https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 30 September 2018

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரோட்டராக்ட் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரோட்டராக்ட் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
திருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக்கழக ரோட்டராக்ட் சங்கமும் ரோட்ட்ராக்ட் மாவட்டம் மூவாயிரமும் இணைந்து ரோட்டராக்ட் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தினர். எட்டு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய ரோட்டராக்ட் மாவட்டம் மூவாயிரத்தின் இருபத்தி ஏழு கல்லூரிகளைச் சார்ந்த 245 மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். கீரனூர் டி எஸ் பி திரு. எல். பிரான்சிஸ் அவர்களும் ரோட்டரி மாவட்ட செயலர் ராஜா அவர்களும் கொடியசைத்து விழாவினை துவக்கி வைத்தனர். விழாவின் சேர்மன் கேத்தாரீஸ்வரன் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றுப் பேசினார். மாவட்டம் மூவாயிரத்தின் மாவட்டப் பிரதிநிதி ரெ. லோகேஷ் குமார் முன்னிலை வகித்தார். வளாக முதல்வர் முனைவர் த. செந்தில் குமார் அவர்கள் தலைமை தாங்கினார். தடகளம், இறகுப்பந்து, செஸ் மற்றும் கைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.  இரத்ததானம், பசுமை பாதுகாப்பு மற்றும் மகிழ்வான வாழ்வு ஆகியவற்றை வலியுறுத்தி மாரத்தான் நடத்தப்பட்டது. மாணவர் பாலாஜி ஒலிம்பிக் சுடரை ஏந்தி ஓடிவந்தார். அண்ணா பல்கலைக்கழக ரோட்டரி சங்க தலைவர் ஜெரிஷ் ஓபேத், செயலர்கள் விக்னேஷ், நவமதன் மற்றும் சண்முகம் தலைமையில் விழா கொடியேந்தி அணிகளாக அணிவகுத்து வந்தனர். கோட்டை ரோட்டரி சங்கம், யுகா அமைப்பு, சக்தி ரோட்டரி சங்கம், மத்திய ரோட்டரி சங்கம் மற்றும் மிட்டவுன் ரோட்டரி சங்கம் ஆகியன விழாவிற்கான பொருளுதவி செய்திருந்தனர்.  கரூரைச் சார்ந்த செர்வைட் மகளிர் கல்லூரி முதலிடம் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றது. புதுக்கோட்டை ரோட்டராக்ட் சங்கம் இரண்டாமிடம் பெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுனராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. சொக்கலிங்கம் அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ரோட்டரி மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு. மோகன் ராஜ் மற்றும் இளையோர் சேவை செயலர் திருமதி ஆனந்த ஜோதி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ரோட்டராக்ட் மாணவர்கள் சிறப்பாக செய்தனர். சையத் இம்தியாஸ் நன்றியுரை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் மணி பிரகஸ்பதி மற்றும் விளையாட்டுத்துறை இயக்குனர் முனைவர். கோபிநாத் ஆகியோர் போட்டிகளை  ஒருங்கிணைத்தனர்.


இரத்த சோகை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்

இரத்த சோகை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்
புதுக்கோட்டை ஆத்மா இரத்த வங்கி புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து அடப்பங்காரச் சத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரத்தசோகை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் தலைவர் சுவn.எஸ்.அழகப்பன் தலைமையில் நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் மருத்துவர் கே.ஆறுமுகம் மருத்துவர்.செல்வி.தி.தமிழ்மொழி ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம்இ மக்கள் தொடர்பு மாவட்ட இணைச் செயலாளர் கண.மோகன்ராஜ் பட்டய தலைவர் க.நைனா முகமது பொருளாhளர்.பி.அசோகன் ஜி.தனகோபால் ஆத்மா இரத்த வங்கியின் மேலாளர்.பழனி ஊர் முக்கிய பிரமுகர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருகை தந்த அனைவரையும் மகிழ்ச்சி கிராமத் திட்ட தலைவர் வி.ஆர்.எம்.தங்கராசு வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்களுக்கு இரத்த சோகை மற்றும் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் சோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் சுமார் இருநூறு பேர் முகாமில் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் க.ந.செல்வ ரத்தினம் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

















புதுக்கோட்டை மாவட்ட நகராட்சி உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு...

