Tuesday, 28 June 2016

கலாம் நண்பர்கள் இயக்கம்

  கலாம் ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

அன்று

 நமது கலாம் நண்பர்கள் இயக்கம்  தமிழகம் முழுவதும்

          கலாம் நண்பர்கள்
  🚨அவசர இரத்த சேவை 🚨
*இலவச நம்பர் ஐயாவின் நினைவு இடத்தில் வெளியிட உள்ளோம்* ...

அவசர இரத்த தேவைக்கு போராடுபவர்களுக்கு இரத்த கொடையாளர்கள் நாம் அனைவரும்  இனைந்து கை கொடுப்போம்..

இரத்த கொடையாளர்களே !
 
    கீழே உள்ள
சொடுக்கியை தொட்டு உங்கள்  விபரத்தை பதிவு செய்து இனைந்து கொள்.

http://goo.gl/forms/jMr1xWZYlIX1qcbb2

வா நண்பா !
    ஜாதி , மதங்களை ,உடைத்து ஏரிய கூடிய இரத்த சேவையை தமிழகம் மூழுவதும் சிறப்பான முறையில் நிலைநாட்டுவோம்..

நண்பனிடம் ,
நன்றி சொல்லி முடிக்க மாட்டோம் "
வணக்கம் சொல்லி
துவங்குவோம் '

வாழ்த்துகள் சேவை பணி சிறக்க.

இப்படிக்கு
உன் நண்பன்

கலாம் நண்பர்கள்
தமிழ்நாடு

Sunday, 26 June 2016

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!
இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தையை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம்கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின்,ஆகியவை கிடைக்கிறது.இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும்
ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகைப் பொருள்கள் இவைகளை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதையே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள் ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?..... வாழ்க வளமுடன்....... நண்பர்களே....

Friday, 24 June 2016

பதில் சொல்ல முடியாத டயலாக்ஸ்

பதில் சொல்ல முடியாத டயலாக்ஸ்

1.படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன்

2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]

3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ]

4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் ]

5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் ]

6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் ]

7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]

8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ]

9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ]

10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் ]

Tuesday, 21 June 2016

வரலாற்றில் இன்று 21.06.2016

வரலாற்றில் இன்று....... 21.06.2016
நிகழ்வுகள்
1621 – பிராக் நகரில் 27 உயர்குடி செக் இனத்தவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1734 – கியூபெக்கில் மொண்ட்றியால் நகரில் மரீ-ஜோசெப் அஞ்சலிக் என்ற கறுப்பின அடிமைப்பெண், அவளது எசமானின் வீட்டைத் தீயிட்டுக் கொழுத்தியமைக்காகவும், அதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டு மக்கள் மத்தியில் சித்திரவதை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டாள்.
1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது.
1798 – ஐரியத் தீவிரவாதிகளின் எழுச்சி பிரித்தானியாவினால் முறியடிக்கப்பட்டது.
1898 – குவாம் தீவை ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் டொப்ரூக் நகரம் இத்தாலி, மற்றும் ஜெர்மனியப் படைகளிடம் வீழ்ந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுற்றது.
1970 – பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
  1990 – மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
1999 – அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்டது.
2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
2004 – விண்கப்பல் ஒன்று (SpaceShipOne) தனது முதலாவது தனியாரினால் ஆதரவளிக்கப்பட்ட விண்பயணத்தை முடித்துக்கொண்டது.
2006 – புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.
பிறப்புகள்
1905 – ஜான் பவுல் சாட்டர், பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவவாதி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1980)
1947 – ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர்
1953 – பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
இறப்புகள்
1970 – சுகர்னோ, இந்தோனீசியாவின் அதிபர் (பி. 1901)
2001 – கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (பி. 1918)
சிறப்பு நாள்
உலக இசை தேசிய
கனடா – தேசிய பழங்குடிகள் நாள்
கிறீன்லாந்து – தேசிய நாள்
பன்னாட்டு யோகா நாள்

டெல்லி - வாரணாசிக்கு புல்லட் ரயில் சேவை

டெல்லி - வாரணாசிக்கு புல்லட் ரயில் சேவை

இந்தியாவின் முதல் புல்லட் ரயில், மும்பை --> அகமதாபாத் நகருக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2வது அதிவேக புல்லட் ரயில் திட்டம் டெல்லி --> வாரணாசிக்கும் இடையே செயல்படவுள்ளது, இந்த ரயில் திட்டம் அலிகார், ஆக்ரா, கான்பூர், லக்னோ, சுல்தான்பூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்த திட்டம் செயல்பாட்டு வரும் போது டெல்லி - வாரணாசி இடையேயான 782 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரம் 40 நிமிடத்தில்  கடக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ₹43 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று -20.06.2016

