Wednesday, 31 July 2019

அத்திவரதரை தரிசிக்கும் நேரம் இன்று மாற்றம்

அத்திவரதரை தரிசிக்கும் நேரம் இன்று மாற்றம்:

_நாளை முதல் காஞ்சிபுரம் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கவுள்ளதால் தரிசன நேரம் இன்று மட்டும் மாற்றம்._

_பொது தரிசனத்திற்கான நுழைவு வாயில் நண்பகல் 12 மணியோடுமூடப்பட்டு கோயில் வளாகத்திலுள்ள பக்தர்கள் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவர். விஐபி வரிசையில் வரும் பக்தர்கள் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்._

_நாளை முதல் ஆக-17 வரை பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார்._

Tuesday, 30 July 2019

சர்வதேச நண்பர்கள் தினம்!!

சர்வதேச நண்பர்கள் தினம்!!
புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்குளம் நடைப்பயிற்சியாளர்கள் சங்கம் இணைந்து சர்வதேச நண்பர்கள் தின விழா புதுக்குள வளாகத்தில் புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் ஆர். எம். லக்ஷ்மணன் தலைமையில் நடைபெற்றது முன்னதாக வருகை தந்த அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் க.தனகோபால் வரவேற்றார் நிகழ்ச்சியில் துணை ஆளுநர் எஸ். பார்த்திபன், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண. மோகன்ராஜ், வர்த்தக சங்க பொருளாளர் எஸ். கதிரேசன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் P.கருப்பையா RA.குமாரசாமி,கல்யாண சுந்தரம், நாகரெத்தினம் முன்னிலை வகித்தனர் அனைத்து நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கி நண்பர்கள் தின விழா வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது நிறைவாக சங்கச் செயலாளர் தனஞ்ஜெயன் ராமச்சந்திரன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றதுபுதுக்கோட்டை மாவட்டம் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு நலஉதவிகள்


புதுக்கோட்டை மாவட்டம் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு நலஉதவிகள்!

அகில இந்திய கட்டுநர் சங்கம் ,புதுக்கோட்டை மையத்தின் சார்பில் அன்னவாசல் ஒன்றியம் கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 27,000 ரூபாய் மதிப்புள்ள கணினி, மாநிலத் தலைவர் திரு.R.முத்துக்குமார் அவர்களால் வழங்கப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. மேலும் விழாவில் மையத் தலைவர் திரு.N .ராமதாஸ் , செயலாளர் திரு C.T. அண்ணாமலை, பொருளாளர் திரு.தாமரைச் செல்வன் உடனடி முன்னாள் தலைவர் திரு M.ரமேஷ் குமார் , திரு.ஷாஜகான், துணை செயலாளர் திரு SP.கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் திரு AR.மதியழகன் , திரு. P.பாரிவள்லல், திரு.SV பெருமாள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

செய்திகளுக்காக #.சு.மனியன்

புதுக்கோட்டையில் பிறந்த முத்துலெட்சுமி ரெட்டி

புதுக்கோட்டையில் பிறந்த முத்துலெட்சுமி ரெட்டி

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் புற்று நோய் என்றாலே அனைவருக்கும் ஒரு மரணபயம் ஏற்படும்.அப்படிப்பட்ட ஒரு ஆட்கொல்லி நோயான புற்று நோய்க்கு நம் நாட்டிலேயே ,அதுவும் நம் சென்னையிலேயே மிகத்தரமான சிகிச்சையை பெற முடிகிறது என்றால் அதற்கு காரணம் ஒரு பெண், *இந்தியாவின் முதல் பெண்மருத்துவர்.*

ஆண்டவனின் படைப்புகளில் அதி அற்புதமான படைப்பாக ஒரு பெண் குழந்தை ஒன்று 1886-ம் ஆண்டு,ஜூலை மாதம் 30-ம் நாள் புதுக்கோட்டையில்,
நடுத்தரமான குடும்பம் ஒன்றில் பிறந்தது. *இந்த குழந்தை தான் புற்று நோய் என்னும் அரக்கனுக்கு எதிராக போராடப் போகிறது என்று யாரேனும் அன்று சொல்லியிருந்தால் ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள்*.