புதுக்கோட்டை மாவட்ட நகராட்சி உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு...
புதுக்கோட்டை மாவட்ட நகராட்சி உட்பட்ட பகுதிகளில் டெங்குவை உற்பத்தி செய்யும் காரணிகள் அழித்து எதிர் கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு. சு. கணேஷ்  தீடீர் ஆய்வு..உடன் நகராட்சி பொறுப்பு ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் மற்றும் புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள்...


Saturday, 29 September 2018

முதியோர் எழுத்தறிவு கற்பித்தல் துவக்க விழா மற்றும் மகளிர் சுய உதவிக்குழு - விவசாய கூட்டுப்பொறுப்பு குழுக்களை ஊக்குவித்தல்

முதியோர் எழுத்தறிவு கற்பித்தல் துவக்க  விழா மற்றும்  மகளிர் சுய உதவிக்குழு - விவசாய கூட்டுப்பொறுப்பு குழுக்களை ஊக்குவித்தல்





உலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி

உலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி”
    திருச்சி அப்போலோ மருத்துவமனை, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கம் இணைந்து நடத்திய ‘உலக இருதய தின வாக்கத்தான் பேரணி” பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.கணேஷ் இ.ஆ.ப மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ‘வாக்கத்தான் பேரணியை’ கொடியசைத்து துவக்கி வைத்தனர். ரோட்டரி மாவட்ட 3000ன் ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் 2020-21ஆம் ஆண்டின் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியன் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.அழகப்பன் வரவேற்றார். நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன், வட்டாட்சியர் க.பொன்மலர், அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் எஸ்.செந்தில்குமார் (எ.டி.எம்.எஸ்) மூத்த இருதய சிகிச்சை நிபுணர் என்.செந்தில்குமார் இருதய சிகிச்சை நிபுணர் விக்னேஷ்வரன் எம்.வெங்கட தேவநாதன், துணைப் பொதுமேலாளர் எஸ்.அருண் மேலாளர் கோபிநாத், குழந்தைகள் பிறப்பு சிகிச்சை நிபுணர் எல்.கே.செந்தில்குமார், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.இராமர் வாழ்த்துரை வழங்கினார்கள்.     நிகழ்ச்சியினை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், செயலாளர் ஆர்.ஆரோக்கியசாமி, பொருளாளர் சி.பிரசாத் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.    மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ஜெ.ராஜேந்திரன், ஆர்.எம்.துரைமணி, பி.அசோகன், ஜி.முருகராஜ், வி.என்.செந்தில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பி.ஜோதிமணி, அப்பல்லோ மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் வி.தனவேந்தன், துணை ஆளுநர் (2019-2020) எஸ்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், இலுப்பூர் மதர்தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகள், இச்சடி என்.எம்.பாலிடெக்னிக் மாணவர்கள், டாக்டர்ஸ் கல்லூரி மாணவிகள், எஸ்.ஆர்.எம். கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள், சாய்பாலாஜி கேட்டரிங் காலேஜ் மாணவர்கள், கிங்ஸ் கேட்டரிங் காலேஜ் மாணவிகள், சுபபாரதி கல்லூரி மாணவர்கள், மகாத்மா கல்லூரி மாணவர்கள், கீரை தமிழ்ச்செல்வன் கல்லூரி மாணவர்கள், செந்தூரான் கல்லூரி மாணவர்கள், எஸ்.ஐ.கல்லூரி மாணவர்கள், ரோட்டிராக்ட் மாணவர்கள், மாமன்னர் கல்லூரி மாணவர்கள், டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செவிலியர்கள் ஆகிய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 17 கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள், ஒருங்கிணைப்பாளர்கள் மொத்தம் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டனர். பேரணி அரசு பொது அலுவலக வளாகத்தில் துவங்கி அண்ணாசிலை, கீழராஜ வீதி, பிருந்தாவனம் வழியாக நகர்மன்றம் வந்தடைந்தது. நிறைவாக சிட்டி ரோட்டரி சங்கச் செயலாளர் கே.என்.செல்வரத்தினம் நன்றி கூற விழா இனிதே நடைபெற்றது.
படம் : பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.















