Wednesday, 30 September 2020

கர்வம் :-

கர்வம்.

அடர்ந்த காட்டுப்பகுதியில் குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது. 

அங்குள்ள பொந்து ஒன்றில் வசித்த எலியைக் கண்டதும், 

இரண்டும் பேசிப் பழகின. சிறந்த நண்பர்கள் ஆனார்கள்.

இருந்தாலும் எலி தற்பெருமை அடித்துக் கொள்ளும். 

நான் மிகவும் வலிமையானவன். மண்ணையே துளைத்து வளை அமைத்துவிடுவேன். 

என்னை யாறாலும் ஒன்றும் செய்யமுடியாது. 

பாம்பைக்கூட விரட்டியடித்து விடுவேன்.’ என்று வீண் பெருமை பேசும்.

ஒருநாள் எலியும், 
குதிரையும் கொஞ்சம் தூரத்தில் சென்று மேய்ந்து வர முடிவு செய்தன. 

இரண்டும் பேசிக்கொண்டு நடந்தன. 

அப்போது, 

‘நான்தான் உன்னை வழி நடத்தி செல்வேன். 

நான் சண்டையில் அவனை வீழ்த்தியிருக்கிறேன், 
இவனை வீழ்த்தியிருக்கிறேன்’ 
என்று தம்பட்டம் அடித்துக் கொண்டே முன் சென்றது எலி. 

திடீரென்று எலி நின்றது.

‘ஏன் நின்றுவிட்டாய்? தொடர்ந்து செல்’ என்றது குதிரை.

‘உனக்கு கண் சரியாக தெரியாதா? எதிரே பார் ஆறு ஓடுகிறது, எப்படி கடப்பது?’ என்று கேட்டது எலி.

‘அது ஆறா? சிறிய கால்வாய் தானே இது. எளிதாக கடந்துவிடலாம்’ என்றது குதிரை.

‘குதிரையே இது கால்வாயா? எனக்கு ஆறுபோல்தான் தெரிகிறது,

இறங்கினால் நிச்சயம் தண்ணீர் அடித்துச் சென்றுவிடும், நாம் இரண்டு பேரும் மூழ்கிவிடுவோம்’ என்றது எலி.

குதிரை எலியின் பேச்சை கண்டுகொள்ளாமல் கால்வாயில் இறங்கியது, ‘ஏய் எலியே, என் முழங்கால் அளவு கூட வெள்ளம் இல்லை. 

இதையை நீ ஆறு என்கிறாய், உடனே இறங்கிவா?’ என்றது குதிரை.

‘நண்பா உணக்கு வேண்டுமானால், இது குறைந்த தண்ணீராக இருக்கலாம்.

ஆனால் என் உருவத்திற்கு இது நதிபோல வெள்ளப்பெருக்கு தான். 

தயவு செய்து என்னை உன் முதுகில் ஏற்றி அக்கரையில் விடு. 

நான் என்னைப் பற்றி கர்வத்துடன் பேசியதை மறந்துவிடு’ என்று மன்னிப்புக் கேட்டு அடங்கியது எலி.

‘அப்படிவா, வழிக்கு. 

இனியும் வீண் பெருமை பேசி வாழாதே’

என்று எலியை,  தன் முதுகில் ஏற்றி அக்கரையில் விட்டது குதிரை.

இரண்டும் கர்வமின்றி நண்பர்களாக வாழ்ந்தன.

நாளை ஒரு வாசி யோசி கருத்துக் கதையோடு சந்திப்போம்.

குறள் சொல்லும் நீதி...! உண்மை தெரியாமல் நம்பாதீர்கள்...

குறள் 423: ( உண்மை தெரியாமல் நம்பாதீர்கள்...!)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.

விளக்கம்...!!!
எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், உண்மை எது...? என்பதை ஆராய்ந்து தெளிவது தான் அறிவுடைமையாகும்...

ஆம்.!, கருத்துக் கூறுவோர் எவராக இருந்தாலும், அவர் மீது கொண்ட பற்றின் காரணமாகவோ, மதிப்பின் காரணமாகவோ, புகழ் பெற்றவர், செல்வாக்கு கொண்டவர், உயர்நிலையில் இருப்போர்  என்பதற்காகவோ அவர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்கக் கூடாது...

நெருங்கிய நண்பராயிருப்பவர் ஒருவர், தாழ்ந்த பொருளைக் கூறினும், நட்பு கருதி அதை ஏற்கக் கூடாது...

அதுபோல் பகைவரேயானாலும் சிறப்பான உயர்ந்த பொருளைக் கூறின், அவர்களிடம் உள்ள வெறுப்பால், அதைத் தள்ளி விடாது ஏற்க வேண்டும்...!

சொல்பவர் தரம் நோக்காது உண்மைத் தன்மையை உணர வேண்டும்...!

எத்தகைய செய்தியாக இருந்தாலும், அதனை யார் சொல்லி இருந்தாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அல்லது இகழ்ந்து தள்ளாமல், அதன் உண்மைப் பொருளை ஆராய்வதே அறிவாகும்...

உலகத்தில் ஒட்டி வாழ்ந்தாலும் உண்மைத் தன்மையுடன் இருப்பதே அறிவு...!

ஆம் நண்பர்களே...!

நூலறிவாலும் கேள்வியறிவாலும் பெற்றதை நுணுகிப் பார்த்து உண்மையை அல்லது சரியானது எது என்று பகுத்து அறிந்து கொள்ள வேண்டும்...!