*“மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”* -என்ற கவிமணியின் கூற்றிற்கு ஏற்ப தோன்றியவர்,இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சமூகசேவகி,பெண்களின் சிறுமையை போக்கவும்,அவர்கள் மேன்மையடைய தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மாமேதை, *சுதந்திரப் போராட்ட தியாகி* ,சிறந்த மருத்துவர்.அவர் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

1922-ம் ஆண்டு அவரின் தங்கை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தார்.தங்கையின் நோயால் மனம்மிக வருந்தி,அவரின் இறுதிகாலம் வரை அவருடனே இருந்து அவருக்கு வைத்தியம் செய்தார்.இதனால் மனம் வருந்தி ,கொடுமையான புற்று நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற விழுமிய நோக்கத்துடன் 1936-ம் ஆண்டில் இதற்கென ஒரு பெரும் இயக்கத்தை நடத்தினார். *புற்றுநோய்க்கு ஒரு தனி மருத்துவமனையை ஏற்படுத்த முயன்று இதற்காக 2 லட்சம் ரூபாய் நிதிதிரட்டினார்*.இவரது முயற்சியின் பயனாக சென்னை அடையாற்றில் 1952-ம் ஆண்டு,முன்னால் பாரதப் பிரதமர் பண்டித நேரு அவர்களால் புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.1954-ல் இது செயல்படத் துவங்கியது.இன்று ஆசியாவிலேயே புற்றுநோய் மருத்துவத்தில் புகழ்மிக்க ஒரு மருத்துவமனையாக இது திகழ்கிறது.இம்மருத்துவமனை டாக்டர் முத்து லட்சிமி ரெட்டி மனித இனத்திற்கு விட்டுச்சென்றுள்ள மிகப்பெரிய சொத்து.

மேலும் இவர் 1930-ல் *“அவ்வை இல்லம்”* என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார்.இன்று இந்த இல்லம் பல நூற்றுக்கனக்கான பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும் ஒரு சரணாலயமாக திகழ்கிறது.மகாத்மா தலைமையிலான இந்திய விடுதலை இயக்கத்திலும்,உலகத்தில் எங்கெல்லாம் மகளிரின் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டதோ,அந்த இயக்கங்களிலும் முத்துலெட்சுமி ரெட்டி ஆர்வம் கொண்டிருந்தார்.பெண்கள் கோயில்களுக்கு அர்ப்பணிக்கப்படுவதை[பொட்டு கட்டுதல்] தடைசெய்யும் சட்டத்தை நிறைவேற்றினார்.

*புதுக்கோட்டையில் பிறந்து இத்தனை சிறப்புகளையும் பெற்ற இவரின் புகழ் புதுக்கோட்டைக்கே உரியது.* 
இவரின் நினைவாக புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு”டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை”என தமிழக அரசு பெயர் சூட்டியிருக்கிறது.இந்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

*தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி!*

பல சாதனைகளுடன் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. தமிழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி, தமிழகத்தின் முதல் பெண் சட்டசபை உறுப்பினர் என்ற பெருமைகளுக்குரியவர். அவரது வாழ்க்கை வரலாற்றுத் துளிகளை இங்கே பார்ப்போம்…

சமூகப் போராளி, தமிழ் ஆர்வலர் என போற்றப்படும் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டையில் 1886-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் நாராயண சாமி, சந்திரம்மாள்.

சிறுவயதில் இருந்தே கல்வியில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 1907-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்தார். 1912-ல் பட்டம் பெற்று தமிழகத்திலேயே மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.

சமூகப் பணியிலும் ஆர்வம் கொண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அன்னிபெசன்ட் அம்மையார் நிறுவிய பிரம்மஞான சபையை நடத்தினார். தமிழ் இசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, ஊழியர் களுக்கான ஊதிய உயர்வு என சமூக வளர்ச்சி போராட்டங்களை நடத்தினார்.

டாக்டர் முத்துலட்சுமி லண்டனில் உள்ள ‘செல்சியா மருத்துவமனை’யில் தாய்-சேய் மருத்துவ ஆராய்ச்சியும், புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியும் செய்தார். இவர் பெண்களுக்கான ‘ஸ்திரீ தர்மம்’ என்னும் மாத இதழிலும் பணிபுரிந்தார்.

1926-ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாட்டில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் இந்தியாவின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி கலந்து கொண்டார். அப்போது ‘ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்துவதை ஒழிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

முதல் பெண்கள் இயக்கமான ‘இந்திய மாதர் சங்கத்தை’ தொடங்கி பெண்களை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றார்.

*தமிழக சட்டசபைக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை டாக்டர் முத்துலட்சுமியையே சேரும்.*

அவர் 1925-ம் ஆண்டில் சட்டசபை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற புரட்சிகர சட்டங்களை நிறைவேற்றினார்.

‘அவ்வை இல்லம்’ என்ற அமைப்பை உருவாக்கி ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்தார்.

பெண் விடுதலைக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும் போராடிய இவருக்கு ‘ஆல்டர் உமன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. மத்திய அரசு ‘பத்ம விபூஷன்’  பட்டம் வழங்கி கவுரவித்தது.

டாக்டர் முத்துலட்சுமி  ரெட்டி 1968-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி தனது 82-வது வயதில் மறைந்தார்.

Tuesday, 23 July 2019

கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தான் தான் அப்பா என்று உரிமை கோரி 3 பேர் வந்ததால் மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.

கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தான் தான் அப்பா என்று உரிமை கோரி 3 பேர் வந்ததால் மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேதாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீபன்கார் பால் என்பவர் தனது மனைவி என்று கூறி கர்ப்பிணியான சப்னா மைத்ராவை கடந்த சனிக்கிழமை அன்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  கடந்த ஞாயிற்றுகிழமை சப்னாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

சப்னா தனக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டு புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்திருக்கிறார்.  இதனைப் பார்த்த ஹர்ஸா கேத்ரி என்பவர் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்து வந்துள்ளார். ஸ்வப்னா தனது மனைவி என்றும், அவருக்கு பிறந்த குழந்தை தன்னுடைய குழந்தை என்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் நேதாஜி நகர் போலீசில் புகார் அளித்தது.

அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் ஹர்ஸா, சப்னாவுடன் தனக்கு நடந்த திருமணத்திற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை மருத்துவமனையில் காண்பித்து உள்ளார். இதையடுத்து சப்னாவின் உண்மையான கணவர் ஹர்ஸா தான் என முடி செய்த போலீசார் அவரை மட்டும் சப்னா மற்றும் குழந்தையுடன் இருக்க அனுமதி தந்துள்ளனர். அதே நேரம் தீபன்கர் பாலை உண்மையான கணவர் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் விரட்டி அடித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் அங்கேயே இருந்துள்ளார்.

இதனிடையே திடீர் திருப்பமாக பிரதீப் ராய் என்ற இளைஞர், தான் தான் சப்னாவின் உண்மையான கணவர் என்று மருத்துவமனைக்கு சென்று அந்த குழந்தையை உரிமை கோரியுள்ளார். இதனை கேட்டு தலை சுற்றிப்போன மருத்துமனை ஊழியர்கள் 3 கணவர்மார்களையும்  விரட்டிவிட்டதோடு மீண்டும் போலீசாரை நாடினர். குழந்தைக்கும், சப்னாவுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

இதில் என்ன ஒரு திருப்பம் என்றால் சப்னா யார் தன்னுடைய குழந்தைக்கு உண்மையான அப்பா என்பதை இதுவரை சொல்ல மறுத்துவருவது தான் என்று கூறப்படுகிறது.  அவர்  வாய் திறந்து கூறினால் தான்  3 பேர்களில் உண்மையான அப்பா யார் என்று தெரிய வரும் இது தொடர்பாக  சப்னாவிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் மருத்துவமனையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Wednesday, 17 July 2019

புதுக்கோட்டை நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்

புதுக்கோட்டை நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மன்னர் கல்லூரி சாலை ஓரங்களில் உள்ள அரசு சுவர்களில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழமை வாய்ந்த தத்துவங்கள் மகாத்மா காந்தி அப்துல் கலாம் ஆகியோரின் சிறப்பான ஓவியங்களை கல்லூரி நிர்வாகம் சுவர்களில் வரைந்து வைத்துள்ளனர் ஆனால் இதனை மறைக்கும் விதமாக சாலை ஓரங்களில் சுவற்றை மறைத்து தர கடைகள் போட்டிருந்தனர் அதுமட்டுமல்லாமல் சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் தரைக்கடைகள் அதிகமாக போடப்பட்டு இருந்தது இதனால் சமூக ஆர்வலர்கள் இந்த ஓவியங்களை யாருக்கும் தெரியாத அளவிற்கு கடைகளை  வைத்துள்ளனர் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர் இதன்படி இன்று நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணியன் தலைமையில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர் அப்போது ஒரு கடையில் டயர்களை வெளியே அடுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்தனர் அந்த டயர்களை நகராட்சி ஆணையர் எடுத்தபொழுது டயர்களில் ஏகப்பட்ட தண்ணீர் தேங்கி கொசுக்கள் உருவாகும் சூழ்நிலை இருந்தது இதனால் டயர்களை உடனடியாக அங்கிருந்து அகற்றி எடுத்துச் சென்றனர் துப்புரவு ஊழியர்கள் இதனால் கடைக்காரருக்கும் நகராட்சி ஆணையருக்கு சிறிது தகராறு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது டயர்களை மழை நேரங்களில் வெளியே அடுக்கி வைப்பதால் டெங்கு கொசுவை உருவாகும் இதனால் காய்ச்சல் பரவும் அதனால் டயர்களை வெளியில் வைத்து விற்பனை செய்யக்கூடாது என்று கூறி அதனை அகற்றி எடுத்துச் செல்கிறோம் என்று எடுத்துச் சொல்லிய பிறகு கடைக்காரர் அமைதியானார்

Tuesday, 2 July 2019

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

ஆனால், இந்த அறிவிப்பில் எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்கள். இதனால், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் தள்ளிக்கொண்டே போனதால், தனி அதிகாரிகளின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இதுவரை 5 முறை அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தற்போது 6-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.