தாமிரபரணி புஷ்கரிணி

*தாமிரபரணி புஷ்கரிணி*

தமிழகத்திலையே உற்பத்தியாகி
தமிழகத்திலையே கடலில் கலக்கக்கூடிய தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது...
ஆம் தாமிரபரணி மஹா புஷ்கரிணி...

இந்தியா முழுவதிலிமிருந்து சுமார் 2 கோடி பக்தர்கள் இந்த புண்ணிய நதியில் நீராட இருக்கிறார்கள்...

இத்தனை பக்தர்களும் நீராடும் வகையில் ஆங்காங்கே பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாகவும்..
ஊர்மக்கள் சார்பாகவும்,
கோவில் விழா கமிட்டியினர் சார்பாகவும்..
தாமிரபரணி நதிக்கரை முழுவதும் ஏற்கனவே இருந்த படித்துறைகளை சீரமைத்தும்,
புதிதாக பல இடங்களில் படித்துறைகளை உருவாக்கியும் வருகிறார்கள்...

தற்போது நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி,
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி நதிக்கரையே விழாக்கோலம் பூண்டுள்ளது..

100 க்கும் மேற்பட்ட படித்துறைகளில் பக்தர்கள் புண்ணிய நீராட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது..

*அவற்றில் சில குறிப்பிட்ட இடங்கள்*

பாபநாசம்,
கல்லிடைக்குறிச்சி, (அம்பாசமுத்திரம்)
முக்கூடல்,
திருநெல்வேலி,
அருவங்குளம்,
சீவலப்பேரி,
முறப்பநாடு,
அகரம்,(வல்லநாடு)
ஆழிகுடி,
கருங்குளம்,
ஸ்ரீவைகுண்டம்,
ஆழ்வார்திருநகரி,
குரங்கனி,
ஏரல்,
ஆத்தூர்,
சேர்ந்தபூமங்கலம்,
புன்னக்காயல்.

*பாபநாசம்* தாமிரபரணி நதியின் பிறப்பிடமாகும்,
அகத்தியர் அருளிய மலை வாசஸ்தலம்..

*அருவங்குளம்*
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த இடம் இராமாயணத்தில் ஜடாயு உயிர் நீத்த இடம் என அழைக்கப்படுகிறது..
ஏற்கனவே இவ்விடம் ஜடாயு தீர்த்தம் என புகழ் பெற்றது..
இவ்விடம் திருநெல்வேலி அருகில் திருநெல்வேலி அவுட்டர் பைபாஸ் ரோட்டில் நாரணம்மாள்புரம் அருகில் உள்ளது...

*சீவலப்பேரி*
இந்த ஊரில் தாமிரபரணி நதியுடன் மேலும் இரண்டு ஆறுகள் இணைவதால் முக்கூடல் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது..
இங்கே புகழ்பெற்ற துர்க்கை அம்மன் கோவிலும்
சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவிலும் ஆற்றுக்கு அருகிலையே அமைந்துள்ளது..
இவ்விடம் திருநெல்வேலியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது..

*முறப்பநாடு*
இந்த ஊர் தாமிரபரணி நதிக்கரையில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது..
மேலும்
இக்கோவில் குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது..
இங்கே கைலாசநாதர் குருவின் அம்சமாகவே காட்சி தருகிறார்..
குருபெயர்ச்சிக்காக தான் இத்தாமிரபரணி புஷ்கரணி நடைபெறுவதால் இத்தலத்தின் முன்பாக உள்ள தாமிரபரணி நதிக்கரையில் நீராடி குருவையே நேரடியாக வணங்கிக்கொள்ளலாம்..
இவ்விடம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும்,
திருநெல்வேலியிலிருந்து இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது..

