Friday, 27 November 2015

என்னிடம் கோடிகணக்கில் பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே திரண்டு வாருங்கள்

ஒருவன் என்னிடம் கோடிகணக்கில் பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே திரண்டு மெரினா பீச்சுக்கு வாருங்கள் என அறிவித்தான்.
மக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர்..
அப்போது அங்கே வருகை தந்த அந்த கோடிஸ்வரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான். எண்ணிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது.
ஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல்
வரிசையாக நில்லுங்கள் என்றானாம்.
உடனே அனைவரும் வரிசையாக நின்றனர்.
வரிசை செங்கல்பட்டு வரை நீண்டது.
அப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான் அந்த கோடிஸ்வரன்.
அதாவது முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும்,
இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும்..
ஆயிரமாவதாக­ நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும்,
லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்சருபாயும் என கண்டிசன் போட்டு விட்டு ஒவ்வொருவராக வாருங்கள் என அழைத்துள்ளான்.
முதலில் நின்றவர் "இங்கு என்ன நடக்கிறது" என்று ஒதுங்கிவிட்டார். இரண்டாவதாக நின்றவர் டீ குடிக்க போறேன் என சென்று விட்டார். மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து
விட்டார்.. இப்படியே.. முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் நாம் பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே
கடைசியாக இணைந்து கொள்வோம் என்று பேசிக்கொண்டார்கள்.
இப்படியே யாருமே உதவிகள் பெற வரவே இல்லை...

நீதி; மனித ஆசை எப்பொழுதுமே பேராசை தான்.

படித்ததும் பகிர்ந்தேன்.

கடற்கரை

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின்
செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே
கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும்
திருடன்...!” என எழுதிவிட்டான்.
கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக
மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை
விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின.
அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும்
கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.
அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று
மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன்
இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று
குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.
ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று
முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார்.
அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக்
கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க
மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.
பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள்
அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச்
சென்றது.
பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.
இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு
கோணத்தில் பார்க்கின்றனர்.
உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க
வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன்
மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன்
நட்பையோ, சகோதரத்துவத்தையோ
அழித்துவிடாதே.
நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை
விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க
வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.
சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாளு..

எல்லாம் நன்மைக்கே

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரையை துடைத்து காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இன்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 ரூபாய் இருந்தது. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 ரூபாய் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.
வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இன்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப் பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

கடவுளும் விவசாயியும்

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

Saturday, 21 November 2015

வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

மழை வெள்ளம்: வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
சென்னை எங்கும் மழைநீர்... வெள்ளத்தினால் குடியிருப்பு பகுதி களில் பாம்புகள்  புகுந்துவிடுவது சகஜமாகி விட்டது சமீப காலங்களில். முடிச்சூரில் ஒரே வீட்டில் இருந்து 50 பாம்புகள் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

வழக்கமான நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வனத்துறைக்கு அதிகபட்சம் 20 அழைப்புகள் வருமாம், ஆனால் தற்போது தினமும் 70 முதல் 100 அழைப்புகள் வருகிறது என்கின்றனர் வனத்துறையினர்.

புறநகர் பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

வீடுகளில் பாம்புகள் திடீரென புகுந்து விட்டால், யாரை தொடர்பு கொள்வது, என்ன முதலுதவி செய்ய வேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை.

வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனடியாக 044- 22200335 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மீட்பு படையினர் உங்களை காக்க எந்நேரமும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

வீட்டுக்குள் பாம்பு புகுந்தால் அதனை அடித்துக் கொல்வதை தவிர்க்க வேண்டும். பாம்பு புகுந்துள்ள அறையை விட்டு உடனடியாக குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோரை வெளியேற்ற வேண்டும். அதன் பின்னர் அந்த அறையை தாழிட்டுக் கொள்ளவது முதற்கட்ட பாதுகாப்பு. வீடு சிறியதாக இருப்பின், வீட்டை விட்டு வெளியேறுவது உத்தமம்.

வெள்ள நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டால், கையில் ஒரு கம்பு வைத்துக் கொள்வது நல்லது. பாம்புகளை எதிர்கொள்ள நேர்ந்தால், பதற்றப்படாமல், பயம் கொள்ளாமல் கையில் உள்ள கம்பால் அதனை விலக்கி விட முயற்சியுங்கள். அதுவும் விலகி சென்று விடும்.

ஹெல்ப்லைன் மூலம் நீங்கள் உதவி கோரும் பட்சத்தில், பாம்பை பிடிக்க உடனடியாக ஆட்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் பாம்புகளை பத்திரமாக பிடித்துச்சென்று விடுவார்கள். எனவே  தேவையற்ற பயமோ, பதட்டமோ வேண்டாம்.

என்ன செய்யக்கூடாது ?