எவரையும் எல்லாம் அறிந்தவராகக் கருதி அவர் சொல்வனவற்றிற்கெல்லாம் அடிமையாகாமல், அவர் கூறும் ஒவ்வொரு கருத்தையும் சீர்தூக்கிப் பார்த்து  மெய்ப்பொருள் காண வேண்டும்...!!

-

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.


உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு  பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக, அத்வானி உள்ளிட்டோர் மீது, ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2001 ஆம் ஆண்டு அத்வானி உள்ளிட்டோரை வழக்குகளில் இருந்து விடுவித்து, ரேபரேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.


இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், லக்னோவில் உள்ள, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எஸ்.கே. யாதவ், இன்று தீர்ப்பளிக்க உள்ளார்.


தீர்ப்பை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.முதுமை காரணமாக, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

நெல்லை,தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (30-09-2020)

நெல்லை மாவட்ட  அணைகளின் நீர்மட்டம் (30-09-2020)

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 93.95
அடி
நீர் வரத்து : 669.10
கனஅடி
வெளியேற்றம் : 804.75 கனஅடி                             

சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி 
நீர் இருப்பு : 104.26
நீர்வரத்து :  Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
 உச்சநீர்மட்டம்: 118  
நீர் இருப்பு : 66.05 அடி 
நீர் வரத்து : 6
கனஅடி 
வெளியேற்றம் : NIL

வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 49 
அடி
நீர் இருப்பு: 10.25
அடி
நீர் வரத்து: Nil
வெளியேற்றம்: NIL 

நம்பியாறு: 
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 08.14 அடி
நீர்வரத்து: Nil
வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி 
நீர் இருப்பு: 33 அடி
நீர்வரத்து: 17 கன அடி
வெளியேற்றம்: 50 கன அடி

தென்காசி மாவட்ட  அணைகளின் நீர்மட்டம் (30-09-2020)

கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 80.20
அடி
நீர் வரத்து : 6
கன அடி
வெளியேற்றம் : 75 கன அடி                             

ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி 
நீர் இருப்பு : 79.50 அடி
நீர்வரத்து : 10 கனஅடி
வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி : 
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 69.65 அடி 
நீர் வரத்து : 2 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி 
நீர் வரத்து:  15 கன அடி
வெளியேற்றம்: 15 கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 132.22
அடி
நீர் வரத்து 30 கன அடி
நீர் வெளியேற்றம்: 30 கன அடி
 மழை அளவு:
குண்டாறு: 
1 மி.மீ

அண்ணாமலையான் புதல்வனே ஆதிமூல முருகனே சரணம்!

அண்ணாமலையான் புதல்வனே
ஆதிமூல முருகனே சரணம்!
அக இருள் நீக்கும்
ஆவினன் குடியோனே சரணம்!

இகபர சுகம் தரும்
இடும்பனை வென்றவனே சரணம்!
இஷ்ட தெய்வமே
இடரைக் களைவோனே சரணம்!

கார்த்திகை மைந்தனே
கவலை தீர்ப்பவனே சரணம்!
காக்கும் கடவுளே
காங்கேயனே சரணம்!

தகப்பன் சாமியே
தருமமே உருவானவனே சரணம்!
தந்தையும் நீயே
தணிகாசலனே சரணம்!

மலையில் இருப்பவனே
மருதமலையானே சரணம்!
மயில் வாகனனே
மால்மருகனே சரணம்!

பக்தருக்கு அருள்வோனே
பழநியாண்டவனே சரணம்!
பரம பவித்ரனே
பாலகுமாரனே சரணம்!

திருவருளே திருவடி
பணிந்தேன் சரணம்!
தீன கருணாகரனே
திருப்பரங்குன்றோனே சரணம்!

SPB Memories :- ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..?

 ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..?


தன்னுடைய சிலையை செய்ய எஸ். பி.பாலசுப்பிரமணியம் ஏற்கெனவே ஆர்டர் கொடுத்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் ,ஆந்திராவை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம் தன் சிலையை செய்ய ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், கொத்தபேட்டையை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம், மறைந்த தனது தந்தை சாமமூர்த்தி- தாய் சகுந்தலா ஆகியோரின் சிலைகளை செய்வதற்கு எஸ்.பி.பி ஆர்டர் கொடுத்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் உடையார் ராஜ்குமாரை தொடர்பு கொண்ட எஸ்.பி.பி தனது சிலை ஒன்றை செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சிலை செய்வதற்கு நேரில் வந்து ஆர்டர் தர முடியாது என்று கூறியதுடன், தேவையான போட்டோ ஷூட் செய்ய முடியாது என கூறி தனது புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்துள்ளார்.சிற்பி ராஜ்குமார் சிலையை செய்து கொண்டிருந்த நேரத்தில்தான், எஸ்.பி.பி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து எஸ்.பி.பி திரும்பியதும் சிலையை ஒப்படைக்க சிற்பி உடையார் ராஜ்குமார் திட்டமிட்டுள்ளார். ஆனால், சிலையின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில், எஸ். பி.பி இறுதிப் பயணம் நடைபெற்று விட்டது. இதனால் தன்னுடைய மரணத்தை முன்னதாகவே உணர்ந்து இருப்பாரோ என்ற ஐயம் உறவினர்களிடையே எழுந்துள்ளது. தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என உணர்ந்தவராக எஸ்.பி.பி இருந்தது அவரது மரணத்திலும் நிகழ்ந்துள்ளது என்பதுதான் பெரும் சோகம்.

