Saturday, 30 April 2016

சட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும்!

சட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும்!

குடிகள் 8
ஆலங்குடி
மன்னார்குடி
பரமக்குடி
காரைக்குடி
தூத்துக்குடி
லால்குடி
திட்டக்குடி
குடியாத்தம்

புரங்கள் 8
காஞ்சிபுரம்
விழுப்புரம்
சங்கராபுரம்
ராசிபுரம்
தாராபுரம்
கிருஷ்ணராயபுரம்
ராமநாதபுரம்
பத்பநாமபுரம்

கோட்டைகள் 6
நிலக்கோட்டை
அருப்புகோட்டை
புதுக்கோட்டை
பாளையங்கோட்டை
பட்டுக்கோட்டை
கந்தர்வக்கோட்டை

மங்கலம் 5
கண்டமங்கலம்
தாரமங்கலம்
சேந்தமங்கலம்
சத்யமங்கலம்
திருமங்கலம்

பேட்டை 5
சைதாப்பேட்டை
ராணிப்பேட்டை
உளுந்தூர்ப்பேட்டை
உடுமலைப்பேட்டை
ஜோலார்ப்பேட்டை

பாளையம் 5
மேட்டுபாளையம்
குமாரபாளையம்
ராஜபாளையம்
கோபிசெட்டிபாளையம்
கவுண்டம்பாளையம்

நகர்கள் 5
அண்ணாநகர்
விருதுநகர்
திருவிகநகர்
தியாகராயநகர்
ராதாகிருஷணன்நகர்

நல்லூர் 5
சிங்காநல்லூர்
சோளிங்கநல்லூர்
மணச்சநல்லூர்
கடையநல்லூர்
வாசுதேவநல்லூர்

கோவில்கள் 4
வெள்ளக்கோவில்
சங்கரன்கோவில்
நாகர்கோவில்
காட்டுமன்னார்கோவில்

குளங்கள் 4
பெரியகுளம்
ஆலங்குளம்
மடத்துக்குளம்
விளாத்திகுளம்

பாக்கம் 4
சேப்பாக்கம்
அச்சரப்பாக்கம்
கலசப்பாக்கம்
விருகம்பாக்கம்

4 அறுபடைவீடு
பழநி
திருத்தணி
திருபரங்குன்றம்
திருசெந்தூர்

பாடிகள் 4
காட்பாடி
குறிஞ்சிப்பாடி
எடப்பாடி
வாணியம்பாடி

பட்டிகள் 4
ஆண்டிப்பட்டி
கோவில்பட்டி
உசிலம்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி

துறைகள் 4
பெருந்துறை
மயிலாடுதுறை
துறைமுகம்
துறையூர்

கிரிகள் 3
புவனகிரி
சங்ககிரி
கிருஷ்ணகிரி

குறிச்சிகள் 3
மொடக்குறிச்சி
அரவக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

