https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 29 November 2018

கஜா கோரப்புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு

கஜா கோரப்புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு
ரோட்டரி மாவட்ட 3000-ன் சார்பாக கஜா கோரப்புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை சுற்றுவட்டார கிராhம பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு ரோட்டரிமாவட்டம் 3000-ன்ஆளுநர் நியமனம் அ.லெ.சொக்கலிங்கம் தலைமையில் புதுக்கோட்டை கிங் டவுன் ரோட்டரி சங்க ஹாலில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்டம் 3000-ன் ஆளுநர் ஆர்.வி.என். கண்ணன்,முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் ஜி.கோபால்,எம்.முருகானந்தம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அரிசி,மளிகை சாமான்கள்,விளக்கு,பாய் போன்ற ரு.800 மதிப்பு கொண்ட பொருட்கள் சுமார் 500 பேருக்கு வழங்கி தந்தனர். நிகழ்வில் கே.கான் அப்துல் கபார் கான், எக்ஸ். வில்சன் ஆனந்த், மாருதி கண.மோகன்ராஜ்எஸ்.சீனிவாசன்,திருநாவுக்கரசு,ஜெய்பார்த்தீபன்,எம்.ஆர்.எம்.முருகப்;பன்,ஆர்.முத்துசாமி,சி.டி.அண்ணாமலை,சி.பிரசாத்,எஸ்.தங்கமணி,என்.கனகராஜ்,ஆர்ஆரோக்கியசாமி,வெங்கடாசலம்,சோனு,பாலசுப்ரமணியமன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கதலைவர்கள்திருப்பதி,ஆர்.எஸ்.காசிநாதன்,ரவி,கவிதாhhஜசேகரன்,தர்மராஜ்பிரபு, சொக்கலிங்கம்,மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


உணவை பார்த்ததும் தண்ணீரில் நீந்தி வந்த சிறுவன்! #gaja


via

Wednesday, 28 November 2018

நெய்வேலி ஆரம்ப பள்ளி மாணவர்களின் சேமிப்பு பணம் கஜா புயல் நிவாரண நிதியாக செல்கிறது தமிழக அரசுக்கு...

நெய்வேலி ஆரம்ப பள்ளி மாணவர்களின் சேமிப்பு பணம் கஜா புயல் நிவாரண நிதியாக செல்கிறது தமிழக அரசுக்கு...

பொன்னமராவதி நவ-28

பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி ஆரம்ப பள்ளி மாணவர்களின் சேமிப்பு பணம் கஜா புயல் நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்கள் தங்களது சஞ்சாயிக சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் சேர்த்து வந்த பணத்தை கஜா புயல் நிவாரணத்திற்கு கொடுக்க முன்வந்தனர். அருகிலுள்ள குழிபிறை அஞ்சல் அலுவலகத்தில்  முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மாணவர்கள் சஞ்சாயிக மூலம் சேர்த்த ரூ. 1652 ஐ அனுப்பி வைத்தனர். கஜா புயல் பாதிப்பால் பல்வேறு கட்சி, தொழிற்துறை நிறுவனங்கள் சார்பிலும் நிவாரணப்பொருட்கள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டது. இருப்பினும் நெய்வேலி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்கள் தங்களது சஞ்சாயிக சிறுசேமிப்பு திட்டத்தின் மூலம் குருவி சேர்பதைப்போல் சேர்த்து வைத்த பணத்தை அஞ்சல் துறை மூலம் கஜ்அஅ புயல் தமிழக அரசு நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தது அப்பகுதியில் வாழ் பொதுமக்களின் பாராட்டுக்கூறியதாக கருதுகின்றனர். இந்த செயலை பார்த்த பொதுமக்கள் மற்றும் அஞ்சல் துறை அதிகாரிகள் அந்த மானவர்கள் வெகுவாக பாராட்டினர்.

📗📨📺📹📸📞☎

படங்கள் மற்றும் செய்திகள்
#KEERAVANI #PHOTOGRAPHY
#புதுக்கோட்டை  #மாவட்டம்
#பொன்னமராவதி   #செய்தியாளர் #கீரவாணி அழ.#இளையராஜா. எம்.ஏ...எம்.பில்.
#ILAYARAJA #KEERAVANI

Tuesday, 27 November 2018

கஜா புயல் நிவாரணஉதவி மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி வழங்குதல்

கஜா புயல் நிவாரணஉதவி மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி வழங்குதல்

ரோட்டரி மாவட்டம் 3000ன் சார்பாக அடப்பக்கார சத்திரம் பொதுமக்களுக்கு கஜா புயல் நிவாரண உதவியாக மெழுகு வர்த்தி, கொசுவர்த்தியினை மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ், புதுக்கோட்டை பேலஸ்சிட்டி  ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் வழங்கினார்கள் உடன் வி.ஆர்.எம்.தங்கராஜ் ஊர் முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.

