Saturday, 15 February 2020

சொத்து வரி செலுத்தாததால் 2வது முறையாக வணிக வளாகம் முன்பு குப்பை லாரி நிறுத்தம் : மாநகராட்சி நடவடிக்கை

சொத்து வரி செலுத்தாததால் 2வது முறையாக வணிக வளாகம் முன்பு குப்பை லாரி நிறுத்தம் : மாநகராட்சி நடவடிக்கை


பெரம்பூர் :   பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஸ்பெக்ட்ரம் மால் எனும் தனியாருக்கு சொந்தமான ஷாப்பிங் மால் மற்றும் கடைகள் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகம் மற்றும் திரையரங்கத்தின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு 1.5 கோடிக்கு அதிகமாக சொத்து வரி செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், கடந்த மாதம் 29ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் இந்த வணிக வளாகம் முன்பு குப்பை லாரிகளை நிறுத்தி, வரி பாக்கியை செலுத்தும்படி எச்சரித்தனர். மேலும், வணிக வளாகம் முன்பு நோட்டீஸ் ஒட்டினர் அதுமட்டுமின்றி, சொத்து வரி கட்டவில்லை என்றால் வணிக வளாகத்திற்கு சீல்  வைப்போம் என எச்சரித்தனர். அதன்பின்பு அந்த வணிக வளாகம் சார்பில் 1 கோடி வரை சொத்து வரி செலுத்தப்பட்டது. மீதமுள்ள தொகையை விரைவில் செலுத்துவதாக உறுதியளித்தனர். ஆனால், அதன்படி செலுத்தவில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சி 6வது மண்டல அதிகாரி நாராயணன் உத்தரவின் பேரில் உதவி வருவாய் அலுவலர் லட்சுமண குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அந்த வணிக வளாகம் முன்பு நேற்று 2வது முறையாக குப்பை லாரிகளை நிறுத்தி அந்த வணிக வளாகத்திற்குள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு பாதையை மூடினர்.

Saturday, 8 February 2020

வானிலை முன்னறிவிப்பு

*வானிலை முன்னறிவிப்பு*

*கடலோரபகுதிகளில் பிப்ரவரி 11,12ல் லேசான மழை வாய்ப்பு..!!*

==> தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் வறண்ட வானிலை தொடரும்.

==> பிப்ரவரி 10ம் தேதி இந்தியப்பெருங்கடலின் நிலநடுக்கோடு அருகே உருவாகும் காற்று சுழற்சி ஈரப்பதமான கீழைக்காற்றை தமிழகம் ஊடாக பிப்ரவரி 11,12 ஆகிய தேதிகளில் ஈர்க்கும் என்பதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான #சென்னை #காஞ்சிபுரம் #செங்கல்பட்டு #கடலூர் #புதுச்சேரி #காரைக்கால் #நாகப்பட்டினம் #திருவாரூர் #தஞ்சாவூர் #இராமநாதபுரம் #நெல்லை #தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஒரிரு இடங்களில் பிப்ர 10ம் தேதி இரவு முதல் பிப்ர 12ம் தேதி இரவுக்குள் லேசான/மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

==>பிப்ரவரி 11,12 ஆகிய தேதிகளில் வெயில் அடித்தாலும் திடிரென கருமேகங்கள் சூழ்ந்து தூறல்/நனைக்கும் மழை வாய்ப்பு.

*#மீனவர்களுக்கான அறிவிப்பு!*

==> கடலில் தரைக்காற்று சற்று பலமாக வீசும் என்பதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள் பிப்ரவரி 11,12,13 ஆகிய தேதிகளில் சற்று கவனத்துடன் மீன்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*#அறுவடை விவசாயிகள் கவனத்திற்கு!*

==> பிப்ரவரி 11,12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பரவலான மழைக்கோ அல்லது சற்று கனமழை/கனமழை பெய்வதற்கோ வாய்ப்புகள் இல்லை. அதனால் அறுவடை பணிகளோ, நெற்பயிர்களையோ இம்மழை பாதிக்குமோ என கவலைக்கொள்ள வேண்டாம். அறுவடை பணிகளை அச்சமின்றி தொடரலாம்.

==>  வெயில் அடிக்கும் ஆனால் கருமேகங்கள் அவ்வப்போது திறண்டு லேசான தூறல்/நனைக்கும் மழை 5 முதல் 10 நிமிடங்கள் கடலோரத்தில் ஒரிரு இடங்களில் தர மட்டுமே வாய்ப்பு. விவசாயிகள் வானிலை மாற்றத்தால் குழப்பமடைய கூடாது என்பதற்காகவே இத்தகைய அறிக்கை வெளியிடுகிறேன் மற்றபடி பெரிய அளவில் மழை வாய்ப்பு இல்லை.