*ஆழ்வார்திருநகரி*
இந்த ஊர் தாமிரபரணி நதிக்கரையில் ஆதிநாதன் திருக்கோவில் உள்ளது,
நம்மாழ்வார் இங்கே தான் அவதரித்தார்..
இந்த கோவிலும் குரு ஸ்தலமாக தான் விளங்குகிறது..
எப்படியெனில், பிரம்மாவுக்காக பெருமாள் இங்கே குருவாக அவதாரம் எடுத்தார்..

முறப்பநாடு குரு ஸ்தலத்திற்கும்
ஆழ்வார்திருநகரி குரு ஸ்தலத்திற்கும் ஒரு சிறிய வேறுபாடு எனில்..
முறப்பநாட்டில் சிவன் கோவிலில் குரு ஸ்தலம் உள்ளது,
ஆழ்வார்திருநகரியில் பெருமாள் கோவிலில் குரு ஸ்தலம் உள்ளது...

இவ்விடம் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம் அடுத்து இருக்கிறது...
இதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இருக்கிறது...

இங்கே குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் நீராட வேண்டும் என்று கட்டாயமில்லை,
தாமிரபரணி நதியில் எங்கு வேண்டுமானாலும் நீராடலாம்...
வாருங்கள் வரவேற்கிறோம்...

நாள்: 12-10-2018 முதல்
            23-10.2018 வரை..

இந்த 12 நாட்களும் 12 ராசிகளை குறிப்பதாகும்..
எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த தேதியில் நீராட வரவேண்டும் என்ற விபரத்தையும் காணுங்கள்..
அக்-12 விருச்சிகம்
அக்-13 தனுசு
அக்-14 மகரம்
அக்--15 கும்பம்
அக்-16 மீனம்
அக்-17 மேஷம்
அக்-18 ரிஷபம்
அக்-19 மிதுனம்
அக்-20 கடகம்
அக்-21 சிம்மம்
அக்-22 கன்னி
அக்-23 துலாம்

முடிந்தால் இந்த 12 நாட்களுமே நீராடலாம்...
அது பெரும் புண்ணியமாகும்...

வாருங்கள் வரவேற்கிறோம்...
🙏🙏🙏🙏🙏

Wednesday, 26 September 2018

தூய்மை ஆலயம்-புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து கீழ 3ம் வீதி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்தை துய்மைப் படுத்தும் பணி

தூய்மை ஆலயம்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி
நிலையம் இணைந்து கீழ 3ம் வீதி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்தை
துய்மைப் படுத்தும் பணி சங்கத் தலைவர் எஸ்.அழகப்பன் தலைமையில் நடைபெற்றது.
ரோட்டரி மாவட்ட 3000ன் மக்கள் தொடர்பு இணைச்செயலாளர்
மாருதி.கண.மோகன்ராஜ்ரூபவ் முதல்வர் எஸ்.ராமர்ரூபவ் என்.ராஜாரூபவ் பொருளாளர்
அசோகன் முன்னிலை வகித்தனர் கோவில் பட்டாச்சார்யார் எ.பாலாஜி வருகை தந்த
அனைவரையும் வரவேற்றார். மக்கள் தொடர்பு இயக்குனர் மருத்துவர் கே.எச்.சலீம்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துய்மைப் பணியினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி
ஒருங்கிணைத்தார் நிறைவாக செயலாளர் கே.என்.செல்வரத்தினம் நன்றி கூற விழா
இனிதே நிறைவு பெற்றது.





கழிவறை செல்ல கைபேசி எண் கட்டாயம்...!

கழிவறை செல்ல கைபேசி எண் கட்டாயம்...!

மதுரை மாநகராட்சி அண்ணாமலை வளாகத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசுத்தேர்வுக்காக படித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மாநகராட்சி வளாக கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், கழிவறை செல்லும் முன் கையெழுத்திட்டு, கைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி புதிய விதியை கொண்டு வந்துள்ளது.

