Monday, 9 September 2019

மேட்டூர் அணையில் இருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்...

மேட்டூர் அணையில் இருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்...
மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ராஜசாகர் மற்றும் கபிணி அணை ஏற்கனவே நிரம்பிவிட்டதால், அணைக்கு வரும் நீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நேற்று 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மேட்டூர் அணைக்கு 60 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
ஏற்கனவே அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால், அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
60 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், இரு கரைகளையும் அணைத்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
திருச்சி முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 38 மதகுகள் வழியாக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கல்லணைக்கு 33 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார்.
கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டிலேயே அதிகளவில் ஒடிசா லாரி டிரைவருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் அபராதம்

நாட்டிலேயே அதிகளவில் ஒடிசா லாரி டிரைவருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்
அபராதம்
நாட்டிலேயே அதிகளவில் ஒடிசா லாரி டிரைவருக்கு பல விதிகளை மீறியதற்கு அவருக்கு மொத்தம் ரூ.86 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

புவனேசுவரம்:

அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனங்கள் ஓட்டியும், சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனங்கள் ஓட்டியும் விபத்துக்கள் நேரிடுகின்றன.

இந்த விபத்துக்களை தடுக்கும் நோக்கத்தில் அபராதங்களை பல மடங்கு உயர்த்தி, மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் செய்தது.

இதை ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதள அரசு அமல்படுத்தி உள்ளது.

அங்கு சம்பல்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றங்களுக்காக, அசோக் ஜாதவ் என்ற லாரி டிரைவருக்கு நாட்டிலேயே அதிகபட்சமாக ரூ.86 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

அவர் தன்னோடு இருந்த கிளனரை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்கு அபராதம் ரூ.5 ஆயிரம், அவர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.5 ஆயிரம், அளவுகடந்து சுமை ஏற்றியதற்காக ரூ.56 ஆயிரம் இப்படி பல விதிகளை மீறியதற்கு அவருக்கு மொத்தம் ரூ.86 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தகவலை சம்பல்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரி லலித் மோகன் பெஹேரா வெளியிட்டுள்ளார்.

ஆனால் டிரைவர் அசோக் ஜாதவ் உடனே அபராதம் முழுவதையும் செலுத்தி விடவில்லை. அவர் அதிகாரிகளிடம் 5 மணி நேரத்துக்கு மேலாக மல்லு கட்டி கடைசியாக ரூ.70 ஆயிரம் செலுத்தி விட்டு லாரியை நகர்த்தி இருக்கிறார்.