Thursday, 6 February 2020

தங்கள் பரிசுகளை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் நற்றிணை அறக்கட்டளை

தங்கள் பரிசுகளை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்
மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் நற்றிணை அறக்கட்டளை
l திருச்சி
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இணையம் வழியாக தினசரிச் செய்திகளை ஒலி வடிவில் அளிப்பதுடன் தமிழ் தொடர்பான பல தரமான பதிவு களையும் அளித்து வருகிறது நற்றிணை அறக்கட்டளை.
மாணவர்களின் தனித் திறமையை ஊக்குவித்து அடுத்த தலைமுறையை வளமாக்கு வதற்கான முயற்சியை தற்போது கையில் எடுத்திருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக “நற்றிணையின் வெற்றிப்படிகள்” என்ற நிகழ்ச்சியை அறிமுகப் படுத்தியுள்ளது.
மாணவர்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் காணொளியைப் பதிவு செய்து நற்றிணை அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கலாம்.
தகுதியுள்ள  காணொளிகள் ஒளி, ஒலி அமைப்புகளைச் சரிசெய்து நற்றிணையின் யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
தினமும் வெளியிடப்படும் பதிவுகளுக்கு நற்றிணை அறக்கட்டளை வழங்கும் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
பேச்சுக்கான தலைப்பை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  தெளிவான உச்சரிப்புடன், மூன்றிலிருந்து ஐந்து  நிமிடங்களுக்குள் கருத்துள்ள பேச்சாக இருத்தல் வேண்டும். பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காணொளியைப் (Video) பதிவு செய்யலாம். உதவியாளர் பெயரும் வெளியிடப்படுகிறது.
மழலையர் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.  பேச்சு தவிர தங்களது திறமையை வெளிப் படுத்தும் பிற காணொளிகளும் வெளியிடப்படுகின்றன.
www.natrinai.org என்ற இணையதளத்தில் உள்ள  நூல்களில் தாங்கள் விரும்பியவற்றை பரிசாக மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
நற்றிணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் காணொளி கள் மட்டுமே வெளியிடப்படும்.
மாணவர் பெயர், வகுப்பு, அலைபேசி எண், உதவியவர் பெயர், பள்ளி முகவரி, தேர்வு செய்த நூல் வரிசைஎண் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு காணொளிப் பதிவினை இணைத்து natrinaihelpcenter@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
9787734166 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமாகவும் அனுப்பலாம்.
மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
மாணவர்களின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள நல் உள்ளங்கள் நற்றிணை அறக்கட்டளைக்கு அளித்துவரும் நன்கொடை மூலமாகவே இது சாத்தியமாகிறது என்கிறார் இதன் நிறுவனர்.  நற்றிணை இணைய தளத்திலுள்ள நன்கொடை என்ற பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறக் கட்டளையின் வங்கிக் கணக்கில் விருப்பம் உள்ளவர்கள் நன்கொடை செலுத்தலாம் என்றும் கூறுகிறார்.
படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல என்று புரிந்து கொண்ட மாணவர்கள், தமிழர் திருநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட “விழாக்கால வெற்றிப் படிகள்” என்ற நிகழ்ச்சிக்கு தங்கள் படைப்புகளை அனுப்பி யிருந்தார்கள்.
அதிலிருந்து ஐந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபாய் 1000 பரிசும், திருச்சி மனிதம் அறக்கட்டளை வழங்கிய புத்தகங்கள், குறுந்தகடுகள் ஆகியவையும் பரிசுகளாக அனுப்பி வைக்கப்பட்டன.
மாணவர்களின் நேரத்தை வீணாக்கும் மென்கருவியாகவும், தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் தொடுகருவியாகவும் பார்க்கப்படும் அலைபேசியை பயனுள்ள வகையில் மாற்றியிருக்கும் நற்றிணை அறக்கட்டளையின் இச்செயல்  அனைவராலும் பாராட்டப்படுகிறது.Tuesday, 4 February 2020