கோடுகள் 3
திருச்செங்கோடு
விளவங்கோடு
பாலக்கோடு

வேலூர் 3
வேலூர்
பரமத்திவேலூர்
கீழ்வேலூர்

மலைகள் 2
விராலிமலை
அண்ணாமலை

கல் 2
நாமக்கல்
திண்டுக்கல்

பாறைகள் 2
வால்பாறை
மணப்பாறை

காடுகள் 2
ஆற்காடு
ஏற்காடு

வாக்கம் 2
புரசைவாக்கம்
வில்லிவாக்கம்

கோணம் 2
கும்பகோணம்
அரக்கோணம்

பூண்டிகள் 2
திருத்துறைப்பூண்டி
கும்மிடிபூண்டி

பரங்கள் 2
சிதம்பரம்
தாம்பரம்

வரம் 2
மாதவரம்
பல்லாவரம்

வேலிகள் 2
திருநெல்வேலி
நெய்வேலி

காசி 2
தென்காசி
சிவகாசி

ஆறுகள் 2
செய்யாறு
திருவையாறு

ஏரிகள் 2
பொன்னேரி
நாங்குநேரி

குப்பம் 2
கீழ்வைத்தான்குப்பம்
நெல்லிக்குப்பம்

பவானி 2
பவானி
பவானிசாகர்

மதுரை 2
மானாமதுரை
மதுரை

ஒரே பட்டினம்
நாகபட்டினம்

ஒரே சமுத்திரம்
அம்பாசமுத்திரம்

நல்லநிலம்
நன்னிலம்

ஒரே கன்னி
கன்னியாகுமரி

ஒரே மண்டலம்
உதக மண்டலம்

ஒரே நாடு
ஒரத்தநாடு

ஒரே புரி
தர்மபுரி

ஒரே சத்திரம்
ஓட்டன் சத்திரம்

ஊர்கள் பல
திருபோரூர்
கூடலூர்
வானூர்
அரியலூர்
உளுந்தூர்
மேலூர்
தஞ்சாவூர்
சாத்தூர்
முதுகுளத்தூர்
திருவாரூர்
ஆலந்தூர்
செய்யூர்
உள்பட
40க்கு மேல்

Friday, 29 April 2016

மன்னித்துவிடு..

மன்னித்துவிடு..
உனது மன அமைதியில் கல்லெறிந்து விளையாடிய அத்தனை பேரையும் மன்னித்து விடு. அவர்கள் மன்னிப்பு கேட்டதால் அல்ல... அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்காகவுமல்ல. அவர்கள் தந்த வலிகள் மறைந்துபோனதாலும் அல்ல.!
மன்னித்துவிடு ஏனெனில் மன்னிப்பை கொடுத்து விட்டு தான் உன்னால் முன்னோக்கி நகர முடியும்.. வைராக்கியம் கலக்காமல் மூச்சு விட முடியும்.. வாழ்க்கை என்றும் தலையை தடாவி பாடம் கற்றுத்தருவதில்லை.. தலையில் அடித்து கற்பிக்கும் பாடங்கள் மிகுந்த பெறுமதியானவை.. அந்த பாடங்களை கற்க காரணமாக இருந்தவர்களை மன்னித்துவிடு..
மன்னிப்பு உனது மன முதிர்ச்சியை காட்டுகிறது. அது உனது பண்பை பிரதிபலிக்கிறது. அவர்களை காலம் ஒரு கை பார்க்கட்டும்.. நீ விட்டு தூர வந்து விடு.. மன்னித்துவிடு .!
- வாழ்வை துவங்கு!

படித்ததில் பிடித்தது..,

Thursday, 28 April 2016

தண்ணீரை கொண்டு வா !"

நள்ளிரவு நேரம். கடலில் ஒரு படகு
போய்க் கொண்டிருந்தது அதில்
ஒரு இந்தியர் ஒரு அமெரிக்கன் ஒரு சைனாக்காரன் பயணம் செய்து
கொண்டிருந்தார்கள். 

திடீரென்று
ஒரு பேய் படகில் வந்து குதித்தது.

மூன்று பெரும் நடுங்கி
போனார்கள். பேய் தன் கோரமான பல்
வரிசையை காட்டி சிரித்தது.
"

உங்கள் மூன்று பேர்களையும்
சாப்பிட போகிறேன்" என்றது.

மூன்று பேரும் தங்களுடைய
உயிர்களை காப்பாற்றிக் கொள்ள
பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால்

பேய் ஒரு நிபந்தனை விதித்தது.

உங்களில் ஒருவனாவது
புத்திசாலியாக இருந்தால் உயிர்
பிச்சை கொடுப்பேன். அதை
நிரூபிக்க இப்போது ஒரு
சோதனை. நீங்கள் மூன்று பேரும்
ஒவ்வொருவராய் கடலில்
எதையாவது தூக்கி
போடவேண்டும். அதை நான்
எடுத்து வந்து விட்டால் நீங்கள்
தோற்று போனதாய் அர்த்தம்."

மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்:

முதலாவதாக  அமெரிக்கன்  தன் கையில்
போட்டிருந்த மோதிரத்தை எடுத்து
கடலில் வீசினான். பேய் உடனே
கடலில் குதித்து அதைத் தேடி
எடுத்து வந்தது.

இரண்டாவதாக சைனாக்காரன் தன் கழுத்தில்
இருந்த செயினை கழற்றி கடலில்
வீசினான். பேய் அதையும் தேடி
பிடித்து கொண்டு வந்து
கொடுத்தது.
பேய் சிரித்தது.
"
இரண்டு பேர் தோற்று விட்டார்கள்.

