Wednesday, 24 February 2021

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பட்டியலை தமிழக அரசு கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பட்டியலை தமிழக அரசு கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Friday, 19 February 2021

அழிந்து வரும் மன்னர் காலத்து கட்டிடங்கள்.!

அழிந்து வரும் மன்னர் காலத்து கட்டிடங்கள்.!
 புதுக்கோட்டையின் புராதானசின்னங்கள் பாதுகாக்கப்படுமா.!? ஏக்கத்துடன் மக்கள்.,
புதுக்கோட்டையில் பழைய நகராட்சிகட்டிடம் மற்றும் நீதிமன்ற கட்டடங்களில் ஆங்காங்கே செடிகள் முளைத்து பெரிய மரங்களாக வளர்ந்துவிட்டது, இதை இப்படியே விட்டால் விரிசல் அடைந்து கட்டிடம் பிளந்து உடைந்து விழும் அபாயம் உள்ளது.

நூறு வருடங்களுக்கு மேலாக உறுதியுடன் நிலைத்து நிற்கும் இந்த கட்டிடங்கள் வெரும் கட்டிடம் அல்ல, புதுக்கோட்டையின் வரலாற்றை பறைசாற்றுபவை, வரலாற்றுச்சின்னங்கள், இதுபோன்ற கட்டிடங்களை இப்பொழுது கட்ட 
பல கோடி ரூபாய் ஆகும் அதுமட்டுமல்லாமல் 25 லிருந்து 50 வருடங்களில் அவை அழிந்து போகும்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து சுற்றுலாத்தலமாக மாற்றலாம் இதனால் மாவட்டத்திற்கு வருவாய் பெருகும் வியாபாரம் அதிகரிக்கும் மாவட்டம் வளம் பெறும். 

மேலும் நம் சந்ததிகள் இந்த மண்ணின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.?

Tuesday, 16 February 2021

இப்படியும் ஒரு முன்னாள் எம்எல்ஏ

இப்படியும் ஒரு முன்னாள் எம்எல்ஏ

மதுரை

மதுரை மேல பொன் நகரத்தைச் சேர்ந்தவர் நன்மாறன் இவர் மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். இந்தநிலையில் நன்மாறன் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார்,  மதுரை மாவட்ட குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்களுடன் கியூ வரிசையில் நின்று மனு கொடுப்பதற்காக காத்திருந்தார்
அப்போது அவரை அடையாளம் கண்டறிந்த சிலர் மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரி இடம் அறிமுகப்படுத்தி வைத்தனர்,
இதனைத் தொடர்ந்து நன்மாறன் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்,
அந்த கோரிக்கை மனுவில் "நான் இப்போது மதுரை மேல பொன்னகரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.
எனக்கு சொந்த வீடு எதுவும் இல்லை இதனால் மாதா மாதம் வாடகை கட்ட முடியாமல் மிகவும் சிரம நிலையில் உள்ளேன்,
எனவே மதுரை ராஜாகூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எனக்கு வீடு ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன்,
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது
மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரியிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு வெளியே வந்த நன்மாறன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

 நான் இப்போது மதுரை மேலப்பொன் நகரத்தில் வசித்து வருகிறேன். எனக்கு நிரந்தரமாக குடியிருக்க வீடு இல்லை. எனவே மதுரை ராஜாக்கூரில் அரசாங்கம் சார்பில் கட்டித்தரப்படும் குடியிருப்பில்  இலவச வீடு கேட்டு கோரிக்கை மனு கொடுப்பதற்காக வந்து உள்ளேன் . கட்சியினர் யாரிடமும் இதுவரை உதவி கேட்கவில்லை எனவும் எங்களது இறுதி காலத்தில் எங்களுக்கு என ஒரு வீட்டில் வசிக்க விரும்பி மனு அளித்ததாக கூறினார்.

Monday, 15 February 2021

புதிதாக 12 தமிழ் சேனல்களை தமிழ் நாட்டில் தொடங்கவிருக்கின்றனர்.