𝗧𝗵𝗮𝗻𝗷𝗮𝘃𝘂𝗿 𝗞𝘂𝗺𝗯𝗮𝗯𝗶𝘀𝗵𝗲𝗸𝗮𝗺 𝗦𝗽𝗲𝗰𝗶𝗮𝗹 𝗧𝗿𝗮𝗶𝗻𝘀

𝗧𝗵𝗮𝗻𝗷𝗮𝘃𝘂𝗿 𝗞𝘂𝗺𝗯𝗮𝗯𝗶𝘀𝗵𝗲𝗸𝗮𝗺 𝗦𝗽𝗲𝗰𝗶𝗮𝗹 𝗧𝗿𝗮𝗶𝗻𝘀

தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பு ரயில்கள்

தஞ்சாவூரில் வரும் பிப்ரவரி 05ம் தேதி புதன்கிழமை அன்று அருள்மிகு பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 

1.திருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி

2. மயிலாடுதுறை- தஞ்சாவூர்- மயிலாடுதுறை

3. திருவாரூர்- தஞ்சாவூர்- திருவாரூர்

4. காரைக்கால்- தஞ்சாவூர்- காரைக்கால்

இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் இயங்கும் நாட்கள்:

04.02.2020 செவ்வாய்க்கிழமை
05.02.2020 புதன்கிழமை  
06.02.2020 வியாழக்கிழமை 

இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் அதன் இடைப்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

𝐀𝐮𝐠𝐦𝐞𝐧𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐓𝐫𝐚𝐢𝐧𝐬
கூடுதல் பெட்டிகள் இணைப்பு:

16865/6 சென்னை எழும்பூர்- தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் உழவன் விரைவு வண்டியில் தற்காலிகமாக 02 முன்பதிவற்ற பெட்டிகள் 04.02.2020, 05.02.2020 மற்றும் 06.02.2020 (07.02.2020) ஆகிய மூன்று நாட்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

𝐂𝐚𝐧𝐜𝐞𝐥𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐓𝐫𝐚𝐢𝐧𝐬
பயணிகள் ரயில்கள் ரத்து:
 
1. 76813/ 18 காரைக்கால்- வேளாங்கண்ணி- காரைக்கால் பயணிகள் ரயில்

2. 76814/ 17 வேளாங்கண்ணி- நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி பயணிகள் ரயில்

இந்த இரண்டு ரயில்களும் 04.02.2020, 05.02.2020 மற்றும் 06.02.2020 மூன்று நாட்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு புகையிரத செய்திகள்- तमिलनाडु रेलवे समाचार- Tamilnadu Railway News

1. 𝐓𝐢𝐫𝐮𝐜𝐡𝐜𝐡𝐢𝐫𝐚𝐩𝐩𝐚𝐥𝐥𝐢- 𝐓𝐡𝐚𝐧𝐣𝐚𝐯𝐮𝐫- 𝐓𝐢𝐫𝐮𝐜𝐡𝐜𝐡𝐢𝐫𝐚𝐩𝐩𝐚𝐥𝐥𝐢 '𝐃𝐄𝐌𝐔' 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥

திருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி 'டெமு' சிறப்பு ரயில்:

திருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து நண்பகல் 12:10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 13:30 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

தஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 14:00 மணிக்கு புறப்பட்டு மாலை 15:30 மணிக்கு திருச்சிராப்பள்ளி வந்தடையும்.

2. 𝐌𝐚𝐲𝐢𝐥𝐚𝐝𝐮𝐭𝐡𝐮𝐫𝐚𝐢- 𝐓𝐡𝐚𝐧𝐣𝐚𝐯𝐮𝐫- 𝐌𝐚𝐲𝐢𝐥𝐚𝐝𝐮𝐭𝐡𝐮𝐫𝐚𝐢 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥

மயிலாடுதுறை- தஞ்சாவூர்- மயிலாடுதுறை சிறப்பு ரயில்:

தஞ்சாவூர்- மயிலாடுதுறை சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து காலை 09:45 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் (10:45) வழியாக நண்பகல் 12:00 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.

மயிலாடுதுறை- தஞ்சாவூர் சிறப்பு ரயில் மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 15:20 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் (16:07) வழியாக மாலை 17:30 மணிக்கு தஞ்சாவூர் வந்தடையும்

3. 𝐓𝐢𝐫𝐮𝐯𝐚𝐫𝐮𝐫- 𝐓𝐡𝐚𝐧𝐣𝐚𝐯𝐮𝐫- 𝐓𝐢𝐫𝐮𝐯𝐚𝐫𝐮𝐫 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥

திருவாரூர்- தஞ்சாவூர்- திருவாரூர் சிறப்பு ரயில்:

திருவாரூர்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருவாரூரில் இருந்து அதிகாலை 04:15 மணிக்கு புறப்பட்டு காலை 05:45 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

தஞ்சாவூர்- திருவாரூர் சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து இரவு 21:55 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 23:30 மணிக்கு திருவாரூர் வந்தடையும்.