Monday, 26 November 2018

ரோட்டரி மாவட்டம்- 3000 தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட கஜா புயல் நிவாரணப் பணிகள்

ரோட்டரி மாவட்டம்- 3000 தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட கஜா புயல் நிவாரணப் பணிகள்
புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் கஜா புயலால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டதால் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உளள் ரோட்டரி சங்கங்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவிதமான நிவாரணப் பணிகளை கடந்த 17.11.2018 முதல் தொடர்ந்து செய்து வருகின்றன. இதற்கான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை ரோட்டரி மாவட்ட ஆளுநர் சஎn.கண்ணன்  ஆளுநர் தேர்வு டாக்டர் ஜமீர்பாஷா, மாவட்டத்தில் உள்ள சங்கங்கள், முன்னாள் ஆளுநர்கள் செய்து வருகின்றனர். இங்கு நிவாரணப் பணிகளை ஆளுநர் நியமனம் அ.லெ.சொக்கலிங்கம் தலைமையில் முன்னாள் ஆளுநர் ஜி.கோபால் அவர்களின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை சார்லஸ் நகரிலுள்ள கிங்டவுன் ரோட்டரி சங்க கட்டிடத்தில் அலுவலகம் அமைத்து 24 மணிநேரமும் செய்து வருகின்றனர். இதுவரை கீழ்க்கண்ட நிவாரணப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
குடிநீர் 15 லட்சம் லிட்டர்கள், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, சுற்றுப்பகுதி கிராமங்களில் வழங்கப்பட்டது.
55,000 மெழுகுவர்த்தி.
1,00,000 கொசுவர்த்திகள்.
800 குடிநீர் கேன்கள், 1000 பாட்டில்கள்
25,00,000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள்.
3000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
காமராஜபுரம், மாலையீடு, சார்லஸ் நகரில் பணிபுரியும் மின் வாரிய பணியாளர் 200 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 4 பெரிய ஜெனரேட்டர்கள் இயங்கி வருகின்றன.
நமது மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனையின்படி பல பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
வடிகால் வாய்க்கால்கள் பெரிய பொக்லைன் கொண்டு தூர்வாரப்பட்டது. இதனால் பூங்கா நகர் பின் பகுதியில் தேங்கி நினற் கழிவுநீர், மழை நீர் வடிய வழி செய்யப்பட்டு, மேலும் தேங்காமல் செய்யப்பட்டது.
ரோட்டரி சங்க உறுப்பினர்களால் பல பகுதிகளிலும் விழுந்து கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதைகள் சரிசெய்யப்பட்டன. மேலும் 15 மரம் அறுக்கும் இயந்திரங்கள் ரோட்டரி சங்கங்களால் பயன்படுத்தப்பட்டு, மரங்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
மினி லாரிகளில் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு பொது குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி கொடுக்கப்பட்டது.
ஒருங்கிணைந்து செய்யப்பட்ட மேலே கூறியுள்ள பணிகள் தவிர ஒவ்வொரு சங்கங்களும் தனித்தனியாகவும் பல்வேறு நிவாரணப் பணிகளை செய்து வருகின்றன.

கஜா புயல் நிவாரண சிறப்பு பொது மருத்துவ முகாம்

கஜா புயல் நிவாரண சிறப்பு பொது மருத்துவ முகாம்
அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி, புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் மற்றும்  நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை இணைந்து தைலா நகர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கஜா புயல் நிவாரண சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் அப்போலோ சிறப்பு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் நுரையீரல் மருத்துவ நிபுணர் மருத்துவர் வி.தமிழரசன் தலைமையில் எஸ்.கார்த்திகா, ஆனந்த் மற்றும் மருத்துவகுழுவினர் இணைந்து இருதய சுருள் படம், இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பார்க்கப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். முகாமில் குழந்தைகள் நலசிறப்பு மருத்துவர் எஸ்.ராம்தாஸ், மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கே.ஆறுமுகம், சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத்தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், ஊர் முக்கியப் பிரமுகர்கள் ரெ.செல்வராஜன், ரெ.பாபு, ம.சேகர், சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் அ.சுப்பையா, முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத்திட்ட மாவட்ட அலுவலர் சோ.சாமிநாதன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வா.தனவேந்தன், பெ.செபாஸ்டின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
#gaja