புதிதாக 12 தமிழ் சேனல்களை தமிழ் நாட்டில் தொடங்கவிருக்கின்றனர்.பெண்கள் டிவி

புதிய தலைமுறை நெட்வொர்க் சார்பாக தொடங்கப்படும் புதிய சேனல் இந்த பெண்கள் டிவி .  24 மணிநேரமும் பெண்களுக்கென்றே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்று அந்த நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவே தமிழில் முதன்முறையாக பெண்களுக்கென்று தனியாக ஒரு சேனல் இந்த பெண்கள் சேனல் இலவச ஒளிபரப்பு C BAND இல் இலவச ஒளிபரப்பு தொடங்கப்பட்டு உள்ளது. கூடிய விரைவில் அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH  களில் வந்துவிடும்.

 

****************************************

விஜய் மியூசிக்

விஜய் மியூசிக் தொலைக்காட்சியானது ஸ்டார் விஜய் நெட்வொர்க்கின் சார்பாக தொடங்கப்படும் ஒரு புதிய சேனல் இந்த சேனலின் இலவச ஒளிபரப்பு C BAND  ஒளிபரப்பப்பட்டு இப்பொழுது ஒரு சில தனியார் கேபிள் டிவி நிறுவனங்களில் மட்டும் ஒளிபரப்பப்பட்டு உள்ளது  DTH களில் இந்தச் CHANNEL இன்னும் கொண்டுவரப்படவில்லை அவ்வாறு ஒளிபரப்பப்பட்ட உடனே இதில் பதிவிடப்படும் . இந்த சேனல் ஆனது ஒரு கட்டண சேனல் இலவச சேனல் கிடையாது . மாதத்திற்கு 1 ரூபாய் மட்டுமே

 

**********************************

மலர் டிவி

தமிழில் தொடங்கப்படும் புத்தம் புதிய தொலைக்காட்சி இந்த மலர் டிவி இந்த டிவி இலவச ஒளிபரப்பாக தற்பொழுது C - BAND இல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இந்த சேனலில் புதிதாக நிகழ்ச்சிகள் ஒன்றும் ஒளிபரப்பபடவில்லை இப்போது இருக்கக்கூடிய பொதிகை டிவி  போலவே தான் இதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு கொண்டிருக்கின்றார்கள்   இலவச ஒளிபரப்பு C BAND இல் இலவச ஒளிபரப்பு தொடங்கப்பட்டு உள்ளது. கூடிய விரைவில் அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH  களில் வந்துவிடும்.

 

************************************

1 YES NEWS தமிழ்

தமிழில் ஏற்கனவே 1 YES TV  என்ற தொலைக்காட்சி  ஏற்கனவே ஒளிபரப்பபட்டு உள்ளது.  முதலில் அனைத்து விதமான கேபிள் டிவி மற்றும் DTH களில் வந்துகொண்டிருந்தது தற்போது ஒரு குறிப்பிட்ட சில கேபிள் டிவிகளில் மட்டுமே  வந்து கொண்டிருந்தது இந்த 1 YES TV அடுத்த சேனலான 1 YES NEWS தொலைக்காட்சி ஆனது தற்போது ஒளிபரப்பாக காத்திருக்கின்றது இலவச ஒளிபரப்பு C BAND இல் இலவச ஒளிபரப்பு விரைவில் தொடங்கபட  உள்ளது. கூடிய விரைவில் அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH  களில் வந்துவிடும்

 
.

*****************************************

ABP நியூஸ் தமிழ்

உங்களுக்கு தெரியும் வட இந்தியாவில் மிகவும் பிரபலமான செய்தி நிறுவனம் அதாவது வட இந்தியாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் செய்தி நிறுவனம் இந்த ABP NEWS    தமிழ்நாட்டில் தமிழ் செய்திகளுக்காக ABP NEWS TAMIL சேனலை தொடங்க உள்ளது . தற்போது ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது ஒளிபரப்பும் இன்னும் தொடங்கப்படவில்லை கூடிய விரைவில் தொடங்கப்பட்டு  அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH  களில் வந்துவிடும்.