Tuesday, 29 September 2020

சிலை மனிதர் காலமானதாக பரவிய தகவல் பொய்யானது

 சிலை மனிதர் காலமானதாக வதந்திகள் பரவிய நிலையில் இது பொய்யான தகவல் என சிலை மனிதர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்...!

உலக வெறிநாய் தடுப்பு தினம் 2020

உலக வெறிநாய் தடுப்பு தினம் 2020!! 

தமிழ்நாடு அரசு கால் நடை பராமரிப்பு துறை, புதுக்கோட்டை   சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய  உலக வெறி நாய் தடுப்பு தினம்  நாய்களுக்கான இலவச வெறி நாய் தடுப்பூசி முகாம் கால் நடை பராமரிப்புத் துறை  இணை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

Pudukkottai city rotary club, Pudukkottai

Pudukkottai city rotary club, Pudukkottai

Pudukkottai city rotary club, Pudukkottai

Pudukkottai city rotary club, Pudukkottai

Pudukkottai city rotary club, Pudukkottai

Pudukkottai city rotary club, Pudukkottai
Add caption


புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் டாக்டர் க. ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வகித்தார்.


நிகழ்ச்சியில் சுமார் 200 க்கு மேற்பட்ட நாய்களுக்கு வெறி நாய் தடுப்பு ஊசி இலவசமாக போடப்பட்டது புதுக்கோட்டை நகரம் முழுவதும் ஒலி பெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டது முகாமில் ரோட்டரி மாவட்டம் 3000தின் மேனாள் துணை ஆளுனர்கள்  மாருதி கண மோகன்ராஜ், சோ.பார்த்திபன் புதுக்கோட்டை   சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் ப. செல்லத்துரை ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அப்பு செந்தில், செல்வம் மற்றும் கால்நடைத்துறை உதவி இயக்குனர் அருள்செல்வி, சாகுல்ஹமீது, அரசு மருத்துவர்கள் தெட்சிணாமூர்த்தி, தினேஷ்குமார், பாண்டியராஜன்,பிரபு  மற்றும் ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி அரசு வழிகாட்டலுன் முக கவசம் அணிந்து நடத்தப்பட்டது

உலக இருதயதின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு!! -அறந்தை ரோட்டரி சங்கம்

உலக இருதயதின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு!! 

அறந்தை ரோட்டரி சங்கம் Rotary club International,Aranthangi, Pudukkottai

Rotary club International,Aranthangi, Pudukkottai

Rotary club International,Aranthangi, Pudukkottai


சார்பில் இன்று (29.09.2020)காலை அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற உலக இருதய தின விழிப்புணர்வு  உறுதிமொழி ஏற்பு விழா  தலைவர் தவசீலன் தலைமையில் நடைபெற்றது முன்னதாக வருகை தந்த அனைவரையும்   சத்துரு சம்கார வேல்சாமி வரவேற்றார் விழாவில் சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி உதவி ஆட்சியர் ஆனந்த்மோகன் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருதய விழிப்புணர்வு உறுதிமொழி செய்து வைத்தார்  விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இருதய தின விழிப்புணர்வு  உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவினை சிறக்கச் செய்த அறந்தை ரோட்டரி சங்க பட்டையத் தலைவர் R.முரளிதரன், வருங்காலத் தலைவர் 2021-2022 சேக் சுல்தான் சங்க பொருளாளர், P. கருணாகரன், துணைத் தலைவர் S.கலாநேசன், S.மெய்யப்பன், புவனா செந்தில் குமார், R.தாமஸ், N.தீபக், M.S.சுப்பு, S.விஜய்சுந்தர், S.வெங்கட்குமார், சிவசுப்பிரமணியன் T.சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

General Knowledge :-

1. காட்டுத்தீ காரணமாக இந்திய சுற்றுப்பயணத்தை எந்த நாட்டின் பிரதமர் ரத்து செய்துள்ளார் ?

Answer: ஆஸ்திரேலியா

2. அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் எந்த நாட்டின் ராணுவ தளபதி உயிரிழந்தார் ?

Answer: ஈரான்

3. மியூசிக் அகாடமியின் நிருத்திய கலாநிதி விருது யாருக்கு வழங்கப்பட்டது ?

Answer: பிரியதர்ஷினி கோவிந்த்

தமிழகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகளுக்கான தடை தொடரும்..!


# பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்


# புறநகர் மின்ரயில் போக்குவரத்துக்கும் தடை தொடரும்.


# கூட்டங்கள், ஊர்வலங்களுக்கும் தடை நீட்டிப்பு.


*தமிழகத்தில் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு


*தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு


*பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு


*திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100பேர் வரை அனுமதி


*புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்க்கான தடை தொடரும்


*திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது


*கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்


*அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு


*உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி


*உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி


*சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி


*புறநகர் மின்சார ரயில்கள் போக்குவரத்திற்கு இந்த ஊரடங்கு தளர்விலும் தடை நீக்கப்படவில்லை

மாபெரும் சுயவரம் - Mega Suyamvaram @ Thiruvottiyur, Chennai on 04-10-2020

Mega Suyamvaram  @ Chennai - 04-10-2020

Date :- 4-10-202    Time : -   09.00 a.m - 6.00 p.m 

For Registration :-  7299317455, 8695543775

Contact Details :- 044-25991266 ,044-25991277, 7299317455

Place :- TSS Nadargal Thirumana Maligai, Thiruvottiyur, Chennai - 600019Mega Suyamvaram  @ Chennai - 04-10-2020 