Friday, 23 November 2018

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு

சென்னை: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூரில், அடுத்த 3 மணி நேரம் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், திருச்சி, நாமக்கல், விருதுநகரில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

பிரச்சனை தீர்ந்தது: திரும்பி வரப் போகும் வடிவேலு

பிரச்சனை தீர்ந்தது:  திரும்பி வரப் போகும் வடிவேலு

சென்னை: வடிவேலுவுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் மீண்டும் நடிக்கப் போகிறாராம்.

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை சிம்புதேவன் இயக்க வடிவேலு ஹீரோவாக நடித்தார். ஷங்கர் தயாரித்த இந்த படத்திற்காக ரூ. 6 கோடியில் செட் போடப்பட்டது.

இடையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்றது. இதையடுத்து பிற படங்களில் நடிக்க வடிவேலுக்கு தடை விதிக்கப்பட்டது.


இந்நிலையில் வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மதுரையில் இருக்கும் வடிவேலு சென்னைக்கு வந்து இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம். படப்பிடிப்பை ஜனவரி மாதம் துவங்க சிம்புதேவன் திட்டமிட்டுள்ளாராம்.

வடிவேலு இனி நடிக்கவே மாட்டாரா, அவரை திரையில் பார்க்க மாட்டோமா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. விரைவில் வடிவேலுவை மீண்டும் பெரிய திரையில் பார்க்கலாம். அவர் இல்லாமல் உருவாகியுள்ள வெற்றிடம் இனி இருக்காது. வாங்க வடிவேலு,  திரும்பி வாங்க.

கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு

கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை: கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வனவர் பணிக்கான தேர்வு டிசம்பர் 6 முதல் 9 வரையும், வனக்காப்பாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்

அரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்

திருவண்ணாமலை: லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளான இன்று, மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மகாதீபத்தை தரிசிக்க மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர். முன்னதாக அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு, ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.               அதைத்தொடர்ந்து, இன்று மாலை மகாதீப பெருவிழா நடைபெற்றது. அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் இன்று மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 5.55 மணிக்கு, கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது, கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மிகச்சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ தூய நெய், ஆயிரம் மீட்டர் திரி (காட்டன் துணி) 10 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.

ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன்...

ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன்...

ஜியோ நிறுவனம் வழங்கும் அதிரடி சலுகைகளால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்துவதில்லை. இதனால் ஏற்படும் பெரும் வருமான இழப்பை தடுக்க, இந்த திட்டத்தை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் அமல்படுத்த உள்ளது. குறைந்தபட்ச தொகையான 35 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்யவில்லை என்றால், இனி இன்காமிங் கால் வசதியும் இருக்காது.இதனால் 20 கோடி வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தனது 65 பிறந்தநாளை விழாவை பிடாரம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் கொண்டாடிய சமூக ஆர்வலர்.

தனது 65 பிறந்தநாளை விழாவை பிடாரம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் கொண்டாடிய சமூக ஆர்வலர்.

பொன்னமராவதி நவ-23

பொன்னமராவதி அருகே ஏனாதி பிடாரம்பட்டி அரசுப்பள்ளியில் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி பிடாரம்பட்டி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கவாடியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கீரவாணி கல்விக்குழுமத்தின் நிர்வாகி பெயர் வெட்டும் அழகு அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர் சார்பில்  எழுதுகோல், வாய்ப்பாடு புத்தகம், இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி தலைமைவகித்து வரவேற்றார். இதில் கீரவாணி கல்விக்குழுமத்தின் சார்பில் பிடாரம்பட்டியை சேர்ந்த பெயர் வெட்டும் அழகு தனது 65 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டு தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றார். அதனடிப்படையில் இந்தாண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு எழுதுகோல், வாய்ப்பாடு புத்தகம், இனிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டது. மாணவர்கள் அதனை உற்சாகத்துடன் பெற்றனர்.