Monday, 24 September 2018

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

 
நம்மவரின் ஆணைக்கினங்க அக்டோபர் 2 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 497 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
இதில்
CMR.கமல் சுதாகர்
(புதுக்கோட்டை,
திருமயம் பொறுப்பாளர்)
S.மூர்த்தி
(ஆலங்குடி,அறந்தாங்கி பொறுப்பாளர்)
P.சுரேஷ்
(விராலிமலை,
கந்தர்வகோட்டை பொறுப்பாளர்)மற்றும் நம்மவரின் உறவுகள்....அனைவரும்
மக்கள் நீதி மய்யம் புதுக்கோட்டை மாவட்டம்.

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

சிக்கிம் மாநிலத்துக்கு இதுவரை விமான போக்குவரத்து இல்லாத நிலையை போக்க தலைநகர் காங்டாங் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாக்யாங் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி 24-ம் தேதி (இன்று) திறந்து வைக்கிறார்.

Sunday, 23 September 2018

அரசு மருத்துவர்களுக்கு தடை விதிக்க தேவையில்லை-விஜயபாஸ்கர்

அரசு மருத்துவர்களுக்கு தடை விதிக்க தேவையில்லை-விஜயபாஸ்கர்



நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர்கள் அமைச்சரிடம், 'கேரளாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடை இருப்பதுபோல், தமிழகத்திலும் தடை விதிக்கப்படுமா❓'என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், சிறப்பான பங்களிப்பை வழங்குவதால், அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்கும் தேவை எழவில்லை" என்று பதிலளித்துள்ளார்.

ரோட்டரி மாவட்டம் 3000த்தின் 2019-2020ம் ஆண்டின் பொறுப்பாளர்கள் அறிமுக விழா

ரோட்டரி மாவட்டம் 3000த்தின் 2019-2020ம் ஆண்டின் பொறுப்பாளர்கள் அறிமுக விழா
ரோட்டரி மாவட்டம் 3000த்தின் 2019-2020ம் ஆண்டின் பொறுப்பாளர்கள் அறிமுக விழா திருச்சிராப்பள்ளி சங்கம் ஹோட்டலில் மாவட்ட ஆளுனர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. 2019-20 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்டம் 3000த்தின் ஆளுனர் மருத்துவர் எ.ஜமீர் பாட்ஷா வருகை புரிந்த அனைவரையும் வறவேற்று அந்த வருடத்தின் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தின் மாவட்ட நிதியச் செயலாளராக கே.கான் அப்துல் கபார்பான், மாவட்ட இணைச் செயலாளராக மாருதி.கண.மோகன்ராஜ், ஜெ.ராஜேந்திரன், ஜெய் பார்த்தீபன், மண்டல ஒருங்கினைப்பாளராக சே.வில்சன் ஆனந்த், கருத்தரங்க பொருப்பாளர்களாக மருத்துவர் கே.எச்.சலீம், எஸ்.சீனிவாசன், கர்ணன் துணை ஆளுனர்களாக எஸ்.பார்த்திபன், அண்ணாமலை பெலிக்ஸ், கறம்;பக்குடி சுரேஷ், ஜெய்சன் கீர்த்தி, n;;ஜயபரதன், மற்றும் 8 மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து நினைவுப் பரிசு வழங்கினார். மாவட்ட ஆளுனர் நியமனம் அ.லெ.சொக்கலிங்கம், உடனடி மாவட்ட ஆளுனர் கோபாலகிருஷ்ண், முன்னாள் மாவட்ட ஆளுனர்கள் டாக்டர் இரவீந்திரநாத், புருஷோத்தமன், எஸ்.கோபால், ஜி.கோபால் வாழ்த்துரை வழங்கினார்கள். நிறைவாக மாவட்ட செயலாளர் திருனாவுக்கரசு நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

பொன்னமராவதி அருகே வலையப்பட்டி பி.எல்.கே. ரத்னா மகாலில் ரத்னா பவுண்டேசன் மற்றும் மக்கள் பாதை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம்  நடைபெற்றது. 