Mega Suyamvaram  @ Chennai - 04-10-2020 
இந்தியாவில் பரவும் புதிய 'கேட் கியூ வைரஸ்' (Cat Q Virus)

 இந்தியாவில் பரவும் புதிய 'கேட் கியூ வைரஸ்'


கேட் கியூ வைரஸ் என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவியுள்ளதாக புனேவில் உள்ள ஐசிஎம்ஆரின் வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


நாடு முழுதும் இருந்து பெறப்பட்ட 833 ரத்த மாதிரிகளில் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு பேரின் மாதிரியில் இந்த வைரசுக்கான ஆன்டிபாடீஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் சீனா மற்றும் வியட்நாமில் பெருமளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.


இந்தியாவில் பன்றிகளிடமும் மைனா போன்ற பறவைகளிடமும் இது காணப்படுவதால் இந்த வைரசால் பொதுசமூகம் தொற்றுக்கு ஆளாகும் ஆபத்து உள்ளதாக கருதப்படுகிறது. 3 விதமான கொசுக்கள் மூலம் இது மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

கேடு நினைத்தால்...!!!

கேடு நினைத்தால்...!!!

காட்டு ராஜாவான சிங்கத்திற்கு திடீரென்று உடல்நலம் மோசமானது. வேட்டையாடக்கூட செல்ல முடியாமல் படுத்த படுக்கையானது.

இதையறிந்த விலங்குகள் ஒவ்வொன்றாக வந்து நலம் விசாரித்து சென்றது. ஓநாய் ஒன்று சிங்கத்தின் கூடவே இருந்து பணிவிடை செய்து வந்தது. அந்த ஓநாய்க்கு அங்குள்ள நரி ஒன்றுடன் பகை இருந்தது.

பக்கத்து காட்டுக்குப் போயிருந்த நரிக்கு, சிங்க ராஜாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பது தெரியாது. அதனால் அது ராஜாவை நலம் விசாரிக்க வரவில்லை.

எனவே ஓநாய், நரியைப் பற்றி சிங்கத்திடம் கோள் மூட்டியது. ‘சிங்க ராஜா, உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்தும், அந்த நரிப்பயல் உங்களை வந்து பார்க்க வில்லை. இனி நான்தான் காட்டுக்கு ராஜா என்று மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு திரிகிறானாம். என் காதிற்கு எட்டிய செய்தியை உங்களிடம் சொல்லிவிட்டேன். அவனை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று போட்டுக் கொடுத்தது.

நரி, சொந்த காட்டிற்குத் திரும்பிய பிறகுதான், சிங்கத்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விவரத்தை அறிந்தது. உடனே சிங்கராஜாவைப் பார்க்கப் புறப்பட்டது.

நரி வருவதைக் கண்ட ஓநாய், ‘சிங்கராஜா, அந்த நரிப்பயல் விருகிறான். அவன் திமிரை இப்போதே அடக்கி வையுங்கள், இல்லாவிட்டால் இன்னும் அதிகமாக வாலாட்டுவான்’ என்று சிங்கத்தை சீண்டிவிட்டது.

சிங்கத்திற்கு பயங்கர கோபம் வந்தது. சினத்துடன் கர்ஜித்துக் கொண்டு, ‘எனக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தும்கூட என்னைப் பார்க்க வராமல் அப்படி உனக்கு என்ன வேலை? நான் தளர்ந்து போனதும் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டாயாமே....’ என்று உறுமியது.

ஒநாய், ஏதோ பற்றவைத்திருப்பதை உணர்ந்து கொண்ட நரி, ‘இல்லை ராஜா. உங்கள் உடல் நலம் பெற என்ன வழி? என்றுதான் பக்கத்து காட்டு வைத்தியரிடம் சென்று விசாரிக்க போனேன்.

அதான் தாமதத்திற்கு காரணம்’ என்றது நரி.

‘ஓ....அப்படியா...அவர் என்ன வைத்தியம் சொன்னார்?’ என்று கேட்டது சிங்கம்.

“ஒரு ஓநாயின் தோலை எடுத்துப் போர்த்திக் கொண்டால், உங்களுக்கு நடுக்கமும், நோயும் தீர்ந்துவிடும் என்று வைத்தியர் சொன்னார்’ என்றது நரி.

அடுத்த நிமிடம் சிங்கத்தின் பார்வை ஓநாய் மீது படிந்தது. கோள் மூட்டிய ஓநாய் பலியிடப்பட்டது. அதன் தோலை சிங்கம் போர்த்திக் கொண்டது.

‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பார்கள். கெட்டப் புத்திக்காரனுக்கு இப்படித்தான் கேடு விளையும்.

