்வு எஸ். பார்த்திபன், ஜி. தனகோபால் மற்றும்  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக வருடாந்திர அறிக்கையை செயலாளர் கே .என். செல்வரத்தினம் வாசித்தார் நிறைவாக பொருளாளர் பி. அசோகன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது








சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது புதுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் ப. செந்தாமரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை  வழங்கி சிறப்பு  உரையாற்றினார் முன்னதாக வருகை தந்த அனைவரையும்  இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் மாலதி வரவேற்றார் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண .மோகன்ராஜ் , மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் (ஓய்வு )எஸ் விஸ்வநாதன் மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் ,கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் நிறைவாக இளைஞர் செஞ்சிலுவை சங்கத் தலைவர் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது




பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும்; வெற்றிவேல் பேட்டி

பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும்; வெற்றிவேல் பேட்டி

பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும் என வெற்றிவேல் பேட்டியளித்து உள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிடுகிறது.  அக்கட்சி பதிவு செய்யப்படாத நிலையில், இந்த கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.  பொது சின்னம் வழங்க பரிசீலனை செய்யலாம் என தேர்தல் ஆணையத்திடம் கூறியது.

இதனை தொடர்ந்து, புதுடெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் தினகரன் தரப்பில் பொது சின்னம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.  இதன்படி, டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுபற்றி அக்கட்சியை சேர்ந்த வெற்றிவேல், பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும் என பேட்டியளித்து உள்ளார்.

நாங்கள் கேட்ட சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என அக்கட்சியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் தெரிவித்து தேர்தலில் வெற்றிபெறுவோம் என அக்கட்சியின் தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன பரிசுப்பெட்டி!

இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன பரிசுப்பெட்டி!

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற் கட்சியை தேர்தல் ஆணையத்தில் இதுவரை பதிவு செய்யாத காரணத்தால், குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

இதுதொடர்பான வழக்கில் தினகரனின் அமமுகவுக்கு பொதுச் சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்து  உத்தரவிட்டது.

இதனை அடுத்து இன்று காலை, தினகரன் தரப்புக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த தகவல் வெளியானதும் சமூக ஊடகங்களில் அவரது ஆதரவாளர்கள் சின்னத்தை பகிர்ந்தனர். இதில் ட்விட்டரில் இந்திய அளவில் பரிசுபெட்டி சின்னம் ட்ரெண்டிங் ஆகியுள்ளது

PSLV - C45 ஒரு பார்வை

PSLV - C45 ஒரு பார்வை.

Pslv c 45 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
29 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவவிருக்கிறது. பொதுவாக ஒரு ராக்கெட் 4 அடுக்குகளைக் கொண்டிருக்கும். அதன் உச்சியில் செயற்கைக் கோள்கள் வைக்கப்பட்டு  heat shield களால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு அடுக்காக எரிந்து கீழே விழுந்துவிடும். நான்காவது அடுக்கு செயற்கைக் கோள்களை புவிவட்டப் பாதையில் செலுத்திவிட்டு அதுவும் கீழே விழுந்துவிடும்.

இந்த ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடத்தில் 749 கி.மீ உயரத்தில் ராணுவ செயற்கைக் கோளான EMISAT ஐ செலுத்திவிட்டு மீதமுள்ள 28 செயற்கைக் கோள்களையும் சுமந்துகொண்டு பூமியை ஒரு முறை வலம்வந்து 504 கி.மீ உயரத்தில் மீதமுள்ள 28 செயற்கைக் கோள்களையும் செலுத்தும். பிறகு கீழே விழுந்து விடாமல் 485 கி.மீ உயரத்தில் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொண்டு lithium battery உதவியுடன் 6 மாதம் பூமியை வலம் வந்து கொண்டிருக்கும். இந்த நான்காவது அடுக்கைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த புதுமையான தொழில் நுட்பம் C44 லிலும் கடைபிடிக்கப்பட்டது.

இன்றைய ராசி பலன்கள் 01.04.2019


via