வரலாற்றில் இன்று -20.06.2016
நிகழ்வுகள்
1631 – பால்ட்டிமோர் என்ற ஐரிய ஊர் அல்ஜீரிய கடற்கொள்ளைக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது.
1756 – கல்கத்தாவில் நவாப்புகளினால் பிரித்தானியப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
1791 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனும் அவனது குடும்பமும் வரெனெஸ் நகருக்குத் தப்பியோடினர்.
1837 – விக்டோரியா பிரித்தானியாவின் அரசியாக முடி சூடினார்.
1858 – இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 முடிவுக்கு வந்தது.
1862 – ருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.
1863 – மேற்கு வேர்ஜீனியா ஐக்கிய அமெரிக்காவின் 35வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.
1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார்.
1900 – பொக்சர் படைகள் பீக்கிங்கில் நூற்றுக்கணக்கான ஐரோப்பியர்களைக் கொன்றனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன் கடல் சமர் அமெரிக்கக் கடற்படையின் பெருவெற்றியில் முடிவடைந்தது.
1960 – மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன.
1978 – கிறீசில் 6.5 றிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது.
1990 – யூரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1991 – ஜெர்மனியின் தலைநகரம் பொன் இலிருந்து பேர்லினுக்கு மீண்டும் மாற்ற பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.
2001 – பாகிஸ்தானின் அதிபராக பெர்வேஸ் முஷாரஃப் பதவியேற்றார்.
2003 – விக்கிமீடியா அமைப்பு உருவானது.
பிறப்புகள்
1861 – ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (இ. 1947)
1939 – ரமாகாந்த் தேசாய், இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 1998)
1941 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (இ. 2011)
1952 – விக்ரம் சேத், இந்திய எழுத்தாளர்
1954 – அலன் லேம்ப், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1967 – நிக்கோல் கிட்மேன், ஆத்திரேலிய-அமெரிக்க நடிகை
1971 – ஜோஷ் லுகாஸ், அமெரிக்க நடிகர்
1978 – பிராங்கு லம்பார்டு, ஆங்கிலேய காற்பந்து வீரர்
1984 – நீத்து சந்திரா, இந்திய நடிகை
இறப்புகள்
656 – உதுமான், முசுலிம் காலிப் (பி. 577)
1837 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் (பி. 1765)
1966 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1894)
1971 – மகாகவி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (பி. 1927)
2005 – ஜாக் கில்பி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1923)
2006 – சுரதா, தமிழகக் கவிஞர்
சிறப்பு நாள்
உலக அகதிகள் நாள்
ஆர்ஜெண்டீனா – கொடி நாள்

Monday, 20 June 2016

WHATSAPP TIPS

*WhatsApp*-ல் புதிதாக சில எழுத்துருக்களைப் பயன்படுத்தும்படி அதன் நிரல்மூலத்தை மாற்றி அமைத்ததுள்ளனர்.

இது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்சாப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. 

அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்போது நான் இங்கு விளக்கப் போகிறேன்.

*தடிப்பெழுத்து :* சொற்களுக்கு முன்னும் பின்னும் விண்மீன் குறியைச்  (*) சேர்த்தால், அந்தச் சொற்கள் தடிப்பானத் தன்மையைப் பெறும்.
எ.கா:
*balabarathi *  * பாலபாரதி * என்று எழுதினால்
*balabarathi  பாலபாரதி*என்று தடிப்பாகத் தோன்றும்.

• _சாய்வெழுத்து :_ சொற்களுக்குமுன்னும் பின்னும் அடிக்கோட்டைச் (_) சேர்த்தால் அந்தச் சொல் சாய்வாகத் தோன்றும்.
எ.கா. _பாலபாரதி _ என்று எழுதினால் 
_பாலபாரதி_ என்று சாய்வாகத் தோன்றும்.