Monday, 28 September 2020

அக்.1 முதல் 5ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்

 


அக்.8 முதல் 27 வரை நான்கு கட்டங்களாக பொதுக்கலந்தாய்வு நடைபெறும்


பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1,31,436 மாணவர்களுக்கும் தரவரிசைப் பட்டியல் வெளியீடு


200 மதிப்பெண்களுக்கு தரவரிசை பட்டியல் தயாரிப்பு


கணிதம் -100 மதிப்பெண்கள், இயற்பியல், வேதியியல் - தலா 50 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கு கட் ஆப் மார்க்


திருத்தி அமைக்கப்பட்ட புதிய கலந்தாய்வு பட்டியலையும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் வெளியிடுகிறார்


முதலிடம் பிடித்த மாணவி சஸ்மிதா கட் ஆஃப் - 199.67


கட் ஆஃப் மதிப்பெண்களில் முதல் 10 இடங்கள் பெற்றவர்களின் பட்டியலை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் வாசிக்கிறார்


https://t.co/mgD2g878nx 


இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய கட் - ஆப் மதிப்பெண்கள் அறியலாம்


தமிழகத்தின் ஜி.இ.ஆர் (GER) எனப்படும் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம் தற்போது 51% ஆக உயர்ந்துள்ளது

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்


அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 


கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 


நீட் தேர்வை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் காவேரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.


 கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், எந்த மொழிக்கும் கழகம் எதிரானதல்ல என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் எந்த மொழியும் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


திருக்குறள் :-


பால் வகை  : 2. பொருள்இயல்   : 11. குடியியல்அதிகாரம்    : 101. நன்றியில் செல்வம் ,குறள்   :1009


அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

விளக்கம் :

                பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.
பொன்மொழி :

                  உங்களை விட தகுதியில் உயர்ந்தவர்களிடமோ, தாழ்ந்தவர்களிடமோ நட்பு பாராட்டாதீர்கள், இந்த நட்பினால் மகிழ்ச்சி ஏற்படாது.

இன்றைய சிந்தனை "குறள் சொல்லும் நீதி"

இன்றைய சிந்தனை

"குறள் சொல்லும் நீதி"

_குறள் : 667_

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

_குறள் விளக்கம்..._

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் ஏளனம் செய்து புறக்கணிக்கக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.

தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனிதாயிருக்கின்றது.

கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது; ஆனால், அக் கடல்நீர் உடம்பழுக்கைப் போக்குவதற்கும் தகுதியுடையது ஆகாது, அக்கடலின் அடுத்து சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுவதற்கும் சிறந்த நீராகிறது.

கரிச்சான் குருவி உருவத்தில் சிறியதாக இருந்தாலும் தன்னைவிட உருவத்தில் பெரியதுமான பறவைகள் காகம், பருந்து போன்றவற்றை ஓட ஓட விரட்டும் வல்லமை கொண்டது.

உருவத்தில்  சிறியதாக  இருந்தாலும், முள்ளம் பன்றியின்  உடலின் இருக்கும் முட்களை வைத்துக் கொண்டு முள்ளம் பன்றியால் சிங்கம் மட்டுமல்ல,  புலி, யானை என  கொடிய விலங்குகளிடம் இருந்து எளிதாக தப்பிவிட முடியும்.

மாவீரன் நெப்போலியன் உருவத்தால் குள்ளமாய் இருந்தாலும் , அவனது ஊக்கம் கண்டு உலகமே அஞ்சியது.

ஆம் ..
நண்பர்களே...

_உருவத்தால் உயர்ந்து சிலர் காணப்படுவர் ; ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள் சிறிதளவே இருக்கும். ஆனால் உருவத்தால் குள்ளமாக , சிறுத்துக் காணப்படுபவர்கள், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்._

_உருவத்தால் பெரியவர், குணத்தால் சிறியராக இருப்பது உண்டு; உருவத்தால் சிறியவர் குணத்தால் பெரியராக இருப்பதும் உண்டு._

_ஆகையால், தோற்றத்தை வைத்து எவரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது._

Sunday, 27 September 2020

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-  கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-


அமெரிக்கா - 7,287,561


இந்தியா - 5,990,581


பிரேசில் - 4,718,115     


ரஷியா - 1,143,571


கொலம்பியா - 806,038


பெரு - 800,142


மெக்சிகோ - 7,20,858


ஸ்பெயின் - 7,35,198


அர்ஜெண்டினா - 6,91,235


தென் ஆப்பிரிக்கா - 669,498     🔴 Live Video | த்வாஜா அவரோஹனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020- Dwaja Avarohanam


        ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

                                   செப்டம்பர் 27ஆம்  நாள் த்வாஜா அவரோஹனம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 

 Dwaja Avarohanam - Live Video file from Tirupati - Brahmotsavam2020


திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்

த்வாஜா அவரோஹனம்

நேரடி ஒளிபரப்பு பதிவு :- 

த்வாஜா அவரோஹனம்குறிப்பு : - மேலே உள்ள நேரலை காணொளியை தங்களால் காண இயலவில்லை என்றால் இந்த சொடுக்கியை  சொடுக்கவும்..!


Click Here 

நன்றி,

திருமலா திருப்பதி தேவஸ்தானம்.


Related Post :- 

🔴 Live Video |அனுமன் வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴LIVE Video | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020 | ஹம்ச வாகன சேவை

🔴 Live Video |கருட வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴 Live Video |சர்வ பூபால வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் 80 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளதா ?... சீரம் மருந்து நிறுவனத் தலைவர் கேள்வி

கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் 80 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளதா ?... சீரம் மருந்து நிறுவனத் தலைவர் கேள்வி


அடுத்த ஓராண்டிற்கான கொரோனா தடுப்பூசிகளை வாங்கவும், வினியோகிக்கவும் மத்திய அரசிடம் எண்பது ஆயிரம் கோடி ரூபாய் நிதி உள்ளதா என, சீரம் நிறுவன தலைவர் அடார் பூனாவல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய தேவைக்கான தடுப்பூசியை கொள்முதல் செய்து வினியோகிப்பது தொடர்பாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை, திட்டமிட்டு வழிநடத்துவது அவசியம் என பதிவிட்டுள்ளார்.


ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தகக்து.


கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 4,938,688    

அமெரிக்கா - 4,524,108     

பிரேசில் - 4,050,837

ரஷியா - 940,150    

கொலம்பியா - 700,112

பெரு - 657,836             

தென் ஆப்ரிக்கா - 601,818


General Knowledge :-1. உலக பிரெய்லி விழிப்புணர்வு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?

Answer: ஜனவரி 4-ஆம் தேதி

2. இந்தியாவில் எந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2636 மின்னேற்ற நிலையங்களை 
தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ?

Answer: FAME திட்டம்

3. 107-வது இந்திய அறிவியல் மாநாடு எந்த நாளில் தொடங்கி வைக்கப்பட்டது ?

Answer: ஜனவரி 3-ஆம் தேதி

வேகத்தடை -“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப் பட்டுள்ளன ?”

வேகத்தடை
“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப் பட்டுள்ளன ?”

ஒருமுறை இயற்பியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டபோது,பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.

"நிறுத்துவதற்கு"

“வேகத்தைக் குறைப்பதற்கு"

“மோதலைத் தவிர்ப்பதற்கு "

"மெதுவாக செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு"

என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.

“வேகமாக ஓட்டுவதற்கு" என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.

ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.

பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.

இதுபோலத் தான்  தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.

ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் மனிதர்கள் நம்மை ஏதாவது ஒரு வகையில் பாதித்து விடுகின்றனர்.

நம்முடைய வாழும் வாழ்க்கை அர்த்தமுடையதாக மாறும் போது தான் நாம் கடந்த மனிதர்கள் நம்மை தலைநிமிர்ந்து பார்ப்பார்கள் என்பது உண்மை.

பல நேரங்களில் மனக்காயங்களால் நாம் தூக்கி எறியப்பட்டாலும் அவசரப்பட்டு அவர்களுக்கு பதில் சொல்லாமல் நமது செயல்களால், நாம் வாழும் வாழ்க்கையால் அழகிய பதிலை அனைவருக்கும் கொடுக்க முடியும் என்பதே வெற்றியாளர்களின் வேதம்.

இந்த கொரானா சூழ்நிலையும் ஒரு வேகத்தடைதான், இதை நிதானமாக பிரேக் பிடித்து தாண்டி விட்டால் , பிறகு நாம் விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!

Digial Dictionary :- மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லிங்க்     https://ndl.iitkgp.ac.in. 

இதில் பதிவு செய்து ஆரம்ப பாடம் முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன் பெறலாம்.

மேலும் இந்த நூலகத்தில் 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை சென்றடையும் வரை அதிகம் பகிரவும்.

Saturday, 26 September 2020

🔴 Live Video at Sep 27 Sunday @Morning 6 a.m| சக்கர ஸ்னானம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020- Chakra Snanam


        ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

                                   செப்டம்பர் 27ஆம்  நாள் சக்கர  ஸ்னானம் , 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 

Chakra Snanam - Live Video file from Tirupati - Brahmotsavam2020


திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்

 சக்கர  ஸ்னானம்  நேரடி ஒளிபரப்பு பதிவு :- 

 சக்கர  ஸ்னானம்  
குறிப்பு : - மேலே உள்ள நேரலை காணொளியை தங்களால் காண இயலவில்லை என்றால் இந்த சொடுக்கியை  சொடுக்கவும்..!


Click Here 

நன்றி,

திருமலா திருப்பதி தேவஸ்தானம்.


Related Post :- 

🔴 Live Video |அனுமன் வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴LIVE Video | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020 | ஹம்ச வாகன சேவை

🔴 Live Video |கருட வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴 Live Video |சர்வ பூபால வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴 Live Video | அஸ்வ வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020- Aswa Vahanam

 

        ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

                                   செப்டம்பர் 26ஆம்  நாள் அஸ்வ  வாகனம், 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 

Aswa Vahanam - Live Video file from Tirupati - Brahmotsavam2020


திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்

அஸ்வ  வாகனம்

நேரடி ஒளிபரப்பு பதிவு :- 

அஸ்வ  வாகனம்
குறிப்பு : - மேலே உள்ள நேரலை காணொளியை தங்களால் காண இயலவில்லை என்றால் இந்த சொடுக்கியை  சொடுக்கவும்..!


Click Here 

நன்றி,

திருமலா திருப்பதி தேவஸ்தானம்.


Related Post :- 

🔴 Live Video |அனுமன் வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴LIVE Video | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020 | ஹம்ச வாகன சேவை

🔴 Live Video |கருட வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴 Live Video |சர்வ பூபால வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு, பிரகாசம் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறப்பு

கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு, பிரகாசம் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறப்பு


கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தெலங்கானாவின் நாகர்ஜுன சாகர், ஆந்திரத்தின் பிரகாசம் அணைகளில் இருந்து நொடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 


அணைகள் ஏற்கெனவே நிரம்பியுள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்வதால் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் நல்கோண்டா மாவட்டத்தில் உள்ள நாகர்ஜுன சாகர் அணையில் 10 மதகுகளைத் திறந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.புலிச்சிந்தலா அணையில் இருந்தும், முன்னேறு ஆற்றில் இருந்தும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் அணைக்கட்டில் இருந்து நொடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா - மாலத்தீவுகள் இடையே நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்து முதல் கப்பல் மாலத்தீவு துறைமுகம் சென்றடைந்தது

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுகளுக்கு நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல் கப்பல் குலுதுபுசி துறைமுகத்தைச் சென்றடைந்தது.