இனி மீதி இருப்பது நீ மட்டும் தான்.

நீ எதை வீசப் போகிறாய்..?"

உடனே இந்தியன் தன்னிடம்
இருந்த
குடி தண்ணீர் பாட்டிலை
எடுத்து, அந்த கடலில் கொட்டி
விட்டு
"
இந்த தண்ணீரை கொண்டு வா !"
என்றான்.

பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.

நீதி: இந்த கதையின் நீதி
என்னவென்றால்
பேய்'க்கே தண்ணி
காட்டுபவர்களும் இந்த உலகத்தில்
இருக்கிறார்கள்..! என்பது தான்.!

Wednesday, 27 April 2016

தத்துவம்

சோம்பி கிடப்பதால் ஒன்றும் மாற போவதில்லை, எழுந்து நட...
உன்னையே நீ வெற்றி கொள்ளலாம் ....இனிய காலை வணக்கம்..
🌤

Tuesday, 26 April 2016

உணவே மருந்து- சோற்றுநீரை (நீராகாரத்தை)


உணவே மருந்து- சோற்றுநீரை (நீராகாரத்தை) 

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். 

முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். 
காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்..? 

ஒரு பழமொழி பதில் சொல்கிறது....

ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். 

அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். 

சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

மரம் வளர்ப்பேம்

பரப்பி வருகிறோம்...
தயவுச் செய்து இச் செய்தியை உங்கள் நட்பு வட்டத்தில் பரப்பவும், அவர்களையும் அவர்களது நண்பர்களிடத்திலும் பரப்பச் சொல்லவும்.

மிக மிக முக்கியமான செய்தி:

சில முக்கிய இந்திய நகரங்களின் பதிவான உச்ச வெப்பநிலை:
லக்னௌ: 47° C
டில்லி: 47° C
ஆக்ரா: 45° C
நாக்பூர்: 46° C
கோட்டா: 48° C
ஹைதராபாத்: 45° C
பூணே: 42° C
அஹ்மதாபாத்: 42° C

வரும் வருடங்களில் இந் நகரங்களின் வெப்பநிலை 50° C ஐ தாண்டும். ஏ.சி.யோ, இல்லை மின் விசிறியோ வரும் வெயில் காலங்களில் நம்மை காப்பாற்றாது.

ஏன் இவ்வளவு வெப்பம்????

நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் பணியில் சென்ற 10 வருடங்களில் 10 கோடி மரங்களுக்கு மேல் வெட்டிச் சாய்க்கப்பட்டது.

ஆனால் அரசாலோ அல்லது பொது மக்களாலோ ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் நடப்படவில்லை.

நமது இந்திய நாட்டை எப்படி குளிர்விக்கலாம்???

அரசு மரங்களை நடும் என காத்திருக்க வேண்டாம்.
மரம் நடுவதற்கோ அல்லது விதைகள் நடவோ அதிக செலவாகாது.

மா, பலா, சீதா, வேம்பு, ஆப்பிள், எலுமிச்சை, நாக மரம் போன்ற பழ மரங்களின் விதைகளை சேகரிக்கவும்.

திறந்த வெளிகளிலோ, சாலை, நடைபாதை, நெடுஞ்சாலை ஓரங்களிலோ, தோட்டங்களிலோ, மேலும் உங்களது குழு அல்லது பங்களாக்களிலோ இரண்டு மூன்று அங்குல ஆழத்திற்கு துளையிடுங்கள்.

சேகரித்த விதைகளை ஒவ்வொரு துளையிலும் புதைத்து விட்டு இரு தினங்களுக்கு ஒரு முறை இக் கோடைக்காலத்தில் நீர் விட்டு வரவும்.ا

மழைக்காலத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை.

15 முதல் 30 நாட்களுக்குள் சின்ன சின்ன செடிகள் முளைத்து வளரும்.م

அவைகளை பராமரித்து பெரியதாக வளரச்செய்யுங்கள்.