4. 𝐊𝐚𝐫𝐚𝐢𝐤𝐤𝐚𝐥- 𝐓𝐡𝐚𝐧𝐣𝐚𝐯𝐮𝐫- 𝐊𝐚𝐫𝐚𝐢𝐤𝐤𝐚𝐥 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥

காரைக்கால்- தஞ்சாவூர்- காரைக்கால் சிறப்பு ரயில்:

காரைக்கால்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் காரைக்காலில் இருந்து காலை 09:30 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் (11:00) வழியாக பிற்பகல் 13:00 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

தஞ்சாவூர்- காரைக்கால் சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 14:00 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் (15:30) வழியாக மாலை 17:30 மணிக்கு காரைக்கால் வந்தடையும்.

Sunday, 2 February 2020

N95 - ரக முகமூடிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அதிரடி தடை

N95 - ரக முகமூடிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அதிரடி தடை

கொரோனா வைரஸ் பாதிப்பு அபாயத்தால், உள்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு, N95 ரக முகமூடிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்திருக்கிறது.

மருத்துவ உபகரண தயாரிப்பாளர்கள், தேவைக்கு ஏற்ப மட்டுமே உற்பத்தி செய்வார்கள். தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்திய மருத்துவ உபகரண தயாரிப்பு நிறுவனங்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்தன.

இந்நிலையில், மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காற்றில் பரவும் நுண்கிருமிகளிலிருந்து மக்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் முகக்கவசங்களான என்-95 ரக முகமூடி, உடல் முழுவதும் மூடும் வகையிலான தற்காலிக மருத்துவ உடைகள் உள்ளிட்ட அனைத்து வகை, நோய் முன்தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக, கூறப்பட்டுள்ளது.

Saturday, 1 February 2020

இரவு பணி காவலர்களுக்கு சொந்த செலவில் கொசு பேட் வழங்கிய எஸ்.பி.

இரவு பணி காவலர்களுக்கு சொந்த செலவில் கொசு பேட் வழங்கிய எஸ்.பி.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  அருண் சக்திகுமார் பதவியேற்ற நாளில் இருந்து மாவட்ட அளவில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். சிறிய ஓய்வு நேரங்களை குடும்பத்தினருடன் செலவு செய்யுங்கள் என்று காவலர்களை குடும்ப உறுப்பினர்களை பார்க்க அனுப்பினார். டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை கடந்து மது விற்பனைக்கு தடை, ஏழைகளை வதைத்த லாட்டரிச் சீட்டுகளுக்கு தடை, மணல் திருட்டு முடக்கம் என்று பல்வேறு அதிரடிகளை செய்து மாவட்ட மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். காலை நேரங்களில் வாக்கிங் என்ற பெயரில் ஒரு நாளைக்கு ஒரு பகுதியாக தினமும் 3 கி மீ வரை நகர்வலம். குற்றச் செயல்கள் நடக்கும் பகுதிக்கு நகர் வலம் சென்று வருவதால் அடியோடு மறைந்தது.

இந்தநிலையில் தான் இரவில் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றி வந்தவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முக்கிய இடங்களில் இரவு நேர பணியில் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அந்தந்த பகுதியில் பணியில் இருக்கும்போது கொசு தொல்லையால் அதிகம் அவதிப்பட்டு வந்தனர். 
 

இரவு காவலில் கண்விழ்த்திருப்பவர்களுக்கு கொசுக்கடி பெரிய சவாலாக இருப்பதை நேரில் பார்த்து உணர்ந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், தனது சொந்த செலவில் ரூபாய் 800 மதிப்புள்ள 50 எலெக்ட்ரானிக்  கொசு பேட்களை  வாங்கித் இரவு காவலுக்குச் செல்லும் காவலர்களுக்கு வழங்கியுள்ளார்.

 
எங்களின் மனநிலையை அறிந்து கொசுக்கடியால் அவதிப்படுவதைப் பார்த்து மனிதநேயத்தோடு எஸ்.பி. கொசு பேட் சொந்த பணம் ரூ 40 ஆயிரம் செலவு செய்து வாங்கி கொடுத்திருக்கிறார்.  இதனால் இரவு பணியில் உள்ள காவலர்கள்  மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றனர் நெகிழ்ச்சியோடு.
 

ஒவ்வொரு உயர் அதிகாரியும் தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் நிலையை உணர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக உள்ளது.