இந்தியா - மாலத்தீவுகள் இடையே வணிகத்தொடர்பை வளர்க்கும் வகையில் நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்தை இரு நாட்டு அமைச்சர்களும் கடந்த 21ஆம் தேதி தொடக்கி வைத்தனர்.


தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட கப்பல் கொச்சிக்குச் சென்று அங்கிருந்து புறப்பட்டு மாலத்தீவுகளின் குலுதுபுசி துறைமுகத்தை இன்று சென்றடைந்தது. இந்தக் கப்பல் வரும் 29ஆம் தேதி மாலே துறைமுகத்தைச் சென்றடையும். 

பாஜக வெளியிட்டுள்ள தேசிய நிர்வாகிகள் பட்டியல் - தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இடம் இல்லை

பாஜக வெளியிட்டுள்ள தேசிய நிர்வாகிகள் பட்டியல் - தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இடம் இல்லை


பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிட்டுள்ள தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த  எந்தத் தலைவர்களும் இடம் பெறவில்லை  என்பது தெரியவந்துள்ளது. 


பாரதிய ஜனதா கட்சி தேசிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி 12 துணைத் தலைவர்கள், 8  பொதுச் செயலாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதில் தமிழகத்தில் இருந்து யாரும் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த வருடம் பாஜகவின் தேசிய செயலாளராக ஹெச்.ராஜா தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் இந்த வருடம் அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. 


செய்திதொடர்பாளர்கள் பட்டியலிலும் தமிழத்தைச் சேர்ந்த யாரும் இடம் பெறாத காரணத்தால், அவர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது.  அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக வின் இந்த நடவடிக்கை அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருப்பதாகச்  சொல்லப்படுகிறது. 

 

General Knowledge :-


1. 23 வயது சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவ் 
தாக்கர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

Answer: இந்தியா

2. Cyber Safe Initiative என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி உள்ள மாநிலம் எது ?

Answer: மகாராஷ்டிரா

3. KVIC நிறுவனம் படோலா சேலை உற்பத்தி மையத்தை எங்கு தொடங்கியுள்ளது ?

Answer: குஜராத்

🔴 Live Video | பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள்| ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

 

        ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

                            செப்டம்பர் 26ஆம்  நாள்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 

Swarna Rathotsavam - Live Video file from Tirupati - Brahmotsavam2020


Important News Update :- 

திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள்: தேரோட்டத்துக்குப் பதில் சர்வ பூபால வாகனசேவை


திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்த பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் காலை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.   ஆனால் தற்போதைய நிலையில் தேரோட்டம் நடத்த அனுமதி இல்லை. எனவே பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளாக இன்று தேரோட்டத்திற்கு மாற்றாக சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.


இதன் மூலம் அகில உலகங்களையும் ஆட்சி செய்யும் சர்வ பூ பாலகர் ஆன ஏழுமலையானை இந்த உலகில் இருக்கும் அனைத்து அரசர்களும் ( சர்வபூபாலகர்கள்) சாமி வாகனமாக மாறி தங்கள் தோளில் சுமந்து உற்சவம் நடத்துவதாக ஐதீகம் உள்ளது.


இன்று காலை சர்வ திருவாபரண அலங்காரத்துடன் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு தீப தூப நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.


தொடர்ந்த சம்பிரதாய ரீதியான கைங்கரியங்களுடன் ஏழுமலையானின் சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.
திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்நேரடி ஒளிபரப்பு பதிவு :- 
குறிப்பு : - மேலே உள்ள நேரலை காணொளியை தங்களால் காண இயலவில்லை என்றால் இந்த சொடுக்கியை  சொடுக்கவும்..!


Click Here 

நன்றி,

திருமலா திருப்பதி தேவஸ்தானம்.


Related Post :- 

🔴 Live Video |அனுமன் வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴LIVE Video | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020 | ஹம்ச வாகன சேவை

🔴 Live Video |கருட வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴 Live Video |சர்வ பூபால வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது.

தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது.

இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...
சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.
அக்ரி பாடம் பயில விரும்புபவர்கள்  திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும். ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....
திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், *இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...

பகிருங்கள்.. 

தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...!!

Friday, 25 September 2020

🔴 Live Video | சந்திரபிரபை வாகனம்| ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020- Chandra Prabha Vahanam

 

        ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

                                   செப்டம்பர் 25ஆம்  நாள் சந்திரபிரபை வாகனம், 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 

Chandra Prabha Vahanam - Live Video file from Tirupati - Brahmotsavam2020


திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்

சந்திரபிரபை வாகனம்


நேரடி ஒளிபரப்பு பதிவு :- 

சந்திரபிரபை வாகனம்
குறிப்பு : - மேலே உள்ள நேரலை காணொளியை தங்களால் காண இயலவில்லை என்றால் இந்த சொடுக்கியை  சொடுக்கவும்..!


Click Here 

நன்றி,

திருமலா திருப்பதி தேவஸ்தானம்.