1. பாம்புகள் உங்களைச் சீண்டாதவரை, அதை அடிக்க முற்பட வேண்டாம். அந்த முயற்சியே அதை மூர்க்கமாக்கி, ஆபத்தை விளைவிக்கூடும்.

2.  வீடுகளில் அல்லது வேறு  ஏதேனும் இடங்களில் பாம்பை கண்டால், அவற்றை நீங்கள் பிடிக்க  முயல வேண்டாம். பாம்புகளை பிடிப்பதற்கு என்றே தனி பயிற்சிகள் பெற்ற நிபுணர்கள் மட்டுமே பாம்புகளை பிடிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.  ஏனெனில் பாம்பைப் பிடிக்க முயலும்போது பாம்புக்கடி வாங்க நேரிடலாம். பாம்புக்கு முன் உங்கள் வீரத்தைக் காண்பிக்க முயல்வதை தவிர்க்கவும்.

3. பாம்புடன் செல்ஃபி எடுப்பது என்ற போன்ற முட்டாள்தனமான காரியங்களை செய்யாதீர்கள்.

4. வெயில் காலம் வரும்வரை வீட்டுக்கும், வீட்டின் வெளிப்புறத்துக்கும் இணைப்புப் பாலமாக இருக்கும் ஓட்டைகளை நன்றாக அடைத்து விடுங்கள். ஏனெனில் பல வீடுகளில்  ஓட்டைகள் மூலமாகவே பாம்புகள் புகுகின்றன.

5. மழையில் சிக்கிய வாகனங்களின் சக்கரங்களில் பாம்புகள் சுற்றிக்கொண்டிருக்கலாம். எனவே, அப்படியான தருணங்களில் வாகனத்தை நன்கு சோதனை செய்த பிறகே ஓட்ட வேண்டும்.

6. ஹெல்மெட்டின் உள்பகுதியில் தேள் போன்றவை அண்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஹெல்மெட்டை உறையிட்டு மூடி வைக்க வேண்டும். அணியும்போதும் பூச்சிகள், தேள் போன்றவை இருக்கிறதா என சோதித்து அணியவேண்டும்.

3. வீடுகளைச் சுற்றி குப்பைதொட்டிகள் இருந்தால் மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில்,  குப்பைத் தொட்டி போன்றவை பாம்புகளுக்கு பாதுகாப்பான இடங்கள். வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் புதர் அண்டாமல் பார்த்துக் கொள்வதும் நல்லது.

பாம்பு கடித்தால் முதலுதவி என்ன?

பாம்புக்கடியை பொறுத்தவரை சினிமாவில் பார்த்து பல தவறான மூட நம்பிக்கைகள் மக்களிடம் இருக்கிறது. விஷத்தை உறிஞ்சி எடுத்து துப்புவது, பாம்பு கடித்த இடத்தில் நெருப்பு வைப்பது, கயிறு கொண்டு கட்டுவது, கீறி விடுவது போன்றவை தவறு.

பாம்பு கடித்தால் முதலில் சம்பந்தப்பட்ட நபரை எழுந்து நடக்கவோ, ஓடவோ விடாமல் அப்படியே படுக்க வைக்க வேண்டும். ஏனெனில் ரத்த ஓட்டம் அதிகரித்தால் ரத்தத்தில் விஷம் ஏறிவிடும்.

பாம்பு  கடித்த இடத்தில் 15 செ.மீ. அளவுக்கு மேல் நன்றாக ஒரு விரல் இடைவெளிகொடுத்து ஒரு கர்சீப் அல்லது துணி வைத்து கட்டிவிடவும். பாம்பு கடித்த காலை நகர்த்தவே கூடாது. அதனை ஒரு கட்டையோடு சேர்த்து கட்டி விடவும்.

பாம்பு கடித்த இடத்தை நன்றாக ஐஸ் கட்டிகள் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஏனெனில் ஐஸ் கட்டிகள் ஒத்தடம் கொடுக்கும்போது அல்லது ஐஸ் கட்டிகளை கடித்த இடத்தின் மேல் வைக்கும்போது,  அந்த இடத்தில் ரத்தம் உறையும் என்பதால், விஷம் ரத்தத்தில் கலப்பது தடுக்கப்படுகிறது.

சிலர் கடித்த பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்து வருவார்கள். அதுவும் தவறு. பாம்பை பார்த்து எந்த வித சிகிச்சையும் கொடுப்பது கிடையாது. எனவே பாம்பை அடிக்க ஓடாமல் பாதிக்கப்பட்ட நபரை, மருத்துவமனைக்கு விரைவாக கூட்டி செல்வதற்கே முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

Friday, 20 November 2015

நாயைவிட மனித உயிர் மேலானது: தெருநாய்களை கொல்லும் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

நாயைவிட மனித உயிர் மேலானது: தெருநாய்களை கொல்லும் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி
 
நாய்களை விட மனித உயிரே மேலானது. எனவே, மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்துக்குட்பட்டு அப்புறப்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த பல தெரு நாய்கள் கொத்து கொத்தாக பிடிக்கப்பட்டு, மாநகராட்சி நிர்வாகம் கொலை செய்தது.

மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில், சுமார் 2.5 லட்சம் தெருநாய்களை அப்புறப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்துக்குட்பட்டு, நாய்களை கொலை செய்யலாம் என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்திய விலங்குகள் நல வாரியமும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாய்களின் வாழ்நாளை விட மனித உயிர்களே மேலானது என்று இன்று தீர்ப்பளித்தது.

உள்ளாட்சி அமைப்புகள் 2001 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விலங்குகள் வதை தடுப்பு சட்டம் மற்றும் பிறப்பு கட்டுபாடு விதிகளின் கீழ், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்கள், ராபீஸ் தாக்குதலுக்குள்ளான மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை கொலை செய்யலாம் என்றனர்.

மேலும், அனைத்து உயர் நீதிமன்றங்களும் 1960 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விதிகள் குறித்து எவ்வித உத்தரவும் வழங்க வேண்டாம் எனவும் கேட்டு கொண்டனர்...

ஆதாரம்
மனிதர்களைக் காப்பாற்ற நாய்களைக் கொல்வதில் தவறில்லை
http://dhunt.in/HP48

நன்றி
தினமணி

Monday, 16 November 2015

மழை

மழை வெள்ளத்தை சபிக்காதீர்கள்.. திருடப்பட்ட தன் ஏரிகளையும், குளங்களையும் பரிதாபமாக அது தேடி அலைகிறது..
தன் இருப்பிடத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதால்,
சாலை இறங்கி மறியல் செய்கிறது
மழைநீர்...!

Monday, 9 November 2015

தீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டியவை .

தீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டியவை .

1. சங்கு சக்கரங்களை கண்டிப்பாக சிமெண்ட் தரையில் வைத்துதான் பொருத்த வேண்டும். மண் தரையில் வைத்து பொருத்தக் கூடாது.

2. பூச்சட்டிகளை எக்காரணம் கொண்டும் கையில் வைத்து பொருத்தக்கூடாது.

3. கம்பி மத்தாப்புக்களை கொளுத்தும் போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு எரிந்த கம்பிகளை அதனுள் போட்டு விட வேண்டும். தரையில் எரிந்தால் அது உங்களது காளில் பட்டு தீ காயம் ஏற்பட்டுவிடும்.

4. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து சோதித்து பார்க்க கூடாது. தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும்.

5. பட்டாசு திரிகளை பற்ற வைக்க தீக்குச்சிகளை உபயோகிக்க கூடாது. பட்டசுகளுக்காகவே பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பத்திகுச்சிகளை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும்.

6. பாம்பு மாத்திரைகளை வீட்டுக்கு வெளியேதான் கொளுத்த வேண்டும். வீட்டிற்குள் கொளுத்தினால் அதனால் ஏற்படும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

7. பட்டாசுகளை மருத்துவமனை அருகிலோ அல்லது குறுகலான  தெருக்களிலோ உபயோகிக்ககூடாது.

8.பட்டாசுகளை தூக்கி எரியவோ அல்லது காலால் எட்டி உதைக்கவோ  கூடாது.

9. ராக்கெட் வெடிகளை உபயோகிக்கும் போது உயரமான பாட்டில்களிலோ அல்லது பைப்புகளிலோ மட்டும் தான் உபயோகிக்க வேண்டும்.

10. குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள். வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க கூடாது.

11. குழந்தைகளை பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிக்க செயுங்கள்.

12. குழந்தைகளை சட்டை பைகளில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.

13. பட்டாசுகளை கொளுத்தும் பொழுது இருக்கமான ஆடை அணியுங்கள் முடிந்த வரை பருத்தி ஆடையாக இருக்கட்டும்.

14. எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதிர்கள். உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள் அல்லது கீழே படுத்து உருளுங்கள்.

15. தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள். விரைவில் மருத்துவரிடம் சொல்லுங்கள்.
💥🎉🎊💥💥🔥💥💥🎆🎆🎊🎉⚡⭐💥👊👊👊

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக்கலை அதிசயம் !

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக்கலை அதிசயம் !
பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. கடற்கரைப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகிவிடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.
ஆனால்,
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.
எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.
திருச்செந்தூர் கோயிலைப்பற்றிய விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில்கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்துகொள்ளலாம்.
இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள்
மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்துவிடுகிறது!

Monday, 2 November 2015

அன்பு

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.
அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .
அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.
மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.
அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..
அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.
ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.
அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.
அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..
அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.
அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.
இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.
இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.
அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.
அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.
இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?
நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.
அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!
அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.