நாம் இதனை தேசிய வேள்வியாக முன்னெடுத்துச் செல்வோம். இந்தியா முழுவதிலும் 10 கோடி மரங்களை நடுவோம்.ا

50° C வெப்பநிலை அடைவதை தவிற்போம்...

அதிக எண்ணிக்கையில் மரங்களை நடவும். மேலும் இச்செய்தியை எல்லோரிடத்திலும் பரவச் செய்யவும். விசேஷங்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் பரிசுப் பொருட்களாக மரக் கன்றுகளை வழங்கி நடச் செய்வோம்.م

அதிகமாக பகிர்வு செய்யவும் . மரம் பற்றிய விழிப்புணர்வு தேவை

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...???

நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...
சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....
ஆரணி&களம்பூர் உலகதரம் வாய்ந்த  அரிசி (திமலை மாவட்டம்)
கோயமுத்தூர் - மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன்
திருநெல்வேலி - அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
பண்ருட்டி - பலாப்பழம்
மார்த்தாண்டம் - தேன்
பவானி - ஜமுக்காளம்
உசிலம்பட்டி - ரொட்டி
நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்
பொள்ளாச்சி - தேங்காய்
ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து மணிகள்
வேதாரண்யம் - உப்பு
சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
சாத்தூர் - காராசேவு, மிளகாய்
மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
திருப்பதி - லட்டு
மாயவரம் - கருவாடு
திருப்பூர் - பனியன், ஜட்டி
உறையூர் - சுருட்டு
கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
தர்மபுரி - புளி, தர்பூசணி
ராஜபாளையம் - நாய்
தூத்துக்குடி - உப்பு
ஈரோடு - மஞ்சள், துணி
தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
பெல்லாரி - வெங்காயம்
நீலகிரி - தைலம்
மங்களூர் - பஜ்ஜி
கொல்கத்தா - ரசகுல்லா
ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
காரைக்குடி - ஓலைக்கூடை
செட்டிநாடு - பலகாரம்
திருபுவனம் - பட்டு
குடியாத்தம் - நுங்கு
கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்
ஆலங்குடி - நிலக்கடலை
கரூர் - கொசுவலை
திருப்பாச்சி - அரிவாள்
காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
மைசூர் - சில்க், பத்தி, சந்தனம்
நாகப்பட்டினம் - கோலா மீன்
திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்
பத்தமடை - பாய்
பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
மணப்பாறை - முறுக்கு, மாடு
உடன்குடி - கருப்பட்டி
கவுந்தாம்பட்டி - வெல்லம்
ஊத்துக்குளி - வெண்ணெய்
கொடைக்கானல் - பேரிக்காய்
குற்றாலம் - நெல்லிக்காய்
செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா
சங்கரன் கோவில் - பிரியாணி
அரியலூர் - கொத்தமல்லி
சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
பாண்டிச்சேரி - ஒயின், மதுபானங்கள்
திருச்செந்தூர் - கருப்பட்டி
குளித்தலை - வாழைப்பழம்
காஷ்மீர் - குங்குமப்பூ
ஆம்பூர் - பிரியாணி
ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய், தக்காளி
ஓசூர் - ரோஜா
நாமக்கல் - முட்டை
பல்லடம் - கோழி
உடுப்பி - பொங்கல்
குன்னூர் - கேரட்
பாலக்காடு - பலாப்பழம்...
 ஆற்காடு - மக்கன்பீடா
 வாணியம்பாடி - தேனீர்

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து
சூத்திரங்கள்:

1.உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள்
எல்லாவற்றையும் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல,
தப்பித்தவறி கூட அதே தவறை
இன்னொருவருக்கு
செய்துவிடக்கூடாது.

2.யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள்.
அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய
விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.

3.நமக்கு பிடிக்காதவாரகவே
இருந்தாலும் அவரின்
சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து
சொல்லிவிட்டு செல்லுங்கள்.

4.'என்ன வாழ்க்கைடா இது' என்று
நினைப்பதை விட,
'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று
எண்ணி
வாழுங்கள்..

5.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற
எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள்.. அது
தாழ்வு
மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

6.நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால்
சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ
பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான
அன்பு
என்பது அதுதான்..