படங்கள்.. கீரவாணி அழகு இளையராஜா பொன்னமராவதி செய்தியாளர்.

Thursday, 22 November 2018

8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்: அரசு தேர்வுகள் இயக்கம்

8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்: அரசு தேர்வுகள் இயக்கம்

சென்னை: ஜனவரியில் நடைபெறும் 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. நவ 26ம் தேதி முதல் டிச.5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தனித்தேர்வுக்கு www.dge.tn.gov.in என்ற இயைதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பஙகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

விழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை வலுகுறைந்துவிட்டதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்துள்ளதாக கூறினார். வடதமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்றார். தென்தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர் விழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், ஈரோடு, கரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றார். காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்க கூடும் என்றார்.

மேலும் பேசிய அவர் காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிவிட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என்றார். சோழவரம் மற்றும் மாதவரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார். வானூர், ரெட்ஹில்சில் தலா 11 செ. மீ.,பொன்னேரியில் 10 செ.மீ.,நுங்கம்பாக்கம், மரக்காணம்,திண்டிவனம், மீனம்பாக்கம், பண்ரூட்டியில் தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்.,1 முதல் தற்போது வரை 26 செ.மீ., பதிவாகியுள்ளது. இயல்பு அளவு 32 சதவீதம். இதனால், 17 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.சென்னையில் இதுவரை பெய்த மழை அளவு 31 சதவீதம். இயல்பான அளவு 66 சதவீதம். 45 சதவீதம் குறைவான மழை பதிவாகியுள்ளது என்றார்.

சென்னைக்கு ரயிலில் வந்தது நாய் கறியல்ல.. ஆட்டுக்கறிதான் : ஆய்வின் முடிவில் அறிவிப்பு

சென்னைக்கு ரயிலில் வந்தது நாய் கறியல்ல.. ஆட்டுக்கறிதான் : ஆய்வின் முடிவில் அறிவிப்பு

சென்னை: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து, சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது ஆட்டிறைச்சி தான், நாய் இறைச்சி அல்ல என ஆய்வில் தெரிய வந்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை ஆய்வு செய்த சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனை நடத்திய ஆய்வில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து கடந்த 18-ம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் 20 பார்சல்களை உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த பார்சல்களில் துர்நாற்றம் வீசிய ஆட்டு இறைச்சி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் பார்சல்களில் இருந்த இறைச்சியை எடுத்து சோதனை செய்ததில் நாய் இறைச்சியாக இருக்கும் என்றும், ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியை சேர்த்து பார்சல்களில் அனுப்பியிருக்க கூடும் என்றும் சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து அதிகாரிகள் இறைச்சி பார்சல்களை சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்தனர். சுமார் 20 இறைச்சி பார்சல்களை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பார்சல்களில் மொத்தம் 2100 கிலோ இறைச்சி இருந்தது. இத்தகவல் காட்டுத் தீ போல செய்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியதால் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை பிரியாணி கடைகளில் அலை மோதும் கூட்டத்தை பார்க்க முடியவில்லை. பல்வேறு இடங்களிலும் பிரியாணி விற்பனை வார இறுதி நாட்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கு பாதி விலையை குறைத்து விற்ற போது பிரியாணி கடைகளில் கூட்டம் வராததால் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது.

இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் வந்தது நாய்க்கறியா அல்லது ஆட்டுக்கறியா என விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை ஜோத்பூருக்கு சென்றது.  ஜோத்பூரில் இருந்து அனுப்பும்போது மீன் பார்சல்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர். அதனால் அனுப்பிய நபரின் முகவரி ஜோத்பூரில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அதன் அடிப்படையில் இறைச்சி பார்சல்களை மீன் பார்சல்கள் என்று அனுப்பிய நபரை தேடி இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர் ஜோத்பூருக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரிக்கு ஆய்வுக்காக எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ள சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ரயிலில் பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

_புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்...#gaja #pudukkottai


via

BJP Union Minister Pon Radhakrishnan At Nilakal Near Sabarimala!!🤔🤔


via

Wednesday, 21 November 2018

இவர் சொல்வதை கேளுங்கள்


via

கஜா புயல் வெள்ள நிவாரண நிதி அறிவிப்பு

கஜா புயல் வெள்ள நிவாரண நிதி அறிவிப்பு

“கஜா” புயலால் உணவு, உடை, இருப்பிடம் இழந்து துயரத்தில் வாடிக் கொண்டிருக்கும் நம் உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டலாமே!
💪
நற்றிணை அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த:

NATRINAI CHARITABLE TRUST;
Ac. No.: 50200024745820;
Bank : HDFC Bank;
IFSC : HDFC0002086;
Branch : THIRUVERUMBUR, Trichy-620019
-இந்தியாவிற்குள் உள்ள வங்கிகள் மூலமாக மட்டும் பணம் செலுத்தலாம்.
💥
*Cheque/DD/MO:-* அனுப்புபவர்கள்,
Natrinai Charitable Trust, 4/739 Cholan Nagar, North Katur, Trichy-620019. -என்ற முகவரிக்கு “Natrinai Charitable Trust” என்ற பெயரில் அனுப்பலாம்.
💥
918220999799 என்ற எண்ணுக்கு Paytm மூலமாகவும் பணம் அனுப்பலாம்.

மேலும் விபரங்களுக்கு:
http://www.natrinai.org/cyclone-relief-fund/

Cell: 8220999799

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர், பால், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆட்சியர்கள் உடனடியாக செய்து தர வேண்டும்

கஜா நிவாரணம் - உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

வசதிகள் மக்களுக்கு சென்றதா என்பதை உறுதி செய்து நாளை மறுநாள் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு
#gaja

Tuesday, 20 November 2018

எச்சரிக்கை தமிழகத்தில் 500 ரூபாய் 2000 ரூபாய் நூறு ரூபாய் புதிய தாளில் கள்ளநோட்டு அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருவதால் வியாபாரிகள் எச்சரிக்கையாக சரிபார்த்து வாங்க வேண்டும்

அனைத்து வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை தமிழகத்தில் 500 ரூபாய் 2000 ரூபாய் நூறு ரூபாய் புதிய தாளில் கள்ளநோட்டு அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருவதால் வியாபாரிகள் எச்சரிக்கையாக சரிபார்த்து வாங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஊராட்சிகளில் ஆய்வுப்பணிகள், நிவாரணப்பணிகள் மற்றும் மீட்புப்பணிகள் குறித்து கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஊராட்சிகளில் ஆய்வுப்பணிகள், நிவாரணப்பணிகள் மற்றும் மீட்புப்பணிகள் குறித்து  கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கதர் மற்றும் கிராம தொழில்த்துறை அமைச்சர் பாஸ்கரன், தமிழ்நாடு வீட்டுவசதிவாரியத்தலைவர் வைரமுத்து, சிவகங்கை மாவட்டக்கழகச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், தமிழ்நாடு குடிசைமாற்றுவாரிய மேலாண்மை இயக்குனர் ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரி சண்முகம் ஆகியோர் பங்கேற்று ஆய்வுகள் செய்தனர்.  இதில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் வருவாய்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும், ஊராட்சி ஒன்றிய ஆணையர் குமரன் ஊரக வளர்ச்சித்துறை மூலம் குடிநீர் வழங்கல், சுற்றுப்புற தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்றுவதை விளக்கினார். மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் ஜெயபாலன் மின் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருவது குறித்தும் விளக்கிப்பேசினார். இதே போல வேளாண்மை உதவி இயக்குனர் எட்வர்சிங், வட்டாரமருத்துவ அலுவலர் அருள்மணிநாகராஜன், மற்றும் வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி,  கிராமநிர்வாக அலுவலர் பாண்டியன், அரசமலை ஊராட்சி செயலாளர் ராமசாமி உட்பட பலர் பேசினார்கள்.
இதில் கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது: பொன்னமராவதி தாலுகா பகுதியில் கஜா புயல் மீட்பு பணிகள் சிறப்பாக நடைபெற முழுஒத்துழைப்புடன் செயல்பட்டு வரும் அனைத்துறை அதிகாரிகளுக்கு எங்கள் குழு சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனைத்துப்பகுதிகளிலும் வடிகால் அமைக்கும் பணிகள் செய்யவேண்டும், வீடுகள் பாதிக்கப்பட்டோர், குடியிருக்க வீடுகள் இல்லாதோருக்கு இலவச வீடுகள் கொடுக்கவேண்டும், இதில் அந்த குடும்பத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள்,  சொத்துகள் உள்ளது எனக்காரணம் காட்டி  5 தடவை 10 தடவை மனு கொடுத்து அலையும் முதியோர்களை நிராகரிக்காமல் கஷ்ட்ப்படும் அனைத்து முதியோருக்கும்  அதிக ஓஏபி கொடுக்கவேண்டும், புயல்பாதிப்பு ஏற்பட்டுள்ள அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பேசினார்.
  இதில்  மாவட்டத்திற்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.ஸ் உயர் அதிகாரி சண்முகம் பேசியதாவது கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதல் இன்றி கணக்கீடு செய்யும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும், குடிசை வீடுகள், ஓட்டுவீடுகள் சேதம், பயிர் சேதம் போன்ற பணிகளை மூன்று துறைகளும் இணைந்து செயல்படவேண்டும்,  மற்ற பகுதிகளுக்கு பேரிடர் வந்தபோது சேவை மனப்பான்மையோடு நிறைய உதவிசெய்தோம். ஆனால்  நம்பகுதியில் இந்த பேரிடர் வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நமக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி முழு ஈடுபாட்டுடன் பணியாற்றவேண்டும், மாநில வராலாற்றிலே இல்லாத அளவிற்கு வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா, கேரளாவில் இருந்து 4200மின்துறை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றார்.
இதில் தமிழ்நாடு வீட்டுவசதிவாரியத்தலைவர் வைரமுத்து, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் புயல் மீட்பு நடவடிக்கைகள்  குறித்தும் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் இதுவரை பணிகளை சிறப்பாக முடித்தவர்களையும் பாராட்டியும் ஆய்வுகள் குறித்து விளக்கிப்பேசினார்.
இதில் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் சேர்மன் ராமையா,  புதுக்கோட்டை ஆர்டிஓ. டெய்சிகுமார், நிலவளவங்கித்தலைவர் பழனியாண்டி, துணைதாசில்தார் ஜெயபாலன், முன்னாள் சேர்மன் அழகுசுப்பையா, நகரச்செயலாளர் தங்கப்பன், முன்னாள் நகரச்செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய பொருளாளர் டேவிட் பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை சார் அனைத்து அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், மருத்துவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்,  கிராம உதவியாளர்கள், சுகாதார பணியாளர்கள் கட்சி நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