 

*********************************

கவசம் TV (tccl)

கவசம் டிவி புதிய தொலைக்காட்சி தமிழில் தொடங்கப்பட உள்ளது.அந்த கவசம் TV  ஏற்கனவே YOUTUBE சிறியதாகத்தான் இருந்தது இப்போது இது ஒரு சாட்டிலைட் சானல் மாறப்போகின்றது இலவச ஒளிபரப்பு C BAND இல் இலவச ஒளிபரப்பு விரைவில் தொடங்கபட உள்ளது. கூடிய விரைவில் அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH  களில் வந்துவிடும்.

 

**************************************

CINITLIX டிவி

இந்த CINITLIX டிவி நேரடியாக கேபிள் டிவி க்களில் தொடங்கப்பட்டுவிட்டது அனைத்து விதமான தனியார் கேபிள் டிவி நிறுவனங்களில் இந்த CINITLIX டிவி இப்பொழுது ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது இந்த சேனல் இலவச சேனல் என்றாலும் ஒரு சில பேக்கேஜ்களுக்கு மட்டுமே இந்த சேனலை சில தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் தந்து கொண்டிருக்கின்றனர். CINITLIX டிவியில் முற்றிலும் சினிமா செய்திகள்  மட்டுமே ஒளிபரப்பிக் கொண்டு இருக்கின்றது.கூடிய விரைவில் அனைத்து விதமான கேபிள் மற்றும் DTH  களில் வந்துவிடும்.

Friday, 5 February 2021

வரும் 8ம் தேதி முதல் கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்படுகிறது. வாரம் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும்.

வரும் 8ம் தேதி முதல் கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்படுகிறது. வாரம் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும்.

- தமிழக அரசு அரசாணை!

Wednesday, 3 February 2021

தேனமுது புட்ஸ்-வீட்டு முறையில் தயாரித்த தரமான பொருள்கள் கிடைக்கும்

தேனமுது புட்ஸ்-வீட்டு முறையில் தயாரித்த தரமான பொருள்கள் கிடைக்கும்

பதப்படுத்த எந்த கெமிக்கலும் சேர்க்காததால் குழந்தைகள்👶🏻 முதல் பெரியவர்கள் வரை 👴🏻👵🏻கவலையின்றி உண்ணலாம்.

#ஆரோக்கியமான🟢💪🏻 மாவு பொருள்கள்
~முழுகோதுமை மாவு
~கேப்பை மாவு
~கம்பு மாவு
~இடியாப்ப மாவு
~கருப்பு உளுந்து களி மாவு 

#இன்றைய தலைமுறைக்கு உடனடி(instant)🤓 பொருள்கள்🥳
~அடை மிக்ஸ்
~பாசிப்பயறு தோசைமாவு
~சிறுதானிய சத்துமாவு
~பாதாம் மிக்ஸ்😋🤤
~பாசிப்பருப்பு உருண்டை மாவு

#🫕சமையலில்🥄🧂சுவை கூட்டும் பொடி வகைகள்
~மல்லி பொடி
~மிளகாய் பொடி🌶️
~மஞ்சள் பொடி
~சாம்பார் பொடி
~குழம்பு பொடி

#இட்லி/சாதம்🍚 ரசித்து😋 சாப்பிட பொடி வகைகள்
~கார பொடி இட்லி பொடி🥵
~எள் இட்லி பொடி
~கருப்பு உளுந்து எள் இட்லி பொடி
~பூண்டு பொடி🧄
~பருப்பு  பொடி
~மல்லி சாத பொடி
~வெற்றிலைப் பொடி

கலப்படமற்ற மருத்துவ குணமுள்ள பொருள்கள்🛒🛍️
~கேரளா மிளகு
~மிளகு பொடி
~நாட்டுச் சர்க்கரை

$வீட்டிற்க்கே டெலிவரி செய்யப்படும்🛵🚚📦
$தமிழ்நாடு முழுவதும் விற்பனை உண்டு

📞@தொடர்புக்கு : 
மதுரை
 🤳🏻 93450 05801

பொன்னமராவதி / புதுக்கோட்டை
🤳🏻 85084 07061