7.சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை
சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய
வாய்ப்புகள் தேடி வரும்..

8.பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம்
சிந்தியுங்கள்..
உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக்
கொள்ள முடியுமா என்று..

9. எதிரே வருபவரின் தகுதியை பாராமல்
சிறு புன்னகை
உதித்தபடி கடந்து செல்லுங்கள்..

10.உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச்
செல்கிறார் என்றால் அமைதியாக
ஒதுங்கிவிடுங்கள்.
👍

வாரியாரின் கற்பூர கதை


பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.

தேங்காய் பேச ஆரம்பித்தது: ”நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!” என்றது.

அடுத்து வாழைப்பழம், ”நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டது.

கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.

பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது.

பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம்.

ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்

Thursday, 21 April 2016

அண்ணன் & தம்பி

பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்று கொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.
சிறுவன் முகத்தில் வியப்பு.
“உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம்
என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார்.
சிறுவன் சொன்னான், "இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்".

Tuesday, 19 April 2016

Screen Lock செய்து வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஓர் பயனுள்ள தகவல்

   Screen Lock செய்து வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஓர் பயனுள்ள தகவல்:-

நாம் விபத்தில் சிக்கியிருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவர்களின் உறவினர் அல்லது பெற்றோர்க்கு அதே போனில் இருந்து தகவல் அளிக்கலாம்...

உங்கள் போனில் செய்யவேண்டியது இதுதான்...
போனில் உள்ள contacts ல் grops என்ற option இருக்கும்... அதை ஓபன் செய்து அதில் ICE-Emergency contacts ல் உங்கள் பெற்றோர் சகோதரர் உறவினர் உள்ளிட்ட நெருக்கமானவர்களின் எண்களை save செய்து கொள்ளுங்கள்...

உங்கள் போன் லாக்கில் இருக்கும் போது லாக்கின் கீழே emergency calls-ஐ க்ளிக் செய்தால் number pad open ஆகும்.. அதில் உள்ள contact symbolஐ க்ளிக் செய்தால் நீங்கள் save செய்திருக்கும் எண்கள் வரும். அந்த எண்ணிற்கு அந்த மொபைலில் இருந்தே call பண்ண முடியும்...
இதையும் தெரிந்து கொள்வதோடு இவ்வாறு செய்து வைத்துக் கொள்ளுங்கள்...
அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும்...(முக்கியம் அனைவருக்கும் பகிரவும்)

இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !!💐💐💐

நகைச்சுவை 2 19.4.16

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..

          ஏன் தெரியுமா?
          "பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..

          இப்படிக்கு
          Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
  ||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||
||||||||||||
   அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
          நானும் அவளைப் பார்த்தேன்..
         அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
          நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

         இப்படிக்கு
          பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
          திருதிரு வென முழிப்போர் சங்கம
|||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||||
|||||||||||||
   காதல் One Side -ஆ பண்ணினாலும்
          Two side-ஆ பண்ணினாலும்
          கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

         இப்படிக்கு
         காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
|||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||
|||||||||||||
          அனுமதி கேட்க்கவும் இல்லை...

          அனுமதி வழங்கவும் இல்லை...

          ஆனால்

          பிடிவாதமாக ஒரு முத்தம்..

          "கன்னத்தில் கொசுக்கடி"

          இப்படிக்கு
          புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||||||
           கிரிக்கெட்டில்
           ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

          ரயிலில்
          டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

          வீட்டில்
          கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

          நீங்க‌
          இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
          நான் மூடு அவுட்

         இப்படிக்கு
         பாசக்கார பய புள்ளைங்க சங்கம்.
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
செருப்பு இல்லாம
நாம நடக்கலாம்...
ஆனா,
.
நாம இல்லாம
செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள்
கிடையாது )
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
இட்லி மாவை வச்சு
இட்லி போடலாம்....
சப்பாத்தி மாவை வச்சு
சப்பாத்தி போடலாம்...
ஆனா,
கடலை மாவை வச்சு
கடலை போட முடியுமா?
--- ராவெல்லாம் முழிச்சு
கெடந்து யோசிப்போர் சங்கம்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
என்னதான் மனுசனுக்கு
வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம்
இருந்தாலும்...
ரயில் ஏறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு
வந்துதான் ஆகனும்...
இதுதான் வாழ்க்கை
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
என்னதான்
பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா,
ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,
என்னதான் பசங்க
வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர்,
ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
பஸ் ஸ்டாண்ட்ல
பஸ் நிக்கும்...
ஆட்டோ ஸ்டாண்ட்ல
ஆட்டோ நிக்கும்...
சைக்கிள் ஸ்டாண்ட்ல
சைக்கிள் நிக்கும்...
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல
கொசு நிக்குமா ??
யோசிக்கனும்............ ...!!
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங்
காலேஜ்ல படிச்சா
இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா, பிரசிடன்சி
காலேஜ்ல படிச்சா
பிரசிடன்ட் ஆக முடியுமா?
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு
பேர் இருந்தாலும் ,
மேன்யுவலாத்தான் (manual) டிரைவ்
பண்ண முடியும் .
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா
தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல்
வராது !
(என்ன கொடுமை சார் இது !?!)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்
ஆனா.......
அதை வச்சு ரோடு
போட முடியாது!
(ஹலோ ! ஹலோ !!!!)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 5:
பல்வலி வந்தால்
பல்லை புடுங்கலாம்...
ஆனா கால்வலி வந்தால்
காலை புடுங்க முடியுமா..??
இல்லை தலைவலி வந்தால் தலையைதான்
புடுங்க முடியுமா?
(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 6:
சன்டே அன்னைக்கு
சண்டை போட முடியும்..
அதுக்காக,
மன்டே அன்னைக்கு
மண்டைய போட முடியுமா ?
(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
பில் கேட்ஸோட
பையனா இருந்தாலும்...
கழித்தல் கணக்கு போடும்போது, கடன்
வாங்கித்தான் ஆகனும்.
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
பேக் வீல் எவ்வளவு
ஸ்பீடா போனாலும்...
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் G உலகம்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
T Nagar போனா
டீ வாங்கலாம்...
ஆனால்.....
விருதுநகர் போனா
விருது வாங்க முடியுமா..??
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
என்னதான்
பெரிய வீரனா இருந்தாலும், வெயில்
அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது .
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
இளநீர்லயும்
தண்ணி இருக்கு....
பூமிலயும்
தண்ணி இருக்கு.... .
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும்
முடியாது ,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும்
முடியாது ..
||||||||||||||||||||||||||||||||||
நோ நோ நோ...
நோ பேட் வோர்ஸ்

ஒன்லி பார்வர்ட்ஸ்....

நகைச்சுவை 19.04.16

01. பொண்டாட்டிக்கு இறுதிக்காரியம்
பண்ணிட்டு ஒருத்தர்
வீடு திரும்பிட்டு இருந்தார்.
அப்போ திடீர்னு வானத்துல
இடி இடிசுதாம், மின்னல் வெட்டிச்சாம்.

உடனே நம்ம ஆளு மேல
பாத்து சொன்னானாம்

"அதுக்குள்ளே அங்க ரீச் ஆயிட்டியா நீ"

02. 4 முறை திருமணம் தடைபட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை-செய்தி!!!

4 தடவ கடவுள் காப்பாத்தியும் அஞ்சாவது தடவ மெனக்கெட்டு செத்துருக்கான் பாருங்க.....!!

பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை அதிகம் நேசிக்கிறார்கள்

பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள் !

அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.

முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய்.மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய்.

இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும்.ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள்தங்களது அப்பாவை, அம்மாவை விடஅதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

நேர்மையான நண்பன் தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள்.

பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள். உலகை அறிமுகம் செய்தவர் பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான்
தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும்
கிடைக்கும் பரிசு இது.

கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.

முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், "முடியாது.." என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

காவலன் வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து
அழைத்துவரும் காவலன் அப்பா. காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி
உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா.

ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.சூப்பர் ஹீரோ தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான்.

தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல,அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா
மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், வழிகாட்டி, ஆசான், ஹீரோ, காவலன், என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா.

ஆதலால்தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.