பொன்னமராவதி செப்-22
பொன்னமராவதி அருகே வலையப்பட்டி பி.எல்.கே. ரத்னா மகாலில் ரத்னா பவுண்டேசன் மற்றும் மக்கள் பாதை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம்  நடைபெற்றது. 
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி பி.எல்.கே ரத்னா மகாலில் வலையப்பட்டி ரத்னா பவுண்டேசன், பொன்னமராவதி ஒன்றிய மக்கள் பாதை, கோவை கே.ஜி. மருத்துவமனை மற்றும் கோவிலூர் காணலின் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தியது. இம்முகாமிற்கு வலையப்பட்டி ரத்னா பவுண்டேசன் நிறுவனர் பழனியப்பன் தலைமை வகித்து துவக்கி வைத்து அனைவரையும் வரவேற்றார். ரத்னா குழும நிர்வாக  இயக்குனர் திருமதி சித்ரா பழனியப்பன், இருதய சிகிச்சை நிபுணர் முத்தையா சுப்பிரமணியன்,  கோவை கே.ஜி மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ராவ், வர்மா, மருத்துவர்கள் காணல் கோவிலூர் கண் மருத்துவமனை மருத்துவர் தெய்வா ஆகியோர்   குத்துவிளக்கேற்றிவைத்து முகாமினை துவக்கினார். முகாமில் இருதய சிகிச்சை, சிறுநீரகம், மூளை நரம்பியல், கல்லீரல் குடல் நோய், எலும்பு முறிவு சிகிச்சை,  இரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை ஈ.சி.ஜி. நுரையீரல் செயல்திறன் பரிசோதனை சர்க்கரை, எக்கோ, பைப்ரோ ஸ்கேன், பிசியோ தெரப்பி, உணவு ஆலோசனை மற்றும்  கண் சிகிச்சை என அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பொன்னமராவதி ஒன்றியப்பகுதியில் சுமார் 471 பயணாளிகள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். 
இம்முகாமில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடத்தி பொதுமக்களுக்கு பரிசோதனை செய்ததில் மஞ்சள் காமாலை நோய் அதிக நபர்களுக்கு இருப்பது தெரிய வந்தது. மேலும் சுமார் 15 சதவிகிதம் பேர் கோவை கே.ஜி. மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இனி நடத்தப்படும்  முகாம்களில் இரண்டு சிறப்பு தனி மருத்துவ சிகிச்சைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அம்முகாமில் மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படும் என்றும் பொதுவாக நடக்கும் முகாம்களை விட இனி நடத்தப்படும் முகாமில் மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள், பரிசோதனைகள் மற்றும் அவை குணமடைய மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்படும்  என்றும் முகாமில் வலியுறுத்தப்பட்டது. மேலும் இம்முகாமில் மருத்துவர்கள் சிறுநீரக சிகிச்சை நிபுணர் ராமசாமி சேதுராமன், கல்லிரல் மற்றும் குடல் நோய் சிகிச்சை நிபுணர் கிருபாகரன், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் அனில்குமார் பொது மருத்துவர் பல்லவி சுக்லா, மருத்துவ குழு மேலாளர்கள் பாலு, ரகுராம் மற்றும் கோவிலூர் காணல் கண் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். முகாமில் களப்பணிகளை வலையப்பட்டி ரத்னா மேலாளர் செந்தில்,  பொன்னமராவதி ஒன்றிய மக்கள் பாதை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சமூகப்பணிகள் செய்தனர், முகாம் முடிவில் ரத்னா பவுண்டேசன் நிறுவனர் பழனியப்பன் நன்றி கூறினார். 































☎
படங்கள் மற்றும் செய்திகள்
#KEERAVANI #PHOTOGRAPHY
#புதுக்கோட்டை  #மாவட்டம்
#பொன்னமராவதி   #செய்தியாளர் #கீரவாணி அழ.#இளையராஜா. எம்.ஏ...எம்.பில்.
#ILAYARAJA #KEERAVANI