• ~நடுக்கோடு :~ சொற்களுக்கு முன்னும் பின்னும் ‘தில்டே’ எனும் குறியைச் (~) சேர்த்தால் அந்தச் சொல் நீக்கப்படவேண்டிய சொல்லைப்போல் நடுக்கோட்டுடன் தோன்றும். எ.கா. ~ பாலபாரதி~ பாலா என்று எழுதினால், ‘பாலபாரதி’ எனும் சொல் நீக்கப்பட்டு 'பாலா' என்று எழுதப்பட்டதைப்போலத் தோன்றும் : ~பாலபாரதி~ பாலா

வார்த்தைகளுக்கு மட்டும் அல்ல, வாக்கியங்களுக்கு முன் பின்னும் இதனை சேர்ப்பதால் எழுத்துருக்களில் மாற்றம் கொண்டுவர முடியும்.

இதனைக் கொண்டு நாம் *குறிப்பிட்டு காட்டவேண்டிய வார்த்தைகளை* அப்படியே காட்டலாம்.

உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

*நன்றி*

Saturday, 18 June 2016

ABCD

AB க்கு போர் அடிச்சா என்ன செய்யும்?
CD போட்டு பாக்கும்...
EF க்கு உடம்பு சரியில்லைனா எங்க போகும்?
GH க்கு போகும்..
IJKL க்கு எனிமி யாரு?
MN (எமன்) தான்...
OP ரேசனுக்குப்போனா ?
Q ல தான் நிக்கும்...
RS க்கு தலை வலிச்சா?
T குடிக்கும்...
UVWXY க்கு பறக்கனும்னா?
Z (ஜெட்)ல போகும்.
அவ்வளவு தாங்க இந்த ABCD ... புரிஞ்சுதா

Saturday, 11 June 2016

11.06.2016 மூத்தோர் வார்த்தை

இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.

- மகாகவி பாரதியார்.

Friday, 10 June 2016

குப்பை வண்டி விதி - The Law of the Garbage Truck

💠 குப்பை வண்டி விதி - The Law of the Garbage Truck💠

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி 🚖டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே 🚞 ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி  திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு ✋ டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.

ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.

அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

👍 வாழ்க்கை என்பது
10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொறுத்தது.
90% நாம் எப்படி
எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

➖➖➖➖➖➖➖➖
படித்ததில் பகிர்வது
➖➖➖➖➖➖➖➖

🌼🌼🌼மூத்தோர் வார்த்தை

இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.

- பிரேண்டர்ஜான்சன்.

மூத்தோர் வார்த்தை

இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.

- பிரேண்டர்ஜான்சன்.

Thursday, 9 June 2016

நிலையற்றது சிற்றின்பம். நிரந்தரமானது பேரின்பம்.

படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.
படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.

படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.
படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.

படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.

என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.

நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.
நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.

அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.

செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.

செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.
செய்வது  இறைவன் என எண்ணினால் பேரின்பம்.

புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.

இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.

நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.
நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.

உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.
உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.

இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.
துன்பம் போல்  அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.

எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.

பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.

பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.

சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.

பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.

அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.
அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.

அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.

அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.
அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.

பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.
பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.

முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.

இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.
கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.

உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.
உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.

புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.
புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.

மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.
மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.

மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.
மரணத்தையும் வெல்வது பேரின்பம்.

மனமாய் இருந்தால் சிற்றின்பம்.
மனதைக் கடந்தால் பேரின்பம்.

வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.
எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.

பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.
மொத்தமாய் கண்டால் பேரின்பம்.

அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.
அகங்காரம் துறந்தால் பேரின்பம்.

தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.
அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.

ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.
ஆண் பெண்ணை  வணங்குவது பேரின்பம்.

துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.
துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.

ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.
இறைவனால் தரப்படுவது பேரின்பம்.

உலகைப் பற்றினால் சிற்றின்பம்.
இறைவனைப் பற்றினால் பேரின்பம்.

பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.
தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.

இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.
இன்பமான இன்பமே பேரின்பம்.

அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.
ஞானம் விரும்புவது பேரின்பம்.

பெற்று மகிழ்வது சிற்றின்பம்.
கொடுத்து மகிழ்வது பேரின்பம்.

சக்தியை இழப்பது சிற்றின்பம்.
சக்தியாய் மாறுவது பேரின்பம்.

பற்றுக் கொள்வது சிற்றின்பம்.
பற்றற்று இருப்பது பேரின்பம்.

மாறுவது, தாவுவது சிற்றின்பம்.
மாறாதது நிலைத்தது பேரின்பம்.

நிலையற்றது சிற்றின்பம்.
நிரந்தரமானது பேரின்பம்.