Related Post :- 

🔴 Live Video |அனுமன் வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴LIVE Video | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020 | ஹம்ச வாகன சேவை

🔴 Live Video |கருட வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴 Live Video |சர்வ பூபால வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

RIP SPB SIR


General Knowledge :-1. NEST என்ற புதிய பிரிவை உருவாக்கி உள்ள அமைச்சகம் எது ?

Answer: வெளியுறவு அமைச்சகம்

2. உலகப் புத்தக கண்காட்சி இந்தியாவில் எங்கு நடைபெறுகிறது ?

Answer: புதுதில்லி

3. பவளப்பாறைகளை பாதுகாப்பதற்காக சன் ஸ்க்ரீனை தடை செய்த முதல் நாடு எது ?

Answer: பலாவு

வாகன விற்பனை அளவை அதிகரித்துக் காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கில் BMW நிறுவனத்துக்கு ரூ.132 கோடி அபராதம்வாகன விற்பனை அளவை அதிகரித்துக் காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கில் பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு அமெரிக்கப் பங்குச்சந்தை ஆணையம் 132 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2015 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அமெரிக்காவில் அதன் வாகன விற்பனையை உண்மையான அளவை விட அதிகரித்துக் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம் கார் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி முதலீட்டாளர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 765 கோடி ரூபாய் முதலீடு திரட்டியுள்ளது.

இது தொடர்பான வழக்கை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள பிஎம்டபிள்யூ நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும் 132 கோடி ரூபாயை அபராதமாகச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளன. 

சற்றுமுன் காலமானார் எஸ்.பி.பி

சற்றுமுன் காலமானார் எஸ்.பி.பி.

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 74

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5 முதல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்.பி.பி.

கடந்த வாரம் ஓரளவு உடல்நிலை முன்னேற்றம் பெற்ற நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி. மரணமடைந்தார்

Good Thoughts :-

நம்மை விட்டு தொலைவில்
செல்ல விரும்புவர்களை..
நாம் தொல்லை செய்யாமல் இருப்பதும் ஆகச்சிறந்த "அன்பிசமே"!!!


மகான் போல வாழ வேண்டும்
என்று அவசியம் இல்லை..
மனசாட்சிப்படி
வாழ்ந்தால் போதும்..!!

இன்பம் வரும் போது
அதைப் பற்றி சிந்தனை செய்யாதே..!
அது போகும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்..!!


🔴 Live Video | சூர்யபிரபை வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020- Surya Prabha Vahanam

        ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

                                   செப்டம்பர் 25ஆம்  நாள் சூர்யபிரபை  வாகனம், 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 

Surya Prabha Vahanam - Live Video file from Tirupati - Brahmotsavam2020


திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்

சூர்யபிரபை வாகனம்

நேரடி ஒளிபரப்பு பதிவு :- 

சூர்யபிரபை  வாகனம்
குறிப்பு : - மேலே உள்ள நேரலை காணொளியை தங்களால் காண இயலவில்லை என்றால் இந்த சொடுக்கியை  சொடுக்கவும்..!


Click Here 

நன்றி,

திருமலா திருப்பதி தேவஸ்தானம்.


Related Post :- 

🔴 Live Video |அனுமன் வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴LIVE Video | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020 | ஹம்ச வாகன சேவை

🔴 Live Video |கருட வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

🔴 Live Video |சர்வ பூபால வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

.
 

படக் கவிதை:- மரம் வளர்ப்போம்

படக் கவிதை

மரம் வளர்ப்போம்

தாவரங்கள் வளர்ந்திடவே தரணியெங்கும் மகிழ்வுதானே!
பாவரம் நிறைந்திட்ட பாவலர் உள்ளமாக!
மாவரமாய் வீடெங்கும் மரங்கள் வளர்ந்திடவே!
தாவரங்கள் வளர்த்தெங்கும்
தங்கட்டும் இன்பமதே!
மரங்கள் வெட்டியதால் மழைவளம் இழந்தோமே!
சிரமங்கள் நிறைந்த சுற்றுச்சூழல் ஆனதே!
கருவினை தாங்கிடும்  தாய்க்கு இணையாக!
கரங்கள் கொண்டு வளர்த்திடுக மரங்களையே!
உரக்க உரைப்போம் மரங்கள் வளர்ப்பினையே!
வரமாக மாமழையும் ஊரெங்கும் பெய்திடுமே!

- கவி காந்தி.கருணாநிதி

Thursday, 24 September 2020

General Knowledge :-1. 2020-ஆம் ஆண்டை Year of Nurse and Midwife என்று எந்த அமைப்பு அறிவித்துள்ளது ?

Answer: உலக சுகாதார அமைப்பு

2. பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டிற்கு தடை
விதித்துள்ள நாடு எது ?

Answer: தைவான்

3. இர்பான் பதான் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர் ?

Answer: கிரிக்கெட்

🔴 Live Video |கஜ வாகனம் | ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

 

 ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2020

செப்டம்பர் 24ஆம்  நாள் கஜ  வாகனம், 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 

Gaja Vahanam - Live Video file from Tirupati - Brahmotsavam2020


திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்

கஜ வாகனம்
நேரடி ஒளிபரப்பு பதிவு :- 

கஜ  வாகனம்
குறிப்பு : - மேலே உள்ள நேரலை காணொளியை தங்களால் காண இயலவில்லை என்றால் இந்த சொடுக்கியை  சொடுக்கவும்..!


Click Here 

நன்றி,

திருமலா திருப்பதி தேவஸ்தானம்.


Related Post :-