படவிளக்கம்:  பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் கஜா புயல் மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசுகிறார். அருகில் வீட்டுவசதி வாரியத்தலைவர் வைரமுத்து, செந்தில்நாதன் எம்பி, சண்முகம் ஐஏஎஸ் மற்றும் பலர் உள்ளனர்.


செய்திகள்.. கீரவாணி இளையராஜா பொன்னமராவதி செய்தியாளர்..
@Ilayaraja Alagu Pmv @ILAYARAJA KEERAVANI

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் ரோட்டரி சங்கங்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


புதுக்கோட்டை:  புதுக்கோட்டையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் ரோட்டரி சங்கங்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் பாதிப்படைந்துள்ளன. அங்குள்ள மக்கள் உணவு, மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக போராடி வருகின்றனர்.  பேரிடர் மீட்புக்குழுவினர் சிறப்பாக மீட்பு பணியில் ஈடுபட்டாலும் பொது மக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள ரோட்டரி சங்கங்கள் மீட்பு குழுவினரோடு சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் ’’பேரிடர் மீட்புக்குழுவினர் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களோடு நாமும் இணைந்து நாம் வசிக்கும் பகுதிகளில் மரங்களை நாமே அப்புறப்படுத்த முன் வரவேண்டும். சமூக ஆர்வலர்கள், ரோட்டரி சங்கங்கள் ரோட்ராக்ட் மாணவர்கள், அனைத்துக் கட்சியினர்கள், பொது அமைப்புகள் இணைந்து நமது ஊரைக் காப்போம் நம் மக்களுக்கு உதவ முன் வர வேண்டும்’’ என அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேபோல போஸ்நகர் மற்றும் வெட்டன் விடுதியில்பகுதிக்கு இருபத்தி நான்காயிரம் கொள்ளலவு உள்ள குடிநீர் ரோட்டரி சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.



மேலும் ரோட்டரி சங்கங்கள் சார்பாக மீட்புப்பணியில் உள்ளவர்களுக்கு உணவு தயார் செய்யும் பணி துவங்கப்பட்டது.



கீழ மூன்றாம் வீதி தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக தண்ணீர் லாரியை உடனடியாக கமிஷனர் பொ ஜீவா